Discover and read the best of Twitter Threads about #குட்டிக்கதை

Most recents (5)

#குட்டிக்கதை
நண்பர்களிடையே கல்யாணம் பற்றிய விவாதங்கள் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒருத்தன்
"பிள்ளையாரை விட முருகன் பெரிய ஆளுடா, எப்பிடி ரெண்டு பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கார் பார்த்தியா?" என்றான்.
இவன் ஒருத்தன் நிதர்சனம் புரியாமல் பேசிட்டு இருக்கான். அடேய் பிள்ளையாருக்கு மாம்பழம் வேணும்னு, அம்மா அப்பாதான் உலகம்னு சுத்தி வந்த அம்மா அப்பா கோண்டுடா. ஆனா முருகன் உலகத்தையே சுத்தி வந்த traveller.
மாம்பழம் கிடைக்கல என்றதும் கோவிச்சுக்கிட்டு பழனில தனிக்குடித்தனம் போயிட்டார்.
பிள்ளையாரிட்ட வீடு இருக்கா?
ஆனா முருகனிட்ட "திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை"னு ஆறுபடை வீடு இருக்கு. பிள்ளையாரிட்ட இருக்கிற வாகனம் எலிதான். ஆனா முருகனிட்ட இருக்கிறது மயில். நல்ல மயில்age(mileage) கொடுக்கும்.
Read 4 tweets
#குட்டிக்கதை
ஒரு தடவை காட்டுல வாக்கிங் போயிட்டு இருந்தேன். யாரோ ஒரு பொண்ணும், அவ புருசனும் காட்டுக்குள்ள இருந்தாங்க. வெள்ளை வெளேர்னு இருந்தாங்க. ஆரிய வந்தேறியாத்தான் இருக்கணும். டக்குன்னு பார்த்ததுமே புரிஞ்சிடிச்சு. என்ன கண்டதும் அந்த பொண்ணு புருசன் கிட்ட 'see மான்'னு சொல்லிச்சு. Image
உடனே துரத்த தொடங்கிட்டான். கையில AK 74ம் இல்லை. ஒரு பையில ஆமை கறி இருதிச்சு. முப்பாட்டன் முருகனை நினைச்சுட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம். இங்கதான் நீங்க ஒன்னை புரிஞ்சுகிடனும். புறமுதுகு காட்டி ஓடினான் சீமான்னு யாரும் சொல்ல கூடாதுன்னு reverseலயே ஓடினேன்.
அந்த புருசனுக்கு பொண்டாட்டியும் யாருன்னு தம்பிங்க கிட்ட கேட்டப்போ ராமனும் சீதையும்னு சொன்னாங்க. உடனே ஸ்ரீலங்கால இருக்கிற எங்க பாட்டன் இராவணனுக்கு போனை போட்டேன். அவர் வச்சிருந்த விமானத்துல வந்தாரு. தமிழன் புத்திசாலித்தனத்தை பாருங்க.
Read 8 tweets
#குட்டிக்கதை

கணேசனும் அவளும் காதலிப்பதாக சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள்.

"ஆன்ட்.... ஆன்ட்ரியா கண்ணை கசக்கிட்டு அழுறதை முதல்ல நிறுத்து, நாளைக்கு பொண்ணு பார்க்க தானே வாறாங்க, கையோட கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போக இல்லையே. 1/6
நான் நம்ம காதலை பத்தி எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு, உங்க வீட்ட பொண்ணு கேட்க சொல்றேன். நீயும் உங்க வீட்ல சொல்லு." என்று நூறாவது முறையாக கணேசன் சொன்ன சமாதானம் கொஞ்சம் வேலை செய்தது. கணேசன் சொன்னது போலவே வீட்டில் பேசி அம்மா அப்பாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்துவிட்டான். 2/6
அது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவள் வீட்டில் எப்படி சொல்வது என்ற பயம் நெஞ்சை அடைத்தது. அப்பா சும்மாவே நெருப்பெறும்பு, காதல் என்றால் கொள்ளியெறும்பு ஆகிவிடுவார்.
எப்படியோ மனதை திடப்படுத்திக்கொண்டு விஷயத்தை சொன்னாள்.
வீடே அல்லோகலப்பட்டது. 3/6
Read 6 tweets
#குட்டிக்கதை -2
அன்பு
வியாபாரி ஒருவன் வறுமையில் இருந்தான். நான்கு பெண் குழந்தைகள் வேறு. செல்வம் சேர வேண்டும் என்று லக்ஷ்மியை வேண்டிக்கொண்டு இருந்தான். எத்தனையோ பூஜைகள், சடங்குகளைச்செய்தும் அவன் வேண்டிய செல்வம் கிடைக்கவில்லை. குறைந்த பொருள் வசதியிலேயே எப்படியோ முயன்று
1/4
பெண்களை திருமணம் செய்து கொடுத்தான். மனைவியும் போய் சேர்ந்தாள். தனித்து விடப்பட்டான். பாசங்கள் நீங்கின. மனம் தவம் குறித்து திரும்பியது. குருவைத்தேடி அலைந்து கண்டு பிடித்து உபதேசம் பெற்றான். மன ஒருமைப்பாட்டை முயன்று கடைப்பிடித்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்தான்.
ஒரு நாள் ஜபம்
2/4
செய்து கொண்டு இருக்கும்போது லக்ஷ்மி அவன் எதிரே தோன்றினாள்.

"குழந்தாய்! என்ன வரம் வேண்டும்? கேள், தருகிறேன்!"

வியாபாரி சிரித்தான். "ஒரே விஷயம்தான் தெரிய வேண்டும். வேறு ஒன்றுமில்லை."
"கேள்!"
"எவ்வளவு பூஜைகள் செய்து உன்னை வருந்தி வருந்தி அழைத்தேன்? நீயோ வரவே இல்லை.
3/4
Read 4 tweets
#குட்டிக்கதை -1
ஒரு முதிய துறவி தனியாக சாலை வழியே சென்று கொண்டு இருந்தார். காட்டுவழியாக வெகு தூரம் சென்று ஒரு பெரும் நதியை படகில் கடந்து அடுத்த ஊர் செல்ல வேண்டும்.
வழியில் ஒரு இளம் துறவி வந்து சேர்ந்தார்.
"நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்றார் இளம் துறவி.
"அடுத்த ஊருக்கு..."
1/7
"ஓ, காட்டு வழியாக செல்ல வேண்டும். நானும் கூட வரலாமா? பேச்சுத்துணையாக இருக்கும்!"
" தாராளமாக..."
வழி நெடுக தர்ம விசாரம் - குறிப்பாக சந்நியாஸ நிலையின் கட்டுப்பாடுகளை- பேசிக்கொண்டு நடந்தனர். இளம் துறவி பல விஷயங்களை விவாதித்தார்.
கடைசியில் சந்நியாசி பணம் வைத்துக்கொள்ளலாமா கூடாதா
2/7
என்று விசாரம் நடந்தது. கூடாது என்பது பெரியவரின் கொள்கை. அவசரத்துக்காக சிறிதளவு வைத்துக்கொண்டால் தப்பில்லை என்பது இளையவரின் வாதம்.
"சந்நியாசி பணத்தை கையால் தொடுவது கூட பிரச்சினை உண்டு பண்ணலாம்; பணம் வைத்துக்கொள்ளாவிட்டால் எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வான்" என்றார் பெரியவர்.
3/7
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!