Discover and read the best of Twitter Threads about #nepisbrahmanism

Most recents (8)

தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் விவாதிக்காமல் ஆளுநர்களிடமும், குடியரசுத் தலைவரிடமும் கருத்துக் கேட்பது சரியா? தமிழ்நாடு அரசு அமைத்துள்ள கல்வி நிபுணர்கள் குழுவை மாற்றிடுக - வரலாற்றுப் பிழையைச் செய்து வரலாற்றுப் பழியை ஏற்கவேண்டாம்!
#NEP முழுக்க முழுக்க RSS அமைப்பின் அஜெண்டாவினை செயலாக்குகின்ற திட்டம்தான்.
அதனை உருவாக்கியபோது அதில் சிறந்த கல்வி நிபுணர் எவருமே இடம்பெறவில்லை.
முதலில் இதனை சமஸ்கிருதமயமாக்கிட கால்கோள் விழா நடத்தியவர் டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் என்ற அய்.ஏ.எஸ். பார்ப்பனர்.
டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் குழு அளித்த பரிந்துரைகள் மீது எழுந்த எதிர்ப்புக் குரலுக்குப்பின் அதனை ‘ரிப்பேர்’ செய்து அளிக்கும்போது மாற்றி அமைக்கப்பட்ட கல்விக் குழுவிலும் அணுசக்தித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கஸ்தூரி ரங்க அய்யங்கார்தான் தலைவராக இருந்தார், அறிக்கை தந்தார்.
Read 21 tweets
#NEP ஆறாம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வியைக் கற்க வேண்டும் என்கிறது. பின்னர் பல்கலைக் கழகப் படிப்பு வரை தொடர வேண்டும் என்றும் சொல்கிறது.
தொழிற்கல்வி எனும் பெயரில்
நவீன குலக்கல்வித் திட்டமா?
12 ஆம் வகுப்பு முடித்ததும் மாணவன் தனக்கு ஒரு புரிதல் உள்ள நிலையில் சில தொழில்கள்பற்றி தெரிந்து கொள்வது சரி. அதை எல்லா மாணவர்களும் தெரிந்து கொள்ளட்டும். தெரிந்து கொள்வது என்பது வேறு. தேர்வு என்பது வேறு.
ஆறாம் வகுப்பில் இருந்து அதற்குத் தேர்வு என்பதெல்லாம், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களைத் தங்களது குடும்ப சூழல் சார்ந்த குலத்தொழிலை நோக்கி தள்ளுவது தவிர்க்க முடியாதது. மீண்டும் ஒரு குலக் கல்வி அகில இந்திய அளவில் நுழைகிறது.
Read 24 tweets
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 3வயதுக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கச் சொல்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், பாடங்களும், சொல்லித்தரும் முறையும், மத்திய அரசு சொல்கிறபடியே இருக்கவேண்டும். மாநில, உள்ளூர் பண்பாடு -நாகரிகம் பற்றியெல்லாம் எதுவும் சொல்லித்தர மாட்டார்கள்.
பள்ளிக்கல்வி வரை மட்டுமே பெண் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது புதிய சனாதன #NEP கொள்கை. மேலும், மாணவர்கள் அதிகம் இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு, பள்ளி வளாகம் என்ற பெயரில் 10,15 கி.மீ.க்கு அப்பால் உருவாக்குவோம்என்றால், அப் பள்ளிகளுக்கு, பெண்பிள்ளைகளைப் பெற்றோர் எப்படி அனுப்புவார்கள்?
உயர்கல்வியைத் தாண்டி, பட்டப்படிப்பு, பல்கலைக்கழகம் இங்கேயெல்லாம், பெண்களுக்கான வாய்ப்பைப்பற்றி இந்த கல்விக் கொள்கையில் ஒரு திட்டமும் இல்லை.
Read 23 tweets
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று இன்று (3.8.2020) திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். #NEP2020
இறுதிவரை உறுதியான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகவே இருக்கவேண்டும்.
இதோடு மட்டுமல்ல, சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வி போன்றவற்றில் எதுவும் கூறாத கல்விக் கொள்கை, பல நுழைவுத் தேர்வுகள் - இவைபற்றியும் தமிழக அரசு தனது உறுதியான கருத்தையும், நிலைப்பாட்டினையும் அறிவித்தலும் அவசியம்! #NEP
மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்ற இந்த முடிவை உடனடியாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நமது மகிழ்ச்சி கலந்த நன்றி! நன்றி!! #NEP2020 #NEPisBrahmanism
Read 3 tweets
#NEP2020 பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு பெரும் முயற்சியை எடுத்து, இந்தக் கல்வித் திட்டத்தினால் விளையக்கூடிய ஆபத்துகளைத் தடுத்து நிறுத்திட எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தகுந்தது.
ஒடுக்கப்பட்டோர், கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர் எப்படி இந்தக் கல்வித் திட்டத்தினை ஏற்க முடியும்? #NEP2020 #NEPisBrahmanism
சமூகநீதியாளர்கள், முற்போக்குக் கல்வியாளர்கள், எதிர்க்கும் கட்சிகள், இயக்கங்கள், சமூக அமைப்புகள் அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று இந்த #NEP2020-யை ஏற்க மறுப்பதுதானே சமூகநீதி அடிப்படையில் தேவையான ஒன்று.
சிந்திப்பீர், செயல்படுவீர் - இதில் தாமதிக்கவே கூடாது!
Read 3 tweets
மனுதர்ம ஒடுக்குமுறையை மாற்றத் தான், சமூகநீதி என்னும் இட ஒதுக்கீடு - கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களான S.C., S.T., OBC, சிறுபான்மையினர் ஆகியோருக்கு தரப்படுகிறது.

சமூகநீதி - இட ஒதுக்கீடு என்பது அவர்களைக் கைதூக்கி விடுவதற்கான உதவிக்குரிய ஒரு கருவியாகும்!
காலங்காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், கல்விக்கான இடங்களுக்கு, வேலை வாய்ப்புகளுக்குப் போட்டியிடும் நிலையில், சம போட்டி என்பதற்கே இடமில்லாத நிலையே யதார்த்தம்! #NEPisBrahmanism #NEP2020
சம பலம் உள்ளவர்களிடையே போட்டி ஏற்படுத்தினால்தான் அது சம வாய்ப்பு என்பது பொருள் உள்ளதாகும். கொழுத்த வனுக்கும், இளைத்தவனுக்கும் போட்டி என்றால், அது ஒருபோதும் சம போட்டியாகாது. இதையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்கூட தெளிவுபடுத்தியுள்ளன. #NEP2020 #NEPisBrahmanism
Read 3 tweets
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கைத் திட்டத்தில் சமூகநீதியை வலியுறுத்தியோ - இட ஒதுக்கீட்டிற்கான உறுதி என்பதோ எங்கும் இடம்பெறவில்லை! சமூகநீதியாளர்கள் அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்போம்! #NEPisBrahmanism #NEP2020
மத்திய அரசின் #NEP2020 என்பது மாநிலங்களின் கல்வி உரிமைகளை - அதிகாரங்களைப் பறிப்பது என்பது மட்டுமல்ல; பன் மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய நாடு - ஒரே கல்வித் திட்டத்தின்கீழ்தான் இயங்கவேண்டும் என்பதே ‘‘திணிப்பு’’ அல்லாமல் வேறு என்ன? #NEPisBrahmanism
மிக முக்கியமான உரிமைப் பறிப்பு என்னவென்றால், சமூகநீதி (Social Justice) என்னும் கருத்தோ, இட ஒதுக்கீட்டுக்கான உறுதியோ எங்கும் இடம்பெறவே இல்லை - பள்ளிக் கல்வித் தொடங்கி பல்கலைக் கழக கல்வித் திட்டங்கள்வரை! அதாவது இடஒதுக்கீடு பற்றி எங்குமே குறிப்பிடப்பட வில்லை. #NEPisBrahmanism
Read 3 tweets
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் அமைந்த குழுவானாலும் சரி, அதற்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட கஸ்தூரி ரெங்கன் குழுவானாலும் சரி, அக்குழுக்களில் கல்வி நிபுணர்கள் யாராவது இடம்பெற்றார்களா?
#TNRejectsNEP #NEPisBrahmanism
பல கல்வி நிபுணர்கள் அனுப்பிய திருத்தங்கள், பரிந்துரைகள், மாற்றங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு மறு ஆய்வு செய்து உருவாக்கப்பட்டதா - மத்திய அமைச்சரவை ஒப்புக்கொண்ட இந்த அறிக்கை?
#TNRejectsNEP #NEPisBrahmanism
மாநிலங்களின் அதிகாரமாகிய ‘ஒத்திசைவுப் பட்டியலில்’ (Concurrent List) கல்வி உள்ளது என்பதை அறவே புறந்தள்ளிவிட்டு, கல்வி ஏதோ யூனியன் லிஸ்ட்டுக்கு - மத்திய அரசின் ஏகபோகத்திற்கே மாற்றப்பட்டதுபோல் செயல்படுவது ஏற்கத்தக்கதா? #TNRejectsNEP #NEPisBrahmanism
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!