Discover and read the best of Twitter Threads about #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்

Most recents (9)

Boney M. குழுவின் Rasputin பாட்டு இப்போ viral ஆகுது போல... Grigori Rasputin னின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு போலவே இதை Frank Farian எழுதி இருக்கிறார். Rasputin யார்? முதலில் rasputin என்றால் என்ன? ரஷ்ய மொழியில் Rasputin ஒரு கெட்ட வார்த்தை. 
Grigory Yefimovich Novykh என்னும் மனிதர் பெண்களிடம் கேவலமாக நடந்து கொண்டதை கண்டு (“Russia’s greatest love machine”) ஊரார் அவருக்கு வைத்த பெயர் தான் Rasputin. தமிழில் பெண்களை திட்ட பயன்படுத்தும் இழிவான சொல்லுக்கு நிகரான ஆண் பால் சொல் இது.
1978 Red Square concert இல் இந்த பாடலை பாட Soviet Union தடை விதித்தது. தடுக்கப்படும் போதும் கண்டிக்கப்படும் போதும் மீறப்படும் என்னும் உலக நியதி படி பாடல் வேகமாக 70 களில் பரவியது.
Read 6 tweets
90s kids க்கு bourbon, little hearts மாதிரி Generation Alpha க்கு Oreo. இன்றைய தேதிக்கு மிக பிரபலமான biscuit Oreo. கண்டிப்பா எல்லாரும் வாங்கி, 'ட்விஸ்ட் பண்ணுங்க... lick பண்ணுங்க... dunk பண்ணுங்க... சாப்பிடுங்க... என்று சாப்பிட்டு இருப்போம் (குழந்தைக்காகவாது...)
எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என Oreo வில் எந்த animal product உம் சேர்ப்பதில்லை முழுக்க முழுக்க vegan பிஸ்கட். அதேபோல diet-friendly! கலோரி கணக்கு மிக குறைவு. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ட்விஸ்ட் பண்ணி, lick பண்ணி, dunk பண்ணி சாப்பிடலாம்.
எது பிரபலமாக இருந்தாலும், அதைப்பற்றி controversial ஆக விஷயங்கள் வருவது வாடிக்கையானது தானே அந்த வகையில் Oreo cookies பற்றி ஒரு சுவாரஸ்யமான conspiracy theory படித்தேன்.
Oreo biscuit ஐ பார்த்ததும் எல்லார் கண்களும் முதலில் செல்வது அந்த பிஸ்கட் மேல் இருக்கும் டிசைன்க்கு தான்.
Read 25 tweets
நாங்க எல்லாம் வேற மாதிரி (immortal jellyfish & Octopus)

மனிதர்கள் and பெரும்பாலான உயிரினங்கள் அதோட cell replicate ஆகும்போது... reproduce பண்ணும்போது... அதனுடைய DNA அப்படியே exact ஆ இன்னொரு copy எடுக்கும். அதிலிருந்து RNA அதிலிருந்து protein உருவாகிறது.
இப்படி copy எடுக்கும்போது, எதாவது சில மாற்றங்கள் copy எடுக்கப்படும் DNA வில் உருவாகலாம் அது mutation. இந்த mutation ஒரு visible மாற்றத்தை கொண்டு வரும்போது மேலும் அந்த mutation அடுத்தடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படும்போது அது evolution. இது normal ஆ எல்லா உயிரினங்களிலும் நடப்பது.
ஆனா இந்த octopuses மற்றும் இதர cephalopods என்ன பண்ணுது? புத்திசாலித்தனமா ஒரு வேலையை பண்ணுது. தனக்கு ஏற்ற மாதிரி லேசா சில கிம்மிக்ஸ் வேலைகள் பண்ணுது... genetic editing பண்ணுது. இப்போ தன்னோட நிறத்தை மாத்தணும் அப்படின்னா அதுக்கு ஒரு குறிப்பிட்ட protein தேவை இல்லையா?
Read 9 tweets
Shroud of Turin Part - 4

Da Vinci பிறப்பதற்கு 60 வருடங்களுக்கு முன் உண்டான துணி Shroud of Turin என்று carbon dating சொல்கிறது. டாவின்சி அவருடைய peak இல் அதாவது நிறைய படங்கள் வரைந்து கொண்டு இருந்த போது அவரது வயது 50.
அப்படியானால் 100 வருடங்களுக்கு முன்னால் உள்ள துணியை டாவின்சி எப்படி பயன்படுத்தி இருக்க முடியும்?
ஆனால் சாத்தியக்கூறுகள் இருந்தன. டாவின்சி அப்போது இருந்த Florence ஊர் அன்றைய trade center. உலகம் எங்கும் இருந்தும் பொருட்கள் அங்கு வந்து விற்பனையாகின.
டாவின்சி 1000 வருடங்கள் பழமையான ஒரு relic ஐ உண்டாக்க போவதாக இருந்தால்... அந்த genius, கடைக்கு சென்று fresh ஆ நெய்த துணியை வாங்க போவதில்லை (ஏற்கனவே பல shroud கள் forgery என புறம்தள்ளப்பட்டதை பார்த்து அதில் இருக்கும் தவறுகளை திரும்ப செய்யக்கூடாதென்று நினைத்திருப்பார்).
Read 57 tweets
Shroud of Turin Part - 3

Leonardo da Vinci ஏன் இப்படி ஒரு forgery யை உருவாக்க வேண்டும்? என்ன அவசியம் அவருக்கு?

Leonardo da Vinci ஒரு Catholic. பெரும்பான்மையான அவரது படங்கள் பைபிள் பற்றியதே. பலர் அவர் ஒரு atheist என்பார்கள்.
சர்ச்க்கு தெரியாமல் பிணங்களை எடுத்து ஆய்வு செய்பவர், ஓய்வு நாள் அன்று வேலை செய்வார், Vatican தடை செய்த alchemy ஆராய்ச்சியில் ஈடுபட்டார், அவரது எல்லா மதம் சார்ந்த படங்களிலும் ஒரு உள் குத்து இருக்கும் இதெல்லாம் அவர் சர்ச்க்கு எதிரானவர் என்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது என்பார்கள்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவர் ஒரு curious ஆன ஆள். சுற்றி நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொண்டதை ஊருக்கு சொல்லணும். டார்வின் கூட atheist இல்லை. பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் priest தான்.
Read 24 tweets
shroud of Turin
வரலாற்றில் இதை ஆராய்ந்ததை போல வேறு எதையும் ஆராய்ந்து இருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 600 வருடங்களுக்கு மேலாக புதிது புதிதாக வரும் எல்லா technology களை கொண்டு ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் இது போலி என்றாலும் மக்களுக்கு இதன் மீதான நம்பகத்தன்மை குறைந்ததே இல்லை.
அது shroud of Turin! இத்தனை ஆண்டு காலமாக பல கோடி மக்களை ஆணித்தரமாக இதன் மேல் நம்பிக்கை வைக்க காரணம் பக்தியா? அல்லது இதை உருவாக்கிய the great Leonardo da Vinci யின் மேஜிக்கா?
Shroud of Turin என்றால் என்ன? இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், Arimathea என்னும் ஊரை சேர்ந்த Joseph என்னும் பணக்காரர், அவரது உடலை ஒரு linen துணியில் சுற்றி அவருக்கு சொந்தமான குகையில் வைக்கிறார்.
Read 59 tweets
பல காலமா நான் யோசித்தது உண்டு chess ல மட்டும் king ஐ விட queen ஏன் powerful? நம்ம சண்முகங்கள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்று? அந்த கேள்விக்கான விடை தான் Marilyn Yalom எழுதிய "Birth of the Chess Queen" புத்தகம்.
chess தோன்றிய ஆரம்ப காலங்களில் ஒரு 500 வருடத்திற்கு அதில் queen கிடையாது. இந்தியாவில் ஆரம்பித்த chess விளையாட்டு பெர்சியா, அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என்று பரவியது. Renaissance காலத்தில் ஐரோப்பியாவிற்கு சென்ற போதுதான் queen என்னும் powerful piece வருகிறது.
அதுவரை ராஜாவிற்கு பக்கத்தில் vizier எனப்படும் ஆலோசகர் தான் இருக்கும். இந்த piece, பிஷப் போல diagonal ஆக ஆனால் ஒரே ஒரு கட்டம் மட்டும் நகரும்.
Read 35 tweets
புராணங்கள் என்பது ஒரு கலாச்சாரத்தின் மிக பெரிய பங்கு. ஒவ்வொரு கலாச்சாரத்தின் புராணங்களை படிப்பதின் மூலமும் அந்த மக்களின் அக்கால வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், அவர்களது பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
ஏன் புராணங்கள்? ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இந்த உலகம் எப்படி வந்தது இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தோற்றம் எப்படி வந்தது என்பதை விளக்க உருவானதே புராணம். நிலவில் தெரியும் உருவம் ஒரு பாட்டி. அவள் அங்கே வடை சுடுகிறாள் என்பது ஒரு குட்டி புராணம்.
அது நிலவின் நிழலை விளக்க வந்த புராணம். இதன் மூலம் தமிழர்கள் வயதான பெண்ணை பாட்டி என்பார்கள் அவளது வேலை வடை சுடுவது. வடை அவர்கள் உண்ணும் உணவு. சுடுவது என்றால் எண்ணையில் பொறிப்பது. அப்படியானால் அவர்கள் உணவில் எண்ணெய் பயன்பாடு இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்
Read 6 tweets
வெள்ள கதைகளை பற்றி பார்ப்போம். இந்த வெள்ள கதைக்கு பொதுவான கரு மக்கள் சொன்னதை கேக்கவில்லை அதனால் அவர்களை தண்டிக்க கடவுள் வெள்ளத்தை அனுப்புகிறார்.

எகிப்திய வெள்ள புராணங்களில் கடவுள் ரா அவரது மகள் சேக்மெட் அழைத்து மனிதகுலம் கடவுளை மறந்து மரியாதை செலுத்தாமல் இருக்கிறார்கள்.
எனவே ஒரு வெள்ளத்தின் மூலம் அவர்களை அழித்து விடு என்று சொல்லி அனுப்புகிறார், இதன் விளைவாக ஒரு பெரிய ரத்த வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும், ரீ என்கிற மற்றொரு கடவுள் குறுக்கிட்டு சேக்மெட் ஐ குடிக்கவைத்து அவளை திசைத்திருப்புவதின் மூலம் மக்களை காப்பாற்றுகிறார்.
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!