Discover and read the best of Twitter Threads about #நான்_யார்

Most recents (5)

Oct 3rd 2020
#நான்_யார்? - 8
மனசாலத்தான் பார்க்கிறோம்ன்னா அந்த மனசோட சுய ரூபம் என்ன?
ஆத்மா ஆத்மான்னு சொல்லறாங்களே அதில இருக்கிற ஒரு அதிசயமான சக்திதான் மனசு என்கிறது. நாம் விழிப்போட இருக்கோம்; கனவு காண்கிறோம் என்றால் அதை மனசே தோற்றுவிக்கிறது. நாம இதைப்பார்க்கிறோம் அதைப்பார்க்கிறோம்ன்னா
1/12
அப்படி மனசு நினைக்கிறது. அதாவது அதை மனசே தோற்றுவிக்கிறது. இந்த மனசு என்ன? நினைவுகள்தான். நினைப்புகள் இல்லைன்னா மனசும் இல்லை.
இந்த ஐம்பொறிகள் வழியா மனசு வெளியே பார்க்கிறது. இதோ இந்த ரோஜாப்பூ இளம் சிவப்பா இருக்கு. நல்ல வாசனையோட இருக்கு. ரொம்ப மிருதுவா இருக்கு. ஊஊஊ! கூட
2/12
முள்ளும் இருக்கு. ரொம்ப அழகா இருக்கு - இந்த ரீதியில மனசு அதைப்பத்தி நினைக்க நினைக்க அதை நாம பார்க்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கோம். வேகமா அந்த ரோஜாச்செடியை தாண்டி போறோம். அதை பார்க்கக்கூட இல்லை! அப்ப நம்மைப்பொறுத்த வரை அது இல்லை. ஏம்பா வந்த வழில ஒரு ரோஜாச்செடி இருந்ததாப்பான்னு
3/12
Read 12 tweets
Oct 1st 2020
#நான்_யார்? - 6

ஏன், உலகம் இருக்கிறப்பவே, தெரியறப்பவே சொரூப தரிசனம் கிடைக்காதா?
கிடைக்காது.
ஏன்?
நாம் உள்ளதை உள்ளபடி பார்க்கவில்லை என்கிறதே அடிப்படையில் பிரச்சினை.
சயன்ஸ்படியே பார்க்கலாம். பல வருஷங்களுக்கு முன்னால (atom) ஆட்டம் ந்னு சொன்னாங்க. அதுக்கு அர்த்தமே
1/6
பிளக்க முடியாதது என்பது. அப்புறமா அதை பிளந்தாங்க. ந்யூட்ரான் ப்ரோட்டான் எலக்ட்ரானு சொன்னாங்க. அப்புறம் இன்னும் மாறித்து… க்வார்க்ஸ் ந்னாங்க. இப்படியே போய் அது எனர்ஜியா இல்லை பருப்பொருளான்னே சந்தேகம் வந்துகிட்டு இருக்கு.
வெளிப்புறமா பார்க்க பல ஆட்டம்கள் சேர்து ஒரு
2/6
எலெமெண்டாவும் அது பலது சேர்ந்து காம்பவுண்டாவும் அதுவே இன்னும் பல சேர்க்கையில் விதவிதமான பொருட்களாவும் எல்லையில்லாம விரிஞ்சுகிட்டே போகிறது. இப்படி ஒரு பொருளை உள்ளே நுணுக்கமா பார்க்கையில் ஒரு விதமாகவும் வெளியே விரிச்சு பார்க்கையில் பலவிதமாவும் இருக்கு.
ஆக உள்ளதை உள்ளபடி
3/6
Read 6 tweets
Sep 29th 2020
#நான்_யார்? - 4
அப்படி கிடைக்க நம்மை நாம யார்ன்னு தெரிஞ்சுக்கணும்!
யோவ்! என்னை எனக்கு தெரியாதா என்ன? என்ன உளரல் இது?

ம்ம்ம்! தெரியறதான்னு பாத்துடலாமே!
நான் இந்த உடம்பா? சர்வ சாதாரணமா என் கை, என் கால், என் உடம்பு வலிக்கறது ந்னு எல்லாம் சொல்லறோமே? அப்ப உடம்பும் நானும் வேற
1/11
வேறத்தானே? ரொம்ப ரொம்ப சிம்பிளா நான் செத்துப்போனப்பறமும் இருக்கற இந்த உடம்பை நான்ன்னு எப்படி சொல்லறது? அப்படியேவிட்டா சில நாட்கள், பதப்படுத்தி வெச்சா இன்னும் பல நாட்கள் இருக்கிற இந்த உடம்பு நானா? இதயம் துடிச்சு கொண்டிருந்தாலும் மூச்சு லேசா விட்டுக்கொண்டு இருந்தாலும் கூட சில
2/11
சமயம் டாக்டர்கள் இது தேறாதுன்னு சொல்லிடறாங்களே? ப்ரெய்ன் டெட் ந்னு சர்டிஃபை பண்ணி அதிலேந்து சிறுநீரகம் முதற்கொண்டு பலஉறுப்புக்களை எடுத்து வேற வேற ஆசாமிங்களுக்கு வெச்சுடறாங்களே? இந்த உடம்பு நானா இருக்க முடியாது.
இந்த உலகத்தை நான் அஞ்சு உணர்வுகளால அறியறேன். எல்லாமே இந்த அஞ்சுல
3/11
Read 11 tweets
Sep 28th 2020
#நான்_யார்? - 3

என் குழந்தையை பிடிக்கும். ஏன்? ஏன்னா இது என் குழந்தை. என் மனைவியை பிடிக்கும். ஏன்னா இது என் மனைவி. என் மதத்தை பிடிக்கும்.; ஏன்னா இது நான் சார்ந்து இருக்கிற மதம். என் நாட்டை பிடிக்கும்; ஏன்னா இது என்னோட நாடு.
இது எல்லாத்துலேயும் ஒரு பொதுவான சமாசாரம் இருக்கு
1/12
இல்லே? ’என்!’ அந்த என் இல்லைன்னா அவ்வளோ ருசிக்கிறதில்லை. என் குழந்தை என்கறதால் இந்த குழந்தையை எனக்கு பிடிக்கிறது. என் ஜாதி என்கிறதால என் ஜாதியை எனக்கு பிடிக்கிறது, என் நாடு என்கிறதால் என் நாட்டை எனக்குப்பிடிக்கிறது!
ஸ்வீட் எனக்கு பிடிக்காது. ஜிகிர்தண்டா எனக்குப் பிடிக்காது.
2/12
இந்த ரீதியில பலது எனக்கு பிடிக்காது!
ஆனா என்னை எனக்கு பிடிக்கும்; ரொம்பவே பிடிக்கும்! எனக்கு சுகம் தருவது எதானாலும் எனக்குப்பிடிக்கும்.
ஆனா இதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கு! பிடிச்ச ஸ்வீட்தான். ஆனா ஒரு அளவுக்கு மேல “போதும்ப்பா! திகட்டிடுத்து” என்கிறோம். என் குழந்ததான்.
3/12
Read 12 tweets
Sep 26th 2020
#நான்_யார்? - 1

ஞான விசாரம்ன்னாலே பலரும் “ஓ அது நமக்கு ஒத்து வராது" ன்னு நினைப்பாங்க. “நமக்கு இது பத்தி எல்லாம் என்ன தெரியும்? ஞானம்ன்னா என்ன விசாரம்ன்னா என்ன? ஆள விடப்பா!”
இப்படித்தான் ஒருத்தர் ஆத்ம வித்தை மிகக்கடினம் ந்னு ஒரு பாட்டே எழுதினார்.
கோபாலகிருஷ்ணபாரதியார்
1/8
‘நந்தன் சரித்திரம்’ எழுதினார். அதில், "ஐயே மெத்தக்கடினம்” என்று ஒரு பாடல் தொடங்குகிறது. சிவபெருமானையே சதா நினைந்து உருகி, சிதம்பரத்தில் அவனது பொன்னம்பல தரிசனத்தைக் காண ஏங்கி நின்ற, நந்தன் பாடுவதாக அது அமைந்தது.
பகவான் ரமண மகரிஷி அதுக்கு பதிலா ”ஐயே அதி சுலபம்; ஆத்ம வித்தை ஐயே
2/8
அதி சுலபம்’ ந்னு பாட்டு எழுதினார்! முருகனார் பல்லவி அனு பல்லவி எழுதின பின் பாட்டை தொடர முடியாமல் பகவானிடம் கொடுத்துவிட்டார். பகவான் சரணங்களை எழுதி பூர்த்தி செய்தார். பாடல் முதல் கமெண்ட் ஆக வருகிறது.
பொதுவா ஒரு புத்தகத்தில என்ன எழுதி இருக்குன்னு தெரிஞ்சுக்க அதோட உள்ளடகத்தை
3/8
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!