தஞ்சை ஆ.மாதவன் Profile picture
Passionate about #Archaeology #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook

Aug 25, 2019, 8 tweets

கல்வெட்டில் நீரிழிவு நோய் பற்றிய குறிப்பு!

தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகள் வாயிலாகப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் எண்ணற்ற சமுதாயச் செய்திகளையும் அறிந்து வருகிறோம்! குறிப்பாக கல்வெட்டுக்கள் மூலம் மன்னர்களின் வெற்றி, ஆட்சிமுறை, கோவில் வழிபாடு, இறைவன் பெயர்கள் cont.

வரிகள், காசுகள் போன்ற பொருளாதார மற்றும் சமூக செய்திகள் அறியப்படுகின்றன!

நன்கு ஆய்வு செய்யும்போது மருத்துவம் மற்றும் நோய்கள் பற்றிய செய்திகளும் கிடைப்பது குறிப்பிடத்தக்கதாகும்!

தற்போது உலக அளவில் #நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் மனித இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது!

இந்நோய் பல நூற்றாண்டுகளாக மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது!

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு நாட்டு ஒரு அரசியல் தலைவன் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறையருளால் நலம் பெற்ற செய்தியை #கோவை மாவட்டம் #கடத்தூர் கல்வெட்டால் அறிகிறோம்!

கொங்கு #விக்கிரமசோழன் ஆட்சியின்போது (கி.பி 1302) #திருபுவனசிங்கன் என்பவன் #கடத்தூர் இறைவன் அருளால் #பிரமேகம் என்னும் நோய் நீங்கியதற்காக நிலம் தானம் அளித்துள்ளார்!

இச்செய்தியினை தெரிவிக்கும் கல்வெட்டு #கோவை மாவட்டம் #உடுமலை வட்டம் #கடத்தூர் மருதீசர் கோயிலில் மகா மண்டபத்தின் கிழக்குச் சுவரின் இடப்புற வாசலில் உள்ளது!

இக்கல்வெட்டு கொங்குச் சோழன் விக்கிரம சோழனின் 29ஆம் (கி.பி 1302) ஆட்சியாண்டைச் சேர்ந்தது

இக்கல்வெட்டு வாசகம் பின்வருமாறு...

கொங்கு #விக்கிரமசோழன் ஆட்சியின் போது #திரிபுவனசிங்கன் என்பவனுக்கு #பிரமேகம் என்ற #சர்க்கரைநோய் வந்து #கடத்தூர் இறைவன் அருளால் நீங்கியமையும், அதற்காக அவ்விறைவனுக்கு இரவு வழிபாட்டிற்கான அரிசிக்காக இவன் நிலம் தாரைவார்த்துக் கொடுத்துள்ளான்!

இந்நிலம் உதயாதிச்ச சோழ தேவன் என்பவன் அரசிற்குத் துரோகியாய் மாறியதால் அரசால் கைப்பற்றப்பட்ட நிலமாகும்!

இந்நிலம் கண்ணாடிப்புத்தூரில் ஆறுகலம் விதைக்கக்கூடிய அளவு பரப்புடையதாகும்!

மேலும் இந்நிலத்திற்கான எல்லைகளும், வரிவிதிப்பு, வரிச்சலுகை ஆகியவையும் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன!

இந்நிலம் #வீரசிங்கன் மற்றும் அவனது பரம்பரையினருக்கும் அரசால் முழுமையுடன் (விற்றல், ஒற்றிவைத்தல், சீதனமாகக் கொடுத்தல்) கொடையாக அளித்ததாகும்!

இவ்வெல்லா உரிமைகளையும் சேர்த்து அரசின் ஆணைப்படி #திருமுகதிருவிள்ளம் இறைவனுக்குக் கொடுத்துள்ளான்!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling