Discover and read the best of Twitter Threads about #தலைவர்

Most recents (16)

#FamilyMan2 தமிழர்களுக்கு எதிரான இணைய தொடரா?

100% இந்த தொடரின் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சை செய்துள்ளார்கள்

1. தொடக்கத்தில் *Tamil Rebel Baskaran (தலைவர்) Killed - SL Army என செய்தி தாளில் இருப்பதை #தலைவர் வேடத்தில் நடித்துள்ள mime gopi படிக்கிறார்
#Familyman_against_Tamils
2. அடுத்தபடியாக ஈழத்தில் புலிகள் மீது சிங்கள படை குண்டு மழை பொழிகிறது, உடனடியாக *பாஸ்கரன்* (பிரபாகரன்) *சப்பு* (பொட்டு அம்மான்) மற்றும் தீபன் ( பாலசிங்கம் ) ஈழத்தை விட்டு Indonesia சென்று அங்கிருந்து *London (Uk)* செல்கிறார்கள்.
#Familyman_against_Tamils
3. சுப்பு (பொட்டு அம்மான்) இவரை தலைவர் தம்பியாக காட்டி உள்ளார்கள், இவர் பல இடங்களில் *அசிங்கமான வார்த்தைகளால்* பேசுவார்..! பிறகு இவர் சென்னையில் உள்ளது போல காட்சிகள் வரும்,
#Familyman_against_Tamils
Read 11 tweets
தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த போது காங்கிரசை சேர்ந்த பிரதமர்கள் சட்டை செய்யவில்லை.
ஐ.நா கூட்டத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோவை, யாரும் சந்திக்க கூடாதென்று மற்ற நாட்டு தலைவர்களை அமெரிக்கா மிரட்டிய போது
அதை பொருட்டாக மதிக்காது அப்போதைய பிரதமர் நேரு பிடலை சந்தித்தார். முதன் முதலாக #என்னைக் #கௌரவித்த உலக #தலைவர் #நேரு என #பிடல் அச்சமயத்தில் நன்றி தெரிவித்தார்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஒரு சிறு புள்ளி யைக் கூட மாற்றினால்
இந்திய அவ்வொப் பந்தத்தில் கையெழுத்திடாது என்று உங்கள் அதிபரிடம் சொல்லுங்கள் என அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சரை எச்சரி த்து அனுப்பினார் மன்மோகன்.
Read 4 tweets
கிழக்கு வாசல் பட வெள்ளி விழாவுல கலந்து கிட்ட தலைவர் #ரஜினி
நான் இன்னும் மூனு,நாலு வருஷத்துல படத்துல நடிக்கிறத குறைச்சுக்க போறன்
பிரபு, கார்த்திக், ராம்கின்னு இப்ப இருக்க நடிகர்கள் நிறைய படங்கள் நடிச்சு இன்னும் மேல வளர்ந்து வரணும் அதனால இந்த முடிவ எடுத்துருக்கன்னு தலைவர் சொன்னார் Image
சொன்ன மாதிரியே படங்கள குறைக்க ஆரம்பிச்சார்
90-களுக்கு முன்னாடி வரை வருஷத்துக்கு 7,8 படங்கள் நடிச்சுட்டு இருந்த தலைவர் ரஜினி
90-களுக்கு பிறகு வருஷத்துக்கு 3 படம் 2 படம் நடிக்க ஆரம்பிச்சு
95-க்கு பிறகு அத இன்னும் குறைச்சு வருஷத்துக்கு 1 படம் ரெண்டு வருஷத்துக்கு 1 படம்ன்னு
குறைச்சுக்க ஆரம்பிச்சாரு அதுக்கு காரணம் அடுத்து வந்த நடிகர்களான பிரசாந்த், விஜய்,அஜித் மாதிரியான நடிகர்கள் வளர்ந்து முன்னுக்கு வரணும்னு
2000-த்துக்கு அப்பறம் தலைவர் நேரடியா நடிச்ச படங்களோ எண்ணிக்கை 12 அதாவது 20 வருஷத்துல தலைவர் நடிச்ச படம் வெறும் 12 மட்டும் தான்
Read 8 tweets
#Thalaivar #Superstar #Rajinikanth at #Shanthnu #Keerthi Wedding Reception

சாந்தனு மேரேஜ் ரிசப்ஷன்க்கு வழக்கம் போல நானும் என் பிரெண்டும் போயிருந்தோம் #தலைவர் வர்றதுக்கு முன்னாடி அங்க தான் இருந்தோம் #தலைவர் வர லேட் ஆச்சு அதனால போய் சாப்ட்டுட்டு வந்துடலாம்ன்னு கிளம்புனோம்
வெளிய பட்டாசு வெடிக்கிற சத்தம் கேட்டுச்சு #தலைவர் தான் வர்றாருன்னு தெரிஞ்சுடுச்சு அதனால அங்கேயே இருந்தோம் #தலைவன் கெத்தா உள்ள எண்ட்ரி ஆனாரு அவ்வளவு தான் விசில் சத்தமும் ஆரவாரமும் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் கொஞ்சம் நேரம் சினிமா தியேட்டரா மாறிடுச்சு 😍
அதுக்கு அப்புறம் பலபேரு வந்திருந்தாங்க ஆனா அந்தளவுக்கு பெருசா சத்தம்லாம் இல்ல தலைவருக்கு அடுத்து விசில் சத்தமும் ஆரவாரமும் வந்தது கவுண்டருக்கு 😊
Read 3 tweets
#சங்கர் எனும் #ரஜினி ரசிகன் [ Part 1]
#Thalaivar #Rajinikanth Reference in Sooriyan Movie

சூரியன் சங்கர் அசிஸ்டன்ட் டைரக்டரா வேல செஞ்ச படம்
படத்தோட இயக்குனர் பவித்ரன் ஆனா இந்த காட்சிக்கு சொந்தகாரர் #சங்கர் 😊

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 2 ]
#Superstar #Rajinikanth Refrence in #Gentleman Movie

இயக்குனர் சங்கர் தன்னோட முதல் படத்தையே [ஜென்டில்மேன்] #தலைவர் #ரஜினிகாந்த வெச்சு எடுக்கிறதா தான் இருந்தது ஆனா #தலைவர் பல மொழிகள் ல பிசியா நடிச்சுட்டு இருந்ததனால கத பிடிச்சும் தலைவரால நடிக்க முடியாம போச்சு
Read 31 tweets
அடுத்த எடிட் எப்ப வரும் ப்ரோன்னு ஒரு சகோதரர் கேட்டுருந்தாரு

என்ன ப்ரோ கொஞ்ச நாளா டிவிட்டெல்லாம் ரொம்ப லேட்டா போடுறீங்கன்னு ஒரு தம்பி கேட்டுருந்தாப்ல

#45YearsOfRAJINISM
ப்ரோ மின்னலாம் நிறைய டிவிட் போடுவீங்க அதுவும் ரொம்ப இண்ட்ரஸ்டா எடுத்து போடுவீங்க இப்ப வர வர ரொம்ப கம்மியா டிவிட் போடுறீங்கன்னு இன்னொரு சகோதரர் கேட்டுருந்தாரு

உண்ம தான் மின்ன மாதிரி நிறைய டிவிட் போடுறது இல்ல அதுவும் இண்ட்ரஸ்ட் எடுத்து போடுறது இல்ல
#45YearsOfRAJINISM
கடமைக்கு நானும் போடுறேன்னு தான் போடுறேன் அதுமட்டுமல்ல
இதுக்கு முன்னாடி என்ன follow பண்றவங்க follow பண்ணாதவங்கன்னு யாரோட ட்விட்ட என் Timeline-ல பாத்தாலும் மதிச்சு like, RT பண்ணுவேன் ஆனா இப்ப மத்தவங்க டிவிட்ட பாத்தா கூட லைக் பண்ணணும் தோணல அதுக்கு காரணம் இருக்கு
#45YearsOfRAJINISM
Read 25 tweets
ரஜினியின் தனித்துவம்!

தலைவர் ரசிகர்கள் என்ற வட்டத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வந்து சிலவற்றை கவனிப்போம்.

ரஜினி என்பவர் யார்? தமிழக அளவில் அவர் எவ்வாறு பார்க்கப்படுகிறார். ஒரு சாமானியனின் பார்வையில் அவருடைய பிம்பம் என்ன?

அவர் சினிமாவின் சூப்பர்ஸ்டார் உச்ச நடிகர் (1/13)
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இதெல்லாம் அனைவரும் அறிந்ததே. இது சினிமாவில் ரஜினியை பற்றி ஒரு சாமானியன் அறிந்து வைத்திருக்கும் பார்வை.

இதிலிருந்தும் வெளியே வருவோம். பொதுவெளியில் அவர் எவ்வாறு அறியப்படுகிறார். அனைத்து மட்டங்களிலும் ஒரு random sample எடுத்து, மக்களிடம் (2/13)
கேட்டால் பொதுவான பதிலாக அவர் நல்லவர் நல்ல மனுஷன் என்ற பதில் வரும்.

இது அவரின் திரை வெற்றியால் மட்டுமே சாத்தியமானதா?

நிச்சயமாக இல்லை. அந்தந்த தலைமுறை வேண்டுமானால் அத்தலைமுறை நடிகர்களுக்கு முட்டு கொடுக்கலாம். ஆனால் தலைமுறை கடந்து இப்பெயர் வாங்குவது சுலபமில்லை (3/13)
Read 13 tweets
" #ரஜினி " மிக மிக யதார்த்தமாகவும் அற்புதமாகவும் நடித்திருக்கிறார்
இந்தப் படம் அவரது திரைப்பட வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையை அவருக்குக் கொடுக்கும்... "
___ #மக்கள்திலகம்எம்ஜிஆர் #தலைவர் @rajinikanth அவர்களை பாராட்டி இயக்குனர் #மகேந்திரன் அவர்களிடம் கூறியது Image
இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் தமிழ்த்திரையுலகுக்கு அழைத்துவரப்பட்டவர்
அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள உறவு குறித்து அவரே எழுதிய புத்தகம்
'மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்'
புத்தகத்தில் மகேந்திரன் எழுதியதிலிருந்து ஒரு பகுதி
1980 மே மாதம் தொடங்கி மூன்று மாதங்கள் அவரது அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்தது அப்போது ஒரு நாள்
"இதயம் பேசுகிறது' மணியன் எனக்கு போன் பண்ணினார் "முதல்வர், உங்களின் 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' இரண்டு படங்களையும் பார்க்க விரும்புகிறார்
Read 27 tweets
சிங்கப்பூர் மலேசியா நட்சத்திர கலைவிழா துளிகள் :
அத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் ஆரவாரங்கள் அத்தனையும் ஆரம்பத்திலிருந்தே #தலைவர் #ரஜினிக்கு தான் விழா முழுவதும் "ரஜினி" "ரஜினி" என்றுதான் பேச்சாக இருந்தது அவரது மந்திர வீச்சை மொத்தமாக தரிசித்து மற்ற நட்சத்திரங்கள் வியந்து போனார்கள் Image
பாக்க வந்த மக்களுக்கெல்லாம் #தலைவர் #ரஜினி தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்
#தலைவர் #ரஜினி மேடை ஏறியதும் ஆர்ப்பரித்த மக்கள் #தலைவர் #ரஜினி பேசும் பேச்சை நிசப்தமாக கேட்டு ரசித்தார்கள்
வழக்கம்போல #தலைவர் #ரஜினி கமலை ஏகத்துக்கும் புகழ்ந்தபோது நெகிழ்ந்து போனார்கள் ரசிகர்கள்
தலைவருக்காக ஃபிளைட் ஏற்பாடு பண்ண அதெல்லாம் வேணாம் நான் சக கலைஞர்களோட பஸ்ஸிலயே வர்றேன்னு சொல்லி சக கலைஞர்களோட பஸ்ஸில் கலாட்டா பண்ணிக்கிட்டே #தலைவர் ஜாலியாக வர உற்சாகத்தின் உச்சத்துக்கே போனார்கள் சக கலைஞர்கள்
Read 3 tweets
சிங்கப்பூர் விழாவுல வேட்டி சட்டை அணிய ஆசைப்பட்ட #தலைவர் #ரஜினி ஆனா வேட்டி சட்டைய எடுத்து வராததால விஜயகாந்தோட வேட்டியையும் சட்டையையும் வாங்கி அணிந்து மேடை ஏறினார் #தலைவர் வார்த்தைக்கு வார்த்தை கேப்டன் கேப்டன் ன்னு சொல்லி விஜயகாந்தை நெகிழ வைத்தார் #தலைவர் Image
அதுமட்டுமல்ல எல்லாருக்கும் தரமான ஹோட்டல்கள புக் பண்ணியும் என்ன ஹோட்டல் இது இதுல எல்லாம் யார் தங்குவான்னு சில இளம் நடிகர்கள் சத்தம் போட ஆனா #தலைவர் #ரஜினி தனக்கு தனியா விஐபி ரூம் புக் பண்ணி கொடுத்தும் வழக்கம்போல எனக்கு எதுக்கு அதெல்லாம்ன்னு சொல்லி சாதாரண ரூமுல தங்கி
சாதாரண நடிகர் போல எல்லா கலைஞர்களோடும் சரிக்கு சமமாக நடந்து தான் எப்பவும் எளிமையானவன் தான்னு மறுபடியும் சக கலைஞர்களுக்கு எடுத்துகாட்டாக இருந்தார் #தலைவர் #ரஜினிகாந்த் அவர்கள்
Read 3 tweets
#ஆடி ஸ்பெஷல்....!

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம்.

ஒரு சமயம் பார்வதிதேவி ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.
பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள் அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க நினைத்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.
அவள் ஈசனை வணங்கி ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன்.

என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள் ஆனால் சிவபெருமான் என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு.
Read 23 tweets
ரஜினி யார்?

சினிமா போன்றதொரு obsessed medium வெகு சிலதே! தான் திரையில் பார்க்கும் நாயகனை தன் ஆதர்ச நாயகனாக மாற்றிவிடும் சக்தி கொண்டது சினிமா.

அதுவும் தமிழ் சினிமாவை பற்றி கேட்க வேண்டியதே இல்லை. அதிக தமிழக முதல்வர்களை வழங்கிய துறை திரைத்துறை ஆகத்தான் இருக்க முடியும் (1/10)
அப்படியென்ன இத்துறையில், அதீத புகழ், வருமானம், செல்வாக்கு, மக்கள் அபிமானம் மற்றும் வரவேற்பு இதெல்லாம் இங்கு சாத்தியம். ஒரே படத்தில் புகழை சுவைத்தவர்கள் இங்கு உண்டு.

புகழ் வரும் போது புகழ கூடவே ஒரு கூட்டமும் கூடும். எளிதாக தலைவனாகி விடலாம். என் தலைவன் தாண்டா கெத்துனு சில (2/10)
அல்லு சில்லுகள் நரம்பு புடைக்கும். அங்கு வெளிக்காட்டப்படுவது நாயக தொழுதல் அல்ல தனிமனித கெத்து. இவரைப் பற்றி பேசி நான் பேர் வாங்கனும் அது தான் இலக்கு

இதுபோன்ற ஒரு துறையில் அனைத்தையும் தாண்டி பத்து வருடம் நின்றாலே பெரிய விஷயம். அதை தாண்டி அனைவரையும் கவர்ந்து நீடித்திருப்பது (3/10)
Read 10 tweets
பாபா படத்துல அவசரம் அவசரமா #தலைவர் நடிக்க பலபேருக்கு தெரியாத முக்கிய காரணம் ஒன்னு இருக்கு

1999-ல #படையப்பா ரிலீஸ்
2002-ல #பாபா ரிலீஸ்
இந்த இடைப்பட்ட 3 வருஷ காலத்துல #தலைவர் படமும் நடிக்கல தலைவரோட அடுத்த படத்துக்கான அறிவிப்பும் வரல #தலைவர் ஒதுங்கி இருந்தாரு Image
ரசிகர்கள் பல இடங்கள் ல #தலைவா சீக்கிரம் படம் நடி தலைவான்னு போஸ்டர் அடிச்சு ஒட்ட ஆரம்பிச்சுட்டாங்க ஒரு நடிகர் சினிமாவுல நடிக்காம இருந்து அதுக்காக ரசிகர்கள் போஸ்டர் அடிச்சு ஒட்டுனது இந்திய சினிமா வரலாற்றிலே அதுதான் முதன்முறை
அதுவும் புதுக்கோட்டைய சேர்ந்த ஒரு தலைவர் ரசிகர் ஒருபடி மேல போய் தற்கொலை முயற்சியே செஞ்சுட்டாரு இந்த விசயம் தலைவருக்கு போய் தலைவர் ரொம்பவே கோவமும் பட்டாரு வருத்தமும் பட்டாரு
உடனே அந்த ரசிகரோட மருத்துவ செலவு மொத்தத்தையும் தலைவரே ஏத்துக்கிட்டது மட்டும் இல்லாம
Read 4 tweets
மூனு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சின்ன சம்பவம் இது 👇🏻
உங்க எல்லாருக்கும் தெரியும் நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவுக்கு #தலைவர்ரஜினி வந்தாருன்னு
நானும் என் பிரெண்டும் தலைவர பாக்கலாம்னு போனோம்
வழக்கமா #தலைவர் கலந்துக்கிற எந்த விழாவா இருந்தாலும்
நானும் என் பிரெண்டும் தலைவர பாக்குறதுக்காக போவோம்
அன்னைக்கும் அப்படித்தான் போனோம் நாங்க மட்டும் இல்ல
அங்க வந்த அத்தன பேரும் தலைவர பாக்க தான் வந்திருந்தாங்க
தலைவரும் வந்தாரு விழாவே அவருக்கு தான் காத்துட்டு இருந்தது
அதனால தலைவரோட காரு நேரா உள்ள போயிருச்சு
நாங்க எல்லாரும் #தலைவர் வெளிய வரும்போது பாக்கலாம்னு
வெயிட் பண்ணிட்டு இருந்தோம்
தலைவரும் கொஞ்ச நேரத்துல கிளம்பிட்டாரு
வெளிய வந்த காரு ரசிகர்கள பாத்தவுடனே நின்னுருச்சு
அதாவது #தலைவர் கார நிறுத்த சொல்லிட்டாரு
அப்புறம் கேக்கவா வேணும்
Read 8 tweets
நான் எப்பொழுது #தலைவர்
@rajinikanth -ன் ரசிகனானேன்
நான் குழந்தையாக
இருந்தபொழுதே...😊

பொதுவா தியேட்டருக்கு படம் பாக்க குழந்தைங்கள கூட்டிட்டுபோக மாட்டாங்க அப்படியே கூட்டிட்டு போனா அந்த குழந்தைங்க அழுது தொந்தரவு பண்ணும் இல்லன்னா தூங்கிடும்
இல்லன்னா தரையில ஒக்காந்து விளையாடும் ஆனா
நான் குழந்தையா இருக்கும்போது என்ன தியேட்டருக்கு கூட்டிட்டு போனா அமைதியா மடியில ஒக்காந்து படம் பாப்பன்னு வீட்டுல சொல்லுவாங்க
அதுக்கு காரணம் இருக்கு
நான் எங்க ஒக்காந்து இருக்கன்,
அது என்ன இடம்,
என் முன்னாடி என்ன ஓடிட்டு இருக்குன்னு எதுவும் தெரியாது
ஆனா என் முன்னாடி வெள்ளையான ஸ்கிரீன்ல ஒரு முகம் தெரியுது
அந்த முகத்த பிரம்மிப்பா பாத்துட்டு இருக்கன்
அந்த முகம் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு
அந்த முகத்துக்கு சொந்தகாரர் தான் #தலைவர்ரஜினி 😍
அதுக்கு அப்பறம் வீட்ல டீவியில அந்த முகத்த பாக்கும்போதெல்லாம் விளையாடிட்டு இருந்தா கூட
Read 9 tweets
தலைவரின் மாற்று அரசியல்!

திராவிட கட்சிகள் பலம் வாய்ந்த கட்டமைப்பை கொண்டவை. அதை மறுக்க முடியாது. சக்தி வாய்ந்த மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த தலைவர்களால் வளர்க்கப்பட்டவை.

அதன் இன்றைய தலைவர்கள் அந்த கட்டமைப்பை தக்கவைத்துக் கொண்டாலே போதும் வேறென்றும் பெரிதாக செய்ய வேண்டிய (1/11)
அவசியமில்லை. ஒன்றை கவனியுங்கள் ஏறக்குறைய கடந்த 50 ஆண்டுகளாக வேறெந்த கட்சியையும் இக்கட்சிகள் ஆட்சிக்கட்டிலின் அருகில் கூட வரவிடவில்லை.

ஒன்று எதிர்த்து ஒன்றுமில்லாமல் செய்வது அல்லது அரவணைத்து வளர விடாமல் செய்வது, பெரும்பாலும் இதுவே அவர்களின் strategy ஆக இருக்கும். (2/11)
மாற்றத்தை நோக்கிய எந்தவித மாற்றமும் இவர்களின் சதுரங்க விளையாட்டில் எளிதில் தப்ப முடியாது. அதை எதிர்க்க இருவிஷயங்கள் நிச்சயம் தேவை.

ஒன்று மாற்றத்தை விரும்பும் மக்களின் ஆதரவு. மாற்றத்தை விரும்பினாலும் அதை கொண்டுவரக் கூடிய ஆளுமையை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் (3/11)
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!