1/ நானும் திருடுற பழக்கத்தை நிறுத்திடலாம்னு பார்க்கிறேன் - விட மாட்டேங்குறாங்கய்யா. ஏன் தான் இப்படி நல்லா எழுதி வைக்கிறார்களோ!!
திருடிய இடம் :Facebook
திருட்டு கொடுத்தவர் : @AmirthanPk
(thread ல் சுமாராக மொத்தம் 15 ட்வீட் இருக்கலாம்)
சற்று முன் நெடுஞ்சாலையில்
2/ கண்ட காட்சி.
“ ஒரு டாரஸ் லாரி (10 டயர் கொண்டது) நெடுஞ்சாலை நடுவே தற்காலிக தடுப்பை 80-90கிமீ வேகத்தில் ஒரு S கட் அடித்துச் சென்றது. வண்டியில் ஏற்றியிருந்த பாரத்தின் அளவைக் கணித்தால் அது மயிற்பீலியாக இருந்தால் கூட 12-15 டன் இருக்கும். பார்த்த வினாடியில் வண்டி
3/ கவிழ்ந்திடும்னு தான் தோன்றியது. ஆனால், அநாயசமாகக் கடந்து சென்று விட்டது. இதுவே பழைய லாரியாக இருந்தால், 8 டன்னுக்கு மேலே லோடு ஏற்றிட்டுப் போச்சுன்னா புள்ளத்தாச்சிப் பொண்ணு தண்ணிக் குடம் தூக்கிட்டுப் போற மாதிரி தான் நகரும்”
விசயம் என்னன்னா... இது தான் இன்றைய எதார்த்தம்.
#
4/ டெக்னாலஜி முன்னேறிய விதம், சாலைகளில் ஏற்பட்டுள்ள மேம்பாடு இவற்றின் காரணமாக, ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்லும் அளவு கூடி, நேரம் குறைகிறது.
# ஜிஎஸ்டி வந்த பிறகு, சுங்கச் சாவடிகளில் நாள் கணக்கில் மணிக்கணக்கில் வாகனங்கள் நிற்கத் தேவையில்லை.
#
5/ லாஜிஸ்டிக் துறை இயந்திரமயமாக்கப் பட்டதால், வாகனங்களில் பொருட்களை ஏற்றுவது, இறக்குவதன் நேரம் 60-70% குறைந்திருக்கிறது.
# வாகனங்களில் ஏற்றும் எடையை கணிசமாக அரசாங்கம் உயர்த்திக்கச் சொல்லி அனுமதி வழங்கியிருக்கு.
# இன்னொரு மிக முக்கியமான காரணம், தொழில் விரிவாக்கத்தின் போதும்,
6/ கமெர்ஷியல் வாகனங்கள் வாங்கும் போதும் நீண்ட கால வளர்ச்சி அடிப்படையில் சற்றே மிகுதியாக வாங்குவார்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் 6 டயர் லாரியை வாங்கச் சென்றால், சார் நாளை தொழில் வளரும் சமயத்தில் இந்த அளவு பத்தாவிட்டால் இன்னொரு லாரி வாங்க வேண்டி வரும். அதற்கு பதிலாக கொஞ்சம்
7/ காசு சேர்த்துப் போட்டால் 10 டயருள்ள டாரஸ் லாரியே வாங்கிடுங்க என்று சுற்றி இருப்பவர்கள் ஆலோசனை கொடுப்பார்கள்.(டெய்லர் சார், வளர்ற பையன் கொஞ்சம் லூஸா தையுங்கள் என்ற லாஜிக் தான்). தொழில்முனைவோர்கள் எப்பொழுதும் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாக இருப்பதால், பெரிய வண்டியையே
8/ வாங்குவார்கள்.
இந்தச் சூழலில் என்னவாயிருக்கு என்று கவனியுங்கள். என்ன தான் தொழில் விரிவாக்கம் நிகழ்ந்தாலும், தேவையை விட பெரிய வண்டி, பவர் ஸ்ட்யேரிங் / ப்ரேக், அதிகக் கொள்ளளவு, நல்ல சாலை, ஆட்டோமேஷனான லாஜிஸ்டிக், ஏற்கனவே இருந்த இன்னபிற தடைகள் எல்லாம் நீங்கிய பின்,
9/ வாகனங்களின் தேவை பெருகுமா சரியுமா? இத்தனையையும் தாண்டி வாகனங்களின் விற்பனை கொஞ்சம் தான் குறைந்திருக்கிறது.
நீ சங்கிடா அதனால் சப்போர்ட் பண்ற என்று சொல்லும் மங்கிகளுக்கு ஒரு சவால். அப்படியே ஒரு வெளியே போங்க... நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 200-300 கிமீ க்கு லோடு
10/ ஏற்றிச் செல்ல ஒரு லாரியை புக் பண்ணிப் பாருங்க. ஒரு வேளை நீங்கள் சொன்னது போல் தொழில் முடக்கம் ஏற்பட்டிருந்தால், நீங்கள் கூப்பிட்டவுடன் கிடைத்த ரேட் போதும்னு அடிச்சுப் புரண்டு லாரியை எடுத்துட்டு வருவாங்க. மாறாக உங்களிடம் கெத்தா பேரம் பேசினார்கள் என்றால், அவர்களுக்குத் தொழில்
11/ நல்லாயிருக்குன் அர்த்தம். போய் நடைமுறையை விசாரித்து விட்டு வந்து பதில் சொல்றீங்களா மங்கீஸ்?
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி உங்க வீட்ல கார் வாங்குனீங்க... போன வருசமும், இந்த வருசமும் கார் வாங்கலைன்னா உங்க குடும்பம் பிச்சை எடுக்குதுனு அர்த்தமா இல்லை அழியப் போகுதுனு அர்த்தமா?
12/ தற்பொழுதைக்குத் தேவையில்லை. தேவை கூடும் போது வாங்கிக்குவோம்னு தானே அர்த்தம்? அப்படித்தான் தேச வளர்ச்சியிலும்.
Last but not least...
கடந்த இரண்டு மாதமாக பங்குச் சந்தை செம்ம அடி வாங்கிட்டிருக்கு. ஆனால், புள்ளி விபரப்படி, வெளிநாட்டு முதலீடுகள் வாகனத் துறைகளிலும்,
13/ வாகனங்களுக்குக் கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களிலும் நிகர முதலீடு 4%க்கு மேல் நடந்திருக்கிறது. அதாவது, பெரிய பெரிய படிப்பு படிச்சுட்டு, கோடி கோடியாக பாரதத்தில் வந்து காசு கொட்டுறவனெல்லாம் முட்டாள்கள், இங்கே கட்சி சார்பாகவும், மோதி வெறுப்பினால் சமூக வலைதளத்தில் வாய்க்கு
14/ வந்ததெல்லாம் எழுதுறவனுக புச்சாலிகளா?
26 பில்லியன் டாலராக இருக்கும் பாரதத்தின் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி 2026ல் முன்னூறு பில்லியன் டாலராக இருக்கும் என்று திட்டமிட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. பத்து கிமீட்டர் ஓடுனவன் மூச்சு வாங்க 10 நிமிஷம் நிற்கத் தான் செய்வான். உடனே, அவன்
15/ முடக்குவாதம் வந்து முடங்கிட்டான்னு பேசுறதெல்லாம் முட்டாள்த்தனத்தின் உச்சம். போய் பொழப்பப் பாருங்கடே!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
