Discover and read the best of Twitter Threads about #சீமான்_வலியுறுத்தல்

Most recents (6)

அறிக்கை : - முருகேசன் - கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி



கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த - 1/5
முருகேசன் - கண்ணகி இணையரை ஆணவப் படுகொலை செய்திட்ட வழக்கில் 13 பேரைக் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை வழங்கியிருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் - 2/5
தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது!

‘கண்ணகி மதுரையை எரித்து நீதிகேட்டது போல, முருகேசன் - கண்ணகி வழக்கின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கும் நீதி ஆணவப்படுகொலையை எரிக்கட்டும்’ என அறச்சீற்றத்தோடு தீர்ப்புரை எழுதிய நீதியரசரது நீதிநெறி போற்றும் மாண்பைப் - 3/5
Read 6 tweets
அறிக்கை: *வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்!

#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி

உசிலம்பட்டி - 1/15
தொகுதிக்குட்பட்டப் பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் அக்கால்வாய்த்திட்டத்தின் பயன்பாடுகள் விவசாயிகளைச் சென்று சேருவதில்லை எனும் - 2/15
செய்திப் பெருங்கவலையைத் தருகிறது.

‘உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாய்’ எனும் திட்டமானது கடந்த 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 30 கண்மாய்கள் மற்றும் 5 கசிவுநீர் குட்டைகளைத் தண்ணீர்த் தேக்கப்பகுதிகளாகக் கொண்டு, வைகை அணையிலிருந்து அவற்றிற்குத் - 3/15
Read 16 tweets
அறிக்கை:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் – #சீமான்_வலியுறுத்தல்

bit.ly/3s13UuD

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து நீண்ட காலமாகப் - 1/14
பணியமர்த்தப்படாமல் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உடனடியாகப் பணியானை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் - 2/14
சீரிய முயற்சியாலும் 1956 ஆம் ஆண்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதற்காகவும் தமிழகத்தின் வளத்தை மூலதனமாகக்கொண்டு தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவானதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் - 3/14
Read 15 tweets
*மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்! – #சீமான்_வலியுறுத்தல்



தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - 1/10
நீண்ட நாட்களாகப் போராடிவரும் நிலையில் அரசு அவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

புயல், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், இரவுப்பகல் கண் துஞ்சாது கடமை - 2/10
தவறாது அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அரசிடம் கையேந்தி நிற்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

மின்சாரத்துறை முற்று முழுதாகத் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிடுமோ என்ற மின்சார வாரிய ஊழியர்களின் அச்சம் மிகமிக - 3/10
Read 11 tweets
ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீதியை நிலைநாட்ட வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி.

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையைத் திறப்பதற்கு அனுமதி மறுத்து, சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் - 1/13
சிறப்புமிக்க தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. தாமிர ஆலையில் இருந்து வெளிவந்த கழிவுகளால் நச்சுப் புகையால் குடிநீரும், சுவாசிக்கும் காற்றும் நஞ்சாகிப் போனதை எதிர்த்து ஆலையை மூடக்கோரி பல ஆண்டுகளாக பல கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களின் - 2/13
அறப்போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இத்தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழ்நாடே வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நீதியைப் பெறுவதற்காக களத்தில் போராடிக் குண்டடிப்பட்டு, தாக்குதலுக்குள்ளாகி உடல் உறுப்புகளை இழந்த உறவுகளுக்கும், அடுக்கடுக்கான வழக்குகள் மூலம் அரசின் - 3/13
Read 14 tweets
லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்

நேற்று (04-08-2020) இரவு மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே இருந்த இரசாயணக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய -1/8 ImageImage
இரண்டு வெடிப்புகள் உலகத்தையே உலுக்கி உள்ளது. 25 கிமீ சுற்றளவு வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தின் சத்தம் 250 கிமீ வரை உணரக்கூடியதாய் இருந்திருக்கிறது. உள்ளத்தை நடுநடுங்க செய்யும் வெடிப்புக் காட்சிகள் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மனம் மீளவில்லை.

விபத்து ஏற்பட்ட - 2/8 ImageImage
இரசாயணக் கிடங்கில் ஏறத்தாழ 3000 டன் நிறையுள்ள அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய அம்மோனியம் நைட்ரேட் இரசாயணத்தைப் பாதுகாப்பற்ற முறையில், பராமரிப்பு இன்றி 6 வருடமாக வைத்து இருந்ததுதான் விபத்திற்கான காரணம் என்கிறார்கள். இந்த மோசமான விபத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் - 3/8 ImageImage
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!