Discover and read the best of Twitter Threads about #goofybooks

Most recents (6)

#goofybooks
#மகாபாரதம்

"இந்தியாவில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அத்தனை வகை மகாபாரதம் இருக்கிறது." என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து வடிவிலும், செவி வழியாகவும் பல வடிவங்கள் கூறப்பட்டு வந்துள்ளன. Image
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
1. வெண்முரசு: ஜெயமோகன்

7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. Image
Read 22 tweets
#goofybooks
ஆதித்த கரிகாலன்/ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பான நாவல்கள். Image
கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" Image
பாலகுமாரன் எழுதிய "உடையார்" Image
Read 12 tweets
#goofybooks
நா.முத்துக்குமார் புத்தகங்கள் : A Thread
#HappyBirthdayNaMuthukumar Image
பட்டாம்பூச்சி விற்பவன்

1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசை பெற்றது.

சுவாசத்தை போல, தாய் மொழி போல, சைக்கிள் மிதிப்பது போல கவிதை இவருக்கு படு இயல்பாக இவருக்கு கைவருகிறது.

-பாலுமகேந்திரா ImageImage
நியூட்டனின் மூன்றாம் விதி

கிராமம் நகரம் காடு வயல் ஜனங்கள் மத்தியில் ஒரே நேரத்தில் நின்றுவிட்டு வந்தது போலும்; நிறைய வாங்கி வந்து போலும் உள்ளது வாசித்து முடிக்கையில்.

-கந்தர்வன் ImageImage
Read 14 tweets
#goofybooks
சீன எழுத்தாளர் Jian Rong எழுதிய 'Wolf Totem' நாவலை வாசித்த இயக்குனர் வெற்றிமாறன், அதனால் மிகவும் கவரப்பட்டு, தமிழ் வாசகர்களும் இந்த நூலை வாசித்து பயன்பெற வேண்டும் என்ற பேராவல் கொள்கிறார். நாவலின் மொழிபெயர்ப்பு உரிமையையும் வாங்குகிறார். Image
அவரின் நண்பரும் எழுத்தாளருமான சி.மோகனிடம் நாவலை தமிழில் மொழிபெயர்க்க கொடுத்து, பின்னர் இந்த புத்தகத்தை வெளியிட 'அதிர்வு பதிப்பகம்' என்று புதிதாக ஒரு பதிப்பகத்தையே ஆரம்பித்து, அதன் மூலம் 'ஓநாய் குலச்சின்னம்' நாவலையும் வெளியிடுகிறார்.
இயக்குனர் வெற்றிமாறன் பல பேட்டிகளில் நாவலை சிலாகித்து பேசியதை பார்த்த பின்புதான், இந்த நாவலை வாசிக்கும் ஆர்வம் வந்தது. இன்னமும் வாசிக்க ஆரம்பிக்காமலே இருக்கும் புத்தகத்தை உங்கள் அறிமுகம் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது. வாசித்துவிட்டு மீண்டும் பதிவிடுகிறேன்.
Read 3 tweets
#goofymovies
The Tiger: An Old Hunter's Tale (2015)

IMDb Rating : 7.3/10
கொரியா, ஜப்பானின் ஆதிக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் நடைபெறும் கதை.
புலிகளை வேட்டையாடி அதன் தோல்களை சேகரிக்கும் ஜப்பானிய கவர்னர், கொரியாவின் கடைசி புலி வரை வேட்டையாடவேண்டும் என்று முயற்சிக்கிறார்.
தன் மகனுக்கு வேட்டையின் சூட்சுமத்தை விளக்கும் கொரியாவின் வேட்டைக்காரர் Chun Man - duk ஒரு புலியை வேட்டையாடுவதில் ஆரம்பிக்கிறது திரைப்படம்.
சில வருடங்களின் பின்னர் மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஒற்றைகண் புலியை வேட்டையாட முயற்சிக்கிக்கும் பலர் அந்த புலியினால் உயிரிழகின்றனர்.
சில வேட்டைக்காரர்கள் வைக்கும் பொறியில் ஒற்றைகண் புலியின் இரண்டு குட்டிகள் இறந்துவிடுகின்றன. அதன் துணையும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறது. பின்னர் அதையும் கொன்றுவிடுகின்றனர்.
மலை அரசனை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகிறது.
Read 10 tweets
#goofybooks
'காசி ஆனந்தன் நறுக்குகள்'

ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் தமிழீழத்திலும் , தமிழ்நாட்டிலும் வாழ்ந்த காலப்பகுதியில் உலகின் பொய்மைகளுக்கும், திமிர் வெறிக்கும், தமிழர் வாழ்வின் கண்ணீருக்கும் போராட்டங்களுக்கும் இடையே நெருப்பினை தழுவி அழுது துடித்து பொங்கி எழுதியவை. Image
ஒவ்வொரு நறுக்கும் நெருப்பு தெரிக்கிறது, முகத்தில் அறைகிறது, யோசிக்க வைக்கிறது. புத்தகத்தில் இருந்து சில நறுக்குகள்,
01. மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.
02.மாடு

ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுக்கிறது...

கொம்பை
மறந்த
மாடு

03. பெண்

ஏடுகளில்
முன் பக்கத்தில்
அட்டையில்

வீடுகளில்
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!