Discover and read the best of Twitter Threads about #தல_வரலாறு

Most recents (7)

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #அம்பலப்புழா_கிருஷ்ணன்_கோவில் #தென்னகத்து_துவாரகை முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு வந்த அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் மட்டுமல்லாமல் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வமும் இருந்தது. ஒரு நாள், வயதான துறவி ஒருவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். அவரை
வரவேற்று விருந்தளித்த அரசனிடம் இப்போது நாமிருவரும் சேர்ந்து சதுரங்கம் விளையாடலாமா என்று கேட்டார். அரசனும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அரசன் முனிவரிடம், சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும் என்று சொன்னான்.
முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.
Read 26 tweets
#திருப்பரங்குன்றம் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது, அவற்றில் மிகப் பெரியதும் ஆகும். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சித் தருகிறார். முருகப்பெருமான் அவதாரம் செய்ததன்
நோக்கமே சூரபத்மனையும் அவன் சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் தேவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதனால் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி
Read 20 tweets
#ஒப்பிலியப்பன்_கோயில்
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 13-வது தலமாக திகழ்கிறது. இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். நம்மாழ்வாருக்கு இந்த ஆலயத்தில், திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய 5
கோலங்களில் பெருமாள் காட்சி தந்தருளினார். இதில்
முத்தப்பன் சன்னிதி இப்போது இல்லை. உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை நம்மாழ்வார்,
பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். கருவறையில் நின்ற கோலத்தில் உப்பிலியப்பனை தரிசிக்கலாம். அவருக்கு வலதுபுறத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பூமாதேவியும், இடபுறத்தில் மார்க்கண்டேயரும் காட்சி தருகின்றனர். பாதம் நோக்கியபடி இருக்கும் மூலவரின் வலது கரத்தில்
Read 13 tweets
#குணசீலம்_பிரசன்ன
#வெங்கடாஜலபதி_பெருமாள்
#திருக்கோயில்

மனநோய் தீர்த்து, மன அமைதி தரும் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்.

திருச்சி- சேலம் ரோட்டில் திருச்சியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில். Image
மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி.
உற்சவர் ஸ்ரீனிவாசர்.

#தல_வரலாறு

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். Image
குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார் Image
Read 12 tweets
#அருள்மிகு_சிவன்மலை
#சுப்பிரமணியர்_திருக்கோவில்

#தல_வரலாறு:

சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.
மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும்.

பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி.
மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
Read 10 tweets
*குழந்தை பாக்கியம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்*

“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் நம் சைவ வள்ளுவப் பெருந்தகை.

பணம், பொருள், சுற்றம் என எல்லாம் இருந்தாலும் மழலைக்காக வருத்தம் கொள்பவர்கள் ஏராளம்.

🙏🇮🇳1
அந்தக் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊரைப் பற்றியும், புத்திரகாமேட்டிஸ்வரர் பற்றியும் படித்து அருள் பெருவோம்.

குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர், #ஆரணியில் அருள் பாலிக்கிறார்.

🙏🇮🇳2
#தல_வரலாறு :

தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு உண்டாக குல குரு வசிஷ்டரிடம்
ஆலோசனை கேட்டார்.

“குருவே எனக்கு வாரிசு எதுவும் பிறக்கவில்லை. அதனால் பெருமாளிடம் வேண்டலாமென நினைக்கின்றேன். நீங்கள் ஆலோசனை சொல்ல வேண்டும்” என்றார் தசரதர்.
🙏🇮🇳3
Read 18 tweets
விராலிமலை
#முருகன்_கோயில்..

விராலிமலை, திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.

🙏🇮🇳1
கோயில் பற்றிய சிறு விபரங்கள்

பிற பெயர்கள்
சொர்ணவிராலியங்கிரி

மூலவர்
சண்முகநாதர் (ஆறுமுகம்)

அம்மன்
வள்ளி மற்றும் தெய்வானை

தல மரம்
காசி வில்வம்

தீர்த்தம்
சரவணப் பொய்கை; நாக தீர்த்தம்

தொன்மை
1000-2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது

🙏🇮🇳2
சிறப்பு
முருக வாகனமான மயில்கள் நடமாடும்
கோயில்...

#தல_வரலாறு...

தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். 🙏🇮🇳3
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!