Discover and read the best of Twitter Threads about #உணவேமருந்து

Most recents (14)

#உணவேமருந்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து பெரிய ஹைப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும் இந்த சிகப்புஅரிசியின் பயனை பற்றி உணவேமருந்து பகுதியில் பார்க்கப்போகிறோம்.

கடந்த 48 நாட்களாக நான் சாப்பிட்டுவரும் இந்த சிகப்பு அரிசி இலங்கையில் இருந்து துபாய்க்கு ஏற்றுமதியாகி வந்துள்ளது. Image
இந்த சிகப்புபுழுங்கல்அரிசி பட்டை தீட்டப்படாத அரிசி அதாவது பாலிஷ் செய்யப்படாத அரிசி இதில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது நான் சாப்பிட்ட வகையில் கடந்த 48 நாட்களாக ரத்தத்தில் சர்க்கரைஅளவு கட்டுப்பாட்டில் உள்ளது எலும்புவளர்ச்சிக்கு & உடல் எடை குறைக்க நல்லது . எளிதாக ஜீரணம் ஆகும்.
இதய சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெள்ளைஅரிசிக்கு பதிலாக தொடர்ந்து சிகப்பு அரிசியை பயன்படுத்தினால் இதய பாதிப்புகள் குறையும் தோல் அலர்ஜி தோலில்அரிப்பு தோல் தடித்து இருப்பது மெலடின் தோளில் குறைவாக போன்ற காரணங்களால்பாதிப்பு உள்ளோர் சிகப்பு அரிசி தொடர்ந்து பயன்படுத்தினால் நல்லது
Read 7 tweets
#உணவேமருந்து

#BoycottBournvita

இன்று உணவே மருந்து பகுதியில் நாம் பார்க்கப்போவது சிறு குழந்தைகள் & வாலிபவயதுடையவர் சாப்பிட ருசியான சத்துமாவு கஞ்சி எப்படி தயாரிப்பது ?

இந்த சத்துமாவு கஞ்சியை ஆரோக்கிய பானங்களுக்கு பதிலாக கீழேகொடுக்கக்கூடிய செய்முறைபடி கஞ்சியாகசெய்து குடிக்கலாம். Image
கீழே கொடுக்கக்கூடிய அளவுகளில் தானியங்களை வறுத்து/ சூரிய ஒளியில் காய வைத்து வறுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து செய்முறை படி கஞ்சியாக செய்து குடிக்கலாம்.
கேழ்வரகு 400கிராம்
சம்பா கோதுமை 500கி
வறுத்த உப்பில்லாத வேர்க்கடலை 250 கிராம்
பொட்டுக்கடலை 250 கிராம் முந்திரிப் பருப்பு 100
பாதாம் பருப்பு 100 கிராம்
ஜவ்வரிசி 50 கி
மக்காசோளம் 100 கி
கம்பு 250 கி
சாமை 250 கி
வரகு 250 கி
குதிரைவாலி 250 கி
கொள்ளு 100 கி இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து ரைஸ்மில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும்
Read 7 tweets
#உணவேமருந்து

இன்று நம் உணவேமருந்து பகுதியில் பார்க்கப் போவது உணவுகளில் அமிர்தம் என்று அழைக்கப்படும் 'பசுநெய்'

பசுநெய்யை உணவில்சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும்பயன்கள் கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்கும், குடல் புண்கள், பெப்டிக் அல்சர் எனும் முதல் நிலை வயிற்றுப்புண் நீங்கும் Image
நெய் குழந்தைகளுக்கு சுடு சாதத்தில் பிசைந்து கொடுக்க அவர்களது ஞாபக சக்தி அதிகரிக்கும் உடம்பிற்கு சுறுசுறுப்பை அளிக்கும் பசு நெய். அடிக்கடி ஏற்படும் பசியின்மை வயிற்று உபாதைகள் வாயு பிரச்சனை ஆகியவற்றுக்கு நெய் ஒரு அருமருந்து. தினமும் மதிய வேளையில் சிறிது சூடு சாதத்தில் ஒரு ஸ்பூன்
பசு நெய் ஒரு ஸ்பூன் விட்டு நன்றாக பிசைந்து சிறிது உப்பு சேர்த்து எந்த ஒரு குழம்பு சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்பும் இந்த நெய் சோறை பசு நெய் கலந்த சோற்றை சாப்பிடும் பொழுது நம் குடல்கள் வலுப்பெற்று எளிதாக செரிமானம் ஆகும். அதிகாலை எழுந்தவுடன் வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளோர் இரண்டு
Read 4 tweets
#உணவேமருந்து

இன்று நாம் உணவே மருந்து பகுதியில் பார்க்கப் போவது நுங்கு (palm fruit)

கோடைகாலங்களில் நம் உடலில் ஏற்படும் அனைத்து வெப்ப சம்மந்தமானநோய்களுக்கும் நுங்கு அருமருந்து.

கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் சீராகும் மலச்சிக்கல் நீங்கும் ,உடம்புக்கு குளிர்ச்சியாகும். Image
நுங்கின் சுவையே அலாதி! அதில் விட்டமின் பி ,இரும்பு சத்து ,கால்சியம் ,துத்தநாகம் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மூங்கில் அடங்கியுள்ளது. கோடை காலங்களில் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டால் எலும்பு சம்பந்தப்பட்ட வலிகள் நீங்கும்.
உடலுக்கு இயற்கையாக குளிர்ச்சியை அளிக்கக்கூடியது நுங்கு.குளிர்பானம் அருந்துவதே தவிர்த்து நொங்கு சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்னம்மை நோய் நுங்கு சாப்பிடுவதனால் தவிர்க்கப்படும் நுங்கில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம்.
Read 8 tweets
#உணவேமருந்து

சுக்குமல்லி காபி!

சுக்கு,மல்லி,பனங்கற்கண்டு சம அளவு எடுத்து பொடி செய்து 200 மில்லி தண்ணீரில் இட்டு சூடாக்கி வடிகட்டி வாரம் 3 முறை பருகுவதனால் செரிமான கோளாறு, வாயுப்பிரச்சனை, மலச்சிக்கல், தலைவலி, பசியின்மை சளி மலச்சிக்கல், ஆஸ்துமா, நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும். Image
மதியஉணவுக்குப்பின் மாலை 3 மணி அளவில் சுக்கு மல்லி காபி பருகுவது நலம், அல்லது இரவு உணவுக்கு முன் ஏழரை மணிக்கு பருகலாம். வயிற்றுப் பிரச்சனை செரிமான கோளாறு நீங்கி மலச்சிக்கல் சரியாகி காலை சுறுசுறுப்புடன் இருப்பீர்கள் சுக்கு மல்லி காபி தினமும் பருகாமல் வாரம் 3 முறை மட்டுமே பருகவும்.
தலைவலி, சைனஸ்பிரச்சனை, ஒற்றைதலைவலி ஆகியவற்றிற்கு அருமருந்து இந்த சுக்குமல்லிகாபி காலை உணவுக்குபின் பனங்கற்கண்டு இட்டு குடிக்கமிகவும் சிறந்தது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ,உடல்சூடு ஆகியவை தணிக்க சுக்குமல்லி காபி பனங்கற்கண்டுடன் மாலை வேளையில் பருகி சிறிது தூரம் நடக்கவும்.
Read 4 tweets
#உணவேமருந்து

இன்று நாம் பார்க்கப் போவது முருங்கைக் கீரையின் பலன்கள்

இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை தலைமுடி உதிர்வது, கை கால் மூட்டு வலி, ஆஸ்துமா, நரம்பு தளர்வு,மார்புசளி, தலைவலி பிரச்சனை, செரிமான பிரச்சனை, வயிறுவலி ,வயிறு பொருமல் ,ஆகியவற்றுக்கும் முருங்கைக்கீரை சூப் நல்லது. Image
ஆண் மலட்டுத்தன்மை விந்தணு குறைபாடு பிரச்சனை நீங்க முருங்கைக் கீரையை இரு கைப்பிடி அளவு எடுத்து& முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து நெய்யில் வறுத்து சின்ன வெங்காயம்,பெருஞ்சீரகம் சேர்த்து சூப்பாக செய்து காலை உணவுக்கு முன் பருகி வந்தால் அனைத்து விதமான ஆண்மை பிரச்சனைகள் தீரும்
முருங்கைபூவை மட்டும் ஒரு கைப்பிடி எடுத்து மசாலா அரைக்காத அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் பசும் பால் சேர்த்து பனங்கற்கண்டும் சேர்த்து சிறிது கொதிக்கவைத்து ஆறிய உடன் இரவுஉணவுக்கு பின் ஒரு மணிநேரம் கழித்து 48 நாட்கள் ஒருமண்டலம் பருகி வந்தால் தாம்பத்திய பிரச்சனை அனைத்தும் தீரும்.
Read 4 tweets
#உணவேமருந்து

இன்று கிராம்பு!

கிராம்பு ஒரு சிறந்த வலி நிவாரணி, கிராம்பு பொடி, தைலம் பல்வலி,பல்கூச்சத்திற்கு மருந்து, செரிமானத்திற்கு மிகவும் உதவும், தினமும் காலை 2 இரவு 2 கிராம்பு சாப்பிட்டுக்கு பின் மென்றுவந்தால் ஆண்மை பிரச்சனை, ஆணுறுப்பு விறைப்பு தன்மை பிரச்சனை நீங்கும். Image
கிராம்பை பொடி செய்து தண்ணீரில் இட்டு பருகி வந்தால் உடம்பில் ஏற்படக்கூடிய அனைத்து வலிகளும் நீங்கும் சிறந்தநோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியது.

கிராம்பைவெந்நீரில் இட்டு பருகிவந்தால் செரிமான பிரச்சனை தீரும்.

கிராம்புதைலத்தை உறங்க போவதற்கு முன் முகர்ந்து வந்தால் சுகமான நித்திரை வரும்
சில காணொளிகளில் வருவது போல் கிராம்பு தைலத்தை விறைப்புதன்மைக்காக ஆண்குறியில் தேய்க்க வேண்டாம். கிராம்புதைலத்தை ஆண்குறியில் தேய்த்தால் உடலுறவுநேரம் அதிகமாகும் என்பது அப்பட்டமான பொய். ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகுந்தபின் விளைவுவை ஏற்படுத்தும் ,கிராம்பு தைலத்தை ஆண்குறியில் தேய்ப்பதனால்
Read 7 tweets
#உணவேமருந்து

இன்று நாம் பார்க்கப்போவது உலர் திராட்சையின் அரிய பயன்கள்:-

உலர்திராட்சை உடலுக்கு சுறுசுறுப்பை தந்து சூட்டை தணிக்க வல்லது, நரம்பு மண்டலம் வலுவடைந்து ஆண்மையை அதிகரிக்கும் ,ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் ,பசியை தூண்டும் உடல் எடையை அதிகரிக்கும் . Image
உலர்திராட்சை பற்களுக்கு வலுவாக்க வல்லது ,ரத்தசோகை இருப்பவர்கள் கருப்பு திராட்சையை ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் பெருகும், உடலுக்கு வலிமை தரும் சிறுநீரகப் பிரச்சனை தீரும், கல்லீரலுக்கு மிகவும் உகந்தது ,உலர் திராட்சை மன அழுத்தத்தை குறைக்கும்.
மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் 48 நாள் தொடர்ந்து கருப்பு திராட்சையை இரவு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரைபருகி கருப்பு திராட்சையைசாப்பிட அவர்களது நீண்டநாள் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

திராட்சை நரம்பு மண்டலத்திற்கு நல்லது.
Read 7 tweets
#உணவேமருந்து

இன்று நாம் தெரிந்து கொள்ள போவது சீரகத்தின் மகத்துவம்!

நினைவாற்றலை பெருக்க அரை ஸ்பூன்சீரகத்தை மென்று சாப்பிடவும்

கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் அரை ஸ்பூன் சீரகத்தைமென்று சாப்பிடலாம் அல்லது மோரில் அரைஸ்பூன் வறுத்த சீரகத்தை இட்டு பருகலாம்

வயிற்று வலிக்கும் மருந்து.
சீரகத்தை சிறிதாக வறுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து தினமும் அரை ஸ்பூன் சாப்பிடுவதால் அஜீரணம், வயிற்று வலி ,வயிற்றுப்போக்கு, செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் அருமருந்து வெயில்காலத்தில் மதியம் அரை ஸ்பூன் வறுத்த சீரகத்தை மோரில் இட்டு பருகினால் மிகவும் நல்லது
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகபட்ச பின் முதுகு வலி, அடி வயிற்று வலி இதற்கு வறுத்த சீரகத்தை நன்றாக மென்று சுவைத்து சிறிதளவு வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் மூன்று வேலை மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரும் அதீத வலிகள் குறையும்.
Read 8 tweets
#உணவேமருந்து

வணக்கம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தின் பயன்கள் பற்றி இன்று பார்ப்போம்.

'சின்னவெங்காயம்' ஏழைகளின் வயாக்ரா என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆண்மை அதிகரிக்க, விந்தணு விரைவில்வெளிப்படுதலை தவிர்க்க ,தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி பெற சின்ன வெங்காயத்தை
சிறிதுசிறிதாக வெட்டி ஒரு ஸ்பூன் பசு நெய்யில் வதக்கி சிறிதாக இந்துப்பு இட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கி நாம் சாப்பிடும் அனைத்து சாப்பாடுகளிலும் சேர்த்து சாப்பிட ஆண்மைபெருகும்.

நரம்புதளர்ச்சியை கட்டுப்படுத்த வல்லது, சளிதொந்தரவு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க வல்லது சின்ன வெங்காயம்
தற்போதுள்ள உணவு பழக்கங்கள் மற்றும் வேலைப்பளுவின் காரணமாக நிறைய ஆண்கள் உடல் சூடு வியாதியால் அவதியுருவர் அவர்களுக்கு விந்தணு விரைவில் வெளியாகும் ,தாம்பத்திய உறவில் எதிர்பார்த்தமகிழ்ச்சி இராது .அவர்களுக்கு சாப்பிடும் உணவில் தினமும்சிறிதளவு சின்ன வெங்காயம் சேர்த்தால் மிகவும் நல்லது
Read 9 tweets
#உணவேமருந்து

உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி!

உப்புகளிலேயே மிகச் சிறந்தது இந்துப்பு எனும் ராக் சால்ட்.

இது இயற்கையாக இமயமலை அடிவாரத்தில் பாறை படிமங்களிலிருந்து கிடைக்கக்கூடியது.

சாதாரண உப்பு - 2 டீஸ்பூன்க்கு பதில்
இந்துப்பு - 1 டீஸ்பூன் பயன்படுத்தினாலே போதும்.
இந்துப்பு தசை பிடிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்,எலும்புகளை வலுப்படுத்தும். சர்க்கரையை கட்டுப்படுத்தும், ரத்தஅழுத்தத்தை குறைக்கும், கண்ணில் ஏற்படும் நோய்களுக்கு, வாய் துர்நாற்றம் வயிறு சுத்தப்படும்,பல்வலிக்கு இந்துப்பு மிகவும் நல்லது. நாள்பட்ட சளிக்கு , நல்ல உறக்கத்திற்கு உதவும்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நாம் அனைவரும் அதிகபட்சம் 3.5 கிராம் இந்துப்பு தினமும்எடுத்துக் கொள்ளலாம். இந்துப்பு சிறுநீரகப் பிரச்சினையை தரும் என்பது தவறானதகவல். சாதாரண அயோடின் உப்பை காட்டிலும் குறைந்த அளவு சோடியமே இந்துப்பில் உள்ளது. இந்து உப்பு பசியை தூண்டும் ,சிறுநீரை பெருக்கும்.
Read 7 tweets
#உணவேமருந்து

தமிழன் மறந்த ஒரு அற்புத உணவு பனங்கிழங்கு. பனைமரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து கிடைக்கக்கூடியது. நார்ச்சத்தை தரவல்லது. பெண்களின் கர்ப்பப்பைக்கு வலுசேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. பனங்கிழங்கை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அவித்து சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
வயிறு, சிறுநீரகப் பிரச்சனை உடையவர்கள் பனங்கிழங்கை மாவாக்கி உணவுடன்சேர்த்து வந்தால் மிகவும் பயனளிக்கும். பனங்கிழங்கை அவித்து வெயிலில்காயவைத்து பொடியாக்கி பூண்டைவறுத்து அதையும் அதிலும்சேர்ந்து பொடியாக்கி கஞ்சிசெய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்
பனங்கிழங்கு மிகுந்த நார்ச்சத்து உடையது.அதனால் மாலை சிற்றுண்டியாக சாப்பிட்டால் மறுநாள் காலை மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி வயிறு சுத்தப்படும். பனங்கிழங்கு வாயு பிரச்சனைக்கு சிறிது வழிவகுக்கும் அதனால் அளவோடு பனங்கிழங்கை சாப்பிடும்பொழுது அதனுடன் சேர்த்து 5 மிளகை சாப்பிட வாயு சரியாகும்.
Read 6 tweets
#உணவேமருந்து

'பனங்கற்கண்டு '

இன்று நாம் பார்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு பொருள் பனங்கற்கண்டு . பனைமரம் தமிழகத்தின் தேசிய மரம் அதிலிருந்து கிடைக்கும் பதநீர் மூலமாக தயாரிக்கப்படுவது தான் பனங்கற்கண்டு. வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு பயன்படுத்துவதன் மூலம் உடல் சூடு
இந்தப் பனங்கற்கண்டு தற்போது எல்லா கடைகளிலும் கிடைக்கும் சர்க்கரை அளவு குறையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு பயன்படுத்தினால் நல்லது. சிறிது பனங்கற்கண்டு மிளகு நான்கு சிறிது நெய் சேர்த்து சளி தொந்தரவு நீங்கும். உடல் சுறுசுறுப்பிற்கு மிகவும் நல்லது
குழந்தைகளுக்கு பனங்கற்கண்டுடன் நிலக்கடலை சேர்த்து கொடுத்தால் சோர்வாக உணரும் குழந்தைகள் சுறுசுறுப்பாவார்கள். தினமும் பனங்கற்கண்டை சுத்தமான பசும்பால் காய்ச்சி பனங்கற்கண்டு ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது
Read 7 tweets
#உணவேமருந்து

நேற்று கூறியது போல் நாம் இன்று பார்க்க கூடிய ஒரு அற்புதமான கீரையின் பெயர் லட்சக் கொட்டைகீரை ,நஞ்சுண்டான்கீரை,நஞ்சு கொண்டான் கீரை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்தக் கீரை மூட்டு வலிக்கு ஒரு அற்புதமான உணவு. தற்போது இளைய சமுதாயத்தினருக்கு 30 வயதுகளிலேயே மூட்டு
முழங்கால் வலி எலும்பு தேய்மானம் நரம்புகளில் வலி உடலில் அசதி ஏற்படுகிறது அவர்கள் இந்த லட்சக் கோட்டைக்கு கீரையை பறித்து அதில் பாசிப்பருப்பு சின்ன வெங்காயம் வெந்தயம் சீரகம் சேர்த்து நெய்யில் தாளித்து கூட்டு சமைத்து சாதத்துடன் சேர்ந்து பிசைந்து மூன்று மாத காலங்களுக்கு வாரம் இருமுறை
சாப்பிட வேண்டும். அதிக மூட்டு வலி உடையோர் வாரம் மூன்று நாள் அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் இந்தக் கீரையை கூட்டாகவோ அல்லது பொரியல் ஆகவோ செய்து சாப்பிட மூன்று மாதங்களில் அவர்களின் மூட்டு வலி வெகுவாக குறைந்து இருப்பதை அவர்கள் காண முடியும்.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!