Discover and read the best of Twitter Threads about #ஶ்ரீரங்கம்

Most recents (5)

#ஶ்ரீரங்கம் #நம்பெருமாள் #பங்குனி_உத்திர_பிரம்மோத்சவம்
#பழையசோறும்_மாவடுவும்

நம்பெருமாள் கண்டருளும் இந்த உத்சவம் பங்குனி ஆதி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான 30/03/23 நடைபெற்றது. நம்பெருமாள் 29/03 இரவு 9 மணிக்கு பெரிய கோயில் கண்ணாடி அறையல் இருந்து புறப்பட்டு, சில
இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி 30 காலை 11 மணிக்கு ஜீயர்புரம் ஆஸ்தான மண்டபம் (திருச்சி-கரூர் சாலையில்)
சென்று அடைந்தார். மண்டபத்துக்குப் பக்கத்தில் உள்ள பலாச தீர்த்தக் குளத் தீர்த்தத்தில் திருவடி விளக்கினார்.
மண்டபத்தில் எழுந்தருளி மாலை 6 மணி வரை பக்தர்களைக் கடாட்சித்தார். twitter.com/i/web/status/1…
அங்கிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.30 மணிக்குப் பெரிய கோயில் சென்று சேர்ந்தார். நம்பெருமாள் புறப்பாடு செல்லும் இடங்களுள் இதுவே அதிக தூரமானது, 14 கி.மீ. எங்கும் பெருமாளை கீழே இறக்கி வைத்தலோ அல்லது கட்டை குடுத்து நிறுத்தி வைத்தலோ கிடையாது. இந்த பிரம்மாண்ட புறப்பாட்டை
Read 16 tweets
#ஶ்ரீமகாலட்சுமி_தாயாரின்_பன்னிரு_திருநாமங்கள்
1.  #ஶ்ரீரங்கநாச்சியார் - #ஶ்ரீரங்கம்
பன்னிரு திருநாமங்களில் முதல் திருநாமம்.
ஜீவர்களுக்கும் பரமனுக்கும் இடையே ஒரு பாலமாக பிராட்டி செய்யும் இவ்வுதவியை விளக்குவதே ஸ்ரீ: என்னும் திருநாமம். வடமொழியில் இப்பெயருக்கு ஆறு பொருள்கள் உண்டு.
#ஶ்ரீயதே - ஜீவர்கள் அனைவராலும் தஞ்சமாக பற்றப்படுகிறாள்.

#ஸ்ரயதே - தான் நாராயணனை சரணமாகப் பற்றுகிறாள்.

#ஸ்ருணோதி - தன்னை அண்டிய ஜீவர்கள் தங்கள் குறைகளையும் பாபங்களையும் விண்ணப்பிக்கும் போது காது கொடுத்துக் கேட்கிறாள்.

#ஸ்ராவயதி - ஜீவர்களுக்காகப் பரிந்து பேசி அவர்களது வேண்டுகோளை
பகவான் காது கொடுத்துக் கேட்கும் படி செய்கிறாள்.

#ஸ்ருணாதி - பெருமானை அடையத் தடங்கலாக இருக்கும் பக்தர்களின் பாவங்களை தன் அருளால் நீக்குகிறாள்.

#ஶ்ரீணாதி - ஜீவர்களைப் பெருமானோடு சேர்த்து வைக்கிறாள்.

2. #அம்ருதோத்பவா - #ஶ்ரீஅம்ருதவல்லி தாயார் - #சோளிங்கர்
இரண்டாவது திருநாமம்.
Read 9 tweets
#ஶ்ரீரங்கம் #பூலோக_வைண்டம் #ஶ்ரீரங்கநாதர்
எங்கும் சுத்தினும் ரங்கனச் சேர் என்பது ஆன்றோர் வாக்கு. ஶ்ரீரங்கத்தில் முழுதாக வாழ கொடுப்பினை இல்லாவிட்டிலும் இறுதி காலத்தையாவது ரங்கனை சேவித்துக் கொண்டு அங்கேயே வாழ விருப்பம் இல்லாதோர் இல்லவே இல்லை என்று அறுதியிட்டு கூறலாம். தினம்
பெருமாள் வீதி உலா வருகிறார். உடல் நலம் இல்லாவிட்டாலும் நம் வாசலில் எழுந்தருளி நமக்கு கடாக்‌ஷிக்கிறார். அதனால் பலருக்கும் வேலையில் இருந்து ஒய்வு பெற்றதும் ஶ்ரீரங்கத்திலேயே குடியிருக்க முயற்சி செய்கின்றனர். இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களை கேட்டு பயன் பெற வேண்டும் என்று
எத்தனை பேருக்கு ஆசை! நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது? அதற்கு என்ன காரணம்? ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல். அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இருந்து கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி” என்று
Read 14 tweets
#ரங்கநாதர் #ஶ்ரீரங்கம் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் இங்கு நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார்.
அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பின் முகம்
திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வகாலமும்
Read 11 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #ஶ்ரீரங்கம்
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி' என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்), ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் Image
யாருக்குத் தான் ஆசை இருக்காது?
#ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
“இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேஸ்ம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார். ஆசைப்பட்டது அனைத்தையும் கொடுக்கும் இடம்
ஸ்ரீரங்கம். இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்.
#பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.
#அதிகாரஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி #ஸ்வாமிதேசிகன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!