Discover and read the best of Twitter Threads about #குருபூஜை

Most recents (4)

#மாணிக்கவாசகர் #குருபூஜை
வாதவூரார் என்றும் வாதவூர் தலைவன் எனவும் போற்றப்படுகிற மாணிக்கவாசகருக்கு நேற்று குருபூஜை. மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள ஒத்தக்கடைக்கு அருகில் கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் திருத்தலத்தைக் கடந்து, 20 கி.மீ. தொலைவில் திருவாதவூர் Image
எனும் அழகிய தலம் உள்ளது. சிறிய கிராமம். இந்த கிராமத்தின் அளவில் பாதியாக கோயில் அமைந்துள்ளது. அற்புதமான இந்தக் கோயில் பல சாந்நித்தியங்களைக் கொண்ட ஆலயமாக திகழ்கிறது. இதுதான் மாணிக்கவாசகர் அவதரித்த பூமி. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பார்கள். படிப்போர்
உள்ளத்தைப் பக்திப் பெருக்கால் நெகிழச் செய்யும் திருவாசகத்தை உலகுக்கு அளித்தவர் மாணிக்கவாசகப் பெருமான். பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் திருவாதவூரில் பிறந்தார். அவர் பிறந்த ஊரின் பெயராலேயே ‘திருவாதவூரார்’ என்றே அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கல்வி, ஞானம்
Read 14 tweets
ஏயர்கோன் கலிக்காம நாயனார் வரலாறு :

காவிரியால் வளம்கொழிக்கும் சோழ நாட்டிலே பெருமங்கலம் என்னும் நகரம் அமைந்துள்ளது. இத்தலத்திலே ஏயர் குலத்தினர் சோழருடைய படைத் தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்களாக சிறந்து விளங்கினர். Image
அக்குடியினிலே வாழ்ந்து வந்த தொண்டர்கள் பலருள் கலிக்காம நாயனார் என்பவரும் ஒருவர். இவர் பக்தியின் பேருருவாய் - அன்பின் அழகு வடிவமாய் - சிறந்த சிவத்தொண்டராய் விளங்கினார். இவர் மானக்கஞ்சாற நாயனாருடைய மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.
இச்சிவனடியார் திருவெண்ணீற்றுச் செல்வத்தையும், திருச்சடையோன் சேவடியையும் தமக்குக் கிட்டிய பேரின்ப பொக்கிஷம் என்ற எண்ணத்தில் சிவனாரின் திருவடிக் கமலங்களைச் சிந்தையில் இருத்தித் தேனினும் இனிய ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது எந்நேரமும் ஓதி வந்தார்.
Read 32 tweets
#நமிநந்தியடிகள்_குருபூஜை

#நமிநந்தியடிகள்_சிறப்புகள்

நமிநந்தியடிகள் நாயனார் வரலாறு :

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வன்மீகநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ உமாமகேஸ்வரி

அவதாரத் தலம் : திருநெய்ப்பேர்

முக்தி தலம் : திருவாரூர்

குருபூஜை நாள் : வைகாசி - பூசம்
ஏமப்பேறுர் என்னும் சிவத்தலம், சோழர்களுக்குச் சொந்தமாகிய பொன்னி நாட்டில் அமந்துள்ளது. இத்தலத்திலுள்ள அந்தணர்கள் வேள்விச் சாலையில் அருமையான பூஜை மேடை மீது வெண் மணலைப் பரப்பி இடை இடையே செந்தீயை வளர்த்து வேத பாராயணம் செய்வர்.
இத்தகைய சீரும் சிறப்பு மிக்குத் தலத்தில் சைவ நெறியில் ஒருமைப்பட்ட அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் நாயனார் தோன்றினார்.

இவர் எக்காலத்தும் எம்பெருமசன் திருவடிகளை இடையறாது வணங்கி வழிபட்டு வரும் பெரும் பேறு பெற்றிருந்தார்.
Read 30 tweets
#சேக்கிழார்_பெருமான்_குருபூஜை

#சேக்கிழார்_பெருமான்_சிறப்புகள்

சேக்கிழார் சுவாமிகள் வரலாறு :

இறைவன் : ஸ்ரீ திருநாகேஸ்வரர்

இறைவி : ஸ்ரீ காமாட்சியம்மை

அவதாரத் தலம் : குன்றத்தூர்

முக்தி தலம் : குன்றத்தூர்

குருபூசை நாள் : வைகாசி - பூசம்.
பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரச பதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம்.
தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார்.

அவர் பிறந்ததும் அருண்மொழி ராமதேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது சகோதரர் பாலறாவாயர்.

சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார்.
Read 25 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!