Discover and read the best of Twitter Threads about #கண்ணதாசன்

Most recents (8)

#நிருபர் :
சிவாயநம -ன்னு, சொன்னா அபாயம் இல்லேங்கிறாங்களே...?
சிவாய நம-ன்னு, சொல்லி
ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை
தொட்டா அபாயம் இல்லாமல்
போகுமா...?
#கண்ணதாசன் :
நம்மோட முன்னோர்கள் எல்லாம், உன்னை விட மடையன்
இல்லே..! அவன் ஒன்னும் "சிவாய நமவென்று, மின்சாரம் தொடுவார்க்கு
N/2👇
அபாயமில்லேன்னு சொல்லலை..!
சிவாய நமவென்று "சிந்தித்திருப்பார்க்கு அபாயம் இல்லேன்னுதான் சொன்னான்..!
அவன், சிந்தனையை சொன்னானே தவிர, செயலை
சொல்லலை..! சிந்தனை வேற, செயல் வேற, ஆனால், சிந்தனை ஒழுங்கானால், செயல் ஒழுங்காகும்..! சிந்தனை ஒழுங்கா இருந்தா, நீ ஏன் ஆயிரம்
வோல்ட்டை
N/3👇
பிடிச்சி தொங்குறே..? தலையெழுத்தா..?
செயலை ஒழுங்குபடுத்த, சிவாய நம-ன்னு, சிந்தின்னானே தவிர,
சிவாய நமவென்று, கிணற்றில்
குதிப்பார்க்கு, அபாயமில்லேன்னா
சொன்னான்..?
N/4👇
Read 5 tweets
#கீதா_உபதேசம்

B.R.பந்துலு 1964-ல் தயாரித்து இயக்கி வெளியிட்ட படம் கர்ணன். நிறைய பொருட்செலவு செய்தார் பந்துலு. ரூ.40 லட்சம். 

சிவாஜி என் டி ராமாராவ் தேவிகா சாவித்திரி அசோகன் நடித்தனர்.

இசை விஸ்வனாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள்.

படம் திருப்திகரமாக வளர்ந்து வந்தது.
படப்பிடிப்பு முடியும் தருவாய். தயாரிப்பாளர்-இயக்குனருக்கு ஒரு விநோதமான  யோசனை  தோன்றியது.  கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உரைக்கும் கீதோபதேசக் காட்சியை முழுமையாகப் படமாக்க வேண்டும். செலவு பற்றிக் கவலையில்லை.
அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு அதிர்ச்சி.  கீதோபதேசக் காட்சியை எவ்வளவு சுருக்கமாக எடுத்தாலும் இருபது நிமிடங்களுக்கு மேலே ஆகிவிடும். கதையோட்டத்திற்குப் பெரும் தடையாக இருக்கும். படம் பார்ப்பவர்களுக்கும் ஆர்வம் இருக்காது. எழுந்து வெளியே சென்றுவிடுவார்கள்.
Read 13 tweets
*சிவலிங்கம் சாட்சி சொன்னது பொய்யோ!!*

ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் இவ்வளவு பெரிய உண்மை கதை அல்ல நிஜமே 

ஒரு பாடலின் கதை

இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!

.
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” 

எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!

ஆனால் இன்று ஏனோ....

இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 

மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...
அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -

மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*

பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!

இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?
Read 28 tweets
#Thread

திருத்தணி மேடையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களிடம் தரப்பட்ட ‘வேல், இன்று பேசும் பொருளாகி விட்டது.! வேலோடு முருகன் திடீரெனத் தோன்றி தரிசனம் தந்திருந்தால் கூட இவ்வளவு பெரிய படத்தோடு முதல் பக்கச் செய்தியாக ‘தினமலர் வெளியிட்டிருக்குமா.? - என எண்ணிடும் வகையில்,..

1/n
கழகத் தலைவர் வேலோடு காட்சி தரும் படத்தை பெரிய அளவில் போட்டு, முருகனை தரிசிக்கும் அவரது பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு முழக்கமிடும் 'அரோகரா' எனும் கோஷத்தை, அதாவது, 'துன்பங்களை நீக்கி நற்கதியை அருள்க.!' எனும் பொருள் பொதிந்த வாசகத்தை தலைப்பாக வெளியிட்டிருந்தது.!

2/n
நமது தமிழக #பிஜேபி காரர்களும் அதனைப் பார்த்து அப்படித்தான் நினைத்திருப்பார்கள் எனக் கருதுகிறோம்.!

'அரோகரா' எனத் 'தினமலர்' கிண்டலடித்துப் போட்டிருப்பதாக அவர்கள் எண்ணியிருந்தால், நமது பி.ஜே.பி.யினர் கொதித்துப் போய், 'எப்படி முருகன் புகழ்பாடும் சொல்லை கிண்டல் செய்து போடலாம்,.

3/n
Read 21 tweets
எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் #கண்ணதாசன்

அந்தப் பாடல் ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
என்ற இந்தப் பாடல்

1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும் (293)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி....- 1/5
2. இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.(629)

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...

3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.(387)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும் - 2/5
4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. (124)

நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.

5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம். (35)

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் - 3/5
Read 6 tweets
கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே கூறிப்பிட்டுள்ளார்.அவர் கருணாநிதியைப் பற்றி எழுதிய விமர்சனங்கள்.1
#வனவாசம் #கண்ணதாசன் Image
அண்ணாவின் ‘நேர்மை’ கருணாநிதியின் ‘சுய’மரியாதை:

இந்த நிலையில் சென்னை மாநகர் மன்றத் தேர்தல் வந்தது. பொதுத்தேர்தல் முடிந்து திருக்கோஷ்டியூரில் அவன் தோல்வியுற்று, சென்னைக்குத் திரும்பிய உடனேயே சென்னையில் திமுகவின் வெற்றியைக் கண்டான்.அப்போதே ‘தென்றலில்’ ஒரு தலையங்கம் எழுதினான்.2
'அடுத்த மாநகர் மன்றத்தேர்தலில் முன்னேற்றக் கழகத்தவரே மேயராக வருவார்’என்று அதில் அவன் குறிப்பிட்டான்.
அந்த நம்பிக்கையை துணைகொண்டு இப்போது தேர்தல் வேலைகளில் இறங்கினான்.அந்தத் தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்காக அதிகம் உழைத்தவர்கள் அவனும் நடிகர் டி.வி.நாராயணசாமியாவார்.3
Read 15 tweets
கலைஐஞரின் மறுபக்கம்-கண்ணதாசன் பார்வையில்(பகுதி-3)

கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே கூறிப்பிட்டுள்ளார்.(1/15)
#வனவாசம் #கண்ணதாசன் Image
போலி சீர்திருத்தவாதிகள்:

அந்த அரசியலிலேயே அவன் ஊர்ந்து சென்றாலும் சில விஷயங்களில் அவன் எச்சரிக்கையாக இருந்தான்.கழகத்திற்கு என்றே ஒரு தனித்தமிழ் நடை உண்டு.அண்ணாத்துரையின் நடையை பின்பற்றி,எல்லோருமே ஒரே மாதிரி ‘துள்ளு தமிழ்’ எழுதுவார்கள்.(2/15)
எழுதியவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது.கதை ஒன்றில் தொடங்கி,பிறகு அதை கட்டுரையாக விரிக்கும் அலுத்துப்போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.
அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை.காரணம் அந்த நோய் தன்னையும் பற்றிக்கொள்ளக்கூடாது என்பதுதான்.(3/15)
Read 15 tweets
கலைஞரின் மறுபக்கம் – கண்ணதாசன் பார்வையில்:

(கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே குறிப்பிடுவார். அவர் கருணாநிதியைப் பற்றி எழுதிய விமர்சனங்களின் பாகம்-2)
#வனவாசம் #கண்ணதாசன்
(1/14)
சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து. அந்தச் சந்திலேதான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார். மூத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றும் இருவர் கன்னியர்.(2/14)
அவனும் அந்தத் ‘துள்ளந்தமிழ்த் தோழனும்’, இன்னும் ஒரு தற்கால எம்.எல்.ஏ.யும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தார்கள்.
மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார்.
(3/14)
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!