Discover and read the best of Twitter Threads about #அண்ணா

Most recents (24)

அண்ணாவை மறந்த #திமுக (2)

மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு ஒரு முக்கியமான பதிவு.

‘யதா ராஜா ததா ப்ரஜா என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்’ என்றார்.

பிரிவினைக் கோரிக்கையை கைவிடாத அந்தக் காலத்திலும், ஸம்ஸ்க்ருத மேற்கோள் காட்ட அவர் தயங்கவில்லை. Image
ஹிந்தியை எதிர்க்கும் போதுகூட..

‘இதை #ராஜாஜி யிடம் விட்டு விடலாம். காலில் முள்தைத்து விட்டது. இந்த முள்ளை எடுக்க பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் முள்ளை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’
என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் #அண்ணா Image
இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு…

#திராவிட இயக்கத்தின் நங்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் #அண்ணா

‘முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று #அண்ணா, சட்டமன்றத்தில் உரையாற்றினார். Image
Read 5 tweets
தமிழ்நாட்டில் #அண்ணா அளவுக்குத் தொண்டர்கள் உரிமையோடும் பாசத்தோடும் அணுகிய ஒரு தலைவர் கிடையாது;

தலைவர்-தொண்டர் உறவில் அவர் உருவாக்கிய புது இலக்கணத்துக்கு உதாரணம் இச்சம்பவம்.

#அண்ணா மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காலம் அது.
மதுரையில் ஒரு கூட்டத்தில், “கசங்கின வேட்டி சட்டையோடு இந்த ஆள் போனா, டெல்லிக்காரன் தமிழனைப் பார்த்தாலே சிரிப்பான்” என்று #காங்கிரஸார் பேசிய தொனி, #அண்ணாவின் தம்பியர் இருவரைக் காயப்படுத்தியது.

அதற்குப் பின் என்ன நடந்தது ?

இருவரில் ஒருவரான அ.குருசாமி (87) நம்மிடம் சொன்னார்.
“அது 1962. திமுகவின் உட்கிளையான இளங்கோ மன்றச் செயலாளரா இருந்தேன்.

#அண்ணா உடையைப் பத்தி அவங்க பேசுனதை என்னால தாங்கிக்க முடியலை.

நானும் மன்றத் தோழர் க.மீனாட்சிசுந்தரமும் எங்கக் காசுல #எங்க_அண்ணாவுக்கு கோட்டுத் தைச்சுக்கொடுக்க முடிவுசெஞ்சோம்.
Read 8 tweets
ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7
Read 7 tweets
ஒருமுறை ஒரு பாராட்டு விழா. அந்தப் பாராட்டு விழாவில் என் பேராசிரியர் க.ப.அறவாணன் ஒன்று சொன்னார், ஆங்கிலத்தில் ஒரு தலைவனுக்கு ஐந்து விதமான குணநலன்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை A-B-C-D E என்று வரிசைப்படுத்தப்படுகிறது”- என்று சொன்னார்.
A for ABILITY
B for BEAUTY
C for CLARITY
D for DIGNITY
E for EDUCATIVE

இவை ஐந்தும் அமையப் பெற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் #கலைஞர் தான் என்று அவர் சொன்னார்.*

இவ்வளவு பெரிய பாராட்டுக்கு எப்படி பதில்
சொல்ல முடியும் என்று வியந்த போது #கலைஞர் மேடைக்கு வந்தார்.
பேராசிரியர் அறவாணன் ஐந்து குணங்களைச் சொன்னார். A-B-C-D-E என்று வரிசைப்படுத்தினார். ஆறாவது எழுத்தை விட்டு விட்டார். அதுதான் F,

F for Feeding. என்னை Feed செய்தவர் கள் #அண்ணா-வும், #பெரியார்-ரும் அதனால்தான் எனக்கு ஐந்து குணங்களும் வந்தன என்று சொன்னார்.
Read 4 tweets
#கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் .....

1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது.
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் பெரும்செல்வந்தர் #பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் #திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள் இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.
Read 19 tweets
அண்ணா

முதல்வராக இருந்த காலத்தில்...
பெட்ரோல் போட காசில்லாமல் கஷ்டப்பட்டார் என அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன் எழுதி இருக்கிறார்!
அண்ணா இறந்த பொழுது,
நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூபாய் 5000 மட்டும் கையிருப்பு இருந்ததாக தகவல்!
எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணா நீங்கள் எழுதுவது சிறுகதையே அல்ல என்று விமர்சித்தது கூட,ஆம் என்று ஒப்புக் கொண்ட பெருந்தகை மனிதர்!
நேரு ஒரு முறை நான்சென்ஸ் என்று சொன்னபோது,
"அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்,நாங்கள் கொட்டிக்கிடக்கிற செங்கல்!
என நாகரிக வார்த்தை மட்டுமே பயன்படுத்தினார்.
19 வருட பிரிவில், பெரியாரை விமர்சித்தது கிடையாது!
இவர்களின் விரல்களை நருக்குவேன் என்று சொன்ன காமராஜரை கூட, குணாளா குலக்கொழுந்தே என்றுதான் கூறியிருக்கிறார்!
ஈவிகே சம்பத், தோழர் அண்ணாதுரை என்ற போது கூட, "வைரக் கடுக்கன்" காது புண்ணாகி விடும் என்று கழட்டி வைத்திருக்கிறேன் என்றவர்!
Read 12 tweets
மெட்ராஸ் மாகணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையான காமரஜரை எதிர்த்து போராடி 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று 1/1
சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருதுநகரில் அவர் போரட்டத்தை துவங்கினார் அந்த போரட்டாம் முதல்வர் காமராசரின் ஆட்சியை அலட்சியப்படுத்தியது பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரை பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம் இந்த பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை என்றார் 1/2
இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற வேலை அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது என்று பதிலளித்தார் காமராஜர் மேலும் சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் நான் ஒரு வேலை இறக்க நேரிட்டால் 1/3
Read 10 tweets
வேறெப்படி அழைப்பது?

“தம்பி அடிக்க வா,”
எனச் சொல்லியிருந்தால்
எதிரியின் தலையெடுக்க
கோடி பேர் திரண்டிருப்பான்!
அவரோ,
“தம்பி படிக்கவா,”என்றார்;
தலையின்றிக் குனிந்தகூட்டம்
தலையெடுத்து நிமிர்ந்தது; Image
மூன்று கோடிப்பேரில்
இரண்டு கோடிபேரைத்
தொலைத்துவிட்டு,
மீதியுள்ள பேர்க்கு
மன்னனாக எண்ணவில்லை
எம் அண்ணா!
நோய்க்கு
மருத்துவம் செய்துகொள்ள
உயிரோடிருத்தல் அவசியமென
உணர்ந்தார்;
கையிலெடுத்த வாளைத்
தூக்கிப்போட்டார்;
மறுக்கப்பட்ட
பேனாவை எடுத்தார்;
மைக்கைப் பிடித்தார்;
விரல்தேய எழுதினார்;
நாதேய பேசினார்; சூதில் பழம்தின்று
கொட்டைப்போட்ட
சைவ ஓநாய்களையே
ஏமாற்றிக் குனியவைத்தார்;
அவற்றின் முதுகிலேறி
சவாரி செய்தார்;
ஆயிரம் ஆண்டுகளாய்
சிம்மாசனத்தில் படிந்திருந்த
பூணூலைப் பிய்த்தெறிந்தார்.
Read 6 tweets
#Part3 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக

சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.

இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.

கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.

இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
Read 25 tweets
#Part2 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

Black July 1983

பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன்
தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
கலைஞர் ,எம்.ஜி.ஆர், மூப்பனார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.

இலங்கை செல்லும் முன் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆரை சந்திக்காமல் நேராக கொழும்பு புறப்பட்டதுக்கு திமுக கடுமையான விமர்சனம் வைத்தது.
Read 25 tweets
#திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

திமுகவும் ஈழப்போராட்டமும்

1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.

1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
பெற்றது சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது

தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர்
Read 31 tweets
அண்ணாவை இங்கர்சாலுடன் ஒப்பிடுவதும் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவதும் ஒன்றா @gangaiamaren சார்?

Ingersoll was called "The Great Agnostic". அண்ணாவின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும் திமுக தொடங்கிய அவர் எப்படிப்பட்ட Agnostic ஆக இருந்தார் என்று!

(1/n)
அண்ணாவின் பேச்சுத்திறனையும் எழுத்துத்திறனையும் மிஞ்சிய அரசியல் தலைவர் இந்திய வரலாற்றில் இருந்ததுண்டா? பண்டித நேரு தொடங்கி நீங்கள் இன்று அங்கம் வகிக்கும் பாஜகவின் முன்னோடியான வாஜ்பாய் அவர்கள் வரை அண்ணாவின் பேச்சுக்கு மயங்காத ஆளுமைகள் உண்டோ?

(2/n)
"The Most Remarkable American" என்று அறியப்பட்டார் இங்கர்சால்.

"The Most Remarkable Tamilian" என்றால் அது கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு எனும் முப்பெரும் கொள்கையின் முழுவுருவாம் பேரறிஞர் அண்ணா தான்!

அவர் இந்நாட்டு இங்கர்சால் தான். ஏன்- அதற்கும் மேல் தான். அவர் எங்கள் #அண்ணா !

(3/n)
Read 6 tweets
திக கூட்டத்தில் பொதுமக்களிடையே பேசிக் கொண்டிருந்த தந்தை #பெரியார் மீது ஒரு பார்ப்பான் மலத்தை வீசியபோது,

தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,
அந்த பார்ப்பானை பாதுகாப்பாக அனுப்பிவைத்து,
தன்னை சுத்தம் செய்துகொண்டு,

உரையை நிறைவுசெய்த பெரியாரை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏

1/5
அறிஞர் #அண்ணா அவர்கள் வீட்டின் எதிரே அவர் அன்னையை வேசி என எதிர்கட்சி பேனர் கட்டிய அவதூறு செய்த போது,

தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,
அந்த பேனருக்கு வெளிச்சம் போட்டு அந்த எதிர்கட்சியின் தரத்தை மக்களுக்கு அம்பலப்படுத்திய

அறிஞர் அண்ணாவை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏
2/5
கலைஞர் #கருணாநிதி அவர்கள் தம் சிலையை எதிர்கட்சிகாரன் இடித்தபோது,

'அந்த சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் தான் குத்துகிறான்' என்று கூறி

அந்த கலவர சூழலில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,

நிலைமையை சுமூகப் படுத்திய கலைஞரை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏

3/5
Read 5 tweets
இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன் திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது நிஜம்.
காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது ராஜ வம்சத்து வேட்பாளரை.
ராஜா சேதுபதி.

அவர் அந்த சமஸ்தானத்து அரசர்.
அரசர் நிற்கிறார் என்பதால் அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை.

காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள் ?
அண்ணா அன்றைய மாவட்ட செயலாளர் தென்னரசுவிடம் ராமநாதபுரம் நிலவரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

தென்னரசு அண்ணாவிடம் ராஜா காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிற்பதாகவும் திமுகவினர் ஒருவர் கூட தேர்தலில் நிற்க முன்வரவில்லை என்ற செய்தியை சொல்ல,
Read 19 tweets
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க
ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த
இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம்
தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று
பேச தொடங்கினார்‌ அண்ணா.
ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.
அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்! என்றார் போப்ஆண்டவர்.
அதன்பின்னர் அண்ணா
ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.
அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போனார் போப்பாண்டவர்
அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு எதாவது பரிசு தரவேண்டும் என்ன வேண்டும் என்றார் போப்பாண்டவர்.
என்ன கேட்டாலும் தருவீர்களா,என்று பீடிகை போட்டார் அண்ணா?
கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர் !!
இந்தியாவில் உள்ள கோவாவை போர்ச்சுகல் தேசம் ஆக்கிரமித்திருந்தது.
அப்போது போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடியவர் தோழர் மோகன் ரானடே
Read 11 tweets
ஒரு குதிரை வண்டிக்காரர் எம்.எல்.ஏ ஆனா கதை தெரியுமா சகோ..

எப்பேர்ப்பட்ட அசகாய சூரன் .
நம் தலைவர்கள் அண்ணா கலைஞர் .

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள்.
அன்று 50 ஆண்டிற்கு முன்
திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று
சொன்னால் அது நிஜம்.

காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது.ராஜ வம்சத்து வேட்பாளரை, ராஜா
சேதுபதி. அவர் அந்தசமஸ்தானத்து அரசர்.
அரசர் நிற்கிறார் என்பதால்
அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை.

காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள்.

அண்ணா, அன்றைய மாவட்ட
செயலாளர் தென்னரசுவிடம்
ராமநாதபுரம் நிலவரம் குறித்து
பேசிக்கொண்டிருந்தார்.
Read 20 tweets
தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே? அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.
அவற்றை விரிவாக பார்ப்போம்:

1) எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்கள் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும்.
இன்றைய நிலையில் தமிழர்கள் சேமிப்பும் பல்லாயிரம் கோடிகள் இருக்கும்.
இந்தச் சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்குன்றன.

அந்தப் பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன.

உதாரணமாக ஆஸ்த்ரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது தெரிந்திருக்கும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களின் பல நூறுகோடி சேமிப்பு பணம் SBI வங்கியில் இருக்கும்.

ஆனால் அவை முதலீடாக தமிழ்நாட்டிலேயே வருமா என்றால் அது கேள்விக்குறிதான்.

அவை பெரும்பாலும் வட இந்திய பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு அவற்றில் பல நூறு கோடிகள் வாராக்கடன்களாக இருக்கின்றது.
Read 9 tweets
அண்ணா அண்ணா அண்ணா...
அன்பின் அடையாளம் #அண்ணா

இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
திராவிட இயக்கத்தின் தீரர், அஞ்சா நெஞ்சன் அழகிரி உடல்நலம் குன்றியிருந்த பொழுது, அவருக்கு 100ரூபாய் பண அஞ்சல் அனுப்பிய சிட்டையைக் காட்டினால் தான் யாராக இருந்தாலும் சந்திப்பேன் என்றவர் அண்ணா.
1949ல் ஈட்டுத்தொகைக்காக உடன்பிறப்புகள் அனுப்பிய பணத்தை, திருப்பி அனுப்பி வைத்தவர் அண்ணா.
அஞ்சா நெஞ்சன் அழகிரியை இழந்த அவரது குடும்பதிற்கு, 1949ல் நாடகம் நடத்தி 5000ரூபாய் வழங்கியவர் அண்ணா.
#திராவிடநாடு பத்திரிகைக்கு நிதியளிக்கும்படி தோழர்களுக்குப் #பெரியார் விடுதலையில் அழைப்புவிடுக்க, தேவையான நிதி குவிந்திட, நிதி போதும் என்று பத்திரிகையில் தலையங்கம் எழுதியவர் #அண்ணா.
Read 24 tweets
திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇
Read 20 tweets
புதிய உபிஸ்களின் கவனத்திற்கு!!

1949ல் திமுக தொடங்கப்பட்டபோது அறிஞர் #அண்ணா அக்கட்சியின் பொதுச்செயலாளர், 29 வயதேயான நாவலர் நெடுஞ்செழியன்தான் துணைப் பொதுச்செயலாளர்.

1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, “தம்பி வா, தலைமையேற்க வா“ என்று நாவலர் நெடுஞ்செழியனை அழைத்தார்.
தனது பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியனுக்கு விட்டுக்கொடுத்தார் அண்ணா. நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளராகும்போது அவருக்கு வயது 36. (நான்கு ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்தார்)

திமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டதும், 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதும்
அண்ணாவின் உழைப்பால் கிடைத்ததாக இருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலர்தான்.

திமுகவுக்கு முதல் மேயர் மெட்ராசில் கிடைத்தபோதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியனே.

தான் நன்றாக இருக்கும் காலத்திலேயே கட்சியில் அடுத்தடுத்த தலைவர்கள் உருவாக வேண்டும்.
Read 17 tweets
#HBDPerarignarAnnaa ❣️

• பேரறிஞர் #அண்ணா என்ற ஒருவர் இல்லையென்றால், இந்நேரம் நாமும் 'ஹிந்தி திணிப்பு தவறில்லை' என்று சொல்லிக்கொண்டு இருந்திருப்போம்.

• ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி, காஷ்மீரி, மராத்தி ஆகிய பிராந்திய மொழிகள் போல, #தமிழ் மொழியும் ஹிந்தியால் காவு

1/N Image
வாங்கப்பட்டு அழிந்து ஒழிந்து போயிருக்கும்.

• சொந்த ஜாதியிலேயே திருமணம் செய்தாலும், கல்யாண நாள் வரை கணவன் முகத்தை கூட பார்க்க முடியாது என்கிற நிலையிலிருந்து... ஜாதியை தாண்டி, மதத்தை தாண்டி காதல் திருமணம் செய்ய #பெரியார் வலியறுத்திய சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம்

2/N
கொண்டுவந்தவர் அண்ணா.

• தமிழர்களின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை 'முட்டாள்தனம்' என சொன்னதற்காக பிரதமர் நேருவையே எதிர்த்து போராடியவர்.

• மதராஸ் மாகாணத்தை பெயர் மாற்றி, 'தமிழ்நாடு' என்று பெயரிட்டவர்.

• அண்ணா இல்லையென்றால், இந்நேரம் மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாட்டையும்

3/N
Read 6 tweets
#திராவிடநாடு மோசடிக்கு வாய்தா
கேட்ட  #அண்ணா

திராவிடநாடு’ கோரிக்கை சாத்தியமற்றது என்று  தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன. அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு  1/n Image
தனது கட்சிக்குள் ‘காலம் கனியும் போது கைவிடப்படும்’ என்று  தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு: 2/n
திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைகேட்டு கொண்டிருந்த அண்ணா, “என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்கு தெரியும் 3/n
Read 11 tweets
மதம் - #திராவிடம்
கடவுள் - #ராம்சாமி நாயக்கர் எனும் (பெரியார்)
தலைமை அர்ச்சகர் - #கி.வீரமணி
திராவிட மடாதிபதிகள் - #அண்ணா,#கருணாநிதி
பக்தர்கள் - திராவிட #உபிஸ்கள்

திராவிட மதம் பரப்பும் முறை..

*கடவுளை மற மனிதனைநினை, பகுத்தறிவு,பெண்விடுதலை, சாதிஒழிப்பு
திராவிட மதத்தில் சேர வேண்டுமானால் தேவையான தகுதிகள்..

*கடவுள் இல்லை ஆனால் #ராம்சாமி இருக்கிறான்.

*கடவுள் சிலைக்கு மாலையிடாதே ஆனால் ராம்சாமி சிலைக்கு #மாலையிடு.

*வேறு எந்த புத்தகங்களையும் படிக்காதே கடவுள் ராம்சாமி எழுதியதை மட்டும் #படி
*இறந்த ராம்சாமி சிலையருகே நின்று #பெரியார் வாழ்க என கோசம் எழுப்பு.

*பெண்விடுதலை பேசிக்கொண்டே #EMI கட்டுவதற்கு தகுதியை வளர்த்து கொள்.

*மதக்கடவுள்களை தைரியமாக #விமர்சி அதே நேரம் கடவுள் ராம்சாமியை பிறர் விமர்சித்தால் குரல்வளையை கடித்துவிடு.
Read 9 tweets
"இந்தியாவின் திராவிட முகம் - வி.பி.சிங்"

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து காலமெல்லாம் சமூகத்தின் அடிதட்டு மக்களுக்காக சிந்தித்தும், செயலாற்றியும் வந்த மனிதர்கள் வரலாற்றில் அரிதாகவே தோன்றுகிறார்கள், புத்தர், சாகுமகாராசர், பூலே, பெரியார் என
இந்திய துணை கண்டத்தில் குறிப்பிடதகுந்த அந்த பட்டியலில் தனக்கென தனி இடத்தை பிடித்த இந்தியாவின் முன்னால் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த நாள் 25.06.1931ல் வளமான வடஇந்திய ராஜவம்சத்தில் தயாவின் மிகப்பெரிய ஜமிந்தார் குடும்பத்தில் பிறந்து, மண்டா ராஜவம்சத்தில்..
வளர்ந்த பெரும் செல்வந்தராக இருந்தபோதும், 1950களில் தெலுங்கானாவின் சிறிய கிராமம் ஒன்றில் தொடங்கி இந்தியா முழுவதும் பெரும் இயக்கமாக வளர்ந்த வினோபாவின் பூமிதான இயக்கத்தில் தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு அள்ளி வழங்கி வாழும் வரை எளிமையான மனிதராக இருந்து மறைந்தவர் வி.பி.சிங்
Read 58 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!