தஞ்சை ஆ.மாதவன் Profile picture
Ph.D #Archaeology | Passionate about #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook
Srirangam Viji Profile picture Sundar Vasudevan Profile picture மணிகண்டன் Profile picture அமுத நிலவன் 💙 Profile picture 4 subscribed
Apr 19 9 tweets 5 min read
தமிழ் இலக்கியங்களில் வேளாண்மைத் தொழில்நுட்பங்கள்...!

தமிழ் இலக்கியங்கள் தொன்மைச் சிறப்புடையது. நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கது. மக்களின் வாழ்க்கை முறைகளை எடுத்துக்கூறும் கருத்துக் கருவூலமாகவும் உள்ளது.

தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதற்கும்,… twitter.com/i/web/status/1… Image ▪︎ உழவியல் நுட்பங்கள்:

உழவன் தன் நிலத்தை நன்கு உழவு செய்து பின் நடவு செய்வான். அந்த நிலத்தை எவ்வாறு உழுது பண்படுத்த வேண்டும் என்பதை இலக்கியங்கள் விளக்குகின்றன.

'அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே மேல்' என்பது பழமொழி.

ஆழமாக உழும்போது கீழ்மண் மேல்மண்ணாகவும் மேல்மண்… twitter.com/i/web/status/1… Image
Feb 22 13 tweets 3 min read
மங்கையர் வணங்கும் மயில் பண்டிகை...!

இன்றைய நாகரிகத்தின் தாக்குதலினால் நம்முடைய பண்டையப் பண்பாடுகளும், சிறப்புகளும் அதிகமாக அழிந்துவிடாமல்,

இன்றைய தினம் தமிழகத்தில் எஞ்சி உள்ள பகுதிகளில் #தருமபுரி மாவட்டம் ஒன்றாகும். Image அம்மாவட்ட மகளிர்களால் கொண்டாடப்பட்டு, சிறுகச் சிறுகச் செல்வாக்கிழந்துவரும் ஓர் அறிய பண்டிகையாகும்.

இப்பண்டிகை, உழவர் திருநாளை உவகையுடன் தை மாதம் கொண்டாடி முடித்து உடன் நடக்கும் ஓர் பண்டிகை.

தை மாதம் ஆறாம் தேதி இரவே இப்பண்டிகை ஆரம்பித்துவிடும்.
Feb 21 16 tweets 3 min read
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (2/2)

மேனாட்டார்க் குறிப்பு:

அராபியரான 'அல் இத்ரீஸ்' என்பவர் தென்னிந்தியாவில் மன்னர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்கிறார்கள்... என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறார். இவர் பொ.பி 1100- ல் பிறந்தவர்.

அல் புரூனிக்குப் பிறகு (பொ.பி 1048) தென்னிந்தியாவைப் பற்றித் தெளிவான குறிப்புக்களை வழங்கியவர்.

இவர் சிசிலிய மன்னன் ரோஜர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வரலாற்றை எழுதியவர்.
Feb 20 13 tweets 4 min read
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (1/2)

மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயினால் இறந்தால்... வாளாற்படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்கவேண்டி, பிணத்தை வாளால் வெட்டிப்புதைத்தனர் (புறம்: 93).

பாடையைக் 'கால்கழி கட்டில்' என அக்காலத்தில் வழங்கி வந்தனர். இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி, மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என #ஒளவையார் குறிக்கிறார் (புறம்: 286)
Feb 12 7 tweets 1 min read
உணவும் - சமூகமும் - பண்பாடும்! (3).

புலால் உண்ணாமை, உண்ணா நோன்பு ஆகிய வழக்கங்களைத் தமிழ்நாட்டிற்குள் சமணர்களே கொண்டுவந்தனர்.

அமாவாசை, பௌர்ணமி ஆகிய 'உவா', நாட்களில் பிச்சைக்கு வரும் சமண பௌத்தத் துறவிகளுக்கு முதல்நாள் உண்டு எஞ்சிய பழைய சோற்றை இடுவதில்லை. இந்த இருநாட்களிலும் பழைய சோற்றை விலக்கும் வழக்கமும் இப்படித்தான் பிறந்தது.

இதுவே பௌத்தத் துறவிகளுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்தது.

நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும், உண்ணும்போது பேசக் கூடாது என்பன போன்ற சமணத் துறவியர்களின் வழக்கத்தை அப்பர் தம் தேவாரத்தில்...
Feb 11 14 tweets 2 min read
உணவும் - சமூகமும் - பண்பாடும்! (2).

விழாக்கால உணவுகளில் குறிப்பிடத்தக்கன தைப் பொங்கலன்று சமைக்கப்பெறும் பால்பொங்கலும், படைக்கப்பெறும் கிழங்கு வகைகளும் ஆகும்.

இதுவன்றித் திருக்கார்த்திகைக்குச்
செய்யப்பெறும் அரிசிப் பொரிக்குக் 'கார்த்திகைப் பொரி' என்றே பெயர். சித்திரை மாதம் புதுமணப் பெண்ணுக்கு அரிசி அவலும், கருப்புக்கட்டியும் சீர்வரிசையாகத் தருவது மரபு. இவையனைத்தும் வைதீக எழுச்சிக்கு முன் உருவான வழக்கங்கள்.

'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது மார்கழித் திருவாதிரையில் (சிவனுக்குரிய நாள்மீன்) சைவர்கள் ஆக்கும் உணவாகும்.
Feb 10 20 tweets 7 min read
உணவும் - சமூகமும் - பண்பாடும்!

#உள் என்ற வேர்ச் சொல்லிலிருந்தே #உண், #ஊண், #உணவு ஆகிய சொற்கள் பிறந்தன.

தாய்ப்பாலாகிய நீர் உணவே மனிதனின் முதல் உணவாக அமைந்தாலும், தண்ணீரை ஓர் உணவாகத் தமிழர் கருதுவதில்லை.

தாய்ப்பாலுக்கு முன்னதாகத் தந்தையின் உடன்பிறந்தாள் குழந்தையின் நாக்கில்.. தொட்டு வைக்கும் இனிப்புத் திரவமே அதன் முதல் உணவாகும். இதற்குத் #சேனை என்று பெயர்.

தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியிலும் தமிழ் மொழி பேசுவோரிடமும் இப்பழக்கம் இன்று வரை உள்ளது.

காய், பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்த காரணத்தாலேயே மண்ணைத் #தாய் என மனிதன் கொண்டாடினான்.
Feb 8 27 tweets 4 min read
புலம்பெயர்ந்தோர் சமையல்...!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையினின்று குடிபெயர்ந்த இவர்களின் வாழ்விடம் இலங்கையில் #மலையகம் மட்டுமின்றி,

இலங்கையின் மையப்பகுதியாக இருந்தாலும் தற்போது எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். இருநூறு குடும்பங்களாக இலங்கையினின்று இடம்பெயர்ந்த இவர்கள், தாயகம் திரும்பியவர்களே அன்றி இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்.

ஆயினும் இடப்பெயர்ச்சியை ஏற்றுக் கொண்ட இவர்கள், இன்றளவும் தங்கள் குடியிருப்பிற்கு "ஏதிலிகள் குடியிருப்பு" எனப் பெயரிட்டுள்ளதே...
Jan 30 27 tweets 4 min read
தமிழர் பண்பாட்டில் மீசை...!

ஆண்களின் முகத்துக்கு அழகு சேர்ப்பதில் மீசைக்கு ஒரு பங்குண்டு.

ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தும் உடற்கூறாகிய முகமயிர், ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்னும் பழமொழிக்கு அடிப்படை ஆயிற்று.

ஆண் - தன்மை - ஆண்மை எனப்படும். ஆண்மை வீரத்தை உள்ளடக்கியதாகும். இதுவே மானம், பெருமை, வீரம், உயர்வு முதலிய உயர் குணங்களோடு மீசையை இணைத்துப் பேசும் வழக்கத்தை ஏற்படுத்தியது.

பொதுவாகத் தமது மேலுதட்டில் வளர்ந்துள்ள முடியை ஒழுங்கு
படுத்தி வளர்த்துக் கொள்வதில் ஆண்கள் ஈடுபாடு கொள்கின்றனர்.
Jan 29 4 tweets 1 min read
பிள்ளையார் சுழி...!

#உ என்ற குறியைப் பிள்ளையார் சுழியென்றும், அது பிள்ளையார் வழிபாட்டின் முதற்சின்னம் என்றும் கூறி அதற்குப் பல்வேறு புராணங்களையும் சொல்லி வைத்துள்ளனர்.

பழங்காலத்தில் தமிழர்கள் பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர். பனை ஓலைகள் எழுதுகின்ற பக்குவத்தில் இருக்கிறதா என்று கண்டறிய, ஏட்டை எழுத்தாணி முனையால் தீண்டிப் பார்ப்பதுண்டு.

இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர். இந்தத் தீண்டற் குறியைத்தான் பின்னர் #பிள்ளையார்சுழி என்று கூறும் மரபாக்கிக் கொண்டுள்ளனர்.
Jan 29 14 tweets 5 min read
த‌மிழ‌ர் வாழ்வில் பாட்டுப் பண்பாடு...!

பழங்காலத்திலிருந்தே எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், பாடிக்கொண்டே தொழில் செய்வது தமிழரின் உடலில் ஊறிப்போன வழக்கம்.

ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை என்பார்கள். குன்றக்குறவர் கிளியோட்டுவது முதல் நெய்தல் நிலத்தில் கலஞ்செலுத்தும் கப்பல்... பாட்டுவரை தமிழர் வாழ்வில் பாட்டில்லாத தொழிலில்லை.

பயிர் நடும்போதும், களை எடுக்கும்போதும், நெல்லிடிக்கும் போதும், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போதும் மனம் உருகிப் பாடுவார்கள்.

மாடுமேய்க்கும் போது ஊதிய புல்லாங்குழல் அனைத்துயிர்களையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
Nov 30, 2022 9 tweets 5 min read
சங்ககால சிறார்களால் அணியப்பெற்ற அணிகலன்கள்!

தொடி, ஒருவட, இருவட, மூன்றுவட ஆரங்கள், வளை, மகரக்குழை (காதணி), காற்சரி எனப்படும் பாதசரம், கிண்கிணி, சிலம்பு ஆகிய அணிகலன்கள் சங்ககால சிறார்களால் அணியப்பெற்று அழகிற்கு அழகு ஊட்டின என்பதை சங்கப்பாடலடிகள்வழி நாம் அறியலாம். கீழ்க்காணும் #கலித்தொகை பாடல், தாய் தன் செல்வ மகனுக்கு அணிவித்து அழகு பார்த்த அணிகலன்களைப் படம் பிடித்துக்காட்டும்.

பொடிவைத்து இணைக்கப்பட்டமை அறியா வண்ணம், மீளவும் நெருப்பிலிட்டு ஒளிபெறச் செய்யப்பட்ட பொன்னாலான, இரு வடங்களில் அமைந்த #காற்சரி எனப்படும் #பாதசரம்.
Jul 31, 2022 5 tweets 4 min read
ஆகோள் பூசல்!

சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.

ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.

தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்.. வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.

'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
Jul 29, 2022 19 tweets 6 min read
மந்திரச் சடங்குகள்....!

மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.

இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது. தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.

வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
Jul 28, 2022 13 tweets 4 min read
நீத்தார் வழிபாடு...!

பண்டைய நாளில் இறந்து போனவர்களது ஆவி பற்றியும், அதனுடைய சக்தியைப் பற்றியும், உலகம் முழுவதிலும் உள்ள இனக்குழு மக்களிடையே சில நம்பிக்கைகள் இருந்தன.

இறந்து போனவர்களுடைய ஆவிக்கு ஆற்றல் அதிகம். அது ஆக்கச் சக்தியாகவும், அழிவுச் சக்தியாகவும் வெளிப்படலாம். அந்த ஆவி அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும்.

அவற்றைச் சடங்குகள், வழிபாடுகள், சாந்திகள் போன்றவற்றால் மகிழ்வித்தால், அந்த ஆவி அக்குழுவிற்கு ஆற்றலளிக்கும் என்று நம்பினர்.

போரில் வெற்றி பெற்றுத் தரும். கால்நடைச் செல்வங்களைப் பாதுகாக்கும்.
Jul 27, 2022 34 tweets 20 min read
பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் அரசியல்...!

#இலங்கை யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் #ஆனைக்கோட்டை என்ற இடத்தில், பெருங்கல் சின்னம் ஒன்றை அகழாய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட முத்திரையில்,

மூன்றுக் குறியீடுகளைக் கொண்ட தொடர் மேல்வரிசையிலும் அதன் கீழ்ப்பகுதியில் #கோவேத என்ற... Image #தமிழி எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. #கோ என்பது அரசனை (அ) தலைவனைக் குறிக்கின்றது.

#கோவேத என்பதனையடுத்து முத்தலைத் தண்டு போன்ற ஒரு குறியீடுக் காணப்படுகின்றது.

இதுவும் அரசுக்குரிய (அ) தலைமைக்குரிய இலச்சினையாகக் கொள்ளப்படுகிறது.
Jul 19, 2022 17 tweets 6 min read
மதிப்புறு பண்டம்...!

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் அழகு மணிகள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன.

அதிலும் கூட கொங்கு நாட்டு அகழாய்வில் மிகுதியும் கிடைக்கின்றன.

#கொடுமணல் அகழாய்வில் ஓர் ஈமச்சின்னத்தில் 2500 மணிகள் வைத்திருந்தனர். 900 மணிகள், 800 மணிகள், 750 மணிகள், 600 மணிகள் என எண்ணிக்கை மிகுந்த மணிகள் #கொடுமணல் ஈமச்சின்னங்களில் வைக்கப்பெற்றிருந்தன.

#கொடுமணல் வாழ்விடத்தில் இந்த அளவுக்கு எண்ணிக்கையில் மணிகள் கிடைக்கவில்லை.

அதனால் ஈமச்சின்னப் பொருள்கள் 'ஈகை அரிய நன்கலம்' (Prestigious Goods) என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
Jul 18, 2022 22 tweets 7 min read
#குலக்குறி வழிபாடு...!

பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குலத்திற்கும், ஒரு குறியீடு இருந்தது.

அக்குறியீடு அக்குலத்தின் அடையாளமாகவும், பெருமைக்காகவும் மதிப்புடன் அவ்வின மக்களால் போற்றப்பட்டு வந்தது. ஆவி வழிபாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நிலையாக ஒரு குறிப்பிட்ட குலத்தின் வீரன் இறந்துபட்டால்,

அவனது நினைவுச்சின்னத்தில் அவன் குலத்தின் குறியீடான விலங்குகளையோ, மரங்களையோ சேர்த்து வைத்து வழிபடுவது பண்டு வழக்காயிருந்தது.

உடலில் இருந்து ஆவி எளிதில் பிரிந்து விடாது.
Jul 17, 2022 16 tweets 10 min read
#பகுத்தல் - #பாதீடு!

பற்றாக்குறைப் பொருளியல் நிலை காரணமாக யாரும் பாதிக்கப்படக்கூடாது எனும் நோக்கில்,

'தொல்குடிச் சமூகங்கள்' #பகுத்தல் மரபை ஒரு விதியாகவே (The Law of Division) பின்பற்றினர்.

இம்மரபு #உரிமை, #உழைப்பு, #துய்த்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் கடைபிடிக்கப்பட்டது. தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
Jul 17, 2022 12 tweets 9 min read
பெருவழிகளில் #சமணம்...!

தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமான சான்றுகளாக விளங்கும் #தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட 'சமணர் படுக்கைகள்' பெருவழிகளிலேயே அமைந்துள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

பண்டைய வணிகர்கள் பண்டு பெரும்பாலும் சமண சமயத்தைப் பின்பற்றியுள்ளனர். Image சமண முனிவர்களும் வணிகர்களை நெறிப்படுத்தியுள்ளனர்.

அதன் நன்றி நிமித்தமாக வணிகர்கள் தாங்கள் வணிகத்திற்காக செல்லும் நகரங்களில் அமைந்த மலைப்பகுதி குகைத்தளங்களில்,

சமண முனிவர்களுக்கு படுக்கைகளை வெட்டிக் கொடுத்து அச்செய்திகளை கல்வெட்டுச் சான்றுகளாக்கியுள்ளனர். Image
Jul 12, 2022 20 tweets 8 min read
பெருவழிகள் உருவாக்கம்...!

பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.

#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.

இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.

இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.