மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Mar 6, 2019, 12 tweets

பாலாகோட் தாக்குதல்... பொய்களை பரப்புவதன் நோக்கம் என்ன?

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் @thiruja எழுப்பிய கேள்விகள் தற்போது இந்தியா முழுவதுமிருந்து எழ ஆரம்பித்திருக்கிறது. பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை!

CRPF படை மீதான புல்வாமா தாக்குதலுக்கு...

#GoBackSadistModi #GoBackModi

1/n

...பதிலடியாக பிப்.26 பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து பாலகோட் எனும் இடத்தில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. அந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மிகப்பெரிய...

2/n

...எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியிட்டது. ஆனால் BBC Guardian Washington Post Telegraph என சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் பாகிஸ்தான் எல்லைக்குள்...

3/n

...இந்தியா ஒரு தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென்றும் செய்திகள் வெளியிட்டுள்ளது. இன்று வரை ஒரு தீவிரவாதியும் உயிரிழந்ததாக தகவல் எதுவும் சர்வதேச மட்டங்களிலிருந்து வரவில்லை. அல்ஜசீரா ஊடகத்தில் கட்டிடங்கள் கூட சேதமாகவில்லை என தெரிவிக்கிறது.

4/n

சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐநா உள்ளிட்ட எந்த சர்வதேச அமைப்புகளும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக கூறவில்லை.

தற்போது பல நாட்கள் கழித்து பாஜக அமைச்சர் அலுவாலியா, பாலகோட் தாக்குதல் உயிரிழப்பைக் குறிவைத்து நடத்தப்படவில்லை, அதனால் எண்ணிக்கை குறித்து சொல்லமுடியாது என்று கூறுகிறார்.

5/n

சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலிருந்து பாலகோட் தாக்குதல் குறித்து வெளியான செய்திகள் குறித்து கேள்விகள் எழும்பியுள்ளதால், மோடி தற்போது ”தாக்குதலுக்கு ஆதாரம் கேட்காதீர்கள்” என சினிமா கதாநாயகனைப் போல் வசனம் பேசியிருக்கிறார்.

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் MKநாராயணன்...

6/n

...சமீபத்தில் எழுதியுள்ள கட்டுரையில், 26/11 தாக்குதலின் போது பாகிஸ்தான் மீது ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்று குறிபிடும்போது, இந்தியாவிடம் இன்னொரு நாட்டின் ஒரு பகுதியில் “துல்லியத் தாக்குதல்” நடத்துவதற்கான வசதிகள் எதுவும் அப்போதும் இல்லை இப்போதும் இல்லை என்று வாக்குமூலம்...

7/n

...கொடுத்திருக்கிறார். இன்னொரு நாட்டின் எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கு மிகப் பெரிய ராணுவ வசதிகள் தேவை என்றும், அதனால்தான் கிரீமியா விவகாரத்தில் அமெரிக்கா ரசியாவின் மீது தாக்குதல் நடத்தாமல் விட்டதாகவும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

8/n

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் பாலகோட் தாக்குதலில் உண்மையான விவரங்களை வெளிப்படையாக வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படி பல்வேறு மட்டங்களிலிருந்தும் கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன. இதைத் தான் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,...

9/n

...முதல் நாளான பிப்.26-ல் இருந்து எழுப்பி வருகிறார். இதை கேட்டதற்குத் தான் மே 17 இயக்கத்தினர் ராணுவத்திற்கு எதிரானவர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் அவதூறுகளை தொடர்ச்சியாகப் பரப்பினர் பாஜகவினர்.

CRPF படையினரின் அணிவகுப்பில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு யார் காரணம்?

10/n

பாலகோட் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது? எதற்கு வெளியுறவுத்துறை செயலாளர் பொய் சொன்னார்? எதற்கு பாஜகவினர் பொய்யை பரப்பினர்? எதற்கு பிரதமர் உள்ளிட்ட அனைவரும் துல்லியத் தாக்குதல் நடைபெற்றதாக சொன்னார்கள்? MK.நாராயணன் சொல்வது உண்மையா? மோடி சொல்வது உண்மையா? ராணுவ தாக்குதல்கள்...

11/n

...ரகசியம் என்றால் அதை ஏன் ஊடகங்களில் பரப்பிவிட்டு தற்போது அதை வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது? இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது பாஜக அரசின் கடமை. பதில் சொல்லாமல் கடந்து சென்றால் கேள்விக்கணைகள் துளைத்துக் கொண்டே இருக்கும்.

#GoBackSadistModi

12/12

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling