Discover and read the best of Twitter Threads about #தினசரி_பூஜை

Most recents (24)

#தினசரி_பூஜை -29

12. அக்‌ஷதை தூவுதல்:
அக்‌ஷதான் சந்த்ரவர்ணாபா4ன் ஶாலேயான் தண்டு3லான் ஶுபான்
அலங்காரார்த்த2மானீதான் தா4ரயஸ்ய மஹா ப்ரபோ4
அக்‌ஷதை தூவ வேன்டும்.
13. அர்ச்சனம்:
பின் வசதி போல அர்ச்சனை. ஒவ்வொரு மூர்த்திக்கும் இருக்கும் அஷ்டோத்திர ஶத (அல்லது ஸஹஸ்ர) நாமாக்களை சொல்லி
1/7
அர்ச்சனை. வசதி நேரம் இல்லாதவர் அந்தந்த மூர்த்தியின் பெயரையே சொல்லி 8 முறை அர்ச்சிக்கலாம்.
14. தூபம் காட்டுதல்:
வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.
2/7
15. நெய் தீபம் காட்டுதல்:
ஸாஜ்யம் திரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
தீ3பம் க்ருஹாண தே3வேஶ த்ரைலோக்ய திமிராபஹம்
16. நிவேதனம்:
நைவேத்3யம் க்ருஹ்யதாம் தே3வ ப4க்திம் மய்யசலாம் குரு
மயேப்ஸிதம் வரம் தே3ஹி பரத்ர ச பராம் க3திம்
3/7
Read 8 tweets
#தினசரி_பூஜை -28

எல்லோருக்கும் பொதுவான பூஜை :
முன்னே பஞ்சாயதன பூஜையை பார்த்தோம். இப்போது எல்லா தெய்வங்களுக்கும் யாரும் செய்யக்கூடிய பொதுவான பூஜை முறையை பார்க்கலாம்.
1.ஆசமனம். கேசவாய நமஹ, நாராயணாய நமஹ, மாதவாய நமஹ என்று மும்முறை நீரை உள்ளங்கையில் உளுந்து முழுகும் அளவு எடுத்து
1/8
அருந்தவும்.
மங்களாக்‌ஷதை + நீர் எடுத்துக்கொண்டு…
2.சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதக்‌ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்த2ம்…ப்ரஸாத3 சித்த்யர்த்த2ம்… (இங்கு எந்த தெய்வத்துக்கு பூஜை செய்யப்போகிறோமோ அந்த தெய்வத்தின் பெயரை சொல்லிக்கொள்ளவும். உ-ம் ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி
2/8
ப்ரஸாத3 சித்தயர்த்த2ம்) இஷ்ட காம்யார்த்த2 சித்யர்த்த2ம்…………. ஆராதனம் கரிஷ்யே. (முன்போல உ-ம்: ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ஆராதனம் கரிஷ்யே.) யாவத் சக்தி த்3யான ஆவாஹனாதி ஷோடோபசார பூஜாம் கரிஷ்யே.
அக்‌ஷதை நீரை கீழே விட்டுவிடவும்.
3.த்3யான ஆவாஹனம்:
ஆக3ச்ச2 தே3வ தே3வேஶ மர்த்யலோக
3/8
Read 8 tweets
#தினசரி_பூஜை -27
பஞ்சாயதன பூஜையில் ஆவாஹனம் ஆரம்பிக்கும் முன்

ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ சங்கரஆகச்சத்வம் மஹாதேவ ஸர்வாவரணை ஸஹ

என வரவேற்பதுண்டு, பூஜை முடிந்த இந்த தருணத்தில்

ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ ஶங்கர பிரவிஶத்வம் மஹாதேவ ஸர்வைராவணை: ஸஹ
1/7
{ஹ்ருத தாமரையின் மத்தியில் உமையுடன் வீற்றிருக்கும் ஶங்கரா, நீ எல்லா ஆவரணங்களுடன் மீண்டு செல்வாயாக.}

என சொல்லி நிர்யாண முத்திரையால் பூக்களை எடுத்து நுகர்ந்து, ஹ்ருதயத்தில் வைத்துக்கொண்டு கீழே போடவும். {முத்திரை தெரியாவிட்டால் விட்டுவிடலாம்}
ஶிவ பஞ்சாயதனம் ஆனால் அபிஷேக
2/7
தீர்த்தத்தை கொஞ்சம் உத்தரணியில் எடுத்து நந்திக்கும் அபிஷேகம் செய்து, ஶிவனுக்கு இட்ட சந்தனத்திலேயே கொஞ்சம் எடுத்து இவருக்கும் இட்டு, ஶிவனுக்கு சாற்றிய மலர்களில் ஒன்றையாவது இவருக்கு எடுத்து சாற்றுவார்கள். அவருக்கு நிவேதனம் செய்ததில் கொஞ்சத்தை இவருக்கும் நிவேதனம் செய்வர்.
3/7
Read 7 tweets
#தினசரி_பூஜை -26

16 உபசாரங்கள் ஏற்கெனெவே முடிந்துவிட்டன. விசேஷ பூஜைகளை பொருத்து இவ்விடத்தில் சத்ரம் (குடை) சாமரம் (விசிறி), கீத (சங்கீதம்), ந்ருத்ய (நாட்டியம்), ஆந்தோளிகாண் (ஊஞ்சலில் ஏற்றி ஆட்டுவது), கஜ, ரதாரோஹணம் (யானை, ரதம் இவற்றில் ஏற்றி வலம் வரச்செய்வது) என்று பலதும்
1
உண்டு. வீட்டு பூஜையில் இதுக்கெல்லாம் எங்கே போக? ! ஆகவே

ஸமஸ்த ராஜோபசாரான் சமர்ப்பயாமி

என்று சொல்லி பூக்கள் மங்களாக்ஷதை சமர்பித்து விடலாம்.
பூஜையின் பலனை உத்தேசத் த்யாகம் செய்துவிட்டு பூஜையை முடித்துக்கொள்ளலாம்.
2
யத் ஸ்ம்ருத்யா நாம ஜப பூஜா கிரியாதிஷுஸர்வம் ஸம்பூர்ணதாம் யாதி சத்யம் வந்தேதமச்யுதம்

{யாரை நினைப்பதால் செய்த ஜபம், பூஜை ஆகியன நிச்சயமாக பூரணமாகுமோ அந்த அச்சுதனை நினைவு கூறுவோம்}
என சொல்லி மங்களாக்ஷதை சிறிதை நீர் ஊற்றி கீழே விடவேண்டும்.
இதனால் பூஜையின் போது விட்டுப்போன
3/5
Read 5 tweets
#தினசரி_பூஜை -25
அடுத்து தாம்பூலம் சமர்பிப்பது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு. சும்மா அக்கறையில்லாமல் வைக்கக்கூடாது. நாம் போட்டுக்கொள்வதானால் எப்படி அது இருக்குமோ அப்படி இருக்க வேண்டும்.
மந்திரம்:
பூகீ3 ப2ல சமாயுக்தம் நாக3வல்லி தளைர்யுதம்கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூ3லம்
1/7
ப்ரதிக்3ருஹ்யதாம்
கர்ப்பூர தாம்பூ3லம் சமர்ப்பயாமி
அடுத்து கர்ப்பூர ஹாரத்தி - மும்முறை சுற்றி, கண்களில் ஒத்திக்கொண்டு, மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும்.
மந்திரம்:
ஸக்ஷுத்ரம் ஸர்வலோகானாம் திமிரஸ்ய நிவாரணம் ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாணத்வம் ஸுரேஶ்வர
வேத மந்திரம்:
2/7
ஸோமோ வா ஏதஸ்ய....
அடுத்து ஸ்தோத்திரங்கள்:
நம ஶிவாப்4யாம் நமயௌவனாப்4யாம்
பரஸ்பராஶ்லிஷ்ட வபுர்த4ராப்4யாம்
நாகேந்த3ர கன்யா வ்ருஷகேதனாப்4யாம்
நமோ நமஶ் ஶங்கர பார்வதீப்4யாம்
ஶாந்தாஹாரம் பு4ஜக ஶயனம் பத்மநாப4ம் ஸுரேஶம்
விஶ்வாஹாரம் க3க3ன சது3ர்ஷம் மேக4 வர்ணம் சுபா4ங்கம்
3/7
Read 7 tweets
#தினசரி_பூஜை -24
ரைட் , அர்ச்சனை முடிந்தது. அடுத்து தூபம். தசாங்கத்தை தணலில் தூவி புகை போடுவது நல்லது. தணலுக்கு இந்த காலத்தில் எங்கே போவது? விசேஷ பூஜைக்கே ஒரு துண்டு கரியை காஸ் அடுப்பில் வத்து தணலாக்கித்தான் கொண்டு வருகிறார்கள்! அதனால ஊதுவத்திதான் புழக்கத்தில் இருக்கிறது.
1/6
மந்திரம்:

வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.

தீபம் என்னது? எப்பவுமே அது ஏத்திதானே இருக்கும்ன்னா, ஆமாம், தீபம் ஒன்று எரியாமல் ஸ்வாமியை வெளியே எடுப்பதில்லை. ஆனாலும் இங்கே சொல்வது நெய் தீபம். சிலர் ஒரு டப்பாவில்
2/6
நெய் ஊற்றி அதில் சின்ன திரிகளை போட்டு ஊற வைப்பார்கள். தேவையான போது அதில் ஒன்றை எடுத்து ஏற்றிவிட்டால் சிறிது நேரம் எரிந்து அணைந்துவிடும்.
மந்திரம்:

ஸாஜ்யம் திரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
தீ3பம் க்ருஹாண தே3வேஶ த்ரைலோக்ய திமிராபஹம்

மங்கள் தீபம் தர்சயாமி
3/6
Read 6 tweets
#தினசரி_பூஜை -22
அபிஷேகம் முடிந்த பின் ஆசமனம். ஆவாஹிதாப்யோ தேவாதாப்யோ நமஹ ஸ்நாநாநந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி என்று மும்முறை நீர் முன் இருக்கும் கிண்ணத்தில் விட வேண்டும். வஸ்த்ரம், உபவீதம் அணிவிக்க வேண்டும். சிரத்தையுள்ள சிலர் தனியாக பட்டில் தைத்து வைத்திருப்பர். பட்டு
1/9
என்பதால் ஏற்கெனெவே அணிவித்தது என்ற தோஷம் வராது. பட்டாக இல்லாத உடையை நனைத்து காய வைத்து மடியாக எடுத்து வைத்தால்தால் சரிப்படும். இதனால்தான் இந்த விஷயமே வேண்டாம் என்று அக்ஷதையை பயன்படுத்துகிறார்கள்.

ஆவாஹிதாப்யோ தேவாதாப்யோ நமஹ வஸ்தர உத்தரீய, உபவீதார்த்தே அக்ஷதான் சமர்பயாமி.
2/9
குடும்பஸ்தர்கள் ஒரு உடை மட்டும் உடுக்கக்கூடாது. அதாவது ஒரு வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டு இருப்பது போல. மேலே ஒரு உடையும் இருக்க வேண்டும்; துண்டு, அங்கவஸ்திரம் போல. அதே போல இறைவனுக்கு உடை அணிவிக்கும்போதும் இரண்டு வஸ்திரங்கள் இருக்க வேண்டும். தினசரி பூஜையில் இப்படி வருவதில்லை.
3/9
Read 9 tweets
#தினசரி_பூஜை -20
அபிஷேகத்துக்கு சுலபமாக சந்தன நீர், தேன், பால், சுத்த நீர் இவற்றை பயன்படுத்தலாம்.

சந்தன நீர் கொஞ்சம் சந்தனத்தை கரைத்து செய்வதாக இருக்க வேண்டும். அல்லது கடைசியில் நீர்க்க அரைத்து சேமித்துக்கொள்ளலாம். சந்தனம் அரைத்து முடித்த பின் அந்த சந்தன கட்டையையும்
1/8
கல்லையும் கழுவி சேகரிக்கக்கூடாது. அது அஶ்வத்தாமாவுக்கு உரியது.
தேன் ஒரு உத்தரணியில் (ஈரமில்லாமல் இருப்பதை பார்த்துக்கொள்ளுங்கள்) எடுத்தால் மெல்லிய கம்பி போல ஒழுக விட்டு நேரத்தை நீட்டிக்கலாம். விஸ்தாரமாக ருத்ரம், சமகம் என்று சொல்லி அபிஷேகம் செய்வோருக்கு இது சௌகரியம்.
2/8
பால் நிறைய இருந்தாலும் சின்ன வெள்ளி கிண்ணத்தில் எடுத்து செய்வதும் நேரத்தை நீட்டிக்கும். பால் அபிஷேகத்துக்கு தாமிர தட்டு உதவாது என்பது நினைவிருக்கட்டும்.
அதே போல விபூதி சுட்டு விரலையும் சுண்டு விரலையும் நீக்கி மற்ற மூன்றால் விபூதியை வைத்துக்கொண்டு மெதுவாக 'அரைப்பதன்' மூலம்
3/8
Read 8 tweets
#தினசரி_பூஜை -19

சரி, ஸ்வாமி எல்லாரும் வந்தாச்சு. உட்கார்த்தி வைக்க ஆசனம் கொடுப்போம். அக்ஷதைதான் திருப்பியும்.ஆவாஹணம் செய்தது போலவே ஸ்வாமி பெயர் சொல்லி ஆசனம் சமர்ப்பயாமி என்று அக்ஷதை தூவவும்.
“சத்தியமா தேவையான நேரம் இல்லை ஸ்வாமி!” ன்னு துண்டை போட்டு தாண்ட ரெடியா இருக்கிறவங்க
1
தனித்தனியாக ஸ்வாமி பேரை சொல்லாமல் ஆவாஹிதாப்யோ தேவதாப்யோ நமஹ, ஆசனம் சமர்ப்பயாமின்னு சொல்லிக்கொண்டு போகலாம்.

இதே போல பாதயோஹோ பாத்யம் சமர்ப்பயாமி ன்னு ஒரு உத்தரணி நீரை ஸ்வாமி முன்னால் கீழே வைத்திருக்கும் தாம்பாளம் /கிண்ணம்/ டபரா எதிலாவது விடலாம். இது எதுக்குன்னா அப்புறமா
2
தங்கமணி திட்டக்கூடாதில்லையா, அதுக்குத்தான். அத்தோட அப்புறம் வெளியே கொண்டு சேர்கிறது சுலபம்.
பிறகு ஹஸ்தயோஹோ அர்க்யம் சமர்ப்பயாமி –அதே போல.
ஆசமனீயம் சமர்ப்பயாமி- மூன்று முறை நீர் விடவும்.

ஸ்நபயாமி என்று சொல்லி அபிஷேகத்தை ஆரம்பிக்கலாம். அபிஷேகம் செய்யம் அளவு நேரமில்லாதவர்கள்
3/5
Read 5 tweets
#தினசரி_பூஜை -18

எதில வைக்கிறது? கற்களை வைத்து பூஜை செய்யும் தட்டிலே இப்ப வைக்க வேண்டாம்.அபிஷேகம் செய்யப்போகிறோம். அதனால அதுக்கு தகுந்தபடி வைக்கலாம்.
கடைகளிலே இதுக்காகவே ஒரு பக்கம் மூக்கு போல நீண்டு இருக்கும் தட்டு விற்கிறாங்க. அது இருந்தா பலவிதங்களில சுலபம். அதை வடக்கு
1/7
அல்லது கிழக்குப் பக்கம் மூக்கு இருகிற மாதிரி வைத்து மூக்கு கீழே ஒரு பாத்திரமும் வைத்துவிட்டா, அபிஷேகம் செய்யச் செய்ய செய்த பொருள் பாத்திரத்தில் நிரம்பிவிடும். தட்டு, தாம்பாளத்தில் வைத்தா கடைசி வரை அதில சேருவதை எடுப்பது கஷ்டம்.

இன்னொரு விஷயம் இங்கே கவனம் இருக்கணும்.
2/7
சில பொருட்கள் ஒண்ணோடு ஒண்ணு சேரக்கூடாது. அந்த லிஸ்டில பாலும் தாமிரமும் சேரக்கூடாதுன்னு இருக்கு. அதனால பால் அபிஷேகம் செய்யறதா இருந்தா காப்பர் தட்டு உதவாது.

சரி, மணியடிச்சுகிட்டே பூஜை பெட்டியை திறந்து உள்ளே இருக்கிற மூர்த்தங்களை எல்லாம் எடுத்து வெளியே வைக்கிறோம். நீரால அவற்றை
3/7
Read 7 tweets
#தினசரி_பூஜை -17
பஞ்ச ன்னா ஐந்து. ஆயதனம் ன்னா இருப்பிடம். பஞ்சாயதனம் – இறைவனின் ஐந்து இருப்பிடங்கள். இப்ப நம்மிடம் இருக்கிறது ஐந்து மூர்த்தங்கள், கற்கள். சோனா பத்ரம் (பிள்ளையார்), ஸ்வர்ணரேகா (அம்பாள்), சாலக்ராமம் (விஷ்ணு), ஸ்படிகம் (சூரியன்), பாணலிங்கம் (சிவன்).
1/5
இவற்றை எங்கே வைக்கிறது? கீழே கொடுத்திருக்கிறபடி. பக்கத்தின் மேலே கிழக்கு திசைன்னு வெச்சுக்கலாம். அனேகமா அப்படித்தானே உக்காருவோம்?

கிழக்கு

ஈசானம் அக்னி மூலை

மையம்

வாயு மூலை நிர்ருதி

2/5
இப்ப கீழே இருக்கிற அமைப்பதை பார்க்கவும். எந்த வித பஞ்சாயதனம் எப்படி அமைக்கிறதுன்னு புரிஞ்சுக்கலாம்.

சிவன் பஞ்சாயதனம்

விஷ்ணு சூரியன்

சிவன்

அம்பாள் கணபதி

3/5
Read 5 tweets
#தினசரி_பூஜை -16
க⁴ண்டா பூஜா
மணியை சந்தனம் இட்டு, பூ சாற்றி, மணி அடித்து சப்தம் செய்க.
ஸ்லோகம்:
ஆக³மார்த²ம்ʼ து தே³வானாம்ʼ க³மனார்த²ம்ʼ ச ரக்ஷஸாம் |
குரு க⁴ண்டே வரம்ʼ நாத³ம்ʼ தே³வதாஸ்தா²னஸம்ʼனிதௌ⁴ ||

தேவர்கள் வரவும், ராக்ஷசர்கள் செல்லவும், மணி ஓசை எழுப்புவோம்;
1
தேவர்கள் இங்கு இருக்கவும்.
ஆத்ம பூஜா:
தே³ஹோ தே³வாலய: ப்ரோக்தோ ஜீவோ தே³வ: ஸனாதன​: |
த்யஜேத்³ அஜ்ஞான நிர்மால்யம்ʼ ஸோ(அ)ஹம்ʼ பா⁴வேன பூஜயேத் ||
பொருள்: தேஹமே தேவாலயம்; ஜீவனே அனாதி தெய்வம்; அஞ்ஞானமாகிய நிர்மால்யத்தை (வாடிய பூவை) அகற்றி “ நானே அவன்” என்ற பாவனையுடன் பூஜிக்கவும்.
2
இப்படி சொல்லி மங்களாக்‌ஷதையை தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டும்.
பீட² பூஜா:
அடுத்து ஸ்வாமியை வைக்கப்போகும் பீடத்துக்கு பூஜை. அக்‌ஷதை அல்லது பூக்களை பயன்படுத்தலாம்.

ஓம் ஸகல கு³ணாத்ம ஶக்தி யுக்தாய யோக பீட² ஆத்மனே நம​: ஆதா³ர ஶக்த்யை நம​: மூலப்ரக்ருʼத்²யை நம​: ஆதி³ வராஹாய நம​:
3
Read 5 tweets
#தினசரி_பூஜை -15

கலஶ பூஜா:
வீட்டுப்பூஜைக்கு பஞ்சபாத்திரத்தில் இருக்கும் நீரையே பயன்படுத்தி பஞ்ச பாத்திரத்துக்கு பூஜை செய்யலாம். பெரிய பூஜைகள் என்றால் தனியாக கலசம் வைத்துக்கொள்ளலாம். பஞ்ச பாத்திரத்தில் நீரை விட்டு, சந்தனம் இட்டு, கொஞ்சம் மங்களாக்‌ஷதை சேர்த்துக்கொண்டு, வலது
1/8
உள்ளங்கையால் அதை மூடிக்கொண்டு ஸ்லோகம் சொல்லவும்.

க³ங்கே³ ச யமுனே சைவ கோ³தா³வரீ ஸரஸ்வதீ |
நர்மதே³ ஸிந்து⁴ காவேரீ ஜலேஸ்மின் ஸன்னிதி⁴ம்ʼ குரு ||

கங்கை முதலான நதி தேவதைகளை பிரார்த்தித்து இந்த நீரில் இருப்பாயாக என்று வேண்டிக் கொள்கிறோம். அப்படி வந்து விட்டதும் பூஜை செய்கிறோம்.
3/8
பூக்களோ அல்லது மங்களாக்‌ஷதையோ…
க³ங்கா³ய நம​: யமுனாய நம​: கோ³தா³வர்யை நம​: ஸரஸ்வத்யை நம​: நர்மதா³யை நம​: ஸிந்த⁴வே நம​: காவேர்யை நம​: புஷ்பை​: பூஜயாமி
அவ்வளோதான். அடுத்த படிக்கு போகலாம். வலம்புரி ஶங்கு என்றால் தனியாக பூஜிக்கலாம். இல்லை என்றால் தேவையில்லை.
ஶங்க² பூஜா:
4/8
Read 7 tweets
#தினசரி_பூஜை -14

பூவின் தத்துவம்
பெரியவர் வாக்கிங் கிளம்பும் போதே சொல்லிவிட்டார்! நானாக ஏதாவது சொன்னால் கேட்டுக்கொள். நீயாக பேசக்கூடாது. பேச்சு ஒன்றுமில்லை என்றால் ஜபம் பண்ணிக்கொண்டு வா.

கையில் ஒரு தடியுடன் கிளம்பியாச்சு. அதே தெருவில் ஒரு தங்கரளி செடி. பூக்களை கொய்ய
1/11
ஆரம்பித்தோம். என்னுடைய கான்செப்ட் என்னவென்றால் செடியில் கொஞ்ச பூக்களை அழகுக்கு விட்டுவிட்டு மீதியை பார்த்து கொய்ய வேண்டும் என்பது. ஆனால் அவரோ எல்லாவற்றையும் கொய்யச்சொன்னார். "பூச்செடியை வைத்தால் அது பூக்கும் போது பூக்களை கொய்து பகவானுக்கு சமர்பணம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை
2/11
இருந்தால் வீட்டுபூஜைக்கு. அல்லது கோவிலுக்கு கொண்டு கொடுக்கவேண்டும். அப்படி செய்யாமல் செடியிலேயே பூவை வாட விடுவது பாபம்."
எனக்கு ஆச்சரியம்! இப்படிக்கூட இருக்கா?
முகத்தை பார்த்துவிட்டு , "உம், கேள்" என்றார்.
"செடி ஜீவனா? அல்லது ஒவ்வொரு பூவும் ஒரு ஜீவனா?"
"ஆமாம். ஒவ்வொரு பூவும்
3/11
Read 11 tweets
#தினசரி_பூஜை -13

தினசரி பூஜைக்கு இப்படி விரிவான சங்கல்பம் செய்வது கட்டாயம் இல்லயானாலும் செய்வது நல்லது. ஒன்று அது சுலபமாகும். இரண்டாவது இந்த பஞ்சாங்க தேவதைகள் அவர்களை நினைவு கூறுவதால் மகிழ்ச்சி அடைந்து அனுக்ரஹிப்பர். போனஸ்!

தினசரி பூஜைக்கு சங்கல்பத்தில் இதற்குப் பிறகு
1/13
“ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் யாவத் சக்தி த்யான ஆவாஹனாதி பூஜாம் கரிஷ்யே" என்று சொல்லிவிடலாம். 'ஈஶ்வர' என்கிற சப்தம் இறைவன் என்றுதான் பொதுப்படையாக குறிப்பிடுகிறதே ஒழிய சிவனை இல்லை. அதனால் இப்படி யாரும் சங்கல்பம் செய்யலாம். சில வைணவர்கள் நாராயண ப்ரீத்யர்த்தம் என்பதுண்டு.
2/13
அதுவும் தவறில்லை. குறிப்பாக பூஜை யாருக்கு செய்கிறோமோ அந்த தேவதையின் பெயரைச்சொல்லியே கூட சங்கல்பம் செய்யலாம்.
விசேஷபூஜைகள் செய்யும் நாட்களில்தான் 'வீர்ய விஜய ஆயுராரோக்கிய...' என்று விஸ்தாரமாக சங்கல்பம் போகும். சந்தோஷமடையும் இறைவன் தானே நமக்கு வேண்டியதை அருளுவான் இல்லையா? ஆகவே
3/13
Read 13 tweets
#தினசரி_பூஜை -11

...நாமஸம்ʼவத்ஸரே ...அயனே ...ருʼதௌ ...மாஸே ஸு²க்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²ப⁴திதௌ² ...வாஸரயுக்தாயாம்ʼ ...நக்ஷத்ரயுக்தாயாம்ʼ ...யோக³...கரணயுக்தாயாம் ஏவங்கு³ணவிஸே²ஷணவிஸி²ஷ்டாயாம் அஸ்யாம்ʼ பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²ப⁴திதௌ²...
1/6
நாம ஸம்வத்ஸரே என்னும் இடத்தில் அந்தந்த வருஷத்தின் பெயரை சொல்ல வேண்டும்.
வருடம், அயனம், மாதம், பக்‌ஷம், திதி, நக்‌ஷத்திரம், வாரம், யோகம், கரணம் ஆகியவற்றை சரியாக முழு பட்டியலாக பார்க்க இங்கே செல்லவும்: tinyurl.com/rmdl3
அயனே என்னுமிடத்தில் தக்ஷிணாயனே அல்லது உத்தராயனே
2/6
என்று தகுந்தபடி சொல்ல வேண்டும்.
ருதுக்கள் ஆறு. சித்திரை, வைகாசி - வசந்த ருது; ஆனி ஆடி - க்ரீஷ்ம ருது; ஆவணி புரட்டாசி - வர்ஷ ருது; ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது; மார்கழி தை - ஹேமந்த ருது; மாசி பங்குனி- சிசிர ருது.
மாதங்கள் சௌரமான மாதங்களே தமிழ்நாட்டில் புழக்கத்தில்
3/6
Read 6 tweets
#தினசரி_பூஜை -10
அஷ்டாவிம்ʼஶதிதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³.....
இருபத்தெட்டாவது கலியுகத்தின் முதல் கால்-பகுதியில் இருக்கிறோம்.
ஜம்பூ த்வீபே....
ஜம்பு த்வீபம் எனச்சொல்லப்படும் தீவில் இருக்கிறோம். மற்றவை: ப்லக்ஷம், ஶாகம், ஶால்மலி, குஶம், க்ரௌஞ்சம், புஷ்கரம் என்ற தீவுகள்.
1
பாரத வர்ஷே...
பாரதம், கிம்புருஷம், ஹரி, இலாவ்ருதம், ரம்யகம், ஹிரண்மயம், குரு, பத்ராஶ்வம், கேதுமாலம் என்பன ஒன்பது வர்ஷங்கள் (தீவுப்பகுதிகள்). [இவை முறையே, இந்தியா, இமயமலைப்பகுதி, அரேபியா, திபேத், ரஷ்யா, மஞ்சூரியா, மங்கோலியா, சைனா, துருக்கி என்று சிலர் கருதுகின்றனர்]
2/4
பரதக்கண்டே மேரோஹோ,....
பாரத வர்ஷத்தில் இந்த்ர, சேரு, தாம்ர, கபஸ்தி, நாக, ஸௌம்ய, கந்தர்வ, சாரண, பாரத என்ற ஒன்பது கண்டங்களின் (பிரதேசங்களின்) இடையே பரத கண்டத்தில் இருக்கிறோம்.
அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்ʼ ப்ரப⁴வாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா​: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்⁴யே......
3/4
Read 4 tweets
#தினசரி_பூஜை -9
மங்களாக்ஷதை எடுத்துக்கொண்டு நெற்றியில் குட்டிக்கொண்டி சுக்லாம்பரதரம் என துவங்கும் ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
பின் ப்ராணாயாமம்.
பின் இடது கையை வலது துடை மேல் வைத்துக்கொண்டு வலது கையை அதன் மேலே வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்ய வேண்டும்.
மமோபாத்த ஸமஸ்த து³ரித
1/7
க்ஷயத்³வாரா ஸ்ரீபரமேஸ்²வரப்ரீத்யர்த²ம்ʼ, அத்³ய ப்³ரஹ்மண​: த்³விதீயபரார்தே⁴ ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஷ்டாவிம்ʼஸ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³ ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோஹோ, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்ʼ ப்ரப⁴வாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா​: ஸம்ʼவத்ஸராணாம்ʼ
2/7
மத்⁴யே ...நாம ஸம்ʼவத்ஸரே ...அயனே ...ருʼதௌ ...மாஸே ஸு²க்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²ப⁴திதௌ² ...வாஸரயுக்தாயாம்ʼ ...நக்ஷத்ரயுக்தாயாம்ʼ ...யோக³...கரணயுக்தாயாம் ஏவங்கு³ண விஸே²ஷண விஸி²ஷ்டாயாம் அஸ்யாம்ʼ பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²ப⁴திதௌ² என்ற ரீதியில் இது போகும்.
இதை கொஞ்சம் புரிந்து
3/7
Read 7 tweets
#தினசரி_பூஜை -8
பஞ்சாயதன பூஜை.
இது கல்பத்தில் இருந்து எடுத்து எழுதப்படுவதால் ஸ்லோகங்கள் முதலியன சம்ஸ்க்ருத்ததிலேயே இருக்கும். தமிழ் அபிமானிகள் மன்னிக்க!
பஞ்சாக்ஷரீ உபதேசம் பெற்றவர் மட்டுமே இதை செய்யலாம். ஆகவே அப்படி பூஜையை பல காலம் செய்து கொண்டிருப்பவர் யாரேனும் ஒருவரை அணுகி
1/7
பஞ்சாக்ஷரீ உபதேசம் செய்து பூஜையை துவக்கி வைக்கும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். சும்மா தானே ஆரம்பிப்பதை விட நல்லது. மந்திர சித்தி ஆகலைன்னாலும் கொஞ்சமாவது சக்தி ஏறி இருக்கணும். மந்திரம் இன்னதுன்னு தெரியும், உபதேசம் செய்யறேன் என்கிறது சரி வராது. மின்சாரம் உயர் அழுத்தத்தில்
2/7
இருந்துதான் தாழ் அழுத்தத்துக்கு பாய முடியும்.அது போல மந்திர ஜபம் அதிகம் செய்தவர் உபதேசம் செய்தால் நமக்கும் மந்திர சித்தி சீக்கிரம் கிடைக்கும்.

சிவ பஞ்சாக்ஷரீ அல்லது சக்தி பஞ்சாக்ஷரீ வழக்கத்தில் அதிகம் இருக்கிறது. கிடைக்கும் நேரத்துக்கு தகுந்த எண்ணிக்கையில் செய்யலாம் ஒவ்வொரு
3/7
Read 7 tweets
#தினசரி_பூஜை -7
வலம்புரி சங்கு என்று விற்கிறார்கள். அதில் முள்ளு முள்ளா இருக்கும். இலக்கணப்படி அது வலம்புரியாவே இருக்கும். அதாவது நுனி இடப்புறம் இருக்கும்போது திறப்பு மேல் நோக்கியும், நம்மை விட்டு எதிர்பக்கமும் இருக்கும். ஆனால் இது ரேர் இல்லை. அதாவது இந்த ஸ்பீஷீஸ் ஹிந்து
1/7
மஹா சமுத்திர சங்கு எப்பவும் இப்படித்தான் இருக்கும்! வழ வழவென்று இருக்கும் வங்காள விரிகுடா சங்கு எப்பவும் இடம்புரியாக இருக்கும். இதில் எப்போதாவது தோன்றுகிற வலம்புரிதான் விசேஷம். அவ்வளோதானே, மழிச்சு கொடுத்துடறேன்னு பெரிய முள்ளு சங்கை மொழு மொழு ஆக்கியும் விற்கிறார்கள்! வெட்டி
2/7
மாற்றி ஒட்டியும் விற்கிறார்கள். என்னென்னெவோ நடக்கிறது! இதெல்லாம் நிறைய விற்கிற ராமேஸ்வரம் மாதிரி இடங்களில விவரம் தெரிஞ்ச உள்ளூர் ஆசாமி கூட போய்தான் வாங்கணும்!
சந்தனப்பவுடர், வில்லை எல்லாம் இரண்டாம் பக்ஷம். வெகு சுலபமாக ஏதோ ஒரு மரத்தூளை வாச்னைக்கு கொஞ்சமே கொஞ்சம் சந்தன தைலம்
3/7
Read 7 tweets
#தினசரி_பூஜை - 6

அடுத்து பஞ்சாயதன பூஜை.
பஞ்சாயதன பூஜை செய்வது பல ஆண்டுகளாக வந்திருக்கிறது. ஷண்மதங்களை ஸ்தாபித்த ஆதி சங்கரருக்குப் பின் வந்திருக்க வேண்டும். இந்த பூஜையில் வைக்கப்படும் மூர்த்தங்கள் விநாயகர், சிவன், விஷ்ணு, அம்பாள், சூரியன் ஆகிய 5 தெய்வங்களுக்கு உரியவை.
1/9
பாரம்பரியமாக நம் குடும்பத்தில் உள்ள வழக்கப்படியே செய்ய வேண்டும். வீட்டில் இந்த பூஜை பழக்கம் இல்லாதிருந்தது. நான் துவக்கலாம் என ஆரம்பித்த போது எதை மத்தியில் வைத்துக்கொள்ளப்போகிறாய் என்று என் அத்தான் கேட்டார். பிள்ளையார் என்று தயங்காமல் சொன்னேன். ஆனால் அவரோ சிரித்துக்கொண்டு
2/9
ஆசார்யாள் சொல்லி இருப்பதை சிவனைத்தான். அப்படியே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டார்! எப்படி இருந்தாலும் ஐந்து தெய்வங்களுக்குமே பூஜை நடக்கும். இவை நடுவில் ஒரு மூர்த்தமாகவும் மற்றவை சுற்றியும் வைக்கப்படும். சிவனுக்காக பாணலிங்கமும், அம்பாளுக்கு ஸ்வர்ணரேகா எனப்படும்
3/9
Read 9 tweets
#தினசரி_பூஜை - 5
அடுத்து பூக்களால அர்ச்சனை. இருங்க இருங்க, “சந்தனம் மேலே குங்குமம் என்ன ஆச்சு?” ன்னு நீங்க குரல் எழுப்பறது காதில விழுது. இந்த 16 ல அது இல்லை. பெரும்பாலான பூஜா கல்பங்களில உபசாரங்கள் ஒவ்வொண்ணுத்துக்கும் ஸ்லோகங்கள் இருந்தாலும் இதுக்கு அப்படி இல்லை. அதனால் இது
1
பிற்சேர்க்கைன்னு நினைக்க வேண்டி இருக்கு. வழக்கிலே குங்குமம் இடுவது இருக்கவே இருக்கு.

ஆகவே பூக்களால் அர்ச்சனை. ஒவ்வொரு ஸ்வாமிக்கும் நாமக்கள் இருக்கு. கல்பத்தில 8 சொல்லி அர்ச்சனை ன்னு சொல்லி இருக்காம். வழக்கம் வேறயா இருக்கு. பக்தி மேலீட்டால 108, 1008, ன்னு வளர்த்தி
2
இருக்காங்க. தப்பில்லை. குறைச்சலான அர்ச்சனையா இருந்தா வருத்தப்பட வேண்டாம்ன்னு சொல்ல வரேன்.

இந்த நாமாக்கள் எல்லாம் புராணங்களிலேந்து எடுக்கப்பட்டு இருக்கு. அதனால் இதுக்கு ஒரு மகத்துவம் இருக்கு. சம்ஸ்க்ருத பெயர்களா இருக்கேன்னு யோசிக்க வேண்டிய அவசியமில்லை.
3/4
Read 4 tweets
#தினசரி_பூஜை - 4
சந்தனம் அரைக்கும் போது கூட குங்குமப்பூ சேர்க்கலாம். நல்ல நறுமணத்தையும் நிறத்தையும் இது தருகிறது. இதில் சில நுணுக்கங்கள். நம் நாட்டில் குங்குமப்பூ காஷ்மீரில் விளைகிறது. உலகத்திலேயே விளைச்சல் 90 % ஈரானில். ஒரு அடி உயரம் வளரும் இந்த செடியில் நான்கு பூக்கள் வரை
1/8
மட்டுமே பூக்கும்! ஒவ்வொன்றிலும் மூன்றே மூன்று ஸ்டிக்மா வரும். இதையும் இதன் இணைக்கும் தண்டையும் (ஸ்டாக்) அறுவடை செய்கிறார்கள். இந்த தண்டில் அதிக வாசனை வராது. (விலை கம்மி) ஸ்டிக்மாவில் நல்ல அற்புதமான வாசனை வரும்! ஒரு முறை அரைக்க ஒரே ஒரு ஸ்டிக்மா சேர்த்து அரைக்க .... ஹா!
2/8
இந்த குங்குமப்பூவை கையால்தான் சேகரிக்க முடியும். இதற்கு விதை கிடையாது. இதன் ஆண் பூக்கள் ஸ்டெரைல். அதனால் ஆசாமி யாரான இத வளர்த்தாதான் உண்டு. பூத்து முடிஞ்ச பின்னே செடியை பிடுங்கினா நிலத்தடியில் கிழங்கு போல இருக்கும். நாலோ ஏழோ தேறும். இதை தனித்தனியா நடலாம். ஒரு வருஷத்துக்கு
3/8
Read 8 tweets
#தினசரி_பூஜை - 3

ஸ்வாமியின் பாதங்களில் வார்ப்பதாக கற்பனையுடன் ஒரு உத்தரணி நீரை மூர்த்தத்தின் மீது விட வேண்டும். (இது பாத்யம்) அதே போல் கைகளில் வார்ப்பதாகவும். (அர்க்யம்). அடுத்து ஆசமனம்.
அடுத்து குளியல். இதை நேரத்தை பொருத்து நீட்டிக்கொள்ளலாம். ஒரு நிமிஷத்திலும் முடிக்கலாம்;
1/9
ஒரு மணி நேரமும் செய்யலாம். உண்மையில் மற்ற உபசாரங்கள் நிலையான நேரம் எடுத்துக்கொள்ளும். இது மட்டுமே அதிக வித்தியாசம் இருப்பதால் நாம் பூஜை செய்யும் கால அளவை இதுவே பெரும்பாலும் நிர்ணயிக்கிறது.
சீக்கிரம் முடிக்க உத்தரணியால் நீரை மூர்த்தங்கள் மீது வார்க்கலாம்.
நேரம் இருப்பவர்கள்
2/9
தான் சொல்ல நினைக்கும் மந்திரங்களை / ஸ்லோகங்களை பொருத்து எதால் எவ்வளவு நேரம் அபிஷேகம் என்று நிர்ணயித்துக்கொள்ளலாம்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் என்றால் அதிக ப்ரியமாம். விஷ்ணுவுக்கு அலங்காரம். அம்பாளுக்கு நிவேதனம். பிள்ளையாருக்கு தர்ப்பணம்.
ஆகவே சிவ பூஜை செய்வோர் விரிவான
3/9
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!