Discover and read the best of Twitter Threads about #votefordmk

Most recents (5)

கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் இல்லாம யோசிச்சா இப்போ நான் வாழும் வாழ்க்கை எனக்கு கண்டிப்பா கிடைச்சுருக்காதுன்னு தோணுது.

1. பொறியியல் நுழைவு தேர்வு ரத்து
2007 ல கலைஞர் நுழைவு தேர்வை ரத்து பண்ணார். நான் 2008 ல 12th முடிச்சேன். அரசாங்க பள்ளியில தான் படிச்சேன்.
எனக்கு cutoff ஒன்னு இருக்கு, அதுக்கு 3 பாடத்துல நிறைய மார்க் எடுகனும்ண்ணே ரிசல்ட் வந்த பிறகு தான் தெரியும். இதுல நுழைவு தேர்வுன்னு ஒன்னு இருந்தா விளங்கிருக்கும். 12th ஸ்கூல் பீஸ் 200 கட்டவே கஷ்டப்பட்டு கட்டுனது. நுழைவு தேர்வு இருந்தா இன்ஜினீரிங் கனவை மூட்டை கட்டி இருப்பேன்
2. இட ஒதுக்கீடு
MBC சமூக மக்களுக்கு 20 % இட ஒதுக்கீடு கலைஞர் கொண்டுவரலைன்னா நான் govt college ல இன்ஜினீரிங் படிச்சு இருக்கவே முடியாது குறைந்த கட்டணத்தில. Semester fee 9k தான் அங்க. இதையே private ல யோசிச்சு கூட பாக்க முடியாது. Govt college கிடைக்கலன்னா arts degree முடிச்சுருப்பேன்
Read 6 tweets
Thread..

இரண்டு நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் சம்பவங்கள், கட்சி சாரா பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சார மேடைகளில், திமுக குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு,
1/n
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோர் கொடுத்த கவுண்ட்டர் மக்களை திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது.

இன்று ஸ்டாலினின் மகள் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்திய போதும், ஸ்டாலின் செம கூலாக பிரச்சாரத்தில்,
2/n
"எவ்வளவு வேண்டுமானாலும் ரெய்டு நடத்துங்கள்.. எங்களுக்கு கவலையில்லை" என்றதும்... இதற்கு ஒருபடி மேலே போய், "இது என் வீட்டு முகவரி.. முடிந்தால் என் வீட்டுக்கு ரெய்டு வாங்க" என்று உதயநிதி ஸ்டாலின் சொடுக்கு போட்டு சவால் விட்டதும் தமிழ்நாட்டு மக்களை ஆச்சரியப்பட வைத்ததுள்ளது.
3/n
Read 7 tweets
Thread..

ஊழலுக்காக கலைக்கப்பட்டதா திமுக ஆட்சி..?

காலந்தோரும் திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 31/1/1976. திமுக மீதான ஊழல் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது 3/2/1976.
1/n
#DMK4TN #VoteForDMK
திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு தான், சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது. அப்புறம் எப்படி ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டு இருக்க முடியும்.?

காங்கிரஸ் கூட்டணி அரசு மீது "2ஜி ஊழல்" என்று எப்படி பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள்
2/n
பாஜக என்ற கட்சியை எப்படி ஆட்சிக்கு வர வைத்தார்களோ.. அதே போல தான் எமர்ஜென்சியை இந்தியாவிலேயே கடுமையாக எதிர்த்த திமுகவை ஒழிக்க, சர்க்காரியா கமிஷன் என்ற பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள் எம்ஜிஆர் - அதிமுக என்ற கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். 3/n
Read 15 tweets
நண்பன் கேட்டது,

திமுக என்ன தேவ தூதர்கள் மூலம் கொண்டுவரப்பட்டதா?
திமுக மீது விமர்சனங்கள் கிடையாதா?

எல்லாம் சரி, இதேயெல்லாம் தேர்தலுக்கு பின் பேசிக்கொள்ளலாம்

1.மதவாத பாசிச சக்திகள் தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க

2.உத்திர பிரதேசம் போல மக்கள் வெட்டிக்கொண்டு சாகாமல் இருக்க
3.உத்திர பிரதேசம் போல பெண் பிள்ளைகள் வன்புணர்வு செய்யப்பட்டு அரசாங்கத்தால் எரிக்கப்படாமல் இருக்க

4. குஜராத் போல, மதவாத வன்முறை தூண்டி மக்களை,ரயிலை எரித்து ஓட்டு அரசியல் செய்யாமல் இருக்க

5. கர்நாடக BJP MLAக்கள் வேலைக்கு தேடி போன பெண்களை படுக்கையில் தள்ளியது போல நடக்காமல் இருக்க
6. மம்தா பானர்ஜி,ஜெயலலிதாவை தாக்கியதை போல, அரச பயங்கரவாதம் தமிழகத்தில் நடக்காமல் தடுக்க

7. உங்கள் வீட்டு பிள்ளைகள்,புத்தகம் கையில் ஏந்தி வாழ்வில் முன்னேறுவதை,தடுத்து கையில் வாள், கத்தி கொடுத்து மத கலவரத்திற்கு செல்லாமல் தடுக்க
Read 6 tweets
Thread...

மகளிர் கவனத்திற்கு...

1.உலகத்திலே அனைத்து பெண்களுக்கான வாக்குரிமை முதன் முதல் தமிழக பெண்களுக்கே நீதிகட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது

2.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. 1/n

#VoteForDMK
3.இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் அரசு பணியில் 30% பெண்களை அமர்த்தியது திமுக ஆட்சி.

4.உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை இந்தியாவிலே முதல்முறையாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2/n

#VoteForDMK
5.பெண்களுக்கான திருமண உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

6.பெண்களுக்கான மகபேறு உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. 3/n

#VoteForDMK
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!