Discover and read the best of Twitter Threads about #திருவரங்கம்

Most recents (5)

#ஸ்ரீ_ரங்கநாதர்

ஸ்ரீ ரங்கநாதனை பார்க்காத இந்த கண்கள் எதற்கு?

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், மிகச்சிறப்பு வாய்ந்ததுமானது ஸ்ரீ ரங்கம்.

திருவரங்கம், பெரியகோயில், பூலோக வைகுண்டம் என்று பலபெயர் கொண்டு போற்றப்படும் இத்திருக்கோயிலில் சயனித்திருப்பவர் ஸ்ரீ ரங்கநாதர். Image
த்வைத, அத்வைத மற்றும் விசிஷ்டாத்வைதத்தை சேர்ந்த மகான்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனைக் குறித்து பாடியுள்ளனர்.

அதே போல், த்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த ஹரி - தாஸர்கள் பலரும் ஸ்ரீரங்கநாதனை பாடியுள்ளனர்.

அவற்றில் ஒரு பாட்டு தான் இன்றைய பதிவில் பார்க்கப் போவது.
புரந்தர தாஸர், விஜயதாஸர் இவர்களுக்கெல்லாம் முதல்மையானவர் - தாஸர்களுக்கெல்லாம் பிதாமகர் - என்று அழைக்கப்படுபவர் - ஸ்ரீ பாதராயர் ஆவார்.

வாழ்ந்த ஆண்டு 1420 - 1486.

ஏகப்பட்ட கன்னட பக்தி பாடல்களை
இயற்றியுள்ள ஸ்ரீ பாதராயர், துருவரின் அவதாரமாக கருதப்படுபவர்.
Read 11 tweets
#வைகுண்ட_ஏகாதசி

ஸ்ரீ ரங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது.

இவ்வருட வைகுண்ட ஏகாதசி திருநாள் முன்னிட்டு இன்று (22-12-2022) வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகம் எனப்படும் அரையர் சேவையோடு திருஅத்யாயன திருநாள் தொடக்கம்.
இராமானுசரின் விருப்பப்படி ஸ்ரீ பராசர பட்டர் மேல்கோட்டையில் வாழ்ந்து வந்த மாதவாச்சாரியை இந்த திருநெடுந்தாண்டகம் வியாக்கியானத்தை கொண்டு வாதப் போரில் வென்று தன்னுடைய சீடராகி ஆக்கினார்.
இந்த மாதவாச்சாரியாரே பின்னர் நஞ்சீயர் என்று அழைக்கப்பட்ட பராசரபட்டரின் சீடர்.

பராசரபட்டர் பெரிய பெருமாளின் வளர்ப்பு மகன். இந்த நிகழ்ச்சியைக் கேட்ட பெரிய பெருமாள், பராசரபட்டர் இந்த வியாக்கியானம் சொல்லி கேட்க ஆசைப்பட்டார்.
Read 6 tweets
#திருவரங்கம் #தேயும்_பாதணிகள் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் #திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப் பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம். இந்த காலணிகளைச் செய்யவென்றே காலம் காலமாக
தனித் தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்று போலவே இருக்கும் என்பது அதிசயம். 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப் பட்டவை போல தேய்மானம் கொண்டு
இருக்கும் என்பதும் அதிசயம். பெருமாள் முற்காலத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் பேசுவதும் கட்டளை இடுவதும் நாம் கேள்விப் பட்ட விக்ஷயம். தற்பொழுது கலிகாலத்தில் இவைகள் நடக்குமா என்ற ஐயம் இருப்போர்க்கு கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்
Read 11 tweets
#திருவரங்கம் #பிள்ளைலோகாச்சாரியார் அவர் உறங்க ஆரம்பித்த சில மணித் துளிகளில் திடீரென அறைக்கதவு தட்டப்பட்டது. அறைக் கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார். மன்னிக்க வேணும் ஸ்வாமி தங்களைக் காண ஒரு வயோதிகர் வந்திருக்கிறார். நானும் பலமுறை சொல்லிப் பார்த்து
விட்டேன் இந்த நேரத்தில் வேண்டாம் என்று, அவர் இப்பொழுதே பார்க்கவேண்டும் ஒன்று அடம்பிடிக்கிறார். பிள்ளைலோகாச்சாரியார் மடத்தின் வாயிலை நோக்கி நடந்தவர், அப்படியே மேசிலிர்த்து நின்றார்! நரைத்த தாடி மீசையுடன் மடத்தின் நுழைவாயிற் படியில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர்!
பார்வையில் தீட்சிண்யம்!
வாரும் பிள்ளைலோகாச்சாரியார். நீர் பதவியேற்றதற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன். சிம்ம கர்ஜனையாக ஒலித்தது அவர் குரல்!
நீர் யாரென்று அடியேன் அறியாலாமா ?
பிள்ளை நீ என்றால் நான் உனது தந்தை ஸ்தானம் என்று வைத்துக்கொள்ளேன்! எத்தனையோ ஆசான்கள் உனக்கு முன்பாக இருந்து
Read 21 tweets
* ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் *

பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம்.

ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு: Image
1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை.

ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருசுற்று (5வது பிரகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார். Image
இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும்.

மூன்று வாசல்

தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.

தத்வத்ரயம் என்பது சித், அசித், ஈஸ்வர தத்துவம். Image
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!