மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Dec 11, 2019, 11 tweets

ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை உடனடியாக மோடி அரசே கைவிடு!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களின் குடியுரிமையை நிர்ணயிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு.

#CitizenshipAmendmentBill2019

1/11

இந்த பாராளுமன்றக் கூட்டத்திலிலேயே இதனை நிறைவேற்றி சட்டமாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக அகதிகளாக இந்தியாவுக்குள் வரும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்தம், ஜைனம், பார்சி மற்றும் கிருத்துவர்களுக்கு...

2/11

குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தத்தை (The Citizenship Amendment Bill, 2019) பாராளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. இதன்படி 31-12-2014க்கு முன் இந்த 3 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த குறிப்பிட்ட 6 மதத்தினர் இந்தியக் குடியுரிமை பெற தகுதியானவர்கள்.

3/11

இதில் ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்கள் சேர்க்கப்படவில்லை. மதரீதியாக இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் பாஜகவின் தாய் அமைப்பான RSS-ன் கொள்கைத் திட்டத்தின் ஒன்றான இதனையே பிஜேபி அரசு நிறைவேற்றத் துடிக்கிறது.

அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் மதரீதியாக துன்புறுத்தப்படுவதால்,...

4/11

அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த திருத்தத்தை கொண்டுவருவதாக சொல்லும் பாஜக அரசு, அண்டை நாடுகளான இலங்கை மற்றும் மியான்மரை சேர்க்காதது ஏன்? இந்த 2 நாடுகளிலும் மதரீதியாக, இனரீதியாக துன்புறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில்...

5/11

அகதிகளாக அடைக்கலம் புகுந்தது உலகம் அறியும். இன்றும் தமிழ்நாட்டில் சுமார் 107 அகதிகள் முகாம்களில் கிட்டத்தட்ட 64,208 ஈழத்தமிழ் அகதிகளும், மேலும் 40,000 ஈழத்தமிழ் அகதிகள் முகாம்களில் இல்லாமலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.

6/11

முகாம்களில் அவர்கள் சிறையை விட கொடுமையாக தங்க வைக்கப்பட்டுள்ளதும், அரசு அவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்துவதும் நடந்துவருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த உதவியும் செய்யாத இந்திய அரசு, இப்போது ஈழத்தமிழ் அகதிகளைத் தவிர்த்துவிட்டு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

7/11

இது அப்பட்டமாக பாஜக மோடி அரசின் ஈழத்தமிழர் விரோதப் போக்கையே காட்டுகிறது.

இலங்கை பவுத்த-சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தில் இனப்படுகொலை செய்தது போலவே, மியான்மர் புத்தமத பேரினவாத அரசு செய்த இனப்படுகொலையின் காரணமாக...

8/11

பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய இசுலாமியர்கள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

மேலும் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சியா, அஹமதியா முசுலிம்கள், நாத்திகவாதிகள், பத்திரிக்கையாளர்கள் இந்த மசோதாவில் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

9/11

இவர்களெல்லாம் பாஜகவின் தேர்தல் லாபத்துக்கு பயன்படாதவர்கள் எனக் கருதுவதால் தான் இத்தகைய பாகுபாடு.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமான மதச்சார்பின்மை என்பதை அழிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பலின் கொள்கையை நிறைவேற்ற துடிக்கிறது, மக்கள் விரோத பாஜக அரசு.

10/11

இந்திய பாஜக மோடி அரசே!
மக்கள் விரோத குடியுரிமை திருத்த மசோதாவைத் திரும்பப்பெறு!
பல்லாண்டுகளாக இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிடு!
தமிழ்நாடு & இந்தியாவில் உள்ள அனைத்து ஈழத்தமிழர் அகதி முகாம்களையும் இழுத்து மூடு!
ஈழத்தமிழர்கள் கண்ணியமாக வாழ வழிவகை செய்!

11/11

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling