எழும்பூர்-திருவொற்றியூர் நீதிமன்றங்களில் திருமுருகன் காந்தி (செப்19)
* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்
* 2016ல் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, அதனைக் கண்டிக்காத ஒன்றிய அரசினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
#ReleaseThirumuruganGandhi
1/5
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்
* கடந்த ஆண்டு தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் இலங்கை தூதரக முற்றுகை நடத்தப்பட்ட போது, அதற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்து டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட வழக்கு
2/5
என 4 வழக்குகளுக்கு எழும்பூர் (அல்லிகுளம் வளாகம்) நீதிமன்றத்திற்கு தோழர் திருமுருகன் காந்தி அழைத்து வரப்பட்டார்.
அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 4 வழக்குகளுக்கும் பி.டி.வாரண்ட் பிறப்பித்து தேடப்படும் குற்றவாளியைப் போல காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
3/5
அதனை பார்த்த நீதிபதி, இதுவரையில் இந்த வழக்கில் திருமுருகன் காந்திக்கு சம்மன் ஏதும் வழங்கப்படாத போது பி.டி.வாரண்ட் எப்படி பிறப்பிக்க முடியும் என்றும், எந்த வழிமுறையின் கீழ் இப்படி அழைத்து வந்தீர்கள் என்றும் காவல்துறையினரை கண்டித்து அந்த 4 பி.டி.வாரண்ட்களையும் ரத்து செய்தார்.
4/5
பின்பு திருவொற்றியூர் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த ஆண்டு சிறையில் இருந்து விடுதலை ஆன போது புழல் சிறைக்கு வெளியில் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேசியதாக போடப்பட்ட இரண்டு தேசத்துரோக வழக்குகளுக்கு திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
5/5
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
