மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Nov 4, 2019, 5 tweets

தமிழக அரசே! தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த கும்பலை உடனே கைது செய்! -மே 17 இயக்கம்

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள #திருவள்ளுவர் சிலை மீது மர்ம கும்பல் கருப்பு மையையும், சாணத்தையும் வீசி அவமதித்து சென்றிருக்கிறது.

#Thiruvalluvar

1/5

தமிழ்நாட்டின் மிகப்பெரும் அடையாளமாக இருக்கக் கூடிய திருவள்ளுவரை அவமதித்திருப்பது தமிழர்களிடையே பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. உலகத்திற்கே மானுடத்தை போதிக்கிற அற நூலாக திருக்குறள் இருக்கிறது. அப்படிப்பட்ட திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த செயல் என்பது யாரோ தூண்டுதலின்...

2/5

பெயரால் நடைபெற்ற செயலாகவே இருக்க முடியும்.

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதள பிரிவினர் மதச்சார்பற்ற தமிழரின் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி உடையும், பட்டையும் அணிவித்து எடிட் செய்து ஒரு படத்தை வெளியிட்டு அவமதித்ததற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

3/5

இது நடைபெற்ற அடுத்த தினங்களிலேயே தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்கும் நோக்குடன் அம்பேத்கர் சிலையை அவமதிப்பது, பெரியார் சிலையை அவமதிப்பது, தற்போது #திருவள்ளுவர் சிலை என்று...

4/5

சிலை அவமதிப்பினை ஒரு கலாச்சாரமாக சில சமூக விரோத சக்திகள் செய்து வருகின்றன.

அந்த கும்பல் யாராக இருந்தாலும் உடனடியாக கண்டறியப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

- மே பதினேழு இயக்கம்
9884072010

#திருவள்ளுவர் #Thiruvalluvar

5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling