Roaming Raman 🚩🚩🚩(Modi ka Parivar) உங்கள் ரோரா. Profile picture
தேசமே தெய்வம். My most tweets are in TAMIL - I LOVE INDIA. Would learn Hindi shortly. RTs are not endorsements.

Aug 23, 2019, 18 tweets

1/ எச்சரிக்கை : இந்த thread சுமார் 17 ட்வீட் நீளம் இருக்கலாம்.

முன்னாள் சு.சூழல் அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் பேசியது - தமிழில்.

காங்கிரஸார் கூட உண்மையை உணரத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் வேறு உலகில் இன்னும் சஞ்சரித்துக் கொண்டு கற்பனையில் இருப்பவர்கள் உணர்வது?

2/ மோதியை எப்போதும் காரணமின்றி எதிர்த்துக் கொண்டே இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல. கடந்த காலத்தில் நாம் செய்யத் தவறிய விஷயங்களை அவர் செய்கிறார். வெறுப்பரசியல் காரணமாக இதை நாம் ஏற்காத போதும் மக்கள் மனமுவந்து ஏற்கிறார்கள். அரசியல் அரங்கில் அவரை எதிர் கொள்ளும் திறன்

3/ நம்மிடம் இல்லை.

காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையின்றி அவரை மட்டம் தட்டி கொண்டே இருக்கிறோம். பரிகாசம் செய்கிறோம் ஆனால் அவருடன் கருத்தியலில் மோத முடியவில்லை.

தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டும் என்றோ அல்லது கைதட்ட வேண்டும் என்றோ அவா் நினைக்கவில்லை. தற்புகழ்ச்சிக்கு

4/ அப்பாற்பட்டு விளங்குகிறார்.

அரசியல், ஆளுங்கட்சி எதிர்கட்சி போன்ற சம்பிரதாயங்களைத் தகர்த்தெறிந்து மனமாச்சரியங்களைத் தவிர்த்து தாம் செய்யும் நல்ல விஷயங்களை தேசத்தின் மீது அக்கறை கொண்டு அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஆனால் நாம் ஆதரிக்க மறுக்கிறோம். தேச நலன்

5/ என்ற புள்ளியில் சேராது தனித்து நிற்கிறோம். அவரை அபாண்டமாகத் தூற்றுகிறோம். நம்முடைய இந்த அநாகரீகமான செய்கையால் மக்களிடையே அவரின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.
தனி மனித த்வேஷம், சதா சர்வ காலமும் எதிர்மறை அரசியல் என்றே இயங்குவது நமக்கு நல்லதல்ல.

மோதியின் ஆளுமை

6/ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. பிரமிக்க வைக்கிறது.
தொடர்ந்து வெற்றிகரமான திட்டங்களை, நாம் அடித்தட்டு மக்களுக்கு செய்யத் தவறியவற்றைத் தொடர்ந்து செய்கிறார். அந்த திட்டங்களின் நற்பலன் தான் அவரை மக்களுடன் நெருக்கமாக இணைத்துவிட்டது. சாமானியர்களின் மீது கொண்ட அக்கறை காரணமாக

7/ அவர் செயல்படுத்திய திட்டங்களின் ஆக்கப்பூர்வமான விளைவுகளால் கோடிக்கணக்கான பெண்கள் அவரைத் தொடர்ந்து வெற்றி பெற வைக்கிறார்கள். இதுவே 2014 ஐ விட 2019 ல் அவர் மிகப் பெரியதொரு வெற்றியைப் பெறக் காரணமாக அமைந்தது.

யதார்த்தத்தை, உண்மையை, கள நிலவரத்தை, மக்களின் மனோநிலையை புரிந்து

8/ கொள்ளாமல் வெறுப்பரசியல் என்னும் புள்ளியின் கீழ் நாம் அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம். அவரது மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கிறோம், கேலி செய்கிறோம். இந்த மக்கள் விரோத செயல் நம்மை மக்களிடமிருந்து முற்றிலுமாக நம்மை விலக்கிவைத்து விட்டது.
.
கடந்த தோ்தலில் விவசாயிகளின்

9/ தற்கொலை பற்றி பேசினோம். அதற்கு மோடி காரணம் என்று ஒரு பொய்யான தோற்றத்தை கட்டமைக்க முயற்சித்தோம் ஆனால் மோடி அதற்கு காரணம் இல்லை என்று சுய புத்தியுடன் சிந்திக்கும் மக்கள் தெளிவாக உணர்ந்தார்கள்.

கட்டாயம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம். இதை

10/ செய்யத் தவறினால், மீண்டும் மீண்டும் அர்த்தமின்றி மோடி எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக நாம் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வெறுப்பரசியல், தனி மனித த்வேஷத்தை கடை பிடித்தால் 2024ல் இதைவிட குறைவான மக்களவை உறுப்பினர்களைப் பெற்று தேசிய கட்சி அந்தஸ்தை கூட இழக்கும் சூழல்

11/ ஏற்படும். மிக மோசமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்படும்.

- வர்க்கப் போராளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் பேரறிஞர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த கருத்துகள்.

இக்கருத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியப்

12/ பிரமுகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரானா அபிஷேக் சிங்வி போன்றோர் ஆ”மோதி”த்துள்ளனர்.

இனமான தோழர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களை நன்கு அவதானிக்க வேண்டும். இங்குள்ள அறிவாற்றல் மிகுந்த நேருயிஸ்ட் சிலர் ஆணித்தரமான

13/ உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்கிறார்கள். உதாரணத்திற்கு கஷ்மீரில் தகவல் தொடர்பு இயந்திரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இணையதள வசதி இல்லை, தொலைபேசிகள் இயங்கவில்லை என்பதை “ட்வீட்” மூலம் உலகுக்குத் தெரியப்படுத்திய ஒரு பெண்ணின் ட்வீட்களை ஆதாரமாகப் பகிர்ந்து உருவாக்கிய

14/ உண்மைகளை உலகுக்கு கொண்டு சேர்த்தார்கள்.

மேலும் பீகார் மாநிலத்தை பாஜக ஆண்ட காலகட்டங்களில் மாநில பாஜக அரசு அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறிதளவு கூட முயற்சி செய்யவில்லை என்பதையும் ஒவ்வொரு முறை பீகாரை பாஜக ஆளும்போது மாநில நலனுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்

15/ என்பதை “நேருயிசப்” பார்வை கொண்டு காத்திரமாக நேருயிஸ்டுகள் காட்டுரைப் பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடுகிறார்கள். அதுவும் ஒரே சமயத்தில் பல மொழிகளில் மொழிபெயர்த்து காட்டுரைகளை வெளியிடுகிறார்கள். இவர்களின் தொடர் விழிப்புணர்வூட்டும் பணியால் காங்கீஸ்களின் நேருயிசம் எப்படிப்பட்டது

16/ என்பதை அனைத்து சாமானியர்களும் அறிந்து கொள்கிறார்கள்.

இவை அனைத்தையும் ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் போன்றோர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், அவருக்கு நான் வணங்கும் சுப்பிரமணியர் நற்சிந்தனையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று சொல்லி பதிவை நிறைவு செய்கிறேன்.

ஈசா, ஸ்ரீதரா,

17/ மாதவா, ஹரே கிருஷ்ணா!

எழுத்தாளர், நண்பர் Sathya GP (@AgalGp ) அவர்களின் FB பதிவு.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling