Discover and read the best of Twitter Threads about #dmk4tn

Most recents (16)

1/ ஊடகங்களுக்கு உண்மை தேவை இல்லை. உண்மையைப் போல வேஷம் போட்ட பொய்கள் இருந்தால் போதும். எதையாவது சொல்லுவது... இப்படி இருக்குமோ இருந்தாலும் இருக்கும் என்று நினைக்க வைப்பதுதான் ஊடகங்களின் வேலை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் நடந்த ஜி ஸ்கொயர் ரைடு விவகாரத்தை @JuniorVikatanம் புதிய Image
2/ தலைமுறையும் எப்படிக் கையாண்டன என்பதுதான்.
யாரோ ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டது. அதனால் வருமான வரித்துறையினர் சோதனை செய்கிறார்கள் என்று எழுதினால் அதில் பெப் இருக்காது என்று இந்த ஊடகங்களுக்குத் தெரியும்.
பொதுவாக ஒரு ரியல் எஸ்டேட்
3/ நிறுவனத்தில் கருப்புப் பணம் புழங்குவது இயல்புதான். அதைத் தேடி சோதனை நடத்துவதும் சகஜம்தான். வருமானத்திற்கு அதிகமான பணம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் சாதாரணம்தான் என்று டிவி வியூவர்ஸ் பெரிதாக இதில் அக்கறை காட்ட மாட்டார்கள் என்று ஊடகங்களுக்குத் தெரியும்.
Read 20 tweets
த்ரட் எழுதலாம்னு அவனோட மொத்த ரிப்போர்ட் எடுத்து அலசிப்பாத்தா கடைசில இந்த OBC ஆட்களுக்கும் இதர சமூக மக்களுக்கும் பெருசா பட்டை நாமத்தை கொழப்பி அடிச்சுருக்காங்க. இது தெரியாம இந்த சத் சூத்திர சங்கிங்க தாமரைக்கு முட்டுதருவானுவ முட்டாப்பசங்க.
#NEETresult2022
இந்த வருஷம் தேர்வெழுத பதிவு பன்ன மாணவர்கள் சதவீதம் வகுப்பு வாரியாக OBC-44.8%
Gen+EWS= 10.74%(அவர்களின் மொத்த தேர்ச்சி சேர்த்து தந்ததால நானும் தேர்வெழுதியவர்களை சேர்த்துக்கிட்டேன்).
SC- 15.2%, ST 6.5%.
இந்த லெவல்ல தேர்வு எழுதிருக்காங்க. ஆனா தேர்ச்சி பெற்றவர் % கேட்டாலே ஜெர்க்
ஆகுது. Gen+EWS- 88.8% (போன வருஷத்தை விட 0.2% அதிகம்)🙏. OBC-7.4% 😝😝(போன வருஷத்தை விட 0.3% கம்மி). SC -2.6,ST: 1%. கிட்டத்தட்ட 10% பேரு 89% மொத்தமா வழிச்சு தின்னுட்டான். இந்த சத் சூத்திர ஓபிசி 45% எழுதி வெறும் 7.4% தான் சீட்டுஎடுத்துருக்கான். (சரியான ஏழரை ).15% எழுதுன பட்டியல்
Read 11 tweets
அவரு டிகிரி பத்தின சர்ச்சையை விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பேசனும். அதை கொஞ்சம் ப்ளோ பன்னுங்க. ரிக்வஸ்ட்தான். திறன் மேம்பாட்டு திட்டம் "நான் முதல்வன்" அப்படின்னு ஆரமிச்சுருக்காங்க.
இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ
மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன்,சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்
இணையதளம் மூலமாக ஆன்லைன் சர்டிபிகேட் கோர்ஸூம் கன்டெக்ட் பன்றாங்க. சில பயிற்சிகள் இலவசம், சில பயிற்சிகளுக்கு குறைந்த கட்டணம். இத்தோடு நிற்காமல் ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் வழங்கப்படுகிறது.
Read 5 tweets
Thread..

ஊழலுக்காக கலைக்கப்பட்டதா திமுக ஆட்சி..?

காலந்தோரும் திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 31/1/1976. திமுக மீதான ஊழல் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது 3/2/1976.
1/n
#DMK4TN #VoteForDMK
திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு தான், சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது. அப்புறம் எப்படி ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டு இருக்க முடியும்.?

காங்கிரஸ் கூட்டணி அரசு மீது "2ஜி ஊழல்" என்று எப்படி பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள்
2/n
பாஜக என்ற கட்சியை எப்படி ஆட்சிக்கு வர வைத்தார்களோ.. அதே போல தான் எமர்ஜென்சியை இந்தியாவிலேயே கடுமையாக எதிர்த்த திமுகவை ஒழிக்க, சர்க்காரியா கமிஷன் என்ற பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள் எம்ஜிஆர் - அதிமுக என்ற கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். 3/n
Read 15 tweets
#thread தி.மு.க. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்டு 1967. இப்போது - 2020 - அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலத்தையும் சேர்த்து, திராவிட இயக்கத்தின் ஐம்பதாண்டு கால ஆட்சி முடிந்து விட்டது என குறிப்பிடப்படுகிறது
உண்மையில் திராவிட இயக்கத்தின் சாதனைகளைச் சொல்ல வேண்டுமென்றால் நீதிக்கட்சிக் காலத்தில் இருந்தே சொல்ல வேண்டும். திராவிட இயக்க ஆட்சிகளின் சாதனையைச் சொல்லும்போது இரு பிரிவுகளாக பிரித்துக்கொள்ளலாம்: முதல் பகுப்பில் நீதிக்கட்சி 17 ஆண்டுகளும் தி.மு.க. 21 ஆண்டுகளும் ஆட்சி செய்திருக்கும்
இரண்டாவது பகுப்பில் அதிமுக
இருக்கும். இக்கட்சியின் நிறுவனரான எம்ஜிஆர். பத்து ஆண்டுகளும் அதற்குப் பிறகு ஜெயலலிதா 15ஆண்டுகளும் 2016க்குப் பிறகு ஒரு ஆண்டு என மொத்தமாக 26 ஆண்டுகள் அக்கட்சியின் ஆட்சி நடைபெற்றிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை அ.தி.மு.கவை திராவிடக் கட்சியாகக் கருதுவதில்லை
Read 24 tweets
நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்து நாளையுடன் ஒரு நூற்றாண்டு ஆகிறது .

1920 நவம்பர் 20 முதல் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது .

1920 டிசம்பர் 4 தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.

98 இடங்களில் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது .

1/n
1920 டிசம்பர் 20 அன்று நீதிக்கட்சி அமைச்சரவை பதவி ஏற்றக் கொண்டது .

நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் பாராளுமன்ற நடைமுறைகளுக்கான அடித்தளம் இங்கே நாட்டப்பட்டது.

இன்று தமிழ்நாடு நன்கு நிர்வகிக்கப்படும் மாநிலமாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அன்று நீதிக்கட்சி தந்த பயிற்சிதான். 2/n
நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் பின்தங்கிய சமூகங்களுக்கு வகுப்புவாரிப் வழங்கப்பட்டது.
3/n
Read 7 tweets
கலைஞர் இல்லாததை இவர்கள் வெற்றிடமாக நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது அப்படி கட்டமைக்க பார்க்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு புரியாத ஒன்று. கலைஞர் என்பது ஒரு பிம்பம் அல்ல. அதாவது எம்ஜிஆரை போல அல்ல.

கலைஞர் என்பது கொள்கை.
கலைஞர் என்பது திராவிட இயக்கம்.
கலைஞர் என்பது உழைப்பு!
அதாவது, யாரெல்லாம் கொள்கையை முன்னெடுக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கலைஞர் தான்.

யாரெல்லாம், திராவிட இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.

யாரெல்லாம், திமுகவில் உழைக்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
புத்தரின் கொள்கையான “மாற்றம் ஒன்றே மாறாதது” எனும் இயங்கியல் விதியின் நவீன எடுத்துக்காட்டு திராவிட முன்னேற்ற கழகம். இந்த இயக்கம், ஆதிக்கவாதிகள் இருக்கும் வரை இயங்கிக்கொண்டே தான் இருக்கும். தலைவர்கள் மாறுவார்கள். இயக்கம் அப்படியே இருக்கும்!
Read 4 tweets
#DMK4TN

திராவிட இயக்கம் இனத்தை முன்னிருத்தி மொழியை காத்தது - மொழியை முன்னிருத்தி இனத்தை காத்தது என்று அண்ணன் ஆ.ராசா அவர்கள் பல முறை சொல்லியுள்ளார்.

அதை வரலாற்று சான்றுகளுடன் நம் பேரறிஞர் அண்ணா விளக்குகிறார் .

1/n Image
நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது.
சில நேரத்தில் செயலற்று இருந்தது என்ற போதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை.
அடிக்கடி தனித்தமிழ், வேளாளர் நாகரிகம், உண்மை சைவம், பண்டைய நாகரிகம், என்று பல்வேறு தலைப்புகளில் கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு கிறு பதிப்புகளேயாகும்.
Read 9 tweets
#நீட் தொடர்பான வழக்கில் 2013ல் 3 நீதிபதிகள் அடங்கிய constitutional bench அமர்வில் 2 பேர் நீட் எதிராக, ஒருவர் ஆதரவாக தீர்ப்பெழுத,

அந்த இவரும் ஓய்வுபெற்ற பின்னர், RSS சங்கல்ப் நுழைவு தேர்வு நடத்தும் தனியார் அமைப்பின் சார்பில் வழக்கு போட,
1/6
#நீட்வரலாறு #BanNEET_SaveTNStudents
அந்த நீட் ஆதரவு 3வது நீதிபதி, முன்னர் வழங்கிய தீர்ப்பை recall செய்து, 5 நீதிபதிகள் அடங்கிய bench ஐ அமைப்பதாக தீர்ப்பெழுத,

அதில் இடைக்கலாமாக நடந்த விசாரணையில் தான் 2016ல் நீட் இந்தியா முழுமைக்கும் வர..

ஓராண்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு விலக்கு என்றும் தீர்ப்பெழுத,
2/6 #AdmkFails
அதன் பின்னர் 2017ல் இருந்து தமிழ்நாட்டிற்குக்குள்ளும் வந்தது தான் நீட்.

ஆக அந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்னும்.அமைக்கப்படவே இல்லை. அதனை அமைக்க #பழனிசாமி அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவுமில்லை.

இதற்கிடையில், 2016ல் வழங்கிய தீர்ப்பானது, #தமிழ்நாடு அரசின் சட்டம், 3/6
Read 6 tweets
ஒன்றுக்கும் உதவாத நீட் தேர்வினால் அனிதா தொடங்கி நேற்றுவரை எண்ணற்ற மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மாணவ செல்வங்களே! நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். இந்நிலை மாறிட இனியொரு விதி செய்வோம்.
- திருச்சி சிவா உரை
1/3
@tiruchisiva @arivalayam #DMK4TN #BanNEET_SaveTNStudents
பிள்ளைகளே, மலர்ந்து மணம் பரப்பவேண்டிய மலர்களே, மனம் தளராதீர்கள்! எதிர்காலம் உங்களுடையது.

நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். சாவதற்கல்ல. காத்திருங்கள், நல்லவாழ்வை நிச்சயமாக கொண்டுவந்து தருவோம். 2/3
#BanNEET_SaveTNStudents #BAN_NEET #TiruchySiva #Dmk
அதுவரை படியுங்கள். எதிர்காலம் உங்களுக்கு மிகப்பெரிய அறியாசனத்தை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது.3/3
#BanNEET_SaveTNStudents #BAN_NEET #DMK
Read 3 tweets
'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
#BanNeet #NEP2020
“புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'
"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'

"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"
Read 16 tweets
சமீப காலமாக சவுக்கு சங்கரின் சில பல ட்வீட்கள் வேண்டுமென்றே குட்டையை குழப்பும் விதமாக உள்ளது.

தம்படிக்கு பிரயோஜனம் இல்லாத கு.க.செல்வத்தின் விலகலை அடுத்து, சில பல #திமுக MLA க்கள் MP க்கள் கட்சி தாவப்போவதாக செய்திகளை கசியவிட்டார். அது வைரல் ஆகிட, இணைய வதந்தீகளுக்கு 1/9
சம்பந்தப்பட்ட MLA , MP (திருச்செந்தூர் அனிதா MLA, ஜெகத் MP) விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது.

தற்போது மீண்டும் மற்றொரு ஆளை குறிவைத்து, சங்கர் பேச துவங்கியுள்ளனர் (கரூர் செந்தில் பாலாஜி MLA தான்).

100% அடித்து சொல்லலாம் இதுவும் வதந்தீ என்று. ஏனெனில் அதிமுக விலிருந்து 2/9
திமுக வுக்கு தாவியவர் என்றபோதும், #திமுக வில் தீவிரமாக களப்பணி தொடர்ந்து செய்து வருபவர் செந்தில் பாலாஜி.

அனிதா வும், செந்தில் பாலாஜி யும் மாநில அரசியலில் காலூன்றவே விருப்பப்படுபவர்கள். இன்னும் 8 மாதத்தில் மாநில தேர்தலை வைத்துக்கொண்டு, திமுக மட்டுமே ஆட்சியை பிடிக்கும் என்று3/9
Read 9 tweets
முதலில் புதிய கல்விக் கொள்கை மீதான கருத்துக்கள் தெரிவிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தது திமுக. பிறகு புதிய கல்விக் கொள்கை வரைவை ஆய்வு செய்து ஆய்வறிக்கை தந்தது திமுக..!
@arivalayam
@mkstalin
@Udhaystalin
#DMK4TN

#RejectNEP #NewEducationPolicy
Read 5 tweets
#DMKforOBCReservation

OBC இடஒதுக்கீடு - திமுகவின் தொடர் முயற்சி தேதி வாரியாக (2019-2020)

26.07.2019: OBC இட ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திரு. வில்சன் எம்.பி பேச்சு.

1.11.2019: OBC இட ஒதுக்கீடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக சார்பில் கடிதம் (1/n)
21.11.2019: OBC இட ஒதுக்கீடு தொடர்பாக திரு டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் பேச்சு

21.11.2019: OBC இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்.

22.11.2019: MBBS, OBC இட ஒதுக்கீடு குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட தலைவர் வலியுறுத்தல். (2/n)
06.12.2019: OBC இட ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திரு. வில்சன் எம்.பி பேச்சு.

09.12.2019: மாநிலங்களவையில் திரு. திருச்சி சிவா எம்.பி பேச்சு.

06.01.2020: OBC இட ஒதுக்கீடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை திமுக எம்.பி திரு. வில்சன் நேரில் சந்தித்து கோரிக்கை. (3/n)
Read 10 tweets
கலைஞரும் - சாலைகளும் 🛣️ :

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது தலைநகரிலோ, ஓரிரு நகரங்களில் மட்டுமோ சுருங்கிவிடுவதல்ல. அம்மாநிலத்தின் அனைத்து பெருநகரங்கங்களும், மாவட்டங்களும், ஊர்களும், கிராமங்களும் சாலை வழியே சிறப்பாக இணைந்திருந்தால் மட்டுமே 1/N #FatherOfmodernTamilnadu
#DMK4TN
ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியம் என்றுணர்ந்திருந்தார் தலைவர் கலைஞர்.

நான்கு வழிச்சாலை என்றாலே நமக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பெயரும், தங்க நாற்கர சாலையும் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாத ஒன்று. சென்னை - மும்பை - டெல்லி - கல்கத்தா #FatherOfmodernTamilnadu #DMK4TN
என்று இந்தியாவின் நான்கு மெட்ரோபாலிட்டன் நகரங்களையும் இணைக்கும் வண்ணம் அவர் கொண்டுவந்த வியத்தகு திட்டம் அது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1️⃣9️⃣9️⃣1️⃣-1️⃣9️⃣9️⃣6️⃣ காலத்தில் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் இந்தியாவினுள் நுழைக்கப்பட்ட #FatherOfmodernTamilnadu #DMK4TN
3/N
Read 30 tweets
#Thread

கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு.

அன்று காலை வழக்கம் போல கோபாலபுரம் இல்லம் பரபரப்பாக இருந்தது. கலைஞரைச் சந்திக்க காத்திருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கீழே அமர்ந்திருந்தனர்.

1/n
தலைவர் கலைஞர் குளித்து காலை உணவருந்தி கொண்டிருக்கிறார் என சொல்லப் பட்டது. அடுத்து ஒரு மணி நேரத்தில் அனைவரையும் சந்தித்து விட்டு கோட்டைக்குச் செல்வார்.

அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்ற ஒரு அம்பாஸடர் காரில் இருந்து திரு.ராமகோபலன் இறங்கினார். உடன் வயதான..

2/n
இன்னொரு உதவியாளர். அவ்வளவே!

திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட..

3/n
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!