Discover and read the best of Twitter Threads about #நற்சிந்தனை

Most recents (24)

#நற்சிந்தனை அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார் #ஔவையார். பிறப்பு இறப்பு சுழலில் இருந்து மீள மானிடராய் பிறந்தால் மட்டுமே முடியும். அந்த மனித உடல் ஓர் அதிசயம்.
1. நம் நுரையீரல் தினமும் 11,000 லிட்டர் காற்று (388 கன அடி) காற்றை வடிகட்டுகிறது.
2. நம் உடல் ஒவ்வொரு நொடியும் Image
2.5 மில்லியன் புதிய செல்களை உருவாக்குகிறது. மேலும், தினமும் 200 பில்லியனுக்கும் அதிகமான இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. உடலில் 2500 பில்லியன் இரத்த அணுக்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 25 மில்லியன் செல்கள் உள்ளன.
3. மனித இரத்தம் ஒரு சுழற்சியில் (One Cycle) பயணம் செய்யும்
தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிமீ! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது அதன் வேகம் மணிக்கு 65 கிமீ! மோட்டார் சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
4. ஆரோக்கியமான ஒருவரின் இதயம் தினமும் 1,00,000 முறை துடிக்கிறது.
5. அனைத்து கேமராக்களும் தொலைநோக்கு கருவிகளும் தோல்வியைத் தழுவும்
Read 13 tweets
#பக்தபோதாலா #நற்சிந்தனை
பண்டரிபுரத்துக்கு கொஞ்ச தூரத்திலே ஒரு கிராமம். அதில் போதாலா என்று ஒரு துணி வியாபாரி அடியாருக்கு அன்னமிட்டே பரம ஏழையானவர். பாண்டுரங்க பக்தர், ஒவ்வொரு ஏகாதசியும் உபவாசம். பண்டரிபுரம் சென்று பஜனையிலும் விட்டலன் சங்கீர்த்தனத்தில் சேர்ந்து கொண்டு அனுபவித்தும் Image
மறுநாள் துவாதசி பாரணைக்கு யாராவது 2 பாகவதர்களை அழைத்து அன்னமிட்டு தாம்பூலம் கொடுத்து உபசரித்துவிட்டு பிறகு தான் புசிப்பது வழக்கம். பல வருடங்களாக மாதத்திற்கு 2 தடவை இது விடாமல் நடந்தது. ஒரு தடவை ஒரு பணக்காரர் திடீரென்று துவாதசி பாரணைக்கு 1000 பேருக்கு அன்னதானமும் கை நிறைய தக்ஷிணை
கொடுப்பதாக அறிவிக்க, அன்று எல்லோரும் அங்கு சென்றுவிட்டார்கள். ஏகாதசி உபவாசமிருந்து துவாதசி காலை சந்திரபாகா நதியில் குளித்து விட்டு விட்டலனை தரிசித்து விட்டு கணவனும் மனைவியுமாக வெகு நேரம் யாராவது அதிதிகள், பாகவதர்கள் (அவரால் முடிந்தது யாராவது 2 பேருக்கு மட்டும் தான்) கிடைத்தால்
Read 16 tweets
#நற்சிந்தனை
சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான்.
அருகில் இருந்த வனத்துக்கு அழைத்துச் சென்ற சுக்ரீவன், 'ராமா! வாலி தன் வில்லில் இருந்து பாணம் போட்டால், அது Image
பெருத்த சால மரத்தையே துளைக்கும். அவ்வாறு உன்னால் பாணம் போட முடியுமா?' என்று கேட்டான். ராமன் புன்னகை செய்தபடி தன் கோதண்டத்தில் பாணத்தைப் பூட்டி எய்தான். அது வரிசையாக ஏழு சால மரங்களைத் துளைத்துக் கொண்டு சென்றது. அதை கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை Image
உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி அதை வளர்ப்பவராகத் இறைவன் திகழ்வதால் #ப்ரத்யய: என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 94-வது திருநாமம். தன்நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் “ப்ரத்யயாய நம:”என்ற திருநாமத்தைச்
Read 6 tweets
#நற்சிந்தனை
ஒருசமயம், அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பிராமணர், உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர் மது என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். Image
பகவானின் முன்பு உணவை வைத்து விட்டு அதனை ஏற்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றுவிட்டார். முதன்முதலாக பகவானுக்கு உணவு படைக்கும் நேரம் வந்தபோது, உணவு கொண்டு வந்த மது, அதனை படைத்து விட்டு, பகவானே, இந்த உணவை ஏற்றுக் கொள்ளுங்கள். நான்
சிறுவன் என்பதால் இதனை அர்ப்பணிக்கும் முறை எனக்குச் சரியாகத் தெரியாது என்று கூறி பிரார்த்தித்தான். அதன் பிறகு, மது நண்பர்களுடன் விளையாட வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்த போது உணவு அப்படியே இருப்பதைக் கண்டான். பெருமானே, நீங்கள் ஏன் சாப்பிடவில்லை? இதை எனது தந்தை கேள்விப்
Read 11 tweets
#நற்சிந்தனை
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போர் இட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இரு பக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த Image
ஊடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். போர் வீரர்கள் ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.
தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையல்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார்
Read 6 tweets
#நற்சிந்தனை
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று, ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப் படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது. பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சி Image
செய்வதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது. தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம், சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி
பலத்தை இழந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார் சாது. ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பி
Read 13 tweets
#நற்சிந்தனை
பெற்றோரை வணங்குவோம்!
இந்த பூமியை விட பாரமானவள் தாய்.
ஆகாயத்தை விட உயர்ந்தவர் தந்தை.
ஒரு முறை தாய் தந்தையரை வணங்கினால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.
ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.
பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.
நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர். Image
தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள்
ஜென்மாவை கொடுத்தது தாய்.
அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.

எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க Image
மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.

எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.
பெற்ற தாய் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தால் அதற்கு ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத Image
Read 4 tweets
#நற்சிந்தனை
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கி விடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகில் உள்ள தீவில் அவன் கரையேறுகிறான். இறைவா இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. யாருமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? Image
என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா? என்று பிரார்த்திக்கிறான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக் கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின்
உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.
இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு
Read 10 tweets
#நற்சிந்தனை மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதனை, சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன், கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் Image
முடியவில்லை. அவனிருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் நெருங்கியது. "என்ன கிருஷ்ணா சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே, ஜயத்ரதனை எப்படிக் கொல்வது" என்றான் அர்ஜுனன். சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான். இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். சூரியன்
அஸ்தமித்து விட்டான். இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான் என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடனே அர்ஜுனனைப் பார்த்து, "அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது. ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து தலை கீழே விழாமல் அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார்
Read 8 tweets
#நற்சிந்தனை
நின்றால் வேங்கடம்
ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு

கிடந்தால் ரெங்கமாம்
அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு

அமர்ந்தால் கச்சியாம்
கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி

விழுந்தால் கோட்டையாம்
மேல்கோட்டை நாராயணை ஒரு ImageImageImageImage
நொடியேனும் விழுந்து நமஸ்கரி

தொழுதால் அமுதமாம்
குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு

அழுதால் கடிகையாம்
திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்

நினைந்தால் பூரியாம்
பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு

நடந்தால் துவாரையாம்
துவாரக
புரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்

இருந்தால் குருவாயூராம்
குருவாயூரில் ஒரு நொடியேனும் தங்கி விடு

இறந்தால் பத்மநாபமாம்
இறந்து விட்டால்‌ அனந்த புரத்தில் இறந்து விடு

அலைந்தால் உடுப்பியாம்
பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை

சேர்ந்தால் பாண்டுரங்கமாம்
சேர்ந்தால் பாண்டு ரங்கன்
Read 4 tweets
#நற்சிந்தனை ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் Image
தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார். சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவர்
உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சி செய்தார் ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. இருட்டி போய் விட்டது இனி
Read 10 tweets
#நற்சிந்தனை
ஒரு முறை #மகாகவி_காளிதாசர் வயல் வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப் பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா என்று கேட்டார் Image
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன்
இன்னொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள். சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர். உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான். ஒன்று செல்வம், மற்றொன்று இளமை. இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள். சற்று
Read 8 tweets
#நற்சிந்தனை சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை நமக்கு உணர்த்துகிறது. நம் மனம் எங்கு உள்ளது? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நம் மனம் (உள்ளது) செல்கிறது. அதற்கு தூரம் தடை இல்லை. நாம் தீயவர்களை நினைக்கும் போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. Image
இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும். சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப் படுகிறது. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ Image
சரீரத்தில் பதிவாகி உள்ளது. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும். சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது. மருந்தின்றி மாத்திரை
Read 13 tweets
#நற்சிந்தனை
கழுதையை நடக்க விட்டு அதன் சொந்தக்காரரரும், அவர் மகனும் அதன் கூட நடந்து சென்றனர். வழியில் மக்கள் இதை பார்த்து சிரித்தனர். மகன், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள் என்று கேட்டான்.
'எந்த மடையனாவது கழுதையை நடக்க விட்டு, அதனுடன் நடந்து செல்வானா? கழுதை ஒரு வாகனம்' என்றான்.
பெரியவர் தன் மகனை கழுதையில் அமர்ந்து சவாரி செய்ய அனுமதித்தார். சிறிது தூரத்தில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. மக்கள் கூட்டம் தென்பட்டது. அதில் ஒருவன் கழுதையை தடுத்து நிறுத்தினான். ஏன் தடுக்கிறாய் என்று மகன் கேட்டான்.
'என்ன அநியாயம்! நீ சிறுவன். உன் தந்தை வயதானவர். அவர் தான் கழுதை
மேலமர்ந்து பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.'
பெரியவர் கழுதையில் அமர்ந்தார். சிறுவன் அவர் பின்னால் நடந்தான்.
வழியில் வேறு ஒரு ஊர் குறுக்கிட்டது. பெரியவரைப் பார்த்து அங்கு நின்ற ஒரு மனிதன் சாடினான். என்ன விஷயம், ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என மகன் வினவினான்.
'என்ன கொடுமை இது. நீ சிறுவன்.
Read 7 tweets
#நற்சிந்தனை ஒரு வியாபாரி, தரமான குதிரை விற்பனைக்குத் தயாராக இருப்பதை சந்தையில் பார்க்க நேரிட்டது. வாங்க முற்படுகையில் கடுமையான பேரம் ஆரம்பித்தது. தன் திறமையை பயன்படுத்தி, தான் முடிவு செய்த நல்ல விலைக்கே குதிரையை விற்றார் அதன் சொந்தக்காரர். குதிரையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு
வந்தவுடன், அந்த வியாபாரி தன் பணியாளரை அழைத்து, குதிரை மேலுள்ள சேணத்தை எடுக்கச் சொன்னார். அந்த கனமான சேணத்தை தான் ஒருவரே எடுப்பது, அந்த பணியாளருக்கு மிக கஷ்டமாக இருந்தது. சேணத்திற்கு அடியில், ஒளித்து வைக்கப் பட்ட ஒரு சிறிய வெல்வெட் பை ஒன்றை அந்தப் பணியாளர் கண்டு பிடித்தார்.
அதைத் திறந்து பார்க்கும் போது, பை நிறையை விலைமதிப்பற்ற நகைகள் இருப்பதை கண்டுபிடித்தார். அந்தப் பணியாளர் மிகவும் உற்சாகம் அடைந்தார்! “எஜமானரே, நீங்கள் குதிரை வாங்கி வந்தீர்கள். ஆனால், அதனுடன் இலவசமாக வந்திருக்கும் இவற்றைப் பாருங்கள்!” என்றார்.
பணியாளரின் உள்ளங்கையில்
Read 9 tweets
#நற்சிந்தனை
விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்தும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவன் வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற
நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். ஆனால் கஷ்டங்கள் என்னவோ அதிகமாக சூழ்ந்து கொண்டன. அதே ஊரில் குமணவித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தன் இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் செய்யும் குணமுடையவன். அவனுக்கு நல்ல குணமுள்ள பக்தியில்
சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். அவனுக்கு கடவுள் நம்பிக்கை துளிகூட இல்லை. அவனுக்கு தன் நண்பன் ஞானசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்து, கோபத்தில் ஞானசித்தன், ஸ்ரீ கிருஷ்ணன் மீது தனது பக்தி உண்மையாக
Read 17 tweets
#நற்சிந்தனை
ஒரு பெரிய நாட்டின் மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடு பட்டார்கள். அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. எங்கிருந்து Image
எல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்.
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை. மன்னனால் தூங்க முடியவில்லை. உணவும் குறைந்து பொலிவு இழந்தான். மன்னனோடு சேர்ந்து நாடும் களை இழந்தது. இந்த நேரத்தில் இமய மலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார். மன்னனின் காதை நன்றாகப் Image
பரிசோதித்தார்.
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது. இங்கிருந்து 3000 மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத் தான் இந்தப் பூச்சி கட்டுப்படும். இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன். எப்படியும் ஒரு மாத காலத்திற்குள்
Read 11 tweets
#நற்சிந்தனை ஒரு குருகுலத்தில் பாடம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மாணவன், "குருவே, அனைத்தும் அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைச் சோதிப்பது ஏன்? கஷ்டங்களைச் சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?" என்றுக் கேட்டான்.
"நல்ல கேள்வி. உனக்கு நான் நாளை பதில் அளிக்கிறேன்."
என்றுக் கூறினார் குரு. மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வந்தனர். மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" மாணவர்களைக் கேட்டார் குரு.
"இரண்டு ஜாடிகளும் அத
ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் தெரியவில்லை என்றனர்.
"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியைத் தள்ளி கவிழ்த்தார்.
Read 9 tweets
#நற்சிந்தனை
ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரர் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் சாமியாவது, பூதமாவது, நடக்குறது தானே நடக்கும் என்ற கேள்வியை அவரிடம் கேட்டான்.
ஆதிசங்கரர் அவனிடம், மகனே, இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில்
அளிக்கிறேன் என்றார். அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார். அதற்கு அவன்,
எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனு என்றான்.
ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க என ஆதி சங்கரர் கேட்டார்.
Read 6 tweets
#நற்சிந்தனை கபிலபுரத்தில், சங்கமன் என்ற வியாபாரி இருந்தான். வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிப்பவன். அவனது மனைவி நீலி. கணவன் சொல் தட்டாத பதிவிரதை. அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை இருந்தது. சங்கமன் அங்கு வியாபாரத்திற்கு சென்ற போது, போட்டி
வியாபாரியான பரதன் பார்த்தான். அரசரிடம் சென்று, சங்கமன் என்ற ஒற்றன் கபிலபுரத்திலிருந்து வேவு பார்க்க வந்துள்ளான். அவனைப் பிடியுங்கள், என்றான். அரசனும் விசாரியாமல், சங்கமனைக் கொன்று விட்டான். நீலிக்கு அதிர்ச்சி. புலம்பியழுதாள். நீதி தவறி யார் எனக்கு துன்பம் செய்தார்களோ, அவர்கள்
அடுத்த பிறவியில் இதே துன்பத்தை அடைவார்களாக! என சாபமிட்டு இறந்து போனாள். மறுபிறப்பில் சங்கமனின் மரணத்துக்கு காரணமான பரதன் கோவலனாகவும், அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி தத்தளித்தாள். தவறாகத் தீர்ப்பளித்த மன்னன் நெடுஞ்செழியனாகவும், அவன் மனைவி
Read 4 tweets
#நற்சிந்தனை நம் மனித ஆத்மா கீழ்நிலை உயிரினத்திலிருந்து தொடங்குகிறது. நீர்வாழ் உயிரினத்தில் தொடங்கி, தாவரம், கிருமி, பறவை, மனிதன் என பரிணமித்து, இறுதியில் மனித வாழ்வை அடைகிறது. நாம் மனித வாழ்வை அடைந்திருப்பது நம் அதிர்ஷ்டம். இந்த மனித வாழ்வில் நாம் என்ன செய்கிறோம்? உணவு, உறக்கம்,
தற்காத்தல், மற்றும் இன விருத்திக்காக மட்டும் இந்த கிடைத்தற்கரிய வாழ்க்கையை பயன்படுத்தி, தன்னை பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதை உணர மறந்து விடுகிறோம். ஆன்மீகப் பக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பள்ளியில் மாணவர்கள் கீழ்
வகுப்புகளிலிருந்து உயர் வகுப்புகளுக்கு உயர்ந்து, இறுதி வகுப்பிற்கு வரும்போது, அதில் தேர்ச்சி பெறாவிடில் அந்த வகுப்பு நெரிசல் மிக்கதாகி விடும். அது போலவே, மக்கள் மேன்மையான வாழ்விற்கு உயர்த்தப்படாத காரணத்தினால், தற்போதைய நாகரிகத்தில் அவ்வப்போது மக்கள் பெருக்கம் அதிகமாக உள்ளது.
Read 7 tweets
#நற்சிந்தனை
அதிக நேரம் இருந்தால் அதை வாசிப்பதில் நாம் செலவிடவேண்டும். நாம் இது வரை கற்றது கைமண் அளவே. இறுதிவரை நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
நம்மை குறைவாகவும் மதிப்பிடாமல் அதிகமாகவும் மதிப்பிடாமல் அதே சமயம் நம் சுய மதிப்பை சரியாக தெரிந்து கொண்டு பெருமையுடன் வாழ வேண்டும்.
கோபம் நம் மன நிம்மதிக்கும் ஆரோக்கியத்துக்கும் பெரும் எதிரி. அதை குறைத்துக் கொள்ள தினமும் விடாமல் பயில வேண்டும்.
நம் தவறை யாரேனும் சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அதை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நேர்மை சிந்தனையிலும் செயலிலும் மிக முக்கியம். உண்மையாக
நடந்து கொண்டால் யாரிடமும் எந்த சந்தர்ப்பத்திலும் பயப்பட தேவையில்லை.
பேசுவதற்கு முன் சொல்லப் போவது அடுத்தவருக்கு நல்லதா அல்லது அவரை காயப் படுத்துமா என்று சிந்தித்து அதன் பின் பேச வேண்டும்.
நம் எண்ணத்தை மற்றவர் மேல் திணிக்கக் கூடாது. மிக நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் அவருக்கு அது
Read 4 tweets
#நற்சிந்தனை
ஒரு சமயம் கௌரவருக்கும் பாண்டவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பி வைக்க வேண்டுமென்று துரோணர் கூறினார். துரியோதனன் அறை முழுக்க வைக்கோலை வாங்கி அடைத்து
வைத்திருந்தான். பீஷ்மர், விதுரர், கிருபர் போன்றோர் வந்து அறையைத் திறந்ததும் தும்மல் தான் வந்தது. பஞ்ச பாண்டவர்களின் அறையைத் திறந்ததும் அறை முழுவதும் கோலங்கள், அதில் நேர்த்தியாக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மலர்த் தோரணங்கள், பழங்கள், பால், சந்தனம் எல்லாம் தயாராக இருந்தன. அகில்
வாசனை மனதை நிறைத்தது. பாண்டவர்களின் மதி நுட்பத்தை எண்ணி அனை வரும் வியந்தனர். தாங்கள் தோற்றதை எண்ணிக் கோபமுற்ற துரியோதனன், ஒரே தேர்வில் யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செயலாகாது என வாதிட்டான். துரோணரும் அதற்கிசைந்து நூற்றைந்து பேரையும் அழைத்து, இன்று முதல் பத்து நாட்களுக்குள்
Read 13 tweets
#நற்சிந்தனை யாரையும் திட்டாமல், சாபம் விடாமல், கெடுதல் நினைக்காமல் இருப்போம். நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும் நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விடும். எதை செய்தாலும் யாரையும் காயப் படுத்தாமல் வாழப் பழகுவோம். கடவுள் நாம்
கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல் கெட்டதை தரவில்லை என்று மகிழ்ச்சி கொள்வோம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவும், இல்லாததை நினைத்து கவலைப்படாமல் இருக்கவும் பயிற்சி எடுப்போம். நம்மைப் படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எந்த நேரத்தில் எது தேவை என்று. அவன் மேல் நம்பிக்கையுடன்
பொறுமையாக இருந்தால் நல்லதே நடக்கும்! எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்போம். தாங்கவே முடியாத துன்பம் வந்தால் கூட பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்வோம். யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு ஒழிப்போம். அது நம் நிம்மதியை தான் தொலைக்க வைக்கும்.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!