புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுப்பு
திருநெல்வேலி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது புதுக்கோட்டையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வேலூரிலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் ஒப்புதலின்..
#ReleaseThirumuruganGandhi
1/9
அடிப்படையில் தான் கூட்டத்திற்கான பிரச்சாரங்களும், செலவினங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரங்களில் அனுமதியினை மறுத்து ஜனநாயக மறுப்போடு சேர்த்து நிதிச் சுமையையும் திணிக்கிறார்கள்.
திருமுருகன் காந்தி அவர்கள் மீது சென்னை மெரீனாவில் வழக்கு நிலுவையில் உள்ளதால்...
2/9
புதுக்கோட்டையில் அனுமதி இல்லையாம்.
எத்தனை பெரிய கொடுமை இது? வழக்கு நிலுவையில் உள்ளது என்று அவர்களே தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு வழக்கு நிலுவையிலுள்ளது என்றால் அவர் மீதான குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று தான் அர்த்தம். குற்றம் நிரூபிக்கப்படாத வழக்கினை...
3/9
காரணம் காட்டி, (அதுவும் நினைவேந்தல் நடத்திய வழக்கு) எப்படி காவல்துறை, சென்னையிலிருந்து வெகு தூரத்திலுள்ள புதுக்கோட்டையில் நடத்த அனுமதி மறுக்க முடியும்?
அடுத்து, பொதுக்கூட்டத்தில் "சில விஷமிகள் கலந்துகொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருவதாலும்" என்று...
4/9
பாஜகவினரைப் போன்ற ஒரு கடிதத்தினை காவல்துறை அளித்திருக்கிறது.
விஷமிகள் யார் என்பதை காவல்துறை அடையாளப்படுத்த வேண்டாமா? ரஜினி, எச்.ராஜா சொல்வதைப் போல் சமூகவிரோதிகள், விஷமிகள் என்று ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில் போகிற போக்கில் காவல்துறை தெரிவிப்பது எப்படி சரியாக இருக்கும்?
5/9
ஒரு வேளை கூட்டத்தில் கலந்து கொண்டு சீர்குலைக்க வாய்ப்புள்ள சக்திகள் சங்க் பரிவார் கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றால் அதன் மீதான விசாரணையை மேற்கொள்ள வேண்டாமா?
கூட்டம் நடத்தக் கோரியுள்ள இடத்தின் அருகில் வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள்,...
6/9
கோவில், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளதாம்.
இவையெல்லாம் தெரிந்து தானே அப்பகுதியை பொதுக்கூட்டம் நடத்துவதற்கான பகுதியாக காவல்துறை ஒதுக்கியுள்ளது. இதுவரை புதுக்கோட்டை திலகர் திடலில் எந்த பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது இல்லையா? எல்லா பொதுக்கூட்டங்களும் திலகர் திடலில்...
7/9
நடத்தப்படும் போது மே 17 இயக்கம் நடத்துவதில் காவல்துறைக்கோ, தமிழக அரசுக்கோ என்ன பிரச்சினை?
இவற்றையெல்லாம் காரணம் காட்டி 1861ம் ஆண்டின் Police Act புதுக்கோட்டையில் அமலில் உள்ளதால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். 1861ம் ஆண்டின் காவல்துறை சட்டத்தை...
8/9
மதிப்பது நம்முடைய கடமை என்பதால் 1861ம் ஆண்டின் சட்டத்தை மதித்து புதுக்கோட்டை பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
மீண்டும் பொதுக்கூட்டத்தினை நீதிமன்றம் வாயிலாக அனுமதி பெற்று அதே இடத்தில் நடத்திட மே 17 இயக்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
9/9
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
