தமிழரின் தொன்மை வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை! பாதுகாத்திட குரல் கொடுப்போம்!
மதுரை அருகே #கீழடி'யில், வைகை ஆற்றங்கரையில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரம் புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக அகழாய்வு நடைபெற்று வருகிறது.👇
1/14
👆இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பலவற்றை வெளிக்கொண்டு வந்தார். மேலும் அங்கு வேதங்கள் தொடர்பான குறியீடுகளோ, புராண உருவ வழிபாட்டு சிலைகளோ இல்லை என்றும், தமிழர்களின் மதச்சார்பின்மையை...👇
2/14
👆வெளிப்படுத்தும் பல்வேறு வரலாற்று உண்மைகளை சொன்னார். இதன் காரணமாக ஆய்வாளர் அமர்நாத் திடீரென கீழடியிலிருந்து அசாமிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீராமன் என்பவரை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நியமித்தது.
கீழடி ஆய்வினை மூடிமறைக்கும் இச்செயலை எதிர்த்து...👇
3/14
👆மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மாவின் #கீழடி வருகையின் போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினை மே 17 இயக்கம் தோழமை இயக்கங்களை ஒருங்கிணைத்து நடத்தியது.
பின்னர் பல்வேறு அழுத்தங்களின் விளைவாக 4ம் கட்ட அகழாய்வினை கீழடியில் தொல்லியல் துறை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தியது.👇
4/14
👆2014ம் ஆண்டிலிருந்து தான் செய்த ஆய்வுகளை இடைநிலை அறிக்கையாக அமர்நாத் அவர்கள் சமர்ப்பித்தார். அவரது இறுதி அறிக்கையினை சமர்ப்பிக்க சமீபத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தடை விதித்தது. அகழாய்வுத் துறையின் இயக்குநர் வி.என்.பிரபாகர் இது குறித்து அமர்நாத் அவர்களுக்கு,...👇
5/14
👆கீழடி ஆய்வறிக்கை குறித்து, இதன் பிறகு நீங்கள் எந்த தகவலும் அளிக்கத் தேவையில்லை என்றும் நீங்கள் இதில் தலையிட கூடாது என்ற ரீதியிலும் ஒரு கடிதத்தினையும் அனுப்பியுள்ளார்.
கீழடியினை கண்டுபிடித்ததிலிருந்து அதில் தொடர்ச்சியாக வேலை செய்த அமர்நாத் அவர்களை இடமாற்றம் செய்ததோடு,...👇
6/14
👆அவரை அறிக்கை அளிக்கவிடாமல் தடுப்பதென்பதும் தமிழரை வரலாற்றை மறைக்கவும், தமிழர் வரலாற்றை பார்ப்பனியமயப் படுத்தவும் செய்யும் சூழ்ச்சியாகவே இதனை பார்க்க முடிகிறது.
கீழடி ஆய்வு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கனிமொழிமதி, பிரபாகர் பாண்டியன் ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கை...👇
7/14
👆விசாரித்த நீதிபதிகள், அக்.31ம் தேதிக்குள் அமர்நாத் அவர்களின் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்க தடை விதித்துள்ளனர்.
தமிழக அரசு நீதிமன்றத்தில்,கீழடியில்...👇
8/14
👆தங்க ஆபரணங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், பழங்கால விலங்குகளின் எலும்புகள், மீன் உருவம் பொறித்த பானைகள் போன்ற 7000க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதனை கலிஃபோர்னியாவிற்கு அனுப்பி கால நிர்ணய ஆய்வு சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.👇
9/14
👆தற்போது வரை கீழடியில் வேத குறியீடுகளோ ஆரிய மத குறியீடுகளோ எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், கீழடி வரலாறு முழுமையாக வெளியே வந்தால், இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டி வந்துவிடுமோ என்று பார்ப்பனியம் விழிபிதுங்கி நிற்கிறது. இதன் காரணமாகத்தான் தாமிரபரணி ஆற்றங்கரையில்...👇
10/14
👆கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வின் முடிவுகள் இன்று வரை வெளிவராமல் தவிர்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் கீழடி ஆய்வினைப் பாதுகாப்பதென்பது மிகவும் முக்கியமானதாகும். கீழடி ஆய்வினை பாதுகாப்பதென்பது நம் வரலாற்றைப் பாதுகாப்பது. நம் வரலாற்றை வேறெவனும் திரித்துவிடாமல்...👇
11/14
👆இருக்கச்செய்வதற்கான வேலை மிக முக்கியமாகும். கீழடி ஆய்வினை முழுமையாக, உண்மையாக வெளிக்கொண்டுவர நாம் மிகக்கவனமாக இருப்பது முக்கியம்.
* கீழடி ஆய்வில் பல்வேறு தடங்கல்களை செய்து கொண்டிருக்கும், இந்திய தொல்லியல் துறை(Archeological Survey of India) மீது நமக்கு நம்பிக்கையில்லை.👇
12/14
👆* இந்தியாவிலேயே அதிகமான தொல்லியல் பொருட்கள், அகழாய்விடங்கள், கல்வெட்டுகள் தமிழகத்தில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தென்னிந்திய தொல்லியல் ஆய்வு மைய தலைமையகம் தமிழ்நாட்டில் அமைக்கப்படாமல், பெங்களூரில் இருப்பதென்பது முரணானதாகும். தமிழ்நாட்டில் அது அமைக்கப்பட வேண்டும்.👇
13/14
👆* கண்டெடுக்கப்படுகின்ற தொல்பொருட்களை ஆய்வு செய்து பாதுகாக்கும் உரிமை மத்திய தொல்துறைக்கு வழங்கப்படக் கூடாது. மாநில தொல்லியல் துறையிடம்தான் வழங்கப்பட வேண்டும்.
- மே பதினேழு இயக்கம்
9884072010
#Keezhadi #Keeladi #கீழடி #அமர்நாத்ராமகிருஷ்ணன்
🔚
14/14
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
