H Raja Profile picture
Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.

Aug 22, 2019, 6 tweets

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனைபேருக்கும் நமது வணக்கங்கள்...

பாரதம் விடுதலை பெற்றபோது காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கிற்கு இந்தியாவுடன் சேர்வது சரியா தவறா என்ற குழப்பம் இருந்தது. இது விஷயமாக அவர் பேசுவதற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் அன்று ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவராக...1/6

இருந்த ஸ்ரீ குருஜி (மாதவ சதாசிவ கோல்வல்கரை) அனுப்ப முடிவு செய்தார் அதற்கு ஸ்ரீ குருஜியும் சம்மதம் தெரிவித்தார்.

ஸ்ரீ குருஜி டெல்லியிலிருந்து விமானம் மூலம் 1947 அக்டோபர் 17 அன்று ஸ்ரீநகர் சென்றார். மறுநாள் ஸ்ரீ குருஜி அரண்மனைக்குச் சென்றதும் மன்னர் ஹரிசிங் அவரது மனைவியும் ...2/6

வாசலுக்கு வந்து வரவேற்றனர்.

மன்னர் ஹரிசிங்குடன் ஸ்ரீ குருஜி பேச்சுவார்த்தை நடத்தினார். பாரதத்துடன் சேர்வதால் தனக்கு உள்ள கஷ்டங்களை மன்னர் ஹரிசிங் ஸ்ரீ குருஜியிடம் எடுத்துரைத்தார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட ஸ்ரீ குருஜி காஷ்மீர் பாரதத்துடன் தான் இணைய வேண்டும் என்பதற்கான...3/6

தேச நலன் சார்ந்த காரணங்களை விளக்கினார்.மன்னருக்கு இருந்த சந்தேகங்கள் கொஞ்சம்கொஞ்சமாக நீங்கின. ஸ்ரீ குருஜியின் பேச்சு அவரது மனதை மாற்றியது.இருந்தாலும் ஸ்ரீ குருஜி கூறிய கருத்துக்கள் பற்றி தான் யோசிப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் இருந்து டெல்லி திரும்பிய ஸ்ரீ குருஜி,காஷ்மீர்...4/6

மன்னருடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி சர்தார் வல்லபாய் பட்டேலிடம் விளக்கினார்.

பாரதத்துடன் ஜம்மு காஷ்மீரை இணைப்பதற்காக மன்னர் ஹரி சிங்கின் அதிகாரபூர்வமான கடிதம் அக்டோபர் 26 ஆம் தேதி பட்டேலுக்கு வந்து சேர்ந்தது...5/6

காஷ்மீரை பாரதத்துடன் இணைத்ததில் முக்கிய பங்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ குருஜிக்கு இருந்தது என்பது வரலாறு...6/6

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling