Discover and read the best of Twitter Threads about #ஸ்ரீமந்நாராயணீயம்

Most recents (5)

ஸ்ரீ கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கன்னையா என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள். கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்
படுவது வடமாநிலங்களில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற
#கீதகோவிந்தம் #ஸ்ரீமந்நாராயணீயம் #கிருஷ்ண_கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கிருஷ்ண லீலையை மனம் ஒன்ற
Read 6 tweets
🍄🍄 ஸ்ரீமந் நாராயணீயம் - பகுதி 1 🍄🍄

🌺🌺 பகவானின் வர்ணனை

(9) காருண்யாத் காமம் அன்யம் தததி கலு
பரே ஸ்வாத்மதஸ்த்வம் விசேஷாத்
ஐச்வர்யாத் ஈசதே அன்யே ஜகதி
பரஜனே ஸ்வாத்மனோ அபீ ஈச்வர; த்வம்
த்வயி உச்சை: ஆரமந்தி ப்ரதிபத
மதுரே சேதனா: ஸ்பீதபாக்யா:
த்வம் ச ஆத்மாராமா ஏவ இதி அதுல
குணகணாதார சவுரே நமஸ்தே

பொருள்: இனிமையான திருக்கல்யாண குணங்கள் உடைய வாஸுதேவனே! குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள பல தெய்வங்கள், தன்னை வணங்கும்பவர்களுக்கு தங்களை அல்லாமல் மற்றவற்றை மட்டுமே வழங்குகின்றன. நீயோ உன்னை வணங்குபவர்களுக்கு உனது ஆத்மாவையே (உன்னையே) கொடுக்கின்றாய், மற்ற
தெய்வங்கள் ஐஸ்வர்யத்தின் மூலமும் அணிமா போன்ற சக்திகளின் மூலமாக தங்களது ஈச்வர தன்மையை விளக்குகின்றன. நீயோ ஆத்மாவையே வென்று அதனை நிரூபிக்கின்றாய். புண்ணியம் செய்தவர்கள் உன்னையே அடைந்து உயர்ந்த ஆனந்தம் அடைகின்றனர். யாரிடமும் எதனையும் எதிர்பாராமல் உள்ளவனே! ஆனந்த ரூபனே! உனக்கு
Read 6 tweets
🍄🍄 ஸ்ரீமந் நாராயணீயம் - பகுதி 1 🍄🍄

🌺🌺 பகவானின் வர்ணனை

(8) நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததம் அபி
புரஸ்தைர் அநப்யர்த்திதானபி
அர்த்தான் காமாந் அஜஸ்ரம் விதரதி
பரமானந்த ஸாந்த்ராம் கதிம்ச
இத்தம் நி: சேஷலப்ப்யோ நிரவதி பல:
பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி Image
வ்யர்த்தம் அர்த்திவ்ரஜ: அயம்

பொருள்:

ஹரே குருவாயூரப்பா! நீ எளிதாக அடையக் கூடியவனாகவும் கேட்ட பலன்களை உடனே அளிப்பவனாகவும், பாரிஜாத மரம் போன்றும் உள்ளாய். உன்னை வழிபடுவோர்களுக்கு அனைத்தையும் நிரம்ப வழங்குகின்றாய். என்ன கேட்பது என்று அறியாதவர்கள் மனதில் உள்ள விருப்பத்தைப்
புரிந்தும் அளிப்பவன் நீயே. அவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் அளிப்பவனும் மோட்சம் அளிப்பவனும் நீயே. இப்படி நீ எளிதாக அடைய உள்ளவனாக இருந்தும் மனிதர்கள் தேவலோகத்தில் உள்ள கற்பக மரம் போன்ற அற்ப விஷயங்களையே விரும்புகின்றனரே!

(அர்த்தா = அறம், பொருள், வீடு, இன்பம்)
Read 4 tweets
திண்ணை மட்டும் உனக்குச் சொந்தம்! - நோயினால் விளைந்த காவியம்

'விதியை யாரால் வெல்ல முடியும்; எல்லாம் விதிப்படிதான் நடக்கும்' என்று மனிதர்கள் புலம்புவதைக் கேட்கிறோம்!

விதியையும் நல்ல விதி - தீய விதி என்று பிரித்துவேறு கூறுவார்கள். இது, அவரவர் பாவ புண்ணிய கணக்கின் வழி வருவது.
சாமான்யர் களுக்கான விதியும் அதனால் ஏற்படும் பலன்களும் அந்த நபரையோ அல்லது அவரைச் சார்ந்தோருக்கானதாகவோ அமையும்.

ஆனால், அருளாளர்களைப் பொறுத்தவரை விதிவசத்தால் அவர்களுக்கு உண்டாகும் பலாபலன்கள்... அவை, அவர்களுக்கான இன்னல்களாகவே இருந்தாலும், இந்த உலகுக்குப் பெரிய பலனை அளிப்பதாக
அமைந்துவிடுவது உண்டு. இதைத் `திருவிதி’ என்று கூறலாமோ என்னவோ? இப்படியான திருவிதியின் வசத்தால் பிறந்ததே `நாராயணீயம்' எனும் காவியம். குருவாயூர் எவ்வளவு பிரபலமோ, அவ்வளவு பிரபலம் `நாராயணீயம்!’ சரி! இனி, இந்தக் காவியம் உதித்த கதைக்கு வருவோம்.

கிருஷ்ண பகவானோடு அமர்ந்து பேசிப் பேசியே
Read 8 tweets
🍄🍄 ஸ்ரீமந் நாராயணீயம் - அறிமுகம் 🍄🍄

#ஸ்ரீமந்நாராயணீயம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தை மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதாகும். இதனை சுமார் 1580 - ஆம் ஆண்டின் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் இயற்றினார். இதனை இயற்றிய இடமானது பூலோக வைகுண்டம் என்று
அழைக்கப்படும் குருவாயூர் ஆகும். அங்கு உள்ள ஸ்ரீகுருவாயூரப்பனின் சன்னிதியிலேயே அமர்ந்து இதனை இவர் இயற்றினார்.

இதனை இயற்றக் காரணம்?

கேரள மாநிலத்தில் உள்ள மேப்பத்தூர் என்ற இல்லத்தில் நாராயண பட்டத்ரி பிறந்தார். இவர் பல வேத சாஸ்திரங்களை ஐயம் இன்றி தெளிவாகக் கற்றறிந்தார்.
இயற்கையாகவே மிகுந்த பக்தி உடையவரான பட்டத்ரியை, வாத நோய் பீடித்தது. இதனால் மிகவும் சிரமப்பட்ட நிலையில் இருந்த அவரிடம் ஒரு ஜோசியர், நீ சென்று #ஸ்ரீகுருவாயூரப்பன் இடத்தை அடைந்து, அங்கு அவனுடைய பெருமைகளை விளக்கும் நூலை இயற்றினால் இந்த நோய் நீங்கும் என்றார். உடனே இவரும் குருவாயூரை
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!