Discover and read the best of Twitter Threads about #ஓம்_சிவாய_நமஹா

Most recents (24)

May 28th 2023
#ஸ்ரீ_மாங்களீஸ்வர_ஸ்வாமி

மாங்கல்ய பாக்கியம் அருளும் மாங்களீஸ்வர ஸ்வாமி :

இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது ஸ்ரீ மாங்களீஸ்வரர் ஆலயம்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர்.

இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ImageImage
முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் காணப்படுகின்றன.

மகாமண்டபத்தினுள் தெற்கு முகப்பு வழியே உள்ளே நுழைந்ததும் எதிரே அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது.

இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள்.
அன்னை தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் இளநகை தவழும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

மகா மண்டபத்தை அடுத்த அர்த்த மண்டபம் உள்ளது.
Read 13 tweets
May 18th 2023
#ஸ்ரீ_தட்சிணாமூர்த்தி

ரிஷபத்தின் முன் நின்ற 
கோலத்தில் காட்சி தரும்

ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் 
அபூர்வக் கோலம் :

விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநாவலூர்.

இறைவன் திருநாமம் பக்தஜனேஸ்வரர்.

இறைவியின் திருநாமம் மனோன்மணி அம்மை. Image
எம்பிரான் சுந்தரர் சுவாமிகள் அவதரித்த தலம்.

 தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219 வது தேவாரத்தலம் ஆகும்.

பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர்,சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம்.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி ஆல மரத்தின் கீழ், அமர்ந்த நிலையில்தான் காட்சிகொடுப்பார்.

கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக விளங்குவதால் குரு தட்சிணாமூர்த்தி என்று அழைக்கபடுவார்.
Read 8 tweets
May 12th 2023
#ஸ்ரீ_நிரஞ்சனேஸ்வர_ஸ்வாமி

பாவங்களைப் போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில் :

வேளாண்குடி மக்கள் நிறைந்த இடத்தில் கோவில் கொண்டவர் நிரஞ்சனேஸ்வரர்.

இந்த ஊரைக் காண்பதற்காக காசிப முனிவர் இந்தப் பகுதிக்கு வந்தார். Image
அவரிடம் அந்தப் பகுதி மக்கள், அசுரர்களால் தங்களுக்கு நிகழும் துன்பங்களை எடுத்துக் கூறி காப்பாற்றும்படி வேண்டினர்.

தேவர்களும் கூட பொதுமக்களுக்காக காசிப முனிவரிடம் வேண்டுகோள் வைத்தனர்.

இதையடுத்து காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி, மாபெரும் யாகம் செய்தார்.
அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர்.

அவர்கள் ‘எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா?’ என்றபடி, காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர்.

யாக குண்டங்களை உடைத்தெறிந்தனர்.
Read 20 tweets
May 11th 2023
#பள்ளி_கொண்ட_சிவன்

திருப்பாற்கடலில் சயனம் கொண்டுள்ள சிவபெருமான் :

திருப்பாற்கடல் என்பது இறைவனின் ஜீவ சக்தியாய், அமிர்த மயமாய் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆதாரமாய்த் தோன்றியதாகும்.

அந்த அமிர்த சாகரத்தில் பள்ளி கொண்டவரே எம்பெருமான் ஆவார். Image
ஆதியில், முதன்முதலில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் சிவபெருமானே என்று அகத்திய சித்த கிரந்தங்கள் உறுதிபட உரைக்கின்றன.

இந்த சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் திருப்பாற்றுறை ஒன்றாகும்.
திருச்சி திருவானைக்கோவிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் காவிரி கொள்ளிடக் கரையில் எழுந்தருளி உள்ளதே திருப்பாற்றுறை சிவத்தலமாகும்.

இறைவன் ஸ்ரீ ஆதி மூல நாதர்.

அம்பிகையின் திருநாமமோ
ஸ்ரீ மேகலாம்பிகை,
ஸ்ரீ நித்ய கல்யாணி என்பதாகும்.
Read 8 tweets
May 11th 2023
#திருவதன_தட்சிணாமூர்த்தி

புதுமண தம்பதிகள் வணங்க வேண்டிய ஸ்ரீ திருவதன தட்சிணாமூர்த்தி :

ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள் ஸ்ரீ திருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள்.

காலவ மகரிஷி சுவாமியின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி, Image
தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைத்தார் 

இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள்  திருமகளை திருமணம் புரிந்த போது,

லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும்,

இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும்,
பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார்.

அப்போது ஸ்ரீ தட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம்.
Read 7 tweets
May 8th 2023
#கைலாசநாதர்

பூர்வ ஜென்ம சாபம் நீக்கும் கயிலாயமுடையார் திருக்கோவில்

காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பாடல் பெற்ற சிவ ஆலயங்கள் பல உள்ளன.

இவற்றில் பல ஆலயங்கள்,

சைவ வழி பற்றிய நாயன்மார்களாலும்,

வைணவ வழியைப் பின்பற்றிய ஆழ்வார்களாலும் பாடப்பெற்றவை. Image
மேலும் பல கோவில்கள் வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகளையும், கலை அழகுமிக்க சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

இவை அனைத்தும் தமிழகத்தின் பன்பாட்டை, கலாசாரத்தை, கலைத் திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளன.
அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான், திருச்சி அருகே உள்ள சோழமாதேவியில் இருக்கும் கயிலாயமுடையார் திருக்கோவில்.

உய்யகொண்டான் ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தேக் கொண்டது.
Read 16 tweets
May 7th 2023
#ஸ்ரீ_மருந்தீஸ்வரர்

*நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில் - பேராவூரணி*

நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகிறார்.

‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது. Image
‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் பீடம், நந்தி மண்டபம் உள்ளன.

அடுத்துள்ள வசந்த மண்டபத்தின் வலதுபுறம் இறைவி பெரிய நாயகியின் சன்னிதி உள்ளது.
அன்னைக்கு நான்கு கரங்கள்.

மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைச் சுமந்தபடியும் கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் அன்னை அருள்பாலிக்கிறாள்.

ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது.

வசந்த மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும், அதையடுத்து அர்த்தமண்டபமும் உள்ளன.
Read 10 tweets
May 3rd 2023
#ஸ்ரீ_பிரம்மபுரீஸ்வரர்

பிறவித் துயர் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் - விழுப்புரம்

விழுப்புரத்திற்கு அருகே உள்ள பிரம்மதேசம் என்ற திருத்தலத்தில் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். Image
பிரம்மதேவன் வழிபட்டதால் இத்தலம் ‘பிரம்மதேசம்’ என்றும், இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர மன்னர்கள் என பலரும் போற்றி வணங்கிய திருத்தலம் இந்த பிரம்மதேசம்.
வேதம் கற்றுத் தெளிந்தவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்ட ஊர் இது என்று கூறப்படுகிறது.

இங்கு பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என்ற இரண்டு சிவாலயங்கள் இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
Read 12 tweets
Apr 17th 2023
#காசி_யாத்திரை

முறைப்படியான  காசி யாத்திரை :

நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் இருந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்ய முடியாத நிலையும் ஏற்படும். Image
இதனை பித்ரு தோஷம் என்று சொல்வார்கள்.

இதற்கு பித்ரு சாந்தி செய்ய வேண்டும்.

திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய மூதாதையரின் (இறந்த பின் எரித்த) சாம்பலை வைத்து கொடுக்கபடுவது.

ஆண்டுகள் கழிந்த பின் இப்போது கொடுக்க நினைத்தால் அவரது மூதாதையரின் சாம்பல் எங்கிருந்து கிடைக்கும்.
இறந்து பல வருடங்கள் கழிந்த பின் எங்கே போவது சாம்பலுக்கு ?

அதனால் அவர் காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.

அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று,
Read 32 tweets
Apr 15th 2023
#சர்ப்ப_தோஷ_நிவர்த்தி

சர்ப்ப தோஷம் போக்கும் 
நாகேஸ்வரமுடையார் கோவில்

ராகு தோஷம் உள்ளவர்கள் 
நாகேஸ்வரமுடையார் 
கோவிலில் உளுந்து தானியம் மீதும், 

கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, 

தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள் Image
ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு 
கிரகப்பதவியை அடைந்தனர். 

அந்த இறைவன் பெயர் 
நாகேஸ்வரமுடையார், 
இறைவி புன்னாக வல்லி. 

இவர்கள் அருள்பாலிக்கும் 
ஆலயம் சீர்காழியில் உள்ள 
நாகேஸ்வரமுடையார் கோவில் ஆகும்.
கோவிலின் முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், 

உள்ளே நுழைந்ததும் அழகான வேலைபாடுகளுடன் கூடிய 
மகா மண்டபம் உள்ளது. 

அதனை அடுத்து அர்த்த 
மண்டபமும், கருவறையும் 
உள்ளன. 

கருவறையில் இறைவன் 
நாகேஸ்வர முடையார் லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார்.
Read 17 tweets
Mar 29th 2023
#சிங்கீஸ்வரர்

பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!

ஒரே கோயிலில் பல அதிசயங்களைக் காண வேண்டும் என்று விருப்பினால் நீங்கள் இந்த ஆலயத்துக்குத் தான் வரவேண்டும்.

நான்கு யுகங்களாகச் சிறந்து விளங்கும் இந்த மப்பேடு சிங்கீஸ்வரர்.
பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம்.

அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்). பிறகு மப்பேடு’ என்று மருவியதாகச் செல்வார்கள்.
வாய் பேச முடியாத பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து குணமானதால், இது மேய்ப்பேடு’ என்று பெயர் பெற்றதாகவும் சொல்வார்கள்.

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இந்தத் தலத்துக்கு வந்து நீக்கிக் கொள்ளலாம் என்கிறது புராணம்.
Read 9 tweets
Feb 28th 2023
#கோனேரிராஜபுரம்_நடராஜர்

மனித ரூபம் கொண்டுள்ள அதிசய நடராஜர் ...!

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு இறைவன் சிலை வடிவமாக காட்சியளிப்பார்.

ஆனால் நாகப்பட்டினத்தில் மனித வடிவில் காட்சியளிக்கிறார் இறைவன். Image
இத்தல இறைவனை பூமிநாதர் என்றும், அம்பாளை அங்கவளநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிலை வடிவமாக செதுக்கப்பட்டு வைக்கப்படுகிறது.
ஆனால் நாகப்பட்டினம் மாவட்ட கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவருக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்புள்ளது.

மனித தோற்றம் :

இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும். நரம்பு, மச்சம், ரேகை, நகம் போன்றவை தெள்ளத் தெளிவாக காணப்படுவது சிறப்பாகும்.
Read 6 tweets
Feb 25th 2023
#அர்ச்சனை

இறைவனுக்கு செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

அர்ச்சனை என்பது பக்தர்கள் அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும்.
பொதுவாக கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்வர்.

இன்னும் சிலர் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வர்.

கடவுளை மகிழ்விக்க மந்திரங்களை ஓதி அந்த சமயத்தில் நாம் அவரை மனதில் நிலை நிறுத்தி நம்முடைய குறைகளை அவரிடம் கூறுவதும்,
அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதும் தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

நாம் சில வேண்டுதல்களோடு கோயிலிற்கு செல்லும் சமயங்களில் நமது பெயரில் அர்ச்சனை செய்து அவரிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது தான் முறை.
Read 4 tweets
Feb 23rd 2023
*சிவலிங்கத்துக்கு சேலை உடுத்தும் அதிசய கோயில்*

’ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பிரபலமான சொல் வழக்கு உண்டு.

மயிலாடுதுறை என்றாலே ஶ்ரீமாயூரநாத சுவாமிதான் நினைவில் வருவார்.

ஆயினும், புராதனச் சிறப்புடைய வேறு சில சிவாலயங்களும் இங்குள்ளன.
அவ்வகையில் அமைந்துள்ள அற்பதமான திருத்தலங்களில் ஒன்று திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அருள்பாலிக்கும் ஶ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸமேத ஶ்ரீ ஐயாறப்ப சுவாமி கோயிலாகும்.
துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும், கங்கை நதியும் தன்மீது படிந்த பாவங்களைப் போக்க மயிலாடுதுறை காவிரியில் நீராடுவதாக ஐதிகம்.

பல தலைமுறைகளாகச் செய்து வந்த பாவம், இங்கு காவிரி துலா கட்டத்தில் கடைமுழுக்கு நாளில் நீராடுவதால் கரைந்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.
Read 18 tweets
Feb 17th 2023
#மூன்று_முக_லிங்கம்

மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம்

சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் ‘அருவுருவ’ வடிவம் ஆகும்.

அது தவிர ஆலயத்தில் நடராஜர், பிட்சாடனர் என பல்வேறு தோற்றத்தில் இறைவன் உருவ வடிவமாக திகழ்வார்.
ஆனால் திருவக்கரையில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம், மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனியாக காட்சி தருகிறது.

இது எந்த தலத்திலும் இல்லாத அபூர்வமான அமைப்பாகும்.
இதில் கிழக்கு முகமாக இருப்பது தத்புருஷ முகமாகவும்,

வடக்கு முகமாக இருப்பது வாமதேவ முகம் என்றும்,

தெற்கு நோக்கி இருப்பதை அகோர மூர்த்தியாகவும் பக்தர்கள் வணங்குகின்றனர்.

இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்புமிக்க சன்னிதி உள்ளது.
Read 6 tweets
Feb 17th 2023
#மஹா_சிவராத்திரி_பூஜை_பொருட்கள்

*#மஹா_சிவராத்திரி* (18.02.2023) அன்று சிவபெருமானின் பூஜைக்கு தேவைப்படும் பொருட்கள்..

இவற்றில் உங்களால் முடிந்த ஏதாவதொரு பொருளை சிவன் கோவிலுக்கு வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருள் பெறுக..
1. திரவிய பொடி

2. மஞ்சள் தூள்

3. அரிசி மாவு

4. நெல்லிமுல்லை பொடி

5. வில்வ பொடி

6. சந்தனம்

7. சந்தன பொடி

8. பன்னீர்

9. தேன்

10. பால்

11. திருநீறு
12. பத்தி

13. சூடம்

14 பழச்சாறு 5 வகை

15. பஞ்சாமிர்தம்

16. தேங்காய்

17. வாழைப்பழம்

18. வெற்றிலை, பாக்கு

19. ஸ்வாமிக்கு வஸ்திரம்

20. ஸ்வாமிக்கு மாலை

21. உதிரி பூக்கள்

22. வில்வ இலை
Read 4 tweets
Feb 16th 2023
#சகஸ்ர_லிங்கம்

சகஸ்ர லிங்க அபிஷேகத்தின் சிறப்பு :

ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும்.

அதேபோல் ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும்.
எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதற்கு சில விசேஷ அம்சங்களை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
பால் அபிஷேகம்

சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு பசுவின் பால் அபிஷேகம் சிறப்புடையது.

பால் கறந்து சூட ஆறும் முன் அபிஷேகம் செய்வதால் விசேஷமான பலன்கள் கிட்டும்.

தயிர் அபிஷேகம்

நாம் அபிஷேகம் செய்யப்போகும் மூன்று தினத்திற்கு முன்னரே பசும் பாலை வாங்கிக் காய்ச்சி
Read 5 tweets
Feb 12th 2023
#பக்தி_கதை

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும் போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.

அதை அரசனிடம் எடுத்துச் சென்ற போது

”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக் கொள்..

சுடுகாட்டுச் சாம்பலை வைத்து‌ அபிஷேகம் செய்”

என்று ஏளனமாக அரசன் கூறி விட்டான்.
இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து தான் உண்ணும் பழைய உணவை படைத்து வழிபட்டான்.
ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.

" சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யச் சாம்பல் இல்லையே " என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம் ” நான் இந்தத் தீயில் விழுகிறேன்.
Read 7 tweets
Feb 3rd 2023
#வைரக்_குஞ்சிதபாதம்

"வைரக்குஞ்சிதபாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா"

(பொள்ளாச்சி ஜெயம் பாட்டிக்கு கிடைத்த அற்புத அனுபவம்)

நன்றி - மகாபெரியவா புராணம்.

திரு இந்திரா சௌந்தர்ராஜனும் புதுயுகம் டி.வி.யில் 21-12-2018 அன்று சொன்னார்.
சிதம்பரம் நடராஜரின் குஞ்சித பாதத்திற்கு வைரத்தால் கவசம் செய்து வைரக் குஞ்சித பாதம் அணிவிக்க வேண்டும் என்று ஶ்ரீ பெரியவா விரும்பினார்கள்.

நடராஜருக்கு வைரக்குஞ்சித பாதம். பெரியவா எது செய்தாலும் அது அவர் வழிச்செல்லும் அன்பர்களுக்காகத்தானே! அவரே ஸர்வேச்வரன்.
அவர் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும்.
ராமர் விஷ்ணுவின் அவதாரம். மானுஷ்ய தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லையா? அது போலத்தான்.

சரி. குஞ்சித பாதம் செய்வதென்று தீர்மானித்துவிட்டார்கள். மடத்தில் ஶ்ரீகார்யம், மற்றும் சில முக்யமானவர்களை அழைத்து discussion முடிந்து decision எடுக்கப்பட்டது.
Read 15 tweets
Feb 2nd 2023
#வீணா_தட்சிணாமூர்த்தி

*யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி*

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர்.
இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் விஷமங்களேஸ்வரர்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆலயத்திற்குள் நுழையும் போதே இடது புறம் ஸ்ரீ தேவி - பூ தேவி சமேதராக அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன்,பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன்
திருமால் காட்சி தருகிறார்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய சந்திரர்கள் காட்சி தருவர்.

இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிது என்கிறார்கள் பக்தர்கள்.
Read 11 tweets
Jan 29th 2023
#வழக்கறுத்தீஸ்வரர்

*வழக்குகளை தீர்க்கும் வழக்கறுத்தீஸ்வரர் கோயில்*

*காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில்*

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் தொடக்கத்திலேயே வலது வலதுபுறமாக அருள்மிகு வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முதலில் உற்சவம் மண்டபத்தில் விநாயகரைத் தரிசிக்கலாம்

அடுத்து வழக்கறித்தீஸ்வரரை தரிசிக்கலாம்.

இந்த இரு சுவாமிகளும் கிழக்கு நோக்கிய வண்ணம் அமர்ந்துள்ளனர்.
இதில் வழக்கறித்தீஸ்வரர் லிங்க திருவருட்கொண்டு பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாகக் காட்சியுடன் அருள் பாலித்து வருகின்றார்.

ஒரே திருத்தலத்தில் இரண்டு சன்னதி கொண்டுள்ள திருத்தலம் என்ற பெருமையும் இந்த கோயிலுக்கு உள்ளது.
Read 6 tweets
Jan 20th 2023
*கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் அரசன் கழனி*

ஸ்ரீ பெரியநாயகி ஸமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், அரசன் கழனி.

செங்கல்பட்டு மாவட்டம், சோழங்கநல்லூர் வட்டம், ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கிய “அரசன் கழனி’ மிகவும் பழமையான கிராமம்.
இவ்வூரில் உள்ள  குளத்தின் நடுவில் அமைந்த நிலப்பரப்பில் “சிவலிங்க திருமேனி ” மற்றும் “நந்தி தேவர்” சிதிலமடைந்து, கோயில் கட்டிடமின்றி, வழிபாடும் இன்றி பல ஆண்டு  காலங்கள் இருந்தது.

இக்குளக்கரையின் மேல் மிகவும் பாழடைந்த நிலையில் ஆதி கால தூண்கள் உள்ளன.
மேலும் மிகப் பெரிய ஆதிகால மாவு ஆட்டும் கல்
சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இதன் அருகில் மூலிகை நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஔதட மலை உள்ளது.

இம் மலையில் அரசன் கழனி ஊர் மக்கள் பிரதி  மாதம் கார்த்திகை திருநாளில் மாலை 6:00 மணி அளவில்,
Read 8 tweets
Jan 19th 2023
*திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்*

*#சக்தி_தட்சிணாமூர்த்தி*

சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில்.
இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள்.

இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர்.

இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.

இக்கோவிலில் சிவபெருமான், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார்.
இவர் இடது கைகளில் ஏடு மற்றும், அமுதக் கலசத்தை ஏந்தியபடியும், அம்பாளை அணைத்தபடியும் காட்சி தருகிறார்.

அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.

பிருகு முனிவர் சிவனையே மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர்.
Read 9 tweets
Jan 19th 2023
#கங்காஜடாதீஸ்வரர்

தொழில் முன்னேற்றம் தரும் கங்காஜடாதீஸ்வரர்!

கோவிந்தபுத்தூர் கங்காஜடாதீஸ்வரர் கோயில்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காவிரி நீர்ப்பாயும் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் விவசாய நிலங்களின் நடுவே அழகுற ஓர் சிவாலயம் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 47வது தலமாக கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது.

சோழர்களின் பல கல்வெட்டுகள் இத்தலமே தேவார திருத்தலம் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தின் எதிரே அர்ஜுனன் தீர்த்த குலம் உள்ளது.
ஆலயத்தின் முகப்பில் பரமனுக்குப் பசு பால் சொறிந்து வழிபடும் கதை வடிவம் காணப்படுகிறது.

ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே செல்லும்போது வாசற்படிக்கட்டு நமக்குத் தென்படும்.

இந்தப் படிக்கட்டானது முற்றிலும் கடல்பாசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!