Discover and read the best of Twitter Threads about #ஜெய்_ஸ்ரீராம்

Most recents (24)

#ராமர்_பாதம்_பட்ட_குடிசை

அம்மா..... அம்மா....

குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு...

பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை. Image
பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு...

உங்களை ஒன்றும் செய்யாது,,

வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பிட்டு,

துணியை மாற்றி தோசை சாப்பிடுங்க..

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.
வீடு என்றால் ஏதோ
பெரிதாக கற்பனை செய்து விடாதீர்கள்...

அது ஒரு குடிசை வீடு.

பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில்
ஸ்ரீ னிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம்.
Read 26 tweets
#வடுவூர்_ராமர்

கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், நீடாமங்கலம்.

திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ளது வடுவூர். Image
மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?

பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார்.

வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.
இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு,

ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.
Read 21 tweets
*திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோயில்*

சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்டதலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும்.
திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன்புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.
Read 11 tweets
*பரதனும் சத்ருக்கனனும் இணைந்து காட்சி தரும் ஸ்ரீராம அனுமன் கோயில்* முட்லூர்

‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. இராமபிரானைப் பக்தியோடு கற்க வேண்டும் என்கிறார்.
இந்திரஜித்துக்கும் இளையபெருமாளாகிய இலக்குவனனுக்கும் போர் நடக்கிறது. போர்க் களத்தில் இந்திரஜித் கடும் போர் செய்தான். சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறான் இலக்குவன். ஆயினும் இந்திரஜித்தை வெல்ல முடியவில்லை.
அப்பொழுது ஒரு அர்த்த சந்திர பாணத்தை எடுத்து இராமனுடைய பெயரைச் சொல்லி பிரயோகம் செய்கின்றான் இலக்குவன். அந்த அர்த்த சந்திர பாணமானது இந்திரஜித்தை கீழே தள்ளுகிறது. பாணத்தைப் பிரயோகிக்கும்போது அவன் என்ன சங்கல்பம் சொல்கிறான் தெரியுமா?
Read 23 tweets
*கம்பனையும் ராமனையும் பாடிய கண்ணதாசன்*

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம்?

கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்தில் அவர் விவரித்து இருக்கிறார். அவர் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கியதன் நோக்கம், கம்பனை விமர்சிக்கவும், கம்பராமாயணத்தை எதிர்த்து மேடைகளில் பேசவும்தான் என்று அவரே சொல்லிவிட்டு,
கம்பனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து கம்பனில் மூழ்கிய நான், அவனுக்கு அடிமையாகிப் போனேன். என் கவிதைகளுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் துணை நிற்பது அவனுடைய பல கவிதைவரிகளும், சொற்களும்தான் என்பதை;
Read 64 tweets
*ராமர் பிறந்த அயோத்தியின் சிறப்பு*

*மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது.*

இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன.

வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன.
*அவற்றில முக்கியமானது அயோத்தி.மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த புண்ணிய பூமி.*

எவ்வளவுதான் சிறந்த பக்தனாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தார் மீது எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும்
*அவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவன் அனைத்தையும் இழந்துவிடுவான் என்பதை உலகுக்கு நிரூபிக்க மகாவிஷ்ணு இன்னொரு அவதாரம் எடுக்க வேண்டியது இருந்தது.*
Read 16 tweets
#ஸ்ரீ_ராம_நவமி

சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீராமன் அவதரித்தார்.

அந்த வகையில் நவமி திதியில் ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. Image
*ராம நவமி விரத முறை :*

ராமனை நினைத்து, அவனின் அருளைப் பெறும் வண்ணம் அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து ராமனை பூஜித்து வழிபடலாம்.

ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது அவசியம்.
ஸ்ரீ ராமருடன் சேர்ந்து, சீதாதேவி, லட்சுமணன், ராம பக்தரும் போர்ப் படைத் தலைமைப் பொறுப்பாளர் அனுமன் ஆகியோரையும் வணங்க வேண்டும்.

ஆலயத்திற்கு சென்று ராமரை வணங்க முடியாத காரணத்தால்,

நாம் வீட்டிலேயே ராமரை வழிபட்டு அவரின் அருளைப் பெறலாம்.
Read 7 tweets
*ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு*.

1. ஏக (1) பத்தினி விரதன்

2 இரண்டு மகன்களுக்கு (லவ, குசன்) தந்தையானவன்

3 மூன்று அன்னையர்களான கௌசல்யா, சுமித்திரை, கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன்

4 தசரதனின் நான்கு புதல்வர்களில் ஒருவன்
5 ஐம்புலன் அடக்கமுள்ள சீதாதேவியின் துணைவன் மற்றும் குஹனை தன் ஐந்தாவது சஹோதரானாக ஏற்றவன்

6.ஆறெழுத்து ராமாயணமும் ஸ்ரீராமஜெயமும் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கின்றது.
7 ஸ்ரீ ராமாயண ஏழு காண்டங்களான பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்திர காண்டங்கள் அவரோடு தொடர்புடையவை.

8.எட்டெழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயரின் தோழன்
Read 4 tweets
#16_வார்த்தை_ராமாயணம்

"பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்

மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்

இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்

துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார். Image
விளக்கம்:

1. பிறந்தார்:

ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்:

தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது.

3.கற்றார்:

வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்:

வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்:

ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர் - சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
Read 12 tweets
16 வார்த்தை ராமாயணம்

"பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்
விளக்கம்:

1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
Read 12 tweets
*திருப்பிரையார் ராமர் கோவில்*
*கேரளா*

கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது.
இந்த ஆலயத்தில் வெடி வழிபாடு செய்பவர்களுக்கு, அவர்கள் வேண்டியதை இறைவன் மகிழ்ச்சியுடன் விரைவில் செய்து கொடுப்பார் என்பது ஐதீகம்.
*ஆலய அமைப்பு*

திருப்பிரையார் ராமர் கோவிலின் கருவறை சதுரமாகக் கட்டுமானம் செய்யப்பட்டு, அதன் மேற்கூரை கூம்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோவிலில் இருக்கும் ராமர் சங்கு, சக்கரம், அட்சமாலை, கோதண்டம் ஆகியவற்றுடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.
Read 28 tweets
*அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்* *வடுவூர்*

*திருவிழா*

ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம். 

*தல சிறப்பு*

தெட்சிண அயோத்தி 

1
*பொது தகவல்*

முன்மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் சிலை வைக்கப்படும் முன்பு இவரே மூலஸ் தானத்தில் இருந்தார்.

2
பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இவ்வூர் "தெட்சிண அயோத்தி' என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்பக விமானம் எனப்படுகிறது.

3
Read 14 tweets
#அஞ்சலி_வரத_ஆஞ்சநேயர்

*மார்பில் சிவலிங்கம் தாங்கிய 16 அடி உயர ஆஞ்சநேயர்- துன்பங்களை தீர்க்கும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்*

சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார்.
*திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.*

அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது.
அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது.

அதைச் சாப்பிட்ட கேசரி அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
Read 22 tweets
ராமனை காப்பாற்ற வேண்டிய ராமனை 14 ஆண்டு வனவாசம் அனுப்பிய கைகேயி.

தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி.
இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில்
பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்.

விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி,
Read 21 tweets
#ஸ்ரீ_ராம_நாம_மகிமை

சதுர் யுகங்களில்”-

கிருத யுகம் - தவம்;

திரேதா யுகம் - யாகம்;

துவாபர யுகம் - பாத சேவை;

கலி யுகம் - நாம சங்கீர்த்தனம்.

“ஸ்ரீ ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்.
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம் -

நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.

கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.

கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.

பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே.

நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.

நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.
Read 13 tweets
#காலில்_சங்கிலியுடன்_அனுமன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அமைந்துள்ளது மேல்முடியனூர்.

இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி உள்ளது. Image
இந்த ஆஞ்சநேயரின் கால், கல்லால் செதுக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது.

ராம அவதாரம் முடிந்து, ராமபிரான் வைகுண்டம் புறப்படத் தயாரானார்.

அப்போது தன்னுடன் அனுமனையும் வரும்படி அழைத்தார்.
ஆனால் அனுமனோ, “பூலோகத்தில் எங்கெல்லாம் ராமகீர்த்தனம் கேட்கிறதோ.. அங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறிவிட்டார்.

ராமர் மீண்டும் அழைத்தால், அவர் மேல் உள்ள பக்தியில் மனம் மாறி சென்று விடக் கூடாதே என்பதற்காக,
Read 4 tweets
#ராம_நாமம்

ஏழெழு ஜென்ம சாபல்யம் தீர்த்து ஏற்றம் தரும் ஸ்லோகம்...

தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் சொல்வதற்கு இணையான

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது,
11 முறை சொல்லுங்கள்,
உங்கள் வீட்டில் சுபிட்சம் தேடி வரும்.

சகஸ்ரநாமம் என்றால்,
அது விஷ்ணு சகஸ்ரநாமம் தான்.

அதன் பின் மற்ற தெய்வங்களின் சகஸ்ரநாமங்கள் என
நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை
தினமும் சொல்வதென்றால், குறைந்தது, அரை மணி நேரம் ஆகும். (நிறுத்தி சொல்ல வேண்டும்)
எனக்கு நேரமில்லை
என, சாக்கு போக்கு சொல்வோம்.

இதை நன்கு உணர்ந்த
பார்வதி தேவி, இது பற்றி சிவபெருமானிடம் கேட்டாள்.

’சுவாமி‘ விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் முழுமையாக சொல்ல முடியாதவர்கள், எளிதாக பாராயணம் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ’ என, கேட்டாள் பார்வதி தேவி,
Read 10 tweets
#வெற்றிலை_மாலை

வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை!

ஜெயம் தருவார் ஜெய் அனுமன்!

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால்,

எல்லாக் காரியங்களிலும் வெற்றியைத் தந்தருள்வார் அனுமன்.
ஸ்ரீ ராமபிரானின் பக்தர்களில் முதன்மையான, முழுமையான பக்தர் என்று ஸ்ரீஆஞ்சநேயரைச் சொல்கிறது புராணம்.

ஆஞ்சநேயரும் இறைசக்தி ரூபம் தான்.

ஆனாலும் கைகூப்பிய நிலையில் ராம பக்த அனுமனாகவே காட்சி தருகிறார்.

அனுமன் ஜெய் அனுமன் என்று கொண்டாடப்படுகிறார்.
ஜெயிக்க வைக்கும் அனுமன் என்று போற்றப்படுகிறார்.

அனுமனுக்கு வெண்ணெய்க்காப்பு சார்த்தி வேண்டிக்கொண்டாலோ வெற்றிலை மாலை அணிவித்து பிரார்த்திக் கொண்டாலோ எடுத்த காரியம் அனைத்தையும் ஜெயமாக்கிக் கொடுப்பார் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
Read 10 tweets
ஒரு சமயம், அபூர்வமான மந்திரம் ஒன்றை ஆஞ்சநேயருக்கு உபதேசித்த ஸ்ரீராமர், 'ஆஞ்சநேயா... இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்; எல்லாருக்கும் சொல்லி விடாதே... பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால், இதை மனதிற்குள் உருவேற்று; வெளியிடாதே...' என்று கூறினார்.
மறுநாள், ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு, உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ஸ்ரீராமர், திடுக்கிட்டார். காரணம், அங்கே, ஸ்ரீராமர், ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை, பறை அறிவித்து, வீதிவீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
கோபமடைந்த ராமர், ஆஞ்சநேயரை வரவழைத்து, 'என்ன காரியம் செய்கிறாய்... பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை, பறை அறிவித்து சொல்கிறாயே...' என்றார்.
Read 9 tweets
|| சுந்தர காண்டத்தின் மகிமை ||

ஸ்ரீமத் ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டினார்.

ஆனால் சுந்தர் காண்டத்திற்கு ஆஞ்சநேயர் பெயரை சூட்டினார் ஆனால் ஆஞ்சநேயர் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
வால்மீகி முனிவர் ஆஞ்சநேயரை போன்று சமயோசித புத்தி கூர்மையால் சரி வாயு புத்ரா சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டினார்.

இதன் பிறகு இந்த பெயரை நான் இனி கண்டிப்பாக மாற்ற முடியாது என்று ஹனுமனிடம் கூறிவிட்டார் வால்மீகி.
ஆஞ்சநேயரும் ஆஹா அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று சென்று விட்டார்.

வெகு காலம் ஆனதால் ஹனுமனுக்கு தன் அன்னையை பார்க்க ஆசை வரவே
அஞ்சனா தேவியை காண அங்கு சென்றார்.
Read 28 tweets
*ஶ்ரீராமாவதாரத்திற்கும் ஶ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கும்  உள்ள வித்தியாசங்கள்* 🙏🌹

*உபன்யாஸத்தில் கேட்டது* : 

*1.ஶ்ரீராமர் சூரிய வம்ஸம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் சந்திர வம்ஸம்.*

*2.ஶ்ரீராமர் நடுப்பகலில் அவதாரம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் நடுஇரவில் அவதாரம்.*
*3.ஶ்ரீராமர் நவமி திதி.*

*ஶ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதி.*

*4.ஶ்ரீராமர் சுக்ல பக்ஷம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷம்.*

*5.ஶ்ரீராமர் உத்தராயணம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் தக்ஷிணாயணம்.*

*6.ஶ்ரீராமர் குணாவதாரம்.*

*அதாவது, குணங்கள் முக்கியம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் லீலாவதாரம்.*
*7.ஶ்ரீராமாவதாரத்தில்  ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---தாடகா.*

*ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---பூதனா.*

*8.ஶ்ரீராமாவதாரத்தில் ஆயுதம் எடுத்து ராவணன் வதம்.*

*ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆயுதம் எடுக்காமல் கௌரவர்கள் வதம்.*
Read 8 tweets
#சுந்தர_காண்டம்

சுந்தர காண்டம் பாராயணம் 5 நிமிட பாராயணம் செய்யும் போது அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை அல்லது ஒரு சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும்.

'#ராம' நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கே ஆஞ்சநேயர் ப்ரசன்னமாவார் என்பது ஐதீகம்.

அவர் அமருவதற்காகத் தான் அந்த ஆசனம்.
இந்த 5 நிமிட பாராயணம் உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை, ஏற்றங்களை கொண்டு வரும்.

நம்பிக்கையோடு தினசரி படியுங்கள்.

ஸ்ரீ ராம ஜெயம்

சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு

ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான்

இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இராமதூதன் சென்றான்.
Read 14 tweets
*🙏🕉️வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது.
ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ஸ்ரீராமாயண உபன்யாசம், ஸ்ரீராமநாம ஜெபம் பாராயணம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கே ஒரு காலியான மணைப் பலகையைப் போட்டு வைப்பது வழக்கம். உபன்யாசத்தைக் கேட்க அனுமன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அப்பேர்ப்பட்ட ராம பக்தனான ஸ்ரீஅனுமனை வழிபட, சில வழிமுறைகளும் தத்துவங்களும் உள்ளன. அதை அறிந்து, உணர்ந்து ஸ்ரீஅனுமனைத் துதிப்போம்.*🕉️🙏
Read 18 tweets
#ஜெய்_ஸ்ரீராம்

#ஹனுமன்_சாலீஸா

ஸ்ரீ ராமரின் தீவிர பக்தனான ஹனுமனின் பக்தியைப் போற்றும் விதமாக,

ஹனுமன் சாலீஸாவின் மகத்துவம் என்ன,

அதனை எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போமா !

ஸ்ரீ ராம ஜெயம் என்று சொன்னால் நம்மைத் தேடி வந்து அனைத்து தெய்வங்களும் அருள் புரிவார்கள்.
அதைவிட ஹனுமன் தான் முதலில் வருவார்.

ஸ்ரீராமரை தன் உயிராக நினைத்தவர் ஹனுமன்.

அப்படிப்பட்ட சிரஞ்சீவி ஹனுமனின் பெயரை சொன்னாலே துன்பங்கள், துயரங்கள், தடைகள், தொல்லைகள் தவிடு பொடியாகும்.

ஹனுமனின் அருளைப் பெற துளசிதாசர் வட மொழியில் அருளிய ஹனுமன் சாலீசா எனும் திருமந்திரத்தை
ஹனுமன் ஜெயந்தி இன்றைய தினம் சொல்லி நம் துன்பங்களை வெல்வோம்.

இந்த ஹனுமன் சாலீஸா மந்திரத்தை பாராயணம் செய்யும் முன் உடலை தூய்மை படுத்திக்கொண்டு, தூய ஆடையை உடுத்தி மாருதியை மனதார நினைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும்.
Read 17 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!