Discover and read the best of Twitter Threads about #தெய்வத்தின்குரல்

Most recents (4)

#மகாபெரியவா #தெய்வத்தின்குரல் #கனகதாரா_ஸ்தோத்திரம் #ஆதிசங்கரபகவத்பாதாள் “ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. ‘இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனை தான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில்
இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை’ என்றது அசரீரி. உடனே ஆசாரியாள், ‘இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும்
தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!’ என்றார். ‘அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி
Read 11 tweets
#மகாபெரியவா #தெய்வத்தின்குரல்
அஞ்ஜலியைப் பற்றி பேச்சு வந்ததில் ஒற்றைக் கை அஞ்ஜலி முறை வந்து சேர்ந்தது. தன் நெற்றியிலேயே கை வைத்துப் போடும் ஒற்றைக்கை ஸல்யூட், தன்னுடைய ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்துக் குலுக்குகிற shake-hand என்றிப்படி மேல்நாட்டு வழக்கமிருக்க, நாம் இரண்டு
கைகளையுமே சேர்த்துக் குவித்து அஞ்ஜலி, கும்பிடு போடுகிறோம். பிரிந்து பிரிந்து போகிற சித்தத்தை ஒன்றாகச் சேர்த்து ஸமர்ப்பணம் செய்வதற்கு அது அடையாளமாக, அபிநயமாக இருக்கிறது. கூம்பின புஷ்பம், அதாவது தாமரை மொக்கு மாதிரியான அபிநயம் அது. ‘கூம்புவது’ என்பதிலிருந்து தான் ‘கும்பிடுவது’
வந்ததோ என்னவோ? கை கூப்புவது என்றே சொல்வதையும் கவனிக்கணும். ஹ்ருதயமே ஒரு தாமரை மொக்கு மாதிரிதானே இருக்கிறது? ஹ்ருதய பூர்வமாக அன்பு தெரிவிப்பதற்கு ‘ஸிம்பாலிக்’காக இருக்கிறது இந்த அஞ்ஜலி. அழகான எண்ணத்தில் பிறந்த அழகான சைகை.
புஷ்பாஞ்ஜலி என்று கையில் புஷ்பத்தை எடுத்து அஞ்ஜலி
Read 5 tweets
#மகாபெரியவா மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்ற இடத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்த மஹா பெரியவா, பண்டரிபுரம் நோக்கி கிளம்பினார். சதாராவில் இருந்து பண்டரிபுரம் 150 கி.மீ. எங்கும் நடந்தே செல்லும் அவருக்கு அப்போது என்பது வயது தாண்டியிருந்தது. அதனால், பெரியவா உடல்நலம் குறித்து அன்பர்கள்
கவலைப் பட்டனர். அவரோ அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் நடந்தார். வழியெங்கும் மக்கள் கூட்டம் அவர் தரிசனத்தை பெற்று மகிழ்ந்தது. வழியில் ஒரு மலை தென்பட்டது. அதன் மீது ஒரு கோயில் இருந்தது. அடிவாரத்தில் நின்றார் பெரியவா. மலைக் கோயிலை தரிசிக்க விரும்புகிறாரோ என்று நினைத்தனர் பக்தர்கள். 80
வயதில் நெடுந்தூரம் நடப்பதே பெரிது, இதில் மலையேறுவது சாத்தியமா என அனைவரும் கருதினர். அப்போது உச்சியில் இருந்து தாவி வந்தது ஒரு கருங்குரங்கு. மனிதர் போல வளர்ந்து இருந்து, உயரமாக, வலிமையாக இருந்தது அக்குரங்க. அன்பர்கள் அதை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், அது பெரியவாளை வைத்த கண்
Read 6 tweets
Sri Sankara Charitham by Maha Periyava–Sankara Jayanti in Kamakshi temple
“மடத்தோடேயே ஸம்பந்தப்பட்டது காஞ்சி காமாக்ஷி ஆலயம். ஆசார்யாளுடைய சரித்ர ஸம்பந்தமும் விசேஷமாக உள்ள ஆலயம் அது. அதனால் அங்கே ஆசார்யாளுக்கு பிம்பம் இருக்கிறது. உயரமாகத் தனி ஸந்நிதி, சிலா விக்ரஹம், உத்ஸவ விக்ரஹம் Image
எல்லாம் இருக்கின்றன. சிலா விக்ரஹம் பெரிய மூர்த்தியாக இருக்கிறது. அவ்வளவு பெரிசாக எந்த ஆசார்ய புருஷருக்குமே விக்ரஹம் இருப்பதாகத் தெரியவில்லை. புருஷாக்ருதி என்னும்படி, அதிலும் இந்த நோஞ்சான் காலத்துப் புருஷாக்ருதியாக இல்லாமல் ஆசார்யாள் இருந்த அந்தப் பூர்வகாலத்தின் த்ருடகாத்ரமான Image
கம்பீர புருஷாக்ருதியில் அந்த விக்ரஹம் இருக்கிறது. அங்கே மாத்ரம் சங்கர ஜயந்தி உத்ஸவமும் நல்லமுறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜயந்தி உத்ஸவங்களைக் கொண்டாடுவதில் இரண்டு வகை உண்டு. கர்ப்போத்ஸவம் என்பது ஒன்று. ஜன்மோத்ஸவம் என்பது இன்னொன்று. ஜயந்திக்கு முன்னால் உத்ஸவம் ஆரம்பித்து
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!