Discover and read the best of Twitter Threads about #அறிவோம்_கோவில்கள்

Most recents (6)

#அறிவோம்_கோவில்கள் #ஸ்ரீவாஞ்சியம்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோவில். வாழ்வில் ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம். உலகிலேயே எம தர்ம ராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடும் ஸ்தலமாக என்ற
சிறப்பு பெற்றது ஸ்ரீ வாஞ்சியம். காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக ஆறு தலங்கள் போற்றப் படுகிறது.(திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள
ஸ்ரீவாஞ்சியம். வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, அதில் இருந்து கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம். பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில்
Read 22 tweets
நம் கோவில்களை பற்றிய அரிய தகவல்கள் சொல்லில் அடங்காது. #பெருமாள்_கோவில்கள் பற்றிய சில விசேஷ தகவல்கள் இதோ:
திருமகைக்கு மேலுள்ள நாராயணகிரியில் ஸ்ரீவாரி பாதம் எனப்படும் இடத்தில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாக நம்பிக்கை. இங்கு அவரின் பாதச்சுவடுகள் வழிபடப்படுகின்றன.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனி மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள
நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிவனைப் போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்ம மூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

திருக்கண்ண
Read 10 tweets
#ஸ்ரீசதுரங்க_வல்லபநாதர்_கோவில் #பூவனூர் முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த வசுசேனன் என்னும் மன்னனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த
அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார். அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து,
அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார். அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண்
Read 12 tweets
#அறிவோம்_கோவில்கள்
திருநெல்வேலி மாவட்டம் #முறப்பநாட்டில் அமைந்துள்ள #கைலாசநாதர் கோவிலில் குதிரை முகத்துடனான அதிசய நந்தி உள்ளது. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் முறப்பநாடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோவில். தாமிரபரணி நதி இவ்விடத்தில் தெற்கு நோக்கி
தட்சிண கங்கையாக செல்வது தனிச் சிறப்பாகும். இங்குள்ள கைலாச நாதர் குரு அம்சமாக இருக்கிறார். இந்த கோவிலின் சிறப்பான வழிபாடுகள் சிவராத்திரி மற்றும் பிரதோஷம் ஆகியவை. குருப்பெயர்ச்சி கோவிலின் சிறப்பு மிக்க விழாவாகும். இந்த தலத்தின் சிறப்பே இது வியாழன் தலம் என்பதாகும். இந்த கோவிலில்
சுவாமிக்கு எதிரே இருக்கும் குதிரை முகம் கொண்ட நந்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட்டு வேண்டுதலை தெரிவித்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் தட்சிண நடந்தேறிவிடும். வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி, இப்போது இருக்கின்ற நிலை தலைகீழாய் மாறி வாழ்க்கையே மாறும். சோழ மன்னன் ஒருவன், தனக்கு
Read 12 tweets
#அறிவோம்_மகான்கள் #ஶ்ரீநாராயண_தீர்த்தர் ஆந்திராவில் விஜயவாடா-குண்டூர் செல்லும் வழியில் உள்ளது மங்களகிரி. இது பானக நரசிம்ம ஷேத்திரம். அதன் அருகிலுள்ள காஜா கிராமத்தில் சுமார் 1665 - 1675ல் தல்லவல்லஜ என்ற அந்தண குலத்தில் நாராயண தீர்த்தர் பிறந்தார். அவரது இயற்பெயர் கோவிந்த சாஸ்திரி Image
என்றும், மாதவன் என்றும் அவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி என்றும் கர்ணபரம்பரை செய்திகள் குறிப்பிடும், அனால், ஆதார பூர்வமாக எதுவும் கிடைக்கவில்லை. அவர் 12 ஆண்டுகள் சாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்தவர். திருமணம் ஆன பின்னர் ஒரு முறை ஆற்றைக் கடக்க முற்பட்டார். வழக்கத்திற்கு மாறாக, ஆற்றின்
நடுவில் ஆழம் சற்று அதிகமாக தெரிந்தது. நடுவழியில் திரும்பவும் முடியாமல், அதே சமயம் எதிர் கரைக்கு செல்லவும் முடியாமல் தவித்தார். என்ன செய்வது? வேதங்கள் கற்றவர் அல்லவா! பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. துறவு மேற்கொண்டால், அது மறுபிறவிக்குச் சமம். அந்நிலையில் துன்பம் ஒருவரை தொடர்வது
Read 22 tweets
#நாலாயிரம்_பிள்ளையார்_கோயில் சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையார் கோவில் சீர்காழிக்கு அருகில் உள்ள நாங்கூரில் உள்ளது. இக்கோவில் மூல மூர்த்தி இராமாயண காலத்தே சுயம்புவாக உருவானவர். கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில்
பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரம்ம தேவனிடம் பெற அவரை நோக்கிக் கடுமையான தவத்தை ஒரு குகைக்குள் இருந்து செய்து வந்தான். நெடும் காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில் கடும்
தவத்தின் பலனாக வாலிக்குப் பிரம்மனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி, அவனுக்கு வரும்படியாக நான்முகன் வரமளித்து மறைந்தார். குகையின் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாலி அப்பாறையை அகற்றிவிட்டு வெளியில் வந்து, கிஷ்கிந்தையை அடைந்தான்.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!