Discover and read the best of Twitter Threads about #அகநானூறு

Most recents (18)

ஆகோள் பூசல்!

சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.

ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.

தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.

'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.

புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
Read 5 tweets
மந்திரச் சடங்குகள்....!

மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.

இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.

வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.

மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்
Read 19 tweets
நீத்தார் வழிபாடு...!

பண்டைய நாளில் இறந்து போனவர்களது ஆவி பற்றியும், அதனுடைய சக்தியைப் பற்றியும், உலகம் முழுவதிலும் உள்ள இனக்குழு மக்களிடையே சில நம்பிக்கைகள் இருந்தன.

இறந்து போனவர்களுடைய ஆவிக்கு ஆற்றல் அதிகம். அது ஆக்கச் சக்தியாகவும், அழிவுச் சக்தியாகவும் வெளிப்படலாம்.
அந்த ஆவி அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும்.

அவற்றைச் சடங்குகள், வழிபாடுகள், சாந்திகள் போன்றவற்றால் மகிழ்வித்தால், அந்த ஆவி அக்குழுவிற்கு ஆற்றலளிக்கும் என்று நம்பினர்.

போரில் வெற்றி பெற்றுத் தரும். கால்நடைச் செல்வங்களைப் பாதுகாக்கும்.
வயல்களில் விளைச்சலை அதிகப்படுத்தும் என்று நம்பினர். இதற்காக முன்னோர்களுக்கு சடங்குகள் செய்து வழிபட வேண்டும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது.

ஆப்பிரக்க மக்கள் இந்த ஆவிக்கு உருவம் கொடுத்தனர். கென்யா, கோல்ட் கொஸ்ட், நைஜீரியா போன்ற மக்களிடையே இத்தகைய வழக்கம் இருந்தது.
Read 13 tweets
பெருவழிகள் உருவாக்கம்...!

பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.

#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.

இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.

இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.

மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,

தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.
Read 20 tweets
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!

கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.

பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
Read 27 tweets
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 3). #தோப்பி

தினையிலிருந்து வார்க்கப்பட்டது 'தினைக் கள்'. பனை மரத்திலிருந்து பெறப்பட்டது 'பனைக் கள்'. 'தோப்பிக் கள்' எவ்வாறு பெறப்பட்டது? அகநானூற்றின் மூன்று பாடல்களும் (35, 265, 348), பெரும்பாணாற்றுப் படையும் (141-142) இதனை விளக்குகின்றன.
வீட்டின் முற்றத்தில் கோடையில் பழுத்த நல்ல மணம் கமழும் மாம்பழத்துடன்,

பிசின் தன்மையுடைய நன்கு விளைந்த பலாச்சுளையும் சேர்த்து, அவற்றைத் தேனுடன் கலந்து,

வண்டுகள் மொய்க்கும் அரியலுடன், மூங்கில் குழாயில் ஊற்றி முற்ற வைப்பார்கள்.
'பாம்பு கடுப்பன்ன தோப்பி' எனும் தொடர் நன்கு முதிர்ந்து விளைந்த இந்தக் கள்ளைக் குடிக்கும்போது, பாம்பின் சீற்றத்தை ஒத்த வெறி ஏற்படும் என்கிறது.

#தோப்பி என்பது நெல்லிருந்து பெறப்படுவது என்கிறார் #நச்சினார்க்கினியர்.

அகநானூற்றின் 265-ஆம் பாடல் வேறொரு வர்ணனையைக் காட்டுகிறது.
Read 7 tweets
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 1). #கள்

பண்டைத் தமிழர் வாழ்வியலில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகையான #மதுபானங்கள் குடிக்கும் வழக்கம், நீண்ட நெடுங்காலமாக இருந்துள்ளது.

சங்க இலக்கியங்களில், #கள்ளுண்ணுதல் பற்றிய குறிப்புகள் பரந்து கிடக்கின்றன.
நாம் இன்று காப்பி, தேநீர் குடிப்பதுபோலச் சங்க காலத்தில் #மது எல்லோராலும் விரும்பிக் குடிக்கப்பட்ட பானமாக இருந்துள்ளது.

அன்றாட உணவின் ஒரு பகுதியாகவும், முக்கியமான உணவுப் பண்டமாகவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மது வகைகள் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும்போது,

அது தேனிலும், தினையிலும், பனையிலும், பழத்திலும், அரிசியிலும் செய்யப்பட்டதைக் காணமுடிகிறது.

சங்க காலத்தில் #மது பல்வேறு பெயர்களில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Read 31 tweets
சங்ககாலக் மருதத் திணை மக்களின் உணவு முறைகள்...!

வேளாண் தொழில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் பேசுகிறது.

#சேற்று நிலத்தில் #நெல்லை விதைத்துப் பயிரிட்டுள்ளனர்.

நாற்றங்காலில் #நாற்று வளர்த்துப் பின்னர் பெயர்த்தெடுத்துப் பயிரிட்டனர்.
#சேற்றுழவு செய்ததை பின்வரும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

#விதை விதைத்து #நெல் பயிரிட்ட முறையை ‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்' என்கிறது #ஐங்குறுநூறு (3:4).
ஒரு வேலி நிலத்தில், ஆயிரம் கலம் செந்நெல்லை விளைவித்துள்ளதைப் பின்வரும் #பொருநராற்றுப்படை வரிகள் பதிவிடுகின்றன.

மேலும், விளைந்த நெற்பயிரை அறுத்துக் களத்திற்குக் கொண்டு வந்து, அடித்துக் காற்றில் தூற்றி நெல்லைக் குவித்தனர் என்கிறது #அகநானூறு (30: 6-8).
Read 20 tweets
சங்ககாலப் பாலைத் திணை மக்களின் வாழ்வாதாரம்...!

பண்டைத் தமிழகத்தின் #பாலை என்பது நிலையான திணை அல்ல.

குறிஞ்சியிலும், முல்லையிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது #பாலை எனும் வறண்ட பிரதேசம் உருவானது.

கோடையின் மிகக் கடுமையான வறட்சியிலும், இந்நிலத்தில் பாலை மரம் வாடாமல்...
பசுமையுடன் கண்ணுக்குப் புலப்பட்டதால், பாலை என்ற பெயர் இத்திணைக்கு வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.

வேனிற்கால நண்பகலிலும், பாலை மரத்தின் மலர்கள் கொத்துக் கொத்தாகக் கொடுஞ்சுரங்களின் வழிகளில் மலர்ந்திருக்கும் என #ஐங்குறுநூறு (383) மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதனாலேயே வெஞ்சுரமானாலும் அது பாலை எனப்பட்டது.

இதன் நீட்சியாக அங்கு இசைக்கப்பட்ட #பண் ‘பாலைப் பண்’ எனவும்,

அதனை இசைத்த #யாழ் ‘பாலை யாழ்’ எனவும் வழங்கப்பட்டன.

இச்சூழலில் பாலை என்பது ஒரு தனி நிலம் அன்று எனும் கருத்து கவனிக்கத்தக்கது (நற். 43, 84, 186).
Read 26 tweets
சங்க கால #நெய்தல் திணை மக்களின் பன்மைத் தொழில் நுட்பங்கள்!

சங்க கால மீனவர்களின் தொழில்நுட்பம் பன்மைத் தன்மை வாய்ந்தது.

#பரதவர்கள் நள்ளிரவிலும் மீன் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு திண்ணிய திமிலில் அலைகடல் நடுவே சென்றுள்ளனர்.
விளக்கொளியைக் கண்ட சிறுமீன்கள் திரண்டெழும்; அவற்றைத் தின்ன வெஞ்சுறாக்கள் விரைந்து வரும்.

அவற்றைப் பரதவர்கள் பிடித்துத் திமிலில் ஏற்றி வந்தனர் - நற்.67:6-9

இரவில் மீன் வேட்டம் செய்வோர், கடலில் வெளிச்சம் வார் போடுவதற்குத் தாம் பிடித்த மீன்களின் கொழுப்பைச் சேகரித்து அதனை...
எண்ணெய்யாகப் பயன்படுத்தியுள்ளனர் என
பின்வரும் பாடலடிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

இரவில் மீன் வேட்டத்திற்குச் செல்லும்போது, சுறா மீன்கள் கட்டுக் கடங்காமல் விரைந்து திரிவதுண்டு.

அவற்றைக் கனன்று எரியும் தீப்பந்தம் மூலம் கூர்ந்து நோக்கி, வலுவான கயிற்றில்... Image
Read 20 tweets
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!

மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.

இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.

இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.

#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 25 tweets
உப்பு விளைவித்தல்...!

சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.

▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.

▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.

சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 8 tweets
சங்க கால வேட்டைத் தொழிலில் கூட்டுழைப்பு!

#வேடர் சமூகத்தில் ஆண், பெண், சிறார் ஆகியோரிடையே #தொழிற்பகுப்பு காணப்படுவது இயல்பு.

எனினும் அவர்களிடம் கூட்டுழைப்பும், அதனையடுத்து உழைப்பால் ஈட்டியவற்றைக் கூட்டாகப் பாதீடு செய்துகொள்வதும் சிறப்பான பண்புகளாக விளங்கின.
#வேடுவர்கள் கூட்டு வேட்டையில் ஈடுபடுபவர்கள்.

#கெண்டி எறிந்தும், #அம்பு எய்தியும், #கண்ணி வைத்தும் விலங்குகளை வேட்டையாடினர். #வலை விரித்துப் பறவையினங்களைப் பிடித்தனர்.

புறநானூற்றுப் பாடல் (322) மூலம் வேட்டுவச் சிறுவர்கள்...
... வரகின் அரிகாலில் மேயவரும் எலிகளைப் பிடிப்பதற்கு, ஏற்ற சமயத்திற்காகக் காத்திருந்தனர் என அறியலாம்.

சிறுவர்கள் ஒன்று கூடி, எலி பிடித்த கூட்டுழைப்பை, 'புன் தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்' என்கிறது #புறநானூறு (322: 3-4).
Read 28 tweets
சங்ககால கைவினைக் கலன்கள்!

குயவர்கள் 'கலம்செய் கோவே' என அழைக்கப்பெற்றனர்.
கலத்தினை வனைவதற்குத் #திகிரி (மலைபடு.474) பயன்படுத்தினர்.

#குயவர்கள் சமைத்த கலன்களைச் சூளையில் சுட்டு உருவாக்கினார்கள். Image
▪︎ #தாழி:

இறந்தோரை அடக்கம் செய்யும் 'தாழி'யினையும் இக்குயவர்களே செய்து கொடுத்தனர்.

'முதுமக்கள் தாழி' எனப்பட்ட இக்கலம் பெரிய வாயகன்ற பானை போன்று இருந்தது.

உயிர் நீந்த மன்னர்களையும், நிலக்கிழார்களையும், தலைவனையும் இத்தாழிக்குள் வைத்துப் புதைந்தனர். Image
இதனை #பதிற்றுப்பத்து பின்வருமாறு உணர்த்துகிறது.

சங்க காலத்தில் குறிஞ்சி, முல்லை, பாலை நில மக்கள் #ஈசல் பிடித்து உண்டனர்.

அவ்வீயலைப் பிடிக்கத் #தாழி பயன்பட்டது என்பதை

‘நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்கெண்டி' எனும் #நற்றிணை (59: 2) அடி குறிப்பிடுகிறது. Image
Read 23 tweets
சங்க கால உண்கலன்கள்...!

சங்க காலத்தில் உணவுப் பொருள்களைச் சேகரிக்கவும், சேமித்து வைக்கவும், சமைப்பதற்கும், உண்பதற்கும் பல்வேறு புழங்கு பொருள்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலை, ஓலை, மூங்கில், மண் பாத்திரங்கள் முதலான சாதாரண கலன்களும்... Image
இரும்பு, வெள்ளி, செம்பு, பொன் பாத்திரங்கள் முதலான விலையுயர்ந்த கலன்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன.

புழங்கு பொருள்கள் பண்பாட்டின் காலக் கண்ணாடியாகவும், அதன் வளர்ச்சியைக் காட்டும் அளவு கோலாகவும் உள்ளன.
அறிதிறன், தொழில்நுட்பத் திறன், உலகப் பார்வை முதலானவற்றைப் பூடகமாகக் காட்டும் தன்மையையும் இவை கொண்டுள்ளன.

தொழிற் பாகுபாடுகள், வேலைப் பிரிவினை, சமூகப் படிநிலை, வாழ்வியல் வேறுபாடுகள் முதலானவற்றையும் புழங்கு பொருள்கள் காட்டுகின்றன.
Read 16 tweets
சங்க இலக்கியம் அக நானூறு பாடலில் #கண்ணன்

#அகநானூறு - 59 பாடல் 59. பாலைத் திணை பாடியவர் - மதுரை மருதனிளநாகனார்

வடாஅது,
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை
ஆண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல

என்கிறார் புலவர். தொழுநை என்பது யமுனை ஆறு.

#கண்ணன் (மாஅல்=மால்)
வடக்கே யமுனை ஆற்றில் பெண்கள் குளிக்கும்போது அவரின் ஆடைகளை எடுத்து ஒளித்துவைத்த கண்ணனாகிய மால், பின்னர் அங்கு பலதேவர் வந்தபோது, நீரில் இருந்த மங்கையர் தம்மை மறைத்துக்கொள்ள, தான் ஒளிந்திருந்த குருந்தை மரத்தின் கிளையைத் தன் காலால் மிதித்து வளைத்து அவரின் மானம் காத்தான்
என்ற நிகழ்ச்சியைச் சொல்லி அதைப்போல இந்தப் பாலைநிலத்துக் களிறு தன் மடப்பிடிக்கு யா மரத்தை வளைத்துக்கொடுத்தது என்கிறார் புலவர்.
Read 15 tweets
#தமிழ்_இலக்கியங்களில்_இராமன்
1. #புறநானூறு

|| கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு ||
#தமிழ்_இலக்கியங்களில்_இராமன்
2. #அகநானூறு

|| வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் ||
#தமிழ்_இலக்கியங்களில்_இராமன்
3. #பதிணெண்கீழ்க்கணக்கு

#பழமொழிநானூறு
|| பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;- பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் ||
Read 10 tweets
"சங்க இலக்கியங்களில் தமிழர்களின் கடல் வணிகம்...!"

தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர்.

இவற்றிற்கு வரலாற்றுச் சான்றுகளும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும், கல்வெட்டுச் சான்றுகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன!
சங்க இலக்கியங்களும் தமிழர்கள் வேறு நாட்டினரோடு கடல் வணிகம் கொண்டிருந்தனர் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் தருவதை பின்வருமாறு காணலாம்.

🔹நற்றிணைப் பாடலொன்றில் (295: 5, 6) பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழகத்தின் துறைமுகங்களுக்கு #நாவாய்கள் வந்தன என்பதை அறிய முடிகின்றது!
அக்காலத்தில் தமிழகத்தில் சிறப்புற்றிருந்த,

முத்தும், பவளமும்;
சங்கும், ஆரமும்;
அகிலும், மிளகும்;
வெண் துகிலும்,

பிற நாட்டினரின் மனதைக் குறிப்பாகக் #கிரேக்கர், #உரோமர் மனதை அதிகம் கவர்ந்தன.

இவர்களைத் தமிழ் இலக்கியம் #யவனர் என அழைக்கின்றது!
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!