Discover and read the best of Twitter Threads about #புரட்டாசி_சனிக்கிழமை_சிறப்பு

Most recents (5)

சனிக்கிழமை ஏன் பெருமாளுக்கு
உகந்த நாளாக மாறியது !!

மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது.

புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான்.
வேண்டிய வரம் பெற திரு வேங்கடவனை நினைத்து திருவோண விரதமாக இருக்க நல்ல நாளாக சனிக் கிழமையைச் சொல்லலாம்.

ஏழரைச் சனியால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட ஒரே வழி எம்பெருமானை சரணடைவதுதான் ஒரே வழி.

சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம்.
இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வர்.

புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார்.

நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது.

சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருக்கிறார்.
Read 11 tweets
திருமலை திருவேங்கட பெருமாளின் பூசைமுறைகள் அற்புதம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.
காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.
பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.

பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.

அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.
Read 34 tweets
#புரட்டாசி_சனிக்கிழமை_மகிமை

புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளிலும் ஒரு சிலர், அந்த மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள்.

எல்லா நாட்களிலும் விரதம் இருக்கமுடியாத பட்சத்தில், புரட்டாசி சனிக் கிழமைகளில் விரதம் இருப்பது நல்ல பலனைத் தரும்.
புரட்டாசி மாதம் பெருமாளை வழிபட, ஏற்ற மாதமாகும்.

#புரட்டாசி_சனிக்கிழமை_சிறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் பீமன் என்ற ஏழை குயவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தீவிர பெருமாள் பக்தர்.

வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்து கொண்டார்.
இவருக்கு சாஸ்திர, சம்பிரதாயம்,.பூஜை வழிமுறை எதுவும் தெரியாது.

தொழில் மற்றும் ஏழ்மைநிலை காரணமாக கோவிலுக்கு போகவும் நேரம் இருக்காது.

அப்படியே சென்றாலும் "பெருமாளே!நீயே எல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.
Read 9 tweets
#மகாதேவர்_அலங்காரத்தில்_மஹாவிஷ்ணு

வாரத்தில் ஒரு நாள் மட்டும் சிவபெருமானாகக் காட்சி தரும் திருப்பதி வேங்கடேசன்.

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதி தான்.

இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார்.
இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை.

ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சாத்தி,
மந்திர ரூபத்தில் அவரை ‘சங்கர நாராயணர்’ போல் மாற்றுகிறார்கள்.

அவருக்கு வில்வ மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.

அந்த வேளையில் பெருமாள் அங்கிருந்து இறங்கி, அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்கச் செல்வதாக ஐதீகம்.
Read 4 tweets
ஏழுமலையான் பெயர் வர காரணம் :

திருப்பதி மலையில் வாழும்
ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார் ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா?
ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது.

ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது.

ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர்.

அந்த ஏழு மலைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
ஒன்றாம் மலை :

வேம்" என்றால் பாவம், 'கட" என்றால் 'நாசமடைதல்". பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு 'வேங்கட மலை" என்று பெயர்.

இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!