Discover and read the best of Twitter Threads about #goofymovies

Most recents (14)

#goofymovies
Churuli (2021/Malayalam)

OTT : SonyLIV

Lijo Jose Pellissery இன் அட்டகாசமான படைப்பு. இந்த படம் வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுத்திச்சு, முக்கியமா அந்த காடும் மலையும் அதன் சத்தங்களும் பின்னணி இசையும் கூடவே பயணித்த உணர்வை கொடுத்திச்சு. கூடவே பல குறியீடுகளும்🚶.
முன் கதை :
"உனக்கு பெருமாடன் யாரென்று தெரியுமா சாஜிவா? , அவன் எல்லோரையும் வழி தவற வைக்கும் மாயை" என்று கதை சொல்ல ஆரம்பிக்கும் பெண், பெருமாடனை பிடிக்க காட்டிற்குள் சென்ற திருமேனியையும் அவர் பெருமாடனால் வழி தவறி காட்டிற்குள் சுற்றுவதை பற்றியும் கூறுகிறாள்.
நிகழ்காலம் : அந்தோனி, சாஜிவன் என்னும் புனை பெயருடன் இரண்டு போலீஸ்காரர்கள் ஜோய் என்பவனை பிடிப்பதற்காக 'சுருளி' என்ற இடத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் அனுபவிக்கும் அமானுஷ்யங்களும், இறுதியில் ஜோயை கைதுசெய்தார்களா? என்பதுதான் கதை. ரொம்ப சிம்பிளான கதைதான் என்றாலும் making அதகளம்.
Read 17 tweets
Home (2021/Malayalam)

படம் பார்க்க நேரம் கிடைக்கலனாலும் கூட ரெண்டு வகையான படங்கள் பார்க்கிறதை தள்ளி வைக்கிறதே கிடையாது. அவை feel good/Animation படங்கள்தான். ரெண்டுமே பார்த்து முடிக்கிறப்போ full charge ஏத்தின மாதிரி இருக்கும். அழகான ஒரு messgae/motivation கண்டிப்பா இருக்கும். Image
HOME, இது வரை பார்த்ததில best feel good movie. "பறவைகளுக்குக் கூடடைதல் என்றால், மனிதர்களுக்கு வீடடைதல்." ராஜூ முருகனின் வட்டியும் முதலும் தொடரில் வந்த எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு வசனம். இதை "Thirike (2021)" படத்தை பற்றி எழுதுறப்போ கூட சொல்லி இருந்தேன். முழுக்க முழுக்க வீடுதான் படம்.
அப்பிடியே நம்ம வீட்டோட நிறைய விசயம் emotionally connect ஆகும். கண்கலங்கவும் வைக்கும், அப்பிடியே உங்களை புன்னகைக்கவும் வைக்கும். நிச்சயம் இந்த படம் உங்களுக்குள்ள இருக்கிற nostalgiaவை தட்டி எழுப்பும்.
கதைனு சொல்லி bore அடிக்க விரும்பல. குடும்பத்தோட கண்டிப்பா பாருங்க.
#goofymovies
Read 3 tweets
#goofymovies
Thirike (2021/Malayalam)

ரொம்ப நாளைக்கு பிறகு நெகிழ்ச்சியான feel good movie. Down syndromeல பாதிக்கப்பட்ட அண்ணனுக்கும், அவரின் தம்பிக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான் கதை. ரொம்ப இயல்பான நடிப்பு, வசனங்கள் என்று படம்முடியும் போது ஒரு மன நிறைவைத் தருகிறார்கள். Image
எப்போவும் நிறைய positivity இருக்கிற படங்களை பார்க்க பிடிக்கும். Depressionல இருக்கிறப்போ எல்லாம் இந்த மாதிரி படங்களை பார்க்கிறப்போ டக்குன்னு நம்மளை boost பண்ணும். பிடித்த மனிதர்களும், படங்களும்தான் என்னோட happy pills. Image
படத்துல ஒரு வசனம் வரும், "உன்னால முடியாது என்று சொன்னவங்களுக்கு முன்னால, நீ அதை உன்னால முடியும்னு செய்து காட்டு". எத்தனை சத்தியமான வார்த்தைகள். Image
Read 5 tweets
#goofymovies
Incendies (2010/French)
மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து புலம்பெயந்து கனடாவில் வசித்துவந்த Nawal இறந்துவிடுகிறார். அவரின் முதலாளியும் குடும்ப நண்பருமான Jean Lebel; Nawal இன் இரட்டை பிள்ளைகளான மகள் Jeanne மற்றும் மகன் Simonஐ அழைத்து பேசுகிறார். Image
Nawal தனது உயிலில்,அவரின் கடைசி ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அது நிறைவேற்றப்படவில்லை எனின் அவர் உடலை முறையாக அடக்கம் செய்யக்கூடாது என எழுதி இருப்பார்.அதன்படி இரட்டையர்கள் அதுவரை அறியாத அவர்களின் தந்தையையும், சகோதரனையும் தேடி தாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்துடன் செல்கின்றனர். Image
மேலே சொன்ன அனைத்தும் படத்தின் ஆரம்ப காட்சிகள்தான். "அதன் பின் அவர்கள் தந்தையையும், சகோதரனையும் கண்டுபிடித்து கடிதத்தை ஒப்படைத்தார்களா?" என்பதுதான் மீதிக்கதை. கடைசி twist உங்களை நிச்சயமாக தலைகீழாக போட்டு தாக்கும்.
Read 4 tweets
#goofymovies
ஒரு இயக்குனர் தன் வாழ்வில் சந்தித்த பத்து பெண்களின் கதைதான் பதினொரு இயக்குனர்கள் இயக்கியுள்ள “X : Past is Present (2014)” படத்தின் கதை.
ஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10  நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத்.
திரைப்பட திருவிழா ஒன்றில் இயக்குனர் கே என்கிற கிஷனை சந்திக்கிறார் ஒரு பெண். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை பத்து மணி வரை அந்தப்பெண்ணுடன் கிஷன் பேசும் உரையாடல் தான் படம். காதல், காமெடி, காமம், ஹாரர், ஃபேன்டசி என சினிமாவின் பல வகைகளை கலந்து எடுக்கப்பட்டு இருக்கிறது X.
Read 9 tweets
#goofymovies
Operation Java (2021/Malayalam)

IMDb Rating : 8.4/10
சைபர் கிரைம் குற்றங்களையும், அதை கண்டுபிடிக்கும் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகளையும், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் temporary பணியாட்கள் இருவர் முகம்கொடுக்கும் பிரச்சனைகளையும் பற்றிய படம்தான் இது.
படத்தில் உண்மையில் நடந்த மூன்று சைபர் கிரைம் குற்றங்களையும், அதன் குற்றவாளிகளை கண்டுபிடித்த முறைகளையும் ரொம்ப எளிமையாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். Cyber crime என்றதும் ஆங்கில படங்களில் வரும் high tech, hacking போன்று இல்லாமல் இயல்பான வழிகளில் கண்டுபிடித்திருப்பார்கள்.
அதன் இடையே, நாம் கவலையீனமாக விடும் சிறு தவறுகள் மூலம் நடக்கும் வெவ்வேறு குற்றங்கள் : Data theft, Identity fraud, Cyberextortion, phishing பற்றியும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

படத்தில் ஒரு காட்சியில்,
"They want what you've got. Don't give it to them."
Read 4 tweets
#goofymovies
🎥 20 Best Directors of the Past Decade by Film Times : A Thread

David Fincher Image
Quentin Tarantino Image
Pedro Almodóvar Image
Read 20 tweets
18+

மும்பை.

இருள் சூழ்ந்த நேரத்தில் தெருவில் இருக்கும் நியான் விளக்கு மஞ்சள் வெளிச்சத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது. பரபரப்பான அந்த மாடி வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கிறது. மிகவும் பவ்யத்துடன் ஒருவர் வந்து கதவை திறந்து உள்ளிருந்தவரை அழைத்து செல்கிறார்.
அது ஒரு விபச்சார விடுதி. காரில் இருந்து இறங்கி சென்றவருக்கு மரியாதை தடபுடலாக இருக்கிறது. பெரிய சோபா ஒன்றில் அனந்த சயன நிலையில் படுத்திருக்கிறான். இரு புறமும் அடியாட்கள் நிற்கின்றனர். அவன் முன் நிற்கும் ஐந்து அழகிகளையும் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறான்.
இன்று கூடிக்களிக்க ஒருத்தியை தேர்ந்தெடுக்க வேண்டும். பார்வையை தாழ்த்திக்கொள்கிறான். அடியாட்களில் ஒருவன் எல்லோரையும் போக சொல்கிறான். விடுதியின் மனேஜர் போல இருப்பவர், "வழக்கமா இல்லாம, புது பீஸ் வந்திருக்கு. காட்டவா?" என்று கேட்கிறார். அடியாளும் சீக்கிரம் வர சொல்கிறான்.
Read 15 tweets
#goofymovies

"நெஞ்சம் மறப்பதில்லை"

Spoilers ahead

@imkayalsai சொன்ன, "நெஞ்சம் மறப்பதில்லை" பற்றிய சொல்லாத கதைகள்.

Part 2.
படைத்தளபதியின் மகனாக பிறக்கும் பரமேசு எகிப்தின் பத்தொன்பதாவது அரச மரபை தோற்றுவிக்கிறான். அரச பரம்பரையை சேராத பரமேசு, ராம்சே என்னும் பெயரில் எகிப்தை ஆள்கிறான். நாட்டை சுற்றி வரும் ராம்சேக்கு எகிப்தியர்களை விட இஸ்ரேலியர்கள் "பணம், அறிவு, பலம்" இல் உயர்ந்து இருப்பதை காண்கிறார்.
இதனால் எகிப்தியர்களுக்கு ஆபத்து நிகழலாம் என்று நினைத்து இஸ்ரேலியர்களை அடிமையாக்குகிறார். காலம் உருண்டோடுகிறது. மன்னனின் சோதிடர்களில் ஒருவன், குறிப்பிட்ட ஒரு நாளில் இஸ்ரேலியர்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க ஒருவன் பிறப்பான், அவனால் மன்னன் உயிருக்கு ஆபத்து என எதிர்வு கூறுவான்.
Read 21 tweets
#goofymovies
நெஞ்சம் மறப்பதில்லை (2021)

Spoiler ahead

மரியம் : இயேசுவின் அவதாரம்.
ராம்சே : சாத்தான்
கண்ணாடி தாத்தா : ஏஞ்சல்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயான போராட்டமே நெஞ்சம் மறப்'பதில்'லை திரைப்படம். Title இல் 'பதில்' மட்டும் வேறு நிறத்தில் ஏன்? படத்தில் Title வரும் இடம்.
ஆரம்பத்துல S. J சூர்யா, நந்திதா பெயர்லாம் red lightingல காட்டி இருப்பாங்க. இதுல S. J சூர்யா character சாத்தான் என்றும் நந்திதா, வேலைக்காரர்கள் characters எல்லோரும் சாத்தானின் பிடியில் இருப்பவர்கள் என்றும் எடுத்துப்போம்.
அடுத்து ரெஜினா பெயர் ஜீசஸ் உடனும் மற்றவர்கள் பெயர் ஜீசசை ஆதரிப்பவர்கள் உடனும் வருகிறது. இது தான் மரியம், ஜீசஸ் என்பதுக்கு முதல் குறியீடு.
அடுத்து இயேசுவினை வழிபடுபவர்கள் இயேசுவின் பக்கமும், சாத்தானின் பக்கமும் இருக்கலாம்.
Read 24 tweets
#goofymovies
The Tiger: An Old Hunter's Tale (2015)

IMDb Rating : 7.3/10
கொரியா, ஜப்பானின் ஆதிக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் நடைபெறும் கதை.
புலிகளை வேட்டையாடி அதன் தோல்களை சேகரிக்கும் ஜப்பானிய கவர்னர், கொரியாவின் கடைசி புலி வரை வேட்டையாடவேண்டும் என்று முயற்சிக்கிறார்.
தன் மகனுக்கு வேட்டையின் சூட்சுமத்தை விளக்கும் கொரியாவின் வேட்டைக்காரர் Chun Man - duk ஒரு புலியை வேட்டையாடுவதில் ஆரம்பிக்கிறது திரைப்படம்.
சில வருடங்களின் பின்னர் மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஒற்றைகண் புலியை வேட்டையாட முயற்சிக்கிக்கும் பலர் அந்த புலியினால் உயிரிழகின்றனர்.
சில வேட்டைக்காரர்கள் வைக்கும் பொறியில் ஒற்றைகண் புலியின் இரண்டு குட்டிகள் இறந்துவிடுகின்றன. அதன் துணையும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறது. பின்னர் அதையும் கொன்றுவிடுகின்றனர்.
மலை அரசனை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகிறது.
Read 10 tweets
எழுதியவர் : சுகுணா திவாகர்

மாடத்தி (2020)

சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமையும் இந்தியாவின் நூற்றாண்டுகால துயர வரலாறு. தீண்டப்படாத சாதிகள் இருப்பதைப்போலவே 'காணக்கூடாத சாதிகளாக' இருப்பவர்கள் புதிரை வண்ணார்கள். இவர்கள் பகலில் நடமாடக்கூடாது. இரவில் மட்டும்தான் வெளியில் வரவேண்டும். Image
எப்படி பட்டியலினச் சாதிகள் பிற ஆதிக்கச்சாதிகளால் ஒடுக்கப்படுகிறார்களோ, அதைப்போல பட்டியலினச் சாதிகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் இவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் துணிகளை வெளுப்பதே இவர்களுக்கான குலத்தொழில். Image
சாதியப்படிநிலையில் இவர்களுக்கு மேலேயிருக்கும் பட்டியலினச் சாதியினர் புதிரைவண்ணார்களை ஏறெடுத்துப்பார்க்க மாட்டார்கள். இவர்கள் செல்லும் வழியில் 'மேல்சாதியினர்' வந்துவிட்டால் அவர்கள் பார்வையில் படாதவாறு மறைந்துவிட வேண்டும். Image
Read 7 tweets
#goofymovies
Door Lock (2018/Korean)
IMDb Rating : 6.4/10
ஹீரோயின் யாரோ தன்னை கண்காணிக்கிறாங்கனு சந்தேகத்தில பல தடவை போலிஸ் புகார் குடுக்கிறாங்க. ஆனா எந்த ஆதாரமும் இல்லன்னு கண்டுக்காமல் விடுறாங்க. அவ இருக்கிற apartmentல அவளுக்கு தெரியாமலே ஒருத்தன் இரவுல அவ கூட தங்கி இருக்கிறான்.
இந்த கதைய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?. ஆமாங்க, இது Sleep Tight (2011/Spanish) படத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். 'Sleep Tight'ல கதையை perpetrator இன் கண்ணோட்டத்தில் சொல்லி இருப்பாங்க. 'Door Lock'ல Victim இன் கண்ணோட்டத்தில் சொல்லி இருக்காங்க.

IMDb Rating : 7.2/10
இருந்தாலும் 'Door Lock' படம் , 'Sleep Tight' படத்துல இருந்து கொஞ்சம் வித்தியாசமா எடுத்திருக்காங்க.
'Sleep Tight' பார்த்தவங்களுக்கு 'Door Lock'ல எல்லாத்தையும் guess பண்ணிட முடியும். அப்பிடி நீங்க ST பார்கலனா Door Lockஐ பாருங்க. அட்டகாசமான திரில்லர் திரைப்படம்.
Read 3 tweets
#goofymovies
Vikrithy (2019/Malayalam)

கதை : எல்டோவும் ,எல்சியும் காது கேளாதா, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தம்பதிகள். உடம்புக்கு முடியாத சின்ன மகளை மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்கள் கண்விழித்து கவனித்துவிட்டு வீடு திரும்பும் எல்டோ, மெட்ரோ ரயிலில் தூங்கிவிடுகிறார். Image
அரபுநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் சமீர், சமூக வலைத்தளங்களில் forward மெசேஜ்கள் அனுப்புவதால் தன்னை ஒரு சமூக போராளியாக காட்டிக்கொள்பவர். எல்டோ பயணம் செய்யும் மெட்ரோ ரயிலில் செல்லும் சமீர், எல்டோவினை குடிகாரன் என நினைத்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்.
அது கேரளா முழுதும் வைரலாகிறது. அதானால் எல்டோ வேலையை இழக்கிறார், மகனுடன் மனஸ்தாபம் ஏற்படுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? இதுதான் இந்தப்படத்தின் கதை. கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
படம் முழுவதும் பல காட்சிகள் உங்களை கண்கலங்கவைக்கும்.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!