Discover and read the best of Twitter Threads about #வரலாற்றில்_இன்று

Most recents (7)

#வரலாற்றில்_இன்று

ஆறு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சாலையில் அரசு முத்திரையுடன் ஐந்தாறு கார்களும் ஒரு டெம்போவும் ஓர் உன்னதமான லட்சியத்திற்காக பறந்தன.

என்ன ஏது என்று புரியாமல் பத்திரிக்கையாளர்களும் உடன் வந்தனர்

அந்த இடம் வந்ததும் கான்வாய் நின்றது Image
ஒரு காரில் இருந்து இறங்கினார் அவர்..

அவருக்கும் தெரியாது இந்நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று

கூடியிருந்த அதிகாரியிடம் கேட்டார் " ஏற்பாடுகள் தயாரா இருக்கா?ஆரம்பிக்கலாமா?"

அழியா புகழை தர போகும் அந்தத் திட்டத்தை தொடங்கினார் அப்போதைய அமைச்சர் செல்லூர் ராஜு Image
அடுத்த ஒரு சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் அந்த செய்தி தீயாக பரவியது

" வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை"

ஆனால் தெர்மாகோலை வைகை நீரில் போர்த்திய சில நிமிடங்களில் காற்றின் வேகத்தால் அவைகள் கரை ஒதுங்கின

மனம் தளராத செல்லூர் ராசு Image
Read 8 tweets
#வரலாற்றில்_இன்று
வெத்திலை வாய் விசுவாமித்திரரின் வெத்து உபன்யாசங்களிலிருந்து விமோசனம் பெற்ற survivors எத்தனை பேர் இங்க இருகிங்க?
இயக்குநர் விசுவின் நாடகீயமான வசனங்களில் உட்பொதிந்திருக்கும் அறிவுக்கு முரணான மொக்கை கருத்துகள் குறித்து ஒரு போஸ்ட்டாவே பாடிடலாம் அவ்வளவு அபத்தங்கள் Image
அந்நாட்களில் விசுவின் வெங்கலக்(குண்டான்ல எவர்சில்வர் டம்ளர் உருளும்) குரல் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
ஆமாம். அந்தாளு அப்டி தம் கட்டி வசனம் பேசுனதை வெச்சே அவர் ஒரு பெரிய தத்துவ மேதைனு நம்பி சன் டிவி காரய்ங்க அவரை வெச்சு ‘அரட்டை அரங்கம்’னு ஒரு உப்மா
ப்ரோக்ராமை ரெடி பண்ணி அநியாயமா வீக்எண்ட் ப்ரைம் டைம்ல காமிச்சு ஹைப் ஏத்துனாய்ங்க.
போதாக்குறைக்கு அதுல சின்ன சின்ன பிள்ளைங்களைக்கூட வயசுக்கு மீறின அதிகப்பிரசங்கித்தனத்தோட பேசறதுக்கு ட்ரெய்னிங் குடுத்து ப்ரோக்ராமின் டெம்போவ ஏத்தி இதுதாண்டா இளைய பாரதம்னு காமிச்சு எண்ட் டைட்டில்ல
Read 7 tweets
#வரலாற்றில்_இன்று
1980 களில் அன்னாடங்காச்சியாக இருந்த அம்மு, பட வாய்ப்புகள் இன்றி பரிதாப நிலையில் இருந்தார். அப்போது தொடர்பில் இருந்த #சோபன்பாபு வுக்கு அமைந்தகரையில் நெல்சன் மானிக்கம் சாலை பல ஏக்கர் தோட்டம் இருந்தது. எங்கே ஹைதராபாத் தோட்டத்தை போன்று, இதனையும் எழுதி வாங்கி Image
விடுவாரோ என்று பயந்த சோபன் மனைவி அன்றைய முதல்வர் எம்ஜி ராமச்சந்திரனிடம் முறையிட, அவர் #ஜெயலலிதா அழைத்து பேச, "பட வாய்ப்புகள் இன்றி பஞ்சத்தில் இருக்கிறேன்" என்று அம்மு கண்ணீர் விட, ராதா, அம்பிகா விற்கே நூறடி ரோட்டில் இடம் எழுதி வைத்த எம்ஜியார், தனக்கு எதிரான ஜெயலலிதா வின் முந்தைய Image
தவறுகளை மறந்து கட்சியில் சேர்த்து பதவிகளை வாரி வழங்கினார்.

பஞ்சத்தில் இருந்த ஜெயலலிதா விற்கு, பிறகெப்படி பல்லாயிரம் கோடி சொத்து வந்தது என்பதெல்லாம் 1991க்கு பிறகான "ஒரு நடிகை முதல்வராகிறாள்" கதை.

நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சோபன் பாபு சிலை, அந்த இடத்தில் தான் அமைந்துள்ளது.
Read 7 tweets
#வரலாற்றில்_இன்று
15/03/2023
ஐநா சபை இஸ்லாமாஃபோபியாவிற்கு (Islamophobia) எதிரான முதல் சர்வதேச தினத்தை கடைபிடித்தது

இஸ்லாமாஃபோபியா என்றால் என்ன?

இஸ்லாமியர் என்ற உடனேயே ஒரு பயமோ அல்லது தப்பெண்ணமோ அல்லது வெறுப்போ அல்லது பதட்டமோ கலந்த ஒரு கசப்பு உணர்வு இஸ்லாமியர் அல்லாதவர்
மனதில் தோன்றினால் அதுவே இஸ்லாமாஃபோபியா எனப்படும்.

இந்த உளவியல் பிறழ்வு ட்விட்டர் இன்ஸ்டாகிராம் முகநூல் வாட்ஸ் ஆப் முதலான ஆன்லைன் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி, அச்சு ஊடகம், திரைப்படம், அரசியல் கட்சிகள், சமூக கலாச்சார அமைப்புகள் முதலான ஆஃப்லைன் ஊடகங்கள் ஊடாக முஸ்லீம்கள்
குறித்த பொய்யான‌ அல்லது மிகையான அல்லது அவதூறான‌‌ செய்திகளாக காணொளிகளாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இந்த போக்கு உலகில் முஸ்லிம்களை மட்டுமல்ல முஸ்லிம் அல்லாதவர்களையும் அச்சுறுத்துகிறது., துன்புறுத்துகிறது, தவறிழைக்கத் தூண்டுகிறது, ஆத்திரமூட்டுகிறது, மிரட்டுகிறது,
Read 6 tweets
#வரலாற்றில்_இன்று
உலக 'பை' தினம் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், 'பை'யின் மதிப்பான '3.14' என்ற எண்ணை, மார்ச் 14 குறிப்பதுதான்.
அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)பை தினத்தில் பிறந்தவர். 'பை'யின் தோராயமான பின்ன மதிப்பு '22/7' என்பதால், Image
அதனைக் குறிக்கும் ஜூலை 22ஆம் தேதியையும் கொண்டாட வேண்டும் அல்லவா?

இந்த தினத்தை, #பை_அப்ராக்சிமேஷன_டே'
(Pi Approximation Day) என்ற பெயரில் கணிதவியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.

1988 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ , கலிபோர்னியா அறிவியல் அருங்காட்சியகம், எக்ஸ்ப்ளோரேடோரியத்தின் Image
ஊழியர் லாரி ஷாவால் நிறுவப்பட்டது . கொண்டாட்டங்களில், பை சாப்பிடுவது அல்லது பை ஓதுதல் போட்டிகளை நடத்துவது ஆகியவை அடங்கும். 2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை #பை_டே என்ற பெயரை ஆதரித்தது. யுனெஸ்கோ நவம்பர் 2019 இல் பை தினத்தை சர்வதேச கணித தினமாக நியமித்தது. Image
Read 7 tweets
#வரலாற்றில்_இன்று

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் கெப்ளர்,
கோள்களின் சுற்று வட்டப்பாதையைப் பற்றிய தனது மூன்றாவது விதியை மார்ச் 8, 1618ம் ஆண்டு வெளியிட்டார்.

அதன் படி, கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடியானது(square), சூரியனிலிருந்து அக்கோள்களின் நீள்வட்டப்பாதையில்
பெரிய விட்டத்தின் தொலைவின் மும்மடிக்கு(cube) நேர்விகிதத்தில் இருக்கும்.
என்பதாகும்.

இதன் மூலமாக பூமியின் உள் மையப்பகுதி மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது. சூரியனின் ஈர்ப்பு விசையே கோள்கள் அனைத்தும் அதன் சுற்று வட்டப்பாதையில் இயங்குவதற்கு காரணமாக அமைகிறது என கணித்தார்.
கெப்ளருக்கு வழிகாட்டியாக இருந்தவர் நிக்கோலஸ் கோபர் நிக்கஸ்.
சூரியன் பூமியை சுற்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்த 16 ஆம் நூற்றாண்டில், அட மடப்பயலுகளா பூமி தான்டா சூரியனை சுற்றுகிறது. என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் அதற்காக போலந்து சர்ச்சுகளின் கண்டனத்தை எதிர்கொண்டார்
Read 7 tweets
#வரலாற்றில்_இன்று

கும்பகோணத்தில் 1992ம் ஆண்டு இதேநாள் நடந்த மகாமக சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது,
அன்று நடந்த அந்த சோக சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் மகாமக குளத்தில் மூழ்கியும், கூட்டநெரிசலில் சிக்கியும் பலியானார்கள்...

1/n...
அந்நாளில் முதல்வர் ஜெயா தனது தோழி சசியுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கிய காரணம், மகாமக குளத்தில் தான் குளிப்பதை பார்க்க வரச்சொல்லி போஸ்டர் ஒட்டி வந்த கூட்டத்தால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 300க்கும் மேல் படுகாயமடைந்தனர்...

2/n...
1992ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயாவுக்கு அவரின் கேரள ஜோதிடர்கள் “நீங்கள் மகாமக குளத்தில் குளித்தால் உங்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்" என்று கணித்துக் கொடுத்து இருந்தார்கள்... அதற்கு பலியானது 60 உயிர்கள் இதை சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி கடந்து சென்றது ஜெயா...

3/n...
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!