Discover and read the best of Twitter Threads about #கண்ணன்கதைகள்

Most recents (6)

கண்ணனும் சிவனும் ஒன்று

மகாபாரதத்தில் யுத்தம் நடந்த போது அபிமன்யு இறந்த நாளன்று , ஜயத்ரதன் என்பவனை, மறுநாள் சூர்யஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான் அர்ஜுனன்.

உடனே கண்ணன் " அர்ஜுனன், என்ன நீ , திடிரென்று சபதம் எடுத்து விட்டாய்.
ஜயத்ரதன் மஹாதேவரிடம் வரம் பெற்றவன் . அவனை கொல்வது அவ்வளவு எளிய காரியமா என்ன? "

அதற்கு அர்ஜுனன் " அதெல்லாம் எனக்கு தெரியாது. அவனை நாளை சூர்யஸ்தமனத்துக்குள் கொல்வேன். இல்லையென்றால் நெருப்புக்குள் குதிப்பேன். அதான் நீ இருக்கிறாயே. எனக்கு என்ன கவலை "

கண்ணனுக்கு தூக்கம் வரவில்லை.
நேராக அர்ஜுனனிடம் சென்றான்

கண்ணன் "வா மஹாதேவரிடம் செல்வோம்."

அர்ஜுனன் கண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான். கண்னனுடன் கிளம்பினான்.

போகும் வழியில் அர்ஜுனனுக்கு பயங்கரமாக பசித்தது. மிகவும் களைத்து போனான்.

அர்ஜுனன் "கண்ணா எனக்கு பசிக்கிறது. நான் மிகவும் களைத்து பொய்
Read 7 tweets
உத்தவரின் ஆசை

துவாரகை அரண்மனையில், கண்ணன் அருகே அமர்ந்திருந்தார் உத்தவர். அவரது முகத்தில் கடும் யோசனை. கண்ணன் பிரியமாகக் கேட்டான்: "உத்தவரே! எதைப் பற்றியது உங்கள் ஆழ்ந்த யோசனை? நான் தெரிந்துகொள்ளலாமா?'' எல்லாவற்றையும் தெரிந்த கடவுளிடமிருந்து எதுவுமே தெரியாததுபோல் ஒரு வினா! Image
உத்தவர் நகைத்துக் கொண்டார். பகவானிடம் தான் வெளிப்படையாக இருப்பது அவசியம் என்பதையும் அவர் அறிவார்.

ஒருபெருமூச்சுடன் சொல்லலானார்: "பிரபோ! நானும் எத்தனையோ ஜபதபங்கள் செய்துவிட்டேன். என்னை எல்லோரும் ரிஷி என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், மகரிஷி என்ற பட்டம் மட்டும் இன்னும் எனக்குக்
கிட்டவில்லை. முனிவர்களிடையே நானும் ஒரு மகரிஷி என்ற அந்தஸ்தைப் பெற விரும்புகிறேன், என்றார்.

கண்ணன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். "ஆசையையெல்லாம் முற்றும் துறந்த முனிவருக்கு, மாபெரும் துறவி' என்ற பட்டம் பெறும் ஆசையைத் துறக்க முடியவில்லையே! பற்றற்றான் பற்றினைப் பற்றிக்கொண்டு
Read 40 tweets
கண்ணன் செய்த வேலை

ராஜசூய யாக வேலை தடபுடலாக நடந்துகொண்டு இருந்தது. யுதிஷ்டிரன் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுத்தார். பீமனுக்கு சமையலில் மேற்பார்வையாளராகவும், நகுல சகாதேவர்களுக்கு யாகம் காண வருபவர்களை வரவேற்கும் பொறுப்பையும், அர்ஜுனனுக்கு யாகசாலையைப் பாதுகாக்கும் பொறுப்பையும்., Image
திரௌபதிக்கு சாப்பாடு பரிமாறுகிற வேலையும், கர்ணனுக்கு பரிசுகள் விளங்கும் பொறுப்பையும் , துரியோதனனுக்கு கஜானாவை பாதுகாக்கும் பொறுப்பும் கொடுத்தார். ஆனால் கண்னனுக்கு மட்டும் எந்த பொறுப்பும் கொடுக்க வில்லை. கண்ணன் தனக்கும் ஏதாவது வேலை கொடுக்கும் படி கேட்டார். யுதிஷ்டிரனுக்கு
கண்ணனுக்கு வேலை கொடுக்க மனம் இல்லை . ஆனால் கண்ணன் கட்டாயப்படுத்தினான்

அதற்க்கு யுதிஷ்டிரன் " கிருஷ்ணா, நீங்கள் மிகவும் பெருமைக்கு உரியவர். உங்களால் கால்களை கழுவி நாங்கள் உங்களை கவுரவிக்க வேண்டும். அத்தகைய உங்களுக்கு நான் என்ன வேலை கொடுக்க முடியும்? "

இதை கண்ணன் வேறு விதமாக
Read 7 tweets
வாழ்கையை பற்றி கோவிந்தன் கூறிய அறிவுரை

மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்! இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?"- தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து
வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.

உடனே, "ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன்
உங்களுக்கு ஒரு சோதனை!" என்றார் கிருஷ்ணர்.

இருவரும், "என்ன அது?" என்பது போல், பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர்.

முதலில் தருமரிடம், "தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!" என்றார் பகவான்.

"ஆகட்டும் கிருஷ்ணா!" என்ற தருமர் அங்கிருந்து
Read 9 tweets
மாலிகன் மதி இழந்த கதை!

கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும் அப்படித்தான் ஆயிற்று! பேராசை யும் மமதையும் தலைதூக்க… சிறியவர்- பெரியவர் என்றில்லாமல், எல்லோரையும் அவமதித்து, பலவாறு துன்புறுத்தினான் மாலிகன். மாலிகன்
மதி இழந்த கதை!யதுகுல நாயகனாம் கண்ணனின் நண்பன். கண்ணனின் தோழனாக இருப்பவன், சுபாவத்தில் நல்லவனாகத்தானே இருக்க வேண்டும்?! மாலிகனும் இயல்பில் நல்லவன்தான். யசோதை அன்னைக்கு நிகராக… கண்ணனிடம் அன்பைப் பொழிந்தவன்தான்!

எனவேதான் அவனுக்கு, சகல கலைகளையும் கற்றுத் தந்தான் கண்ணன். ஆயர்பாடியே
வியக்கும் விதம்… தனக்கு நிகராக மாலிகனை உயர்த்தினான் அந்த மாயவன். ஆனால்?

கண்ணனிடமே கலை கற்றதால் உண்டான கர்வமும், அளவிலா ஆற்றல் பெற்று விட்டோம் என்ற அகந்தையும் அவனை ஆட்டிப் படைத்தன. மமதையால் மதியிழந்து அலைந்தான் மாலிகன்! அனைத்தும் அறிந்த கண்ணன், இதை அறியாமல் இருப்பானா?
Read 16 tweets
பூதனை வதத்திற்கு பின்...

“அடியே விசாலாட்சி, இந்த ஆச்சர்யத்தைக் கேள்விப்பட்டியோ?”

“எதைச் சொல்றே நீ சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைப்பத்தித் தானே?”

“வேறே என்ன விஷயம் இருக்கு பேச?”

“ஆமாம். கேள்விப்பட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு Image
உள்ளே போய் யசோதையைக் கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்”

“என்ன?”

“யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலம்பற வந்தாளாம். உங்க வீட்டு குழந்தை ரொம்ப அழகாக இருப்பானாமே, நான் பார்க்கலாமா என்று கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தையை தூக்கி அவள் கையிலே தந்திருக்கு. அவள் சப்பளிக்க உட்கார்ந்து மடியிலே
போட்டுக் கொஞ்சியிருக்கா. நான் இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா. இந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு”.

“அப்புறம்?”

“என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”

“சரி, சரி நீயே சொல்லுடி”

“என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க
Read 117 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!