Discover and read the best of Twitter Threads about #பேரறிஞர்_அண்ணா

Most recents (8)

#ஆரியம்

#பேரறிஞர்_அண்ணா அவர் மொழியில் சொல்கிறார்...

" ஆரியம் என்ற கலாச்சாரம் உழைப்புக்கு மதிப்பளிக்காது. உழைப்பாளிகளிடம் ஆசை காட்டியோ, அச்சமூட்டியோ பொருளைப் பறித்துச் சுகப்படுவதற்காக உள்ள ஒருமுறை!

இந்த முறை பெரும்பாலானவர்களின் உழைப்பைக் கொண்டு, ஒரு சிறு கூட்டம் வாழ்வதாக
அமைகிறது.

இந்தச் சுரண்டும் கூட்டம் ஒவ்வொரு காலத்தில் - ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமான பெயருடன் விளங்கும்.

கிரீசில் மாஸ்டர் (எஜமான்) என்றும், ரோமில் பெட்ரீஷியன் எனவும், பிரிட்டனில் பிரபுக்கள், பிரான்சில் ஐஸ்வர்யவான்கள், ஜப்பானில் சமுராய் என்று இவ்வண்ணம் பெயர்கள் இருந்தன.
இங்கு அதே முறையைத்தான் நாம் ஆரியம் என்று சுட்டிக்காட்டுகிறோமேயன்றி, வீண்வேலை செய்கிறோம் என்றோ, விஷமூட்டுகிறோம் என்றோ யாரும் கருத வேண்டாம்.

திராவிடன், தேய்ந்து திகைத்து தலைமீது கைவைத்துக் கொண்டிருக்கிறான்!

ஆங்கிலேயன் ஆள்பவனான்,செல்வம் கொண்டு சென்றான்.

ஆரியன் ஆலய வேந்தனான்,
Read 4 tweets
அறிஞர் அண்ணா 1968 அமெரிக்கா பயணத்தின் ஊடே போப்பாண்டவரைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.
"அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து
1/n Image
தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

போப்பாண்டவர் "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" என்றார். தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.
அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து
2/n
"உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார்.
"என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா.

"கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர்.

"போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
3/n
Read 9 tweets
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _6

• தமிழ்நாடு பெயர் மாற்றம்.

•1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது.
•அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த
அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.
•ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.
•இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
•அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு
Read 13 tweets
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _5

•1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்.

• இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர், Image
இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது.
•இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது.
•இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
•இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை இவ்வாறு கூறினார்:
“இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால்.
ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே.
Read 16 tweets
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _4

•1953 இல் கண்டனத்
தீர்மானங்கள்.

•1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக
மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:
•இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
•மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் ,
எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
•கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்,
Read 14 tweets
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _3

•திராவிட நாடு.

•திராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார்.
•திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும்
இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
•பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.
•ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்:
“நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட,
Read 14 tweets
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _2

•அண்ணாவிற்கு பெரியார்
உடனான தொடர்புகள்.

•பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார்.
•பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து,
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.
•அதன் பின் அரசியலில் ஈடுபட்டார்.

•பெரியாருடன் கருத்து
வேறுபாடு மற்றும் திமுக
உருவாதல்.
•பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது.
•இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும்
Read 16 tweets
பெண்ணை அடிமைபடுத்த, தாலி உரிமம் வழங்குகிறது..

தாலியற்ற திருமணங்களை அங்கீகரிப்பதன் மூலம் தாலியின் மீதான புனித பிம்பத்தை நொறுக்க சுயமரியாதை திருமணங்களை அங்கிகரீக்கும் சட்டம் கொண்டு வந்த #பேரறிஞர்_அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

#HBD_PerarignarAnna
நடுரோட்ல மனைவிய தூக்கிப்போட்டு மிதிக்குறான், யாராவது எதிர்த்து கேள்வி கேட்டா என் பொன்டாட்டி நா அடிப்பேன் ன்னு தாலியை கை காட்றான்..

தினமும் குடிச்சிட்டு வரான், சந்தேக படுறான் மிகப்பெரிய கொடுமைக்காரனா இருக்கான் கணவன் , ஆனாலும் அவனை விட்டு விலகமுடியாதவளாக பெண் இருக்கிறாள்,
காரணம் தாலியற்ற பெண்ணை இந்த பிற்போக்கு சமூகம் கீழ்தரமாக அனுகுகிறது ..அவளை வாழாவெட்டி என கொச்சை படுத்துகிறது..

இப்படி ஒரு பெண்ணை ஒரு ஆண் அடிமையாய் நடத்துவதற்கு தாலிதான் உரிமம் வழங்குகிறது.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!