Discover and read the best of Twitter Threads about #tnpsc

Most recents (11)

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும். (1/4)
#GroupIIMains #TNPSC
பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே இதற்குக் காரணம்.(2/4)
போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.(3/4)
Read 4 tweets
*டி.என்.பி.எஸ்.சி. இடஒதுக்கீடு கொள்கை - சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாராம்சம் (07/09/2022) 🧵*
#TNPSC
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படியும், பின்வருமாறு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். (1/8)
முதலில், இட ஒதுக்கீடு ஏதும் இல்லாத open merit list தயார் செய்ய வேண்டும். இரண்டாவதாக, இந்த open merit list இல் vertical reservation எனப்படும் சாதிவாரி இடஒதுக்கீடு ஒதுக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, horizontal reservation எனப்படும் பாலினம்சார் இடஒதுக்கீடு ஒதுக்கப்பட வேண்டும். (2/8)
இந்த மூன்றாவது சுற்று என்பது இரண்டாவது சுற்றில் பெண்களுக்கு 30% பிரதிநிதித்துவம் வராத பட்சத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். இல்லையேல், விட்டுவிட வேண்டும்.
ஆனால், TNPSC மேற்கூறிய முறையை முற்றிலும் தலைகீழாக இதுவரை பின்பற்றி வந்துள்ளது. (3/8)
Read 8 tweets
FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN (TAMIL NADU SURVEY AND LAND RECORDS SUBORDINATE SERVICE&TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE )
சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு எதிர்பாரத ஒரு அறிய வாய்ப்பு
1089 காலி பணியிடங்கள்
#TNPSC
இதுவரை group 4 தேர்வில் தான் பத்தாம் வகுப்பு தகுதிக்கு தான் (சர்வேயர் ) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. ஆனால் இந்த ஆண்டு முதல் துறை சார்ந்த படிப்பு படித்த டிப்ளமோ சிவில் படித்தவர்களை கொண்டு தான் இனி அந்த பதவிகள் நிரப்படும் என அரசு அறிவித்து..
tnpsc.gov.in/Document/engli…
#TNPSC
தகுதி உள்ள நபர்கள் இந்த தேர்வை பயன்படுத்தி கொள்ளுங்கள்.. ஒரு பென்னான வாய்ப்பு அதிக காலி பணியிடங்கள் வந்துள்ளது..
தேர்வு நாள் 06/11/2022
FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN..
#TNPSC
tnpsc.gov.in/Document/engli…
நன்றி 🙏🙏
Read 3 tweets
#Tnpsc

#GROUP4

#நாலடியார்

1)பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல்

“நாலடியார்”

2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல்

“நாலடியார்”

3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல்

“நாலடியார்”
4. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல்

நாலடியார்”

5. முப்பெரும் நூல்கள் யாவை

திருக்குறள்

நாலடியார்

பழமொழி நானூறு

6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல்

நாலடியார்”

7. திருக்குறளை போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல்

நாலடியார்”
8. நாலடியார் பிரித்து எழுதுக

“நாலடி + ஆர்”

9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது

“நாலடியார்”

10. நாலடியார் என பெயர் வரக் காரணம்

“நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது”

11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள்

“சமணமுனிவர்கள் பலரால்”
Read 8 tweets
#Tnpsc

#GROUP4

#சங்கஇலக்கிய தகவல்கள்

💥தமிழுக்கே உரிய இலக்கியங்கள் சங்க இலக்கியம்.

💥கி. மு.3 நூற்றாண்டு முதல் கி. பி.3 நூற்றாண்டு இடைப்பட்ட காலம் சங்க காலம்.
💥 சங்க இலக்கியம் -செவ்வியல் இலக்கியம், உயர்தனி இலக்கியம், சான்றோர் செய்யுள், வீர இலக்கியம், மக்கள் இலக்கியம், திணை இலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது

💥சங்க இலக்கியம் பதினெண்மேல் கணக்கு நூல் எனவும் அழைக்கப்படுகிறது

💥எட்டுத் தொகையும், பத்துபாட்டும் மேல்கணக்கு நூல்கள் ஆகும்
💥சங்க இலக்கியம் 26350 அடிகளை கொண்டவை

💥மொத்தம் சங்க பாடல்களின் எண்ணிக்கை - 2381

💥சங்க இலக்கியத்தில் காணப்படும் புலவர்களின் எண்ணிக்கை - 473

💥சங்க இலக்கியத்தில் உள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 30
Read 4 tweets
#Tnpsc

#GROUP4

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்:

1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்க- பாரதியார்
2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை

4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
5) சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்

6) உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்

7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

9) சொல்லின் செல்வன் - அனுமன்

10) தமிழ் தென்றல் - திரு.வி.க.
Read 16 tweets
#TNPSC

#Group4

#TnpscGuider

🍁புலவர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும் ✍️

1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?  

மருதூர்
2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?  

மயிலாப்பூர்
3.ஊ▪வே▪சா பிறந்த ஊர் எது?  

உத்தமதானபுரம்
Read 30 tweets
Thread!

*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?

அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு!*

How Many Groups in TNPSC?

குரூப் – 1
குரூப் – 2
குரூப் – 3,
குரூப் – 4,
குரூப் – 5,
குரூப் – 6,
குரூப் – 7,
குரூப் – 8
*குரூப் – 1 சேவைகள்*
(Group-I)

1) துணை கலெக்டர்
(Deputy Collector)

2) துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)

3) மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை (District Registrar, Registration Department)
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து)
4) கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat)/Personal Assistant (Development) to Collector)

5) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)

6)தீயணைப்பு, மீட்பு சேவை பிரதேச அலுவலர்
(Div.Officer in Fire &Rescue Services)
Read 26 tweets
#Current_affairs
#TNPSC #RRB #SSC
1.இந்தியா சார்பாக தலிபான்களுடன் முதல் சந்திப்பு நடத்திய கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் யார் ??

விடை: தீபக் மிட்டல்
2.மகாபலிபுரத்தில் நடைபெற்ற முதல் தேசிய கடற்கரை #மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
#ஆடவர் அணிகள் பிரிவில்
🏆மகாராஷ்டிரமும்,
#மகளிர் அணிகள் பிரிவில்
🏆ஹரியாணாவும்
சாம்பியன் ஆகின.
3.#பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் யார்?

Avani Lekhara
(ஜெய்ப்பூர் ராஜஸ்தான்)

(துப்பாக்கி சுடுதல்)
Read 10 tweets
Tnpsc exams க்கு நிறைய study centres இருந்தாலும் தேர்ச்சி சதவிகிதம் ரொம்ப கம்மிதான்(Less than 10%). இத பத்தி இந்த சமயத்துல ஒரு த்ரெட் போடலாம்னு, என்னென்ன சந்தேகங்கள் இருக்குனு கேட்ருந்தேன். அதுல சில கேள்விகளுக்கான பதில்கள இப்போ பாக்கலாம்.
#tnpsc
1. க்ளாஸ்க்கு போகாம tnpsc exams க்கு படிக்க முடியுமா?
உங்களுக்கு நீங்க எழுதப்போற தேர்வின்(Group1/2/4 etc) சிலபஸ், தேர்வின் இயல்பு மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி தெளிவான புரிதல் இருந்தா க்ளாஸ்க்கு போகவேண்டிய கட்டாயம் இல்ல.
கடைசியா நடந்த 5 தேர்வுகளோட வினாத்தாள் எடுத்து பார்த்தாவே புரிஞ்ச்சுக்க முடியும் இதெல்லாம். அதுபோக ஏதாவது ஒரு டெஸ்ட் சீரீஸ் அட்டெண்ட் பண்ணலாம். படிச்சத ரிவைஸ் பண்ண ரொம்ப உதவியா இருக்கும்.

2. Tnpsc தேர்வு எழுதி வேலை வாங்க குறைந்தது எவ்ளோ நாள் ஆகும்?
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!