Discover and read the best of Twitter Threads about #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்

Most recents (24)

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவந்தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்து இருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன.
அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர். ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம் என
பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள். ஆச்சார்யர்கள் சொன்னதை விட, ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார். “கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று! பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார சேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன்
Read 6 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
இறையுணர்வை அடைய நாவின் முக்கியத்துவம் வைஷ்ணவ பரம்பரையில் ஒன்றான #கௌடீய_ஸம்பிரதாயத்தில் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே சமயம் உயர்ந்த இலக்கான தூய கிருஷ்ண பக்தியை அடைவதற்கு இடையூறாக இருக்கும் இதர
விஷயங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப் படுகிறது. கிருஷ்ண உணர்வின் முக்கிய செயல்களான திருநாம உச்சாடனம், கிருஷ்ண பிரசாதத்தை ஏற்று மதித்தல் ஆகிய சேவைகள் நாவினால் செய்யப்படுவதால்,
ஸேவோன் முகே ஹி ஜிஹ்வாதௌ, பக்தித் தொண்டு நாவிலிருந்தே ஆரம்பமாவதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ண
பக்தியை அடைவதற்கு நாவே முதல்படியாகத் திகழ்கிறது. மூவகை குணங்களும் உணவுகளும் ஸத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களாலான பௌதிக உலகில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இங்கு வாழும் அனைத்து ஜீவராசிகளும் இந்த முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றனர். நாம் விரும்பி
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்கள் தரிசித்து வணங்க வேண்டும் என அவர்கள் வீட்டு வாசலுக்கே வருகிறார். ஒரு சமயம் அவ்வாறு எழுந்தருளும் போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள். ஒருவர்
மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் தயாராக வைக்கவில்லை. அனால் அவர் ரொம்ப பக்திமான். பகவானிடம் போய் நின்று கொண்டு, "அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள். உன்னிடம் எது
இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்" என்றார். உடனே பரமாத்மா, “இவ்வளவு சொல்கிறீறே, நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா?”
“உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி” என்றார் பக்தர். “என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா?” பகவான் கேட்கிறார்.
“அதைத்
Read 9 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரம்ம தேவர் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் கூறிகிறார், பகவானே! கோகுல வாசிகள் அனைவரும் உன் பரம பக்தர்கள். அவர்களின் நீண்ட கால ஆசையான, உன்னுடன் கூடி விளையாடுவது, உன் லீலைகளில் பங்கேற்பது, உன் திவ்ய பார்வையில் மேலும் தூய்மை அடைவது, உன் தாயாக மகிழ்வது, ஆகியவைகளை
நிறைவேற்றவே நீங்கள் இந்த திவ்ய அவதாரம் எடுத்து ஆயர்பாடி சிறுவர்கள், கோபியர்கள், பசுகள் கன்றுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள்! குழந்தையாக கோபியர்களை அணைத்து அவர்களை எல்லையில்லா மகிழ்ச்சியை அனுபவிக்க வைக்கிறீர்கள். இந்த அனுபவத்தை பெற தேவலோக அதிர்ஷ்ட தேவதைகள் தவமாய் தவமிருந்தும்
அவர்களுக்கே கிடைப்பது அரிய விஷயமாகும். எனவே கோபியர்களின் பாக்கியத்தை அளவிடவே முடியாது. உன் திருவடிகளை விரஜபூமியான பிருந்தாவன கோகுலத்தில் பதிய வைத்து ஒரு புனித ஷேத்திரம் ஆக்கியுள்ளீர். இங்கு ஜென்மம் கிடைப்பது அரிய வாய்ப்பாகும்! எனவே பரந்தமா! எனக்கு மறுபிறவி இருந்தால் நான் இந்த
Read 4 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. குப்புறக் கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்தான். யசோதை, அதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாள். இதற்கிடையே கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் என்ற மற்றொரு ராக்ஷஸன்,
வண்டியின் உருவெடுத்து, கோகுலத்தில் யசோதையின் வீட்டிற்கு அருகே. குழந்தையைக் கொல்வதற்காகக் காத்திருந்தான். விழாவிற்கு, யசோதையும் நந்தகோபரும், கோகுலத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். யசோதை, குழந்தையை நன்கு குளிப்பாட்டி, அலங்கரித்து விட்டாள். குழந்தைக்குத் தூக்கம் கண்ணைச்
சொருகியது. அதனால், அருகில் இருந்த அந்தப் பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை கண்ணன் ஆழ ஆரம்பித்தான். வேலையின் மிகுதியாலும், கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும்
Read 9 tweets
இந்த மாதிரி பக்தனும், பக்தனுக்காக உருகும் பகவானுமே நம் வரம்.

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ராம பக்தர் பெயர் ரகுதாசர், அவருக்கு ரொம்ப பொருத்தமான பெயர். ஒரு நாள் அவர் ஜெகன்நாதர் கோவிலில் தரிசனம் செய்ய அவன் முன் நிற்கும் போது அவர் கண் எதிரே தோன்றியது ராமர். அந்தக் கணம் முதல் ஜெகந்நாதர்
வேறு யாருமில்லை ராமர் தான் என்று எங்கும் சொல்லிக் கொண்டே போனார். ஒரு நாள் நிறைய பூகளை பறித்துக் கொண்டு வந்து பூமாலை தொடுத்தார் ரகுதாஸர். இதை ஜெகநாதனுக்கு அணிவியுங்கள் என்று மாலையை பட்டாச்சார்யாரிடம் கொடுத்த போது அதை அந்த பட்டர் வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டார். மாலையை ரகுதாஸர்
வாழை நாரில் தொடுத்திருந்தார். இந்த பழக்கம் அப்போது ஜகந்நாதர் கோவிலில் இல்லை. ஜெகன்னாதா, எவ்வளவு ஆசை ஆசையாக நான் இந்த மாலையை மணிக்கணக்காக உனக்கு என்று தொடுத்தேன். நீ ஏற்றுக் கொள்ள மறுத்தாயே என்று வருத்தம். கண்களில் தாரையாக நீர். மெதுவாக வெளியே நடந்தார். கோவிலில் வழக்கம் போல
Read 12 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று கூடி அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை எடுத்து புற்றை கட்டத் தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. தினம் அந்த இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும்
வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு கரையான்கள் புற்றைக் கட்டி முடித்தன. பாம்பு, “கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?” என்று கேட்டது. கரையான்களும் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியே வரும் என்று
கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன. “புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புங்கள், இல்லை என்றால் என் விஷத்துக்கு இரை
Read 12 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பாண்டுரங்கனின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் யோகி பிரேமானந்தர். அவருடைய வழக்கமான வேலை விடிகாலை எழுந்ததும் நதிக்கு செல்வது, நீராடுவது, விட்டலனுக்கு பிரார்த்தனை, பிறகு ஷோடசோபசாரம் செய்து 700 நமஸ்காரம் பண்ணுவது. நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!அதற்குப்
பிறகு பகவத் கீதை பாராயணம். மறுபடியும் நமஸ்காரம். பிறகு தான் இலையில் சோறு. அப்படியொரு பக்தி! அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான். அந்த நேரம் பார்த்து திடீரென்று
விடாத இடி இடித்து பெரிய மழை. வானம் பொத்துக்கொண்டது. சள சள வென்று பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது. வியாபாரியின் பார்வை, தூரத்தில் இதை எல்லாம் லட்சியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. அது தான் பிரேமானந்தர். பாண்டுரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம் செய்து
Read 17 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #துளசி எந்த வீட்டில் காலையிலும் மாலையிலும் துளசி தேவியை வணங்கி வருகிறார்களோ அங்கு யமதேவன் நுழைய முடியாது,
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
நாள்தோறும் தீபமேற்றி பூஜிப்பவர் நூற்றுக் கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர். துளசியின் காற்று பட்டாலும் துளசியை வலம் வந்து
வணங்கினாலும் எல்லா பாபங்களும்
நீங்கும். தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப் பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர். பகவானது தாமரைப் பாதங்களில்
சந்தனம் கலந்து துளசி இலையை சமர்ப்பிப்பவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர். துவாதசி தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார். துளசி இலைகளை பெளர்ணமி,
அமாவாசை, துவாதசி, சூர்ய
சங்கராந்தி, உச்சி மதியம், இரவு,
சந்த்யா வேளைகளில் பறிக்கக்
கூடாது. பிரதிஷ்டை செய்யப்பட்ட
Read 6 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் பிறந்து செருப்பு தைக்கும் வேலையில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தன்னுடைய குடும்பம் வயிறு கழுவினாலும், இரவும் பகலும் பாண்டுரங்கன் மேல் அளவில்லாத பக்தி கொண்டு அவனை போற்றி பாடுவதிலே தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டவர் ஸந்த் ரோகிதாசர். ஏகாதசி
அன்று அவர் பஜனை நாள் பூரா கோவில் அருகே நடக்கும். அனைவரும் பக்தி ரசத்தில் மூழ்கி அனுபவிப்பார்கள். இதனால் அவரால் ஒரு மாசத்துக்கு 10 ஜோடி செருப்பு தான் பண்ண முடிந்தது. அதை வைத்து அரை வயிற்று கஞ்சி தான் அவருக்கு இருந்தாலும் பகவன் நாமா சொல்லி ஆனந்தமாக நாட்களை நகர்த்தினார். அப்படி
இருக்க ஓர் நாள் அந்த ஊர் ராஜாவுக்கு திடீரென்று அடுத்த ஊர் ராஜாவின் மேல் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் படை வீரர்களுக்கு காலணி வழங்க ஊரிலுள்ள அனைத்து செருப்பு தைக்கும் தொழிலாளிகளிடமும் ஒருமாத காலத்தில் தலா 1000 ஜோடி செருப்பு தைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். எல்லா
Read 13 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னொரு சமயம் குருவாயூர் கண்ணனின் தீவிர பக்தையான ஒரு மூதாட்டி குருவாயூர் அருகே வாழ்ந்து வந்தாள். ஒவ்வொரு நாளும் காலை மாலை குருவாயூரப்பன் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது அவள் வழக்கம். ஒரு நாள் #சீவேலி_தரிசனம் முடிந்து வீட்டுக்குத்
திரும்பும் போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே சென்று கொண்டு இருந்தாள். அப்போது ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை
நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, உன் பெயர் என்ன என்று கேட்டாள். அதற்கு அவன் #கோபாலன் என்று சொன்னான். மூதாட்டி, நீ
Read 8 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீராமர் உதித்த ரகுவம்சத்தில் #ஹரிச்சந்திரன் என்ற மஹாராஜா மாபெரும் வேந்தனாக‌ அரசாண்டு வந்தான். அவன் சத்தியத்தையும், நேர்மையையும் உயிர் மூச்சாக கொண்டிருந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்று மகனும் இருந்தார்கள். நாடு சுபிக்க்ஷமாகவும்
எதிரிகளின் பயமில்லாமல் இருந்தது. ஆனால் விதியின் விளையாட்டால் ஹரிச்சந்திரன் நாட்டை இழக்க நேர்ந்தது, மனைவியையும், மகனையும் விற்கவும் நேர்ந்தது.  விதி, பக்திமானான ஹரிச்சந்திரனை மயானத்தை காவல் காக்கும் பணியில் அமர்த்தியது. இந்த இழி நிலையிலும் ஹரிச்சந்திரனும் தன் சுயதன்மையை இழக்காமல்
அழிவில்லாமல் என்றும் நிலைத்திருக்கும் உண்மையையும், நேர்மையையும் அந்நிலையிலும் விடாமல் கடைப்பிடித்து வந்தான். பல ஆண்டுகள் இந்த நிலைமையில் கழிந்தன. ஒரு நாள் தன் நிலையைக் குறித்து துக்கசாகரம் என்னும் மஹா சமுத்திரம் அரசனை ஆட்கொள்ளத் தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக அவன் அப்போது கௌதம
Read 11 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முற்கலன் என்பவரின் பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில் நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து "ஏனய்யா இப்படி வந்து நிற்கிறாய்? நீ ஒரு தடவையாவது ஸ்ரீமந் நாராயணன் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள்
நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா! சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளனவே. அதில் ஒரு நாமத்தையாவது சொல்லி இருக்கலாமே?
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!
என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது?” என்று கடவுள்
நாமத்தின் மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டு இருந்தான் எமன். #ரங்கா என்று ஒருதடவை சொல்லியிருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே.

அறிவிலா மனிதர் எல்லாம்
அரங்கமென்று அழைப்பராகில்
பொறியில்வாழ் நரகம் எல்லாம் புல்லெழுந்து ஒழியுமன்றோ?

அறிவு இல்லாத மனிதன் கூட
Read 8 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, ஊர் ஊராக சென்று இறைநாமத்தை பரப்பி, உபந்யாசங்கள் செய்து வந்தார்.
திருவிசநல்லூரில், வெங்கடேச ஐயாவாள் தங்கியிருந்த போது அவருடைய உபந்யாசங்களையும், நாம மகிமையையும் கேட்டு, மக்கள் ஆனந்தப்பட்டனர். அப்போது அந்த ஊரில் இருந்த சிலர், மிக ஆடம்பரமாக, கோகுலாஷ்டமி விழா கொண்டாடினர். கண்ணன் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊர்வலம், ஸ்ரீ ஐயாவாள் வசித்த, குடிசை
வீட்டை நெருங்கிய போது, கண்ணனை தரிசிக்கும் ஆவலில், வெகு வேகமாக வெளியே வந்தார் ஸ்ரீ ஐயாவாள். அவர் மீது பொறாமை கொண்ட ஊர்வலக்காரர்களோ, அய்யா பெரியவரே பக்தியில்லாத உங்கள் தீபாராதனைக்காக கண்ணன் ஒன்னும் காத்திருக்கவில்லை. இந்த இடம் விட்டு நகருங்கள். உங்கள் வீட்டில், தீபாராதனை எடுக்க
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #வினாயகசதுர்த்தி #ஸ்பெஷல் #HappyGaneshChaturthi
ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதை எண்ணிக் குழப்பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வரனிடம் முறையிட்டனர்.
பரமன் தனது தர்ம பத்தினியாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத்தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான். மற்றவர்களது கண் படாமல் இருக்கப் பார்வதி தேவி பிறரை மயங்கச் செய்யும் அழகான வடிவத்தை மாற்றி
பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி புது உருவத்தை தந்தாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கு எல்லாம் தலைவனாக நியமனம் செய்தார். இனிமேல் எந்தக் காரியம் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத்
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
கண்வ மகரிஷி யசோதையின் தந்தை சுமுகரின் இல்லப் புரோகிதர். அவர் தினமும் சாளக்கிராம வடிவிலுள்ள திருமாலுக்குப் பக்தியுடன் பூஜை செய்வார். தான் எந்தப் பொருளை உண்டாலும், அதை முதலில் சாளக்கிராமப் பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணிய பிறகு தான் உண்பார். நந்தகோபர் கண்வரிடம்
அடியேனுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நீங்கள் வந்து அக்குழந்தையைப் பார்த்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று நெடு நாட்களாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். கண்ணன் பிறந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் கண்வர் கோகுலத்துக்கு வந்தார். தான் பூஜிக்கும் சாளக்கிராமத்தை
நந்தகோபரின் மாட்டுக் கொட்டகையில் வைத்தார். ஏனெனில் மாட்டுக் கொட்டகையில் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால், நூறு முறை சொன்னதற்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அங்கேயே அவர் பெருமாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டிய உணவுகளைத் தயாரிக்கவும் யசோதை ஏற்பாடு செய்து தந்தாள்.
காய்கறிகள்,
Read 12 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
தாஸியா ஒரு அப்பாவி. அவருக்கு பூரி ஜகந்நாதனை பற்றி அவ்வளவாக தெரியாது, ஆனால் அவர் ஊரில் வந்த பாகவதர்கள் ஜகந்நாதன் சரித்திரம் சொல்லவதை தூரத்தில் இருந்து கேட்டு இருப்பார். ஓ இவ்வளவு பரமக்ருபாகரனா இந்த ஜகந்நாதன் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு அவனை தியானிக்க
ஆரம்பித்தார். தினமும் ஹரி பஜனை செய்து வாழ்வை பயனுள்ளதாக மாற்றி கொள் என வந்த ஒரு பாகவதர் உபதேசம் செய்தார். இவரும் தினமும் ஜகந்நாதா! ஜகந்நாதா! என சொல்லி கொண்டு வாழ்வை நகர்த்தி வந்தார். ஒரு நாள் இவருக்கு ஜகன்னாதனை நேரில் தரிசிக்க ஆவல் வந்தது. இவர் ஊரில் இருந்து கிளம்பி நடக்க
ஆரம்பித்தார். நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார், ஒரு வழியாக வந்து சேர்ந்தார். நம் ஜகந்நாதனுக்கு ஏதாவது கொடுக்கலாமே என்று தன் கையில் இருந்த சிறு தொகையை வைத்து ஒரு தேங்காய் வாங்கி, அதை சமர்ப்பிக்க ஒரு துண்டில் வைத்து முடிந்து கொண்டு சென்றார். போகும் வழியில் வாயில் காப்பாளன்
Read 6 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு நாள் கிணற்றருகில் ஒரு கோபிகை தண்ணீர் குடத்தை யாராவது தூக்கி வைக்க உதவுவார்களா என பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்தான்.
கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்கி தலை மேல் வைக்க அவனை கூப்பிட்டாள். கிருஷ்ணனோ
கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய் கொண்டு இருந்தான். கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.
அவன் திரும்பி கூட பாராமல் போய் விட்டான். ஒரு வழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தன் வீடு
வந்தவள் அதிர்ந்தாள். அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தான். கோபிகை வாசல் அருகே வந்ததும் தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான். உடனே கோபிகை, கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்த போது நீ திரும்பிகூட பார்க்காமல் சென்று விட்டாய்.
Read 4 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு முறை நாரத மகரிஷி கவலையுடன் காணப்பட்டார். அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள். நாரதர், தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக
விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார். மஹாலக்ஷ்மி, நாரதா அப்படி என்றால் ஒன்று செய். ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள். நாரதரும் ரிஷிகேசம் வந்தார். கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல
வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம், என்ன நாரதரே சௌக்கியமா என்றது. பேசும் மீனை அதிசியமாக பார்த்துக் கொண்டே நாரதர், ம்ம் ஏதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார். மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் ஏதோ நலமாக
Read 8 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டு இருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, நான் கொடுக்கிறேன் மாந்தாதா என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார். மனித சரீரத்தில் ஒவ்வொரு
அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின் போது வாயில் விரல் இட்டுக் கொள்கிறது. ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர்
வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை #அமிர்த_வபு என்கிறது.
இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில் போட்டு கொண்டு
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன் ஒரு பக்தர் மதன் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரகம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் திருமஞ்சனம், அலங்காரம் செய்வது
மலர்களைக் கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார். அந்த குட்டி கிருஷ்ணனுக்கு #சதங்கைஅழகர் என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம்” என்று பக்தி
மேலிட கூறி மகிழ்வார் மதன். ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும் போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது! அவரை பார்த்து அழகாக சிரித்தது
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் ஓர் அந்தணர், தீவிர விட்டல பக்தர் வசித்து வந்தார். குடும்பம் பெரியது என்பதால் அவருக்குப் பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப் பட்டது. ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு, கையில் ஏதோ கொஞ்சம்
குடும்பத்திற்கு திரவியமும் கிடைத்தது. வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜா ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான், மேலும் நிறைய தான தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப் பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார். அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம். காவலாளி யார்
நீங்கள் என்றான். பண்டரி புரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு என்றார். உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான். ராஜா அவரை உபசரித்தான். நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்குப் பூஜை செய்து விட்டு
Read 16 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
வைராக்கிய சீலரான ஆதிசங்கரர், தாம் இயற்றிய ஸ்ரீசுப்ரமணிய புஜங்கத்தில் ஒரு வாத்ஸல்யம் மிகுந்த காட்சியை இடம்பெறச் செய்கிறார். பார்வதியின் மடியில் அமர்ந்து இருக்கிறார் பாலமுருகன். பரமேசுவரன் இரு கரங்களையும் நீட்டி, முருகா இங்கே வா கண்ணே என்று ஆசையோடு அழைக்கிறார்
உடனே குட்டி முருகன் எழுந்து ஓடி அப்பாவிடம் செல்ல, அவர் அவனை அப்படியே வாரி அணைத்துக் கொள்கிறாராம்! அப்படிப்பட்ட குமாரக் கடவுளை நான் தியானிக்கிறேன் என்று புஜங்கத்தின் பதினெட்டாவது சுலோகத்தை முடிக்கிறார் பகவத்பாதர். அன்னை பார்வதியின் மடியில் குதூகலத்துடன் தவழ்ந்து விளையாடிக் கொண்டு
இருக்கும் குழந்தை முருகனை கண்டதும், தந்தை பரமசிவனுக்கு ஆனந்தம் பொங்கித் ததும்புகிறது.
ஆவலுடன் கைகளை நீட்டியவாறு அழைத்ததுமே, முருகனும் தாவிக் குதித்து தந்தை சிவனை அடைந்து அவரால் அணைத்து கொள்ளப் படுகிறான். அன்பே வடிவான சிவனுக்கு ஆனந்தம் மென்மேலும் அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களை
Read 5 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தார். சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர், அப்பனே பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி
என்றார். அதற்கு கிருஷ்ணர், பரவாயில்லையே சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது. என்னுடன் வா என அழைத்துச் சென்றார். பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உடன் சென்றார். சிறிது தூரம் சென்றதும் "பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக
உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளை இட்டார். பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார். வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார். உங்கள் வீட்டிலிருந்து சொம்பில் தண்ணீர் வாங்கி வரச் சொன்னார்” எனச்
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!