Discover and read the best of Twitter Threads about #குருவாயூரப்பன்

Most recents (4)

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதைக்
காட்டும் குருவாயூர்க் கோலம் Image
சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு
மாலைகள் இடுவார் குறை ஓடி

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி

சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல்
மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி
Read 4 tweets
#நாமசங்கீர்த்தனம் #பூந்தானம் #குருவாயூரப்பன் நாம சங்கீர்த்தனம் செய்வது புண்ணியம் என்றால், அதைக் கேட்பது, நம் பிறவி பிணியை தீர்த்து, முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். ஒரு நாள், இவர் கண்ணனை துதித்து, கவிதை எழுதிக்
கொண்டிருந்தார். அப்போது, வைகுண்டத்தை வர்ணிக்க கூடிய பகுதி வந்தது. அதை எப்படி வர்ணிப்பது என தெரியாமல், அவ்வருத்தத்திலேயே, உறங்கி விட்டார். தூக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அக்கனவில், அழகிய விமானத்தில் ஏறி, வைகுண்டம் செல்கிறார், பூந்தானம். வானவர் இருவர், அவரை வரவேற்று,
வைகுண்டம் முழுதும் சுற்றிக் காண்பித்து, பகவான் சன்னிதியில் அவரை நிறுத்துகின்றனர். பகவானை தரிசித்து, பரமானந்தமடைந்தவர், பூலோகம் திரும்பும் போது, அவ்வானவர்கள், அவரை வணங்கி, 'குருதேவா உங்கள் கருணையால் தான்,நாங்கள் கடவுள் அடியார்கள் எனும், இவ்வுயர் நிலையை அடைந்தோம். நாங்கள்
Read 8 tweets
#குருவாயூரப்பன் ஒரு சமயம் ஓர் அந்தணருக்கு வயிற்று வலி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போன வலி, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படவில்லை. மனம் கலங்கிய அவரது மனைவி குருவாயூரப்பனிடம், "கண்ணா, என் கணவருக்கு வயிற்று வலி நீங்கவும், எங்கள் துன்பம் தீரவும் அனுக்ரஹிக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கினால், நான் என்னுடைய திருமாங்கல்யத்தை உனது திருவடியில் ஸமர்ப்பித்து, மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்கிறேன். எனக்கு மாங்கல்யப் பிச்சை தா கண்ணா" என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள். சில நாட்களிலேயே வயிற்று வலி மட்டுப்பட்டு, சரியாகி அவளது கணவர் பூரண குணமடைந்தார்.
வேண்டிக்
கொண்டபடி குருவாயூர் சென்று, ஸன்னிதியில் நமஸ்கரித்து, தனது திருமாங்கல்யத்தை அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்து விட்டு, மஞ்சள் சரடைக் கட்டிக் கொண்டாள். பின் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். சுற்றி வரும் போது அந்தப் பெண்மணியின் கழுத்தில் திருமாங்கல்யம் முன்பு போலவே இருந்தது.
Read 7 tweets
#குருவாயூரப்பன் #குருவாயூர்ஸ்ரீகிருஷ்ணன்
குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப் படவில்லை. பாதாளாஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். மிகவும் திவ்யமாக திகழும் இறைவன்
பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் நான்காவது கரத்தில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார். கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்கிரகம் மகா
விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிக்கிறது. உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு, ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள். குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இங்கு இதை செய்தால் அந்த குழந்தை
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!