Discover and read the best of Twitter Threads about #வாழ்க_பாரதம்

Most recents (24)

தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த வெங்கடாசலபதி ஆலயங்கள்...

வெங்கடாசலபதி என்றாலே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்தான்.

1 Image
ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு,பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

2
தலைமலை

நாமக்கல் மாவட்டத்தில் முசிறியில் இருந்து நாமக்கல் செல்லும் வழித்தடத்தில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது.இங்கிருந்து வடக்கு திசையில் நீலயாம்பட்டி அடுத்துள்ளது செவிந்தப்பட்டி.இங்கு தான் தலைமலை வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது.

3
Read 17 tweets
*விவசாயிகளை காத்தருளும் கங்கையம்மன்*

சென்னையை அடுத்த காரப்பாக்கம், பெரிய பெரிய ஐ.டி., நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியாகும். முன்னொருகாலத்தில், இப்பகுதி விவசாயம் செய்யும் செழிப்பான பகுதி. பல ஊர்களுக்கு அன்னமிட்ட பகுதி. ஏராளமான விவசாயிகள் வாழ்ந்த பகுதி.

1 Image
அன்று அவர்களுக்கு அருளவே “கங்கை அம்மன்’’ இங்கு (காரப்பாக்கம்) கோயில் கொண்டாள். அப்போது, 300 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, 50,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். எப்படி இங்கு கங்கை அம்மன் தோன்றினாள்?

2
அதற்கு நாம் பல நூற்றாண்டிற்கு முன்பு செல்லவேண்டியிருக்கிறது.

கபில முனிவர், இறைவனை வேண்டி கடும் தவமிருக்க, கங்கையிலிருந்து கமண்டலத்தில் தண்ணீரை எடுத்து வரும் பொழுது, கால் இடறி, கையில் இருந்த கமண்டலம் கீழே விழுந்துவிடுகிறது. அதினுள் இருந்த கங்கை நீர் சிதறின.

3
Read 33 tweets
பெண் வடிவ தட்சிணாமூர்த்தி...!!!

சிவனுடன் போட்டி நடனமிட்ட பார்வதி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளி கோவிலில் அருள்பாலிக்கிறாள். இங்கு பெண் வடிவ தட்சிணாமூர்த்தி உள்ளார்.

1 Image
தலவரலாறு:

சிவ, சக்தி இடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என வாதம் ஏற்பட்டது. 

பார்வதிதேவி, 'நானே உயர்ந்தவள்' என வாதிட்டாள். ''சரி...நீயே உயர்ந்தவளாக இரு!'' என்ற சிவன் அவளை உக்கிர (கோபம்) காளியாக மாற்றி விட்டார். 

2
தாயுள்ளம் கொண்ட தனக்கு கோபம் வரும்படி ஆகி விட்டதே என வருந்திய பார்வதி, சிவனிடம் விமோசனம் கேட்டாள்.

அதற்கு சிவன், ''பார்வதி! நீ வருந்த வேண்டாம். உலக நன்மை கருதி நான் செய்த திருவிளையாடலே இது. 

3
Read 11 tweets
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோவில்* வள்ளிமலை,
வேலூர் மாவட்டம்.

வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந் துள்ளது.

1 Image
இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானை யுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.
புராண வரலாறு சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கர ராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளார்.

2
முக்குடைக்  குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாகக் காட்டப் படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர் என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வ மாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர்.

3
Read 11 tweets
*சேலம் அரியானூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1008 சிவலிங்கம் கோவில்*

அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது.

1 Image
இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக் கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம்.

2
கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது. இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது.

3
Read 12 tweets
சிவன் மலை  சுப்பிரமணிய சுவாமி..

சிவா என்றால், சிவனையும், அஜலம் என்றால் மலையையும், பதி என்றால் முருகன் என்றும் பொருள் சொல்லப்படுகிறது.

1 Image
18 சித்தர்களில் சிறப்பு வாய்ந்தவரான, சிவவாக்கிய சித்தர், தவமிருந்தபோது, வள்ளியம்மையுடன் காட்சியளித்து, முருகன் உபதேஷம் அளித்ததால், சிவமலை என பெயர் பெற்றது; நாளடைவில் சிவன்மலை என மருவியுள்ளது.

2
சிவன் மலை மீது உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே அங்கு வைக்கப்பட்டிருக்கும் ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ தான்.

3
Read 17 tweets
அஹோபிலம்...

ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று   கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய்  எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி .

1 Image
அஹோபிலம் என்ற இந்த  திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில்  கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.

2
கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள  அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது  நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

3
Read 32 tweets
*அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை*

திருவிழா

ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி.

தல சிறப்பு

கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது சிறப்பு.

1 Image
பொது தகவல்

நாகதோஷம், செவ்வாய் தோஷம், கார்க்கோடகதோஷம், மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் நடக்கிறது.

2
இதற்காக பக்தர்கள் அருகிலுள்ள மீமிசல் கடலில் குளித்துவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரணியிலும் குளித்து ஈரத்துடன் கல்யாணராமர் சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகிறது.

3
Read 16 tweets
ஆவணியாபுரம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.....

லட்சுமி நரசிம்மர் திருமண தடை நீக்கும் நவ நரசிம்மர்....

1 Image
ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.

2
தட்சிண சிம்மாசலம் என்றும் தட்சிண அகோபிலம் என்றும் சொல்லப்படும் இந்த நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

3
Read 15 tweets
கூடலழகர் திருக்கோயில், மதுரை.

மூலவர் : கூடலழகர்
உற்சவர் : வியூக சுந்தரராஜர்
தாயார் : மதுரவல்லி (வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
தல விருட்சம் : கதலி
தல தீர்த்தம் : ஹேமபுஷ்கரணி

1 Image
தல வரலாறு

பிரம்மாவின் மகன் சனத்குமார், பெருமாளை மனித ரூபத்தில் காண ஆசைப்பட்டு, பெருமாளை வேண்டி தவமிருந்தார். இவரது பக்தியை மெச்சி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தந்தார்.

2
சனத்குமார், தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தான் கண்ட காட்சியை வடிவமைக்கச்
சொன்னார். அவ்வாறு வடிவமைத்த சிற்பத்தை அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர்.

3
Read 20 tweets
*சிக்கலான நோய் தீர்க்கும் சிந்தாமணி வைத்தீஸ்வரர் கோவில்*

பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ் வரன் கோவில்.

1 Image
அம்மனின் பாதங்கள் கொண்ட கோவில், சோழப் பேரரசியின் பெயரால் உருவான திருத்தலம், சித்தர் சமாதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.

2
இந்த இறைவன் முன்காலத்தில் குலோத்துங்கச்
சோழீஸ் வரமுடைய மகாதேவன் என்று அழைக்கப்பட்டதாக குறிப்புகள் சொல் கின்றன.
தின சிந்தாமணி என்ற பேரரசியின் பெயரால் அழைக்கப் பட்ட இவ்வூர், இன்று ‘சிந்தாமணி’ என்று வழங்கப்படுகிறது.

3
Read 14 tweets
*சகல தோஷங்களும் போக்கும் கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்*

கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கும்
கேடிலியப்பரை வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

1 Image
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது.

2
அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து  ‘வட பத்ரி காரண்யம்’ ஆயிற்று. மற்றொரு  துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி ‘தென் பத்ரி காரண்யம்’ ஆயிற்று.

3
Read 22 tweets
பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் உள்ளது. 

குடும்ப ஒற்றுமை காக்கும் கோதண்டராமர் கோவில்....
முள்ளங்குடி.

1 Image
பச்சை பசேல் வயல் வெளிகளும் கரும்பு சோலைகளும் நிறைந்த அழகான ஊர் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் இங்குதான் உள்ளது.

2
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவுவாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது.

அடுத்துள்ளது மகாமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் முன்பு இடது புறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சேநயரும் அருள்பாலிக்கின்றனர்.

3
Read 15 tweets
*ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உத்திரமேரூர்.*

மூலவர் 

1. ஸ்ரீ சுந்தரவரதராஜபெருமாள்

2. ஸ்ரீ வைகுந்தபெருமாள்.

3. ஸ்ரீ அரங்கநாதன்

தாயார் 

1. ஸ்ரீ ஆனந்தவல்லிதாயார்

2 ஸ்ரீ நிலமகள்,

3 திருமகள்

1 Image
தீர்த்தம் 

ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் பிரம்மதீர்த்தம் உள்ளது. 

உத்திரமேரூர் ஊரின் பெயர்

உத்து-ஹர-மேரூர் என்றால்
தூண்டுதல் -பாவங்களை போக்குவது- மேன்மை பொருந்திய ஊர்

ஆகவே கடவுளை வணங்க தூண்டுதல் செய்து பாவங்களை
போக்கும் ஊர் இந்த 
உத்திரமேரூர் ஆகும்.

2
பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று இவ்வூரை உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கிறது. 

இவ்வூர் பற்பல வம்ச அரசர்களின் ஆடசிக் காலத்தில் பற்பல பெயர்களில் அழைக்கப்பட்டன: 

3
Read 59 tweets
*நவக்கிரக  தோஷம்  அகற்றும்  தட்சிணா மூர்த்தி*

தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள தாருகாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது மத்தியஸ்வரர் கோவில்.

1 Image
இறைவன் திருநாமம் மத்தியஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

இக்கோவிலிலுள்ள தட்சிணா மூர்த்தி, தனது காலடியில் ஒன்பது நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை.

2
நவக்கிரக பீடத்தில் அமர்ந்து இருக்கும் தட்சிணா மூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும்
வணங்கியதற்கு சமமாகும்.

3
Read 6 tweets
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "அருள்மிகு உத்தமர் திருக்கோவில்."

"ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும்".

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.

1 Image
சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி, அவரை தனது கணவர் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

2
இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை.

3
Read 10 tweets
அருள்மிகு
ஶ்ரீ (தேவி, பூதேவி)
செங்கமலவல்லி தாயார் சமேத
ஶ்ரீ ராஜகோபாலசுவாமி  திருக்கோயில்,
(சதுர்வேதி மங்கலம்)
மணிமங்கலம்,
தாம்பரம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

1 Image
சுமார் 1000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலத்தில் பத்ம விமானத்தின் கீழுள்ள கருவறையில்,
நான்கு திருக்கரங்களுடன்,
ஶ்ரீ தேவி, பூதேவியுடன்
ஶ்ரீ ராஜகோபாலர் அருட்காட்சியளிக்கிறார்.

2
பொதுவாக, வலது கரத்தில் சக்கரமும்,
இடது கரத்தில் சங்கும்
வைத்திருக்கும் பெருமாள்,
இத்தலத்தில் வலது கரத்தில் சங்கும்,

3
Read 9 tweets
*அற்புத ரகசியங்கள் நிறைந்த அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி*

தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.

1 Image
இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.

ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.

2
அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

3
Read 24 tweets
நந்தி மூலவராக அருள்பாலிக்கும் கோவில்...

பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார்.

ஆனால் பெங்களூருவில் உள்ள  பசவன்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

1 Image
இந்த நந்தி கோவில் பசவன்குடியில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுக்கு ஊதுகுழல் குன்று என்ற பெயர் வழங்கப்படுகிறது.

2
இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

3
Read 11 tweets
செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் - சூட்சுமபுரீஸ்வரர் கோவில், சிறுகுடி

தமிழ்நாட்டில் உள்ள நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலங்களில் ஒன்றுதான், பாடல் பெற்ற  திருச்சிறுகுடி என்ற தலம்.  இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர்
பதிகம் ஒன்று உள்ளது.
  
1 Image
இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவி பெயர்: மங்களநாயகி

கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில், கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து, அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி, சுமார் 3 கி.மீ. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது.

2
திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்துக்கு வர சாலை வசதி உள்ளது.

3
Read 18 tweets
நவ பாஷாண திருமேனி;இரவில் பூசப்படும் சந்தனம்...

பழநி மலைக் கோவிலுக்குச் செல்வோர்,மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி,தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம்.

1 Image
தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது,தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.

2
மலைக் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.ராஜ கோபுரமும்,இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும்,42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன.கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.

3
Read 21 tweets
அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் , சென்னை 

உள்கலந்து  ஏத்தவல்லார்க்கு  அலால்
     கள்ளம்   உள்ளவழிக் கசிவானவன்
     வெள்ளமும்  அரவும்  விரவும்  சடை
     வள்ளலாகிய   வான்மியூர்  ஈசனே  - திருநாவுக்கரசர்
             
1 Image
சென்னையில் சிறந்துவிளங்கும் சிவத்தலங்களில் முக்கியமானவை, வடக்கில் திருவொற்றியூர், மத்தியில் திருமயிலை, தெற்கில் திருவான்மியூர் ஆகும் . இதில்    திருமயிலையிலும்,  திருவான்மியூரிலும்  மூலவர்   மேற்கு  நோக்கி  உள்ளனர்.    

2
“அப்பைய” தீட்சிதர் என்ற பக்தர் ஒருவருக்கு காட்சி தருவதற்காக  திருவான்மியூரில்   மூலவர்    திரும்பியதால், இந்த ஆலய சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கிறார்  என  கூறப்படுகிறது..
              
3
Read 40 tweets
இடர் தீர்த்த பெருமாள் கோவில் - நாகர்கோவில்:

நாகர்கோவில் நகரில் வடிவான தெருக்கள் அமைந்த வடிவீஸ்வரம் பகுதியில் இடர் தீர்த்த பெருமாள் கோவில்.

1 Image
குமரி மாவட்டத்தில் இடர்தீர்த்த பெருமாள் கோவில் என்றால் அறியாதவர்கள் இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இத்தல இறைவன் அந்தப் பகுதியில் வெகு பிரபலமானவர்.

2
கிழக்கு நோக்கி அமையப்பெற்ற இந்தக் கோவிலில் இடர் தீர்த்த பெருமாள் சன்னிதி நடுநாயகமாக உள்ளது. பெருமாளும் கிழக்கு நோக்கியே காட்சி அளிக்கிறார். கருவறையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் பெருமாளை தரிசிப்பது கண்கொள்ளக் காட்சியாகும்.

3
Read 11 tweets
*கார்கோடகனுக்கு ஈசன்  முக்தி  அருளிய கோடக  நல்லூர்  கோவில்*

ஒவ்வொரு  மனிதனும்  தனது வாழ் நாளில் செவ்வாய்  திசையின்  ஆட்சி நடக்கும்  காலங்களில்,  தனக்கு நன்மைகள்  மட்டுமே  நடைபெற  வேண்டும்  என்று  விரும்பினால்,  அவசியம்  செல்ல  வேண்டிய  திருத்தலம் கோடக நல்லூர்.

1
நெல்லையில் இருந்து 10  கிலோமீட்டர்  தொலைவில்  அமைந்துள்ளது இந்த ஊர்.  நெல்லை  மாவட்டம்  சேரன்மா தேவி - முக்கூடல்  செல்லும்  ரோட்டில் நடுக்கல்லூர் என்ற  ஊரில் இருந்து, தெற்கே ஒரு  கிலோமீட்டர்  சென்றால்  கோடகநல்லூர்  கிராமத்தை  அடையலாம்.

2
இந்த  ஊர் பழங் காலத்தில்  ‘கார் கோடக ஷேத்திரம்’  என்றும், ‘கோடகனூர்’  என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர்  இவ்வூரை  தட்சிண சிருங்கேரி என்று  புகழ்ந் துரைக்கிறார்.  இங்கு பாயும் தாமிரபரணி  நதிக்கு தட்சிண  கங்கை என்ற பெயரும்  உண்டு. 

3
Read 28 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!