Discover and read the best of Twitter Threads about #Vivek_Gananathan_Thread

Most recents (4)

மாநில உரிமைகளுக்கும், மக்களுக்கும் கிட்டத்தட்ட முழு மரண சாசனத்தையும் இன்று எழுதிமுடித்துவிட்டார்கள்.

#Vivek_Gananathan_thread

மின்சாரம்:

மின்சார சட்ட திருத்த வரைவு விவாதத்தில் இருக்கும்போதே, Tarrif Policy திருத்தத்தை சர்வசாதாரணமாக இன்று அறிவித்துவிட்டார்கள்.
மின் உற்பத்தியாளர்களை காக்கும்பொருட்டு, DISCOM-களுக்கு அபராதம் விதிக்கும் என்கிற அறிவிப்பு, மாநில ஆணையங்களை மத்திய ஆணையம் கைகளுக்குள் கொண்டுவருகிறது என்பதை சொல்லாமல் சொல்லும் அறிவிப்பு.
யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மின் விநியோகத்தையும் தனியார் மயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், இது ஊடகங்கள் தங்கள் தலைப்புச் செய்திகளை அதிர்ச்சிகரமாக உருவாக்கிக் கொள்வதற்கான கவர்ச்சிகர அறிவிப்பு. அதைவிட பேராபத்துகள் திட்டத்துக்குள் இருக்கிறது.
Read 19 tweets
யாருக்கு செல்கின்றன நம் பெட்ரோல் காசுகள்?

#Vivek_Gananathan_Thread

பெட்ரோல், டீசல் கலால் வரியை மத்திய அரசு ரூ.10, ரூ.13 என கூட்டியுள்ளது. சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டதுதான் இது. ஊரடங்கால் பெட்ரோல், டீசல் பயன்பாடு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 80% வரை குறைந்துள்ளது.
இதனால், மத்திய அரசுக்கு மட்டும் சுமார் 40,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வருவாயை இழப்பைச் சரிசெய்ய இந்த வரி உயர்வு உதவும் என்றும், இதனால் சந்தையில் விலை கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது
2017 ஜூன் 16 முதல் தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்பிற்கு பிறகு கண் துடைப்பு  நடவடிக்கையாக முதல் 13 நாட்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை 3.45 குறைக்கப்பட்டது. அதன்பிறகாக மெல்ல விலை அதிகரிக்கப்பட்டு சுமார் 20 ரூபாய் பெட்ரோல் விலை கூடியுள்ளது.
Read 13 tweets
மாநில உரிமைகளின் சவக்குழியில் மின்சாரத்துக்கு சவப்பெட்டி !

#Vivek_Gananathan_Thread

ஊரடங்கு நடைமுறைகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 17, 2020 அன்று நடப்பில் உள்ள மின்சாரச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.
அனுப்பப்பட்ட 21 நாட்களுக்குள், மே 8க்குள் இம்மசோதா மீது பதிலளிக்குமாறு முதற்கெடு விதிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பின் அழுத்தத்தையடுத்து ஜூன் 5 வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
இம்மசோதாவுக்கு மின் ஊழியர்கள், பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவும், அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவசர அவசரமாக மக்கள் மீது திணிக்கமால் செப்டம்பர் வரை மசோதா கெடுவை நீட்டிக்க இவ்வமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
Read 39 tweets
இன்னுமா இந்த நாட்டிற்கு நீட் தேவை?

#Vivek_Gananathan_Thread

இந்தியாவில் இருக்கும் மதச்சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக்கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு பொருந்தும் என 29.04.2020 அன்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஒரு மருத்துவ பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும்போதே, இன்னொருபுறம் நடக்கும் சுகாதாரத்துறை தொடர்பான நடவடிக்கைகள், இந்த நாடு எப்படி சம்பந்தமே இல்லா பாதைகளில் மாட்டிக்கொள்கிறது என்பதற்கு சாட்சி.

நீட் - ஐ முன்னிறுத்துவதில் முஸ்தீபு காட்டும் இந்தியாவின் அடிப்படை சுகாதாரச் சிக்கல் என்ன?
"மக்கள் தொகை கட்டுப்பாடு, குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ கால இறப்பு விகிதம் போன்றவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் தொற்று நோய்களும்,'Non communicable disease' நோய்களுமே இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது"
Read 45 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!