Discover and read the best of Twitter Threads about #அறிவோம்_வரலாறு

Most recents (6)

இது உண்மைதானா என்று என்னால் நம்பவே முடியவில்லை. உண்மை தான் என்று சரிபார்த்த பின் பகிர்கிறேன். வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் அந்த முதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு
குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார். சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார் முதியவர். வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு சிறிது கால அவகாசம் தரச் சொல்ல, வேண்டா வெறுப்பாக அந்த முதியவரின் சாமான்களை மீண்டும் உள்ளே வைக்க அனுமதித்தார் உரிமையாளர். இதை
பார்த்துக் கொண்டிருந்த அவ்வழியே சைக்கிளில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், அக்காட்சிகளை படுமெடுத்து பத்திரிக்கையில் வெளியிட நினைத்து, பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று நடந்ததை சொல்லி படங்களை காட்டினார். படங்களை பார்த்த ஆசிரியர், அதிர்ந்து போனார். இவர் யாரென்று தெரியுமா என செய்தியாளரை
Read 9 tweets
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மே17 இரு தாக்குதல் கப்பல்களை இந்திய கடற்படையில் இணைத்து மும்பை மெசகான் டாக்ஸில் களம் இறக்கினார். அந்த கப்பல்களுக்கு #சூரத் என்றும் #உதயகிரி என்றும் பெயரிடபட்டுள்ளது. சூரத் என்னும் பெயரை தேர்ந்தெடுத்தது, சத்ரபதி சிவாஜி காலத்தில் Image
இந்திய அடையாளமாக விளங்கிய துறைமுக நகரம், அங்கிருந்த கோட்டையின் குறியீடு! உதயகிரி என்பது திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்று கட்டிய பெரும் கோட்டை. இங்குதான் குளச்சல் போரில் பிடிபட்ட டச்சுக்காரன் டினலாய் அடைக்கபட்டிருந்தான். அவன் கல்லறை Image
இன்றும் அங்கு உள்ளது. அந்த டினலாய் தான் திருவிதாங்கூர் சமஸ்தான அதிகாரி நீலகண்ட நம்பூதிரி என்பவரை தேவசகாயம் பிள்ளை என்ற பெயருடன் கிருஸ்துவனாக்கி, பின் இருவரும் கூட்டுசதி செய்த வழக்கில் தேவசகாயம் பிள்ளை கொல்லபட்டார். அந்த தேவசகாயத்தை புனிதர் என வாடிகன் அறிவித்து தமிழக அமைச்சர்கள் Image
Read 8 tweets
நமக்கு இப்போ #கோடம்பாக்கம் என்றாலே #கோலிவுட் தான். சிலர் ஆர்காட் நவாபின் குதிரை லாயம் - கோடே-பாக் என்பது தான் மருவி கோடம்பாக்கம் ஆனது என்றும் சொல்வார்கள். ஆனால் கோடம்பாக்கம் #கார்கோடகன் சிவபெருமானை வழிபட்டதால் ஏற்பட்ட பெயர்! கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது
பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் #வேங்கீஸ்வரர் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் #சுனந்தமுனிவர் (மூஞ்சிகேசவ முனிவர்) முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில். (இக்கோவில் எனக்குத்
தெரிந்தே மிகச் சிறியதாகிவிட்டது.
அவ்வளவு ஆக்கிரமிப்பு + 100 அடி ரோட் விரிவாக்கத்தில் கோவில் இடம் கையகப்பட்டது. குளத்தையே காணோம். கீழேயுள்ள படங்கள் குளம் இருந்த இடம்) சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான். அதனால்
Read 12 tweets
#அறிவோம்_வரலாறு
குஜராத்தின் #சோமநாதபுரி ஜோதிர்லிங்க சிவாலயம் #Somnath சாதுராஷ்ட்ரம் எனும் சவுராஷ்ட்ரா பகுதியின் மாபெரும் கலை பொக்கிஷமாய் இருந்தது. அன்றைய சாதுராஷ்ரம் குஜராத்தின் கடல் வணிகமும் அவர்கள் கொட்டிய செல்வமும் பெரும் நதிகளின் வளமும் அந்த சோமநாதபுரியினை சொர்க்கபுரியாக
ஆக்கியிருந்தன, மாபெரும் செல்வத்தின் அடையாளமாய் இருந்தது. இன்றைய பத்மநாதஸ்வாமி ஆலயத்தை விட அதிக தங்கம் அங்கே இருந்தது. அதை விட பெரும் அதிசயம், சிவலிங்கம் அங்கே அமரவில்லை மாறாக அந்தரத்தில் நின்றது. சுற்றிலும் 4 காந்த கல்களை பதித்து விஷேஷமான இரும்பு கல்லால் ஆன சிவலிங்கம். அதன்
ஈர்ப்பு விசையினால் நடுவில் நிறுத்தபட்டது, அந்தரத்தில் லிங்கம் மிதந்தது. நவரத்தினமும் வைரமும் பதிக்கபட்டு மின்னிய அந்த லிங்கம் சோமன் எனும் நிலவு போலவே மின்னியது. அங்கு மாபெரும் காணிக்கையும் பக்தர் எண்ணிக்கையும் குவிந்தன. கோவிலின் குறைந்த பட்ச உலோகம் தங்கம் எனும் அளவு ஜொலித்ததது.
Read 37 tweets
#அறிவோம்_வரலாறு உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கிறது. அதற்குக் காரணம் #மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு. எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேரா கொள்கை கொண்ட இந்தியாவினை போட்டு
சாத்துவது சீன வழக்கம். இந்தியா யார் அணியிலும் சேராத நாடு என நேரு அறிவித்திருந்தார். அதனால் யார் அடித்தாலும் கேட்க ஆளில்லா நாடு எனும் அபாயம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை அதுதான் நேரு. இதனால் தான் கென்னடியும் மாவோவும் கியூபாவில் 1962ல் உரசியபொழுது அடித்தால் யாரும் கேட்க வராத ஆளில்லா
இந்தியாவினை அணிசேரா இந்தியாவினை போட்டு சாத்தியது சீனா. அப்படியே 1965 யுத்தத்தில் பாகிஸ்தானை முடக்கி இந்தியா வெற்றிபெற்றாலும் காஷ்மீர் சிக்கலை தீர்க்காமல் சாஸ்திரியினை முடக்கியது சீன ரஷ்ய கூட்டணி. 1971லும் இதுவேதான் நடந்தது. இந்திராவும் காஷ்மீரைத் தொட அஞ்சினார். அதுவும் பாகிஸ்தான்
Read 13 tweets
ப.கிருஷ்ணமூர்த்தி
இரா.கருப்பசாமி
வா.சுப்பிரமணி
வே.நாச்சிமுத்துகவுண்டர்
பா.சின்னசாமிகவுண்டர்
பா.மாணிக்கம்

இந்த பெயர்களை கடந்த 28 ஆண்டுகளாக கட்டணமில்லா மின்சாரம் பயன்படுத்தி விவசாயம் செய்துவரும் பலர் மறந்திருக்கலாம்,இந்த தலைமுறைக்கு இவர்கள் யாரென்றே கூட தெரியாமல் இருக்கலாம் 1/3
கடந்த 1978 ஆண்டு இதே நாளில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மின்சார கட்டணத்தை குறைக்க நடந்த போராட்டத்தில் எம்ஜியார் அரசாங்கத்தின் அடக்குமுறையால் காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமறவர்களே இவர்கள்.இவர்களை போல 64 உழவர்கள் 2/3
போராட்டத்தில் உயிர் தியாகம் செய்து பெற்றுகொடுத்த சலுகை தான் கட்டணமில்லா மின்சாரம்.இதற்குபின் ஆட்சிக்கு வந்த கலைஞர் உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அதை பயன்படுத்தி பல குடும்பங்கள் லட்சக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தாமல் பயனடைந்துள்ளன. 3/3 #அறிவோம்_வரலாறு
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!