இன்றைய ரஜினிகாந்த்தின் பத்திரிகையாளர் சந்திப்பு "ஆன்ட்டி கிளைமாக்ஸ்"ஸாக ஆனது என்பது கூட உப்புசப்பில்லாத சொற்களாகத்தான் இருக்கும். ரஜினிகாந்த் (மீண்டும்) ஏமாற்றம் தந்துவிட்டார் என்றெல்லாம் பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். #Rajinikanth #RajiniPoliticalDebut 1/9
ரஜினிகாந்த்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் வைத்தவர்களில நான் ஒருவன் இல்லை. ஆகவே, அவருடைய சந்திப்பு இவ்வாறு அமைந்ததில் ஆச்சரியமுமில்லை.. அரசியலுக்கு நுழைவதில் அவரிடம் உள்ள குழப்பத்தையும் தயக்கத்தையும்தான் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
#RajiniPoliticalRevolution
அதைவிட, எதற்காக அரசியல்கட்சி ஆரம்பிக்க விரும்புகிறேன் என்பதில் மக்களைச்சார்ந்த எந்தப் பிரச்சினையைப்பற்றியும் அவர் கூறாததுதான் என்னைப் பொறுத்தவரை ஆட்சேபகரமானது. ஏற்கெனவே இருக்கின்ற இரண்டு மிகப்பெரிய கட்சிகளை எவ்வாறு எதிர்கொள்வது
#RajiniMakkalMandram
மற்றும் அதில் இருக்கின்ற சவால்கள் போன்றவைப்பற்றித்தான் கூறினார். புரட்சி வரவேண்டும் எனக்கூறுபவர் எதற்காக அப்புரட்சி வரவேண்டும் என்பதில் தெளிவான,ஆழமான விளக்கங்களை கூறமுடியாதவராகத்தான் அவர் தெரிகிறார்.
அவர் பேசிய கிட்டத்தட்ட 30 நிமிடங்களில் #RajiniPoliticalRevolution #Rajinikanth
எந்தப்பிரச்சினை இன்றைக்கு தமிழ்நாட்டை ஆட்டி வைக்கிறது அல்லது இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய தலையாயப் பிரச்சினை என்று அவர் எதையும் குறிப்பிடவில்லை. வெற்றிடம் பற்றி பேசினார். ஆனால், அது உளுத்துப்போன வாதம். #Rajinikanth #RajiniPoliticalDebut
ஒருவர் அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக மாறுவதற்கு சுமார் 25-30 ஆண்டுகள் வேண்டியுள்ளது. அவ்வளவு காலத்திற்குப் பிறகுகூட பலரால் அந்நிலையை பெறமுடிவதில்லை.இது எல்லோருக்கும் தெரியும்.அது ரஜினிகாந்த்தித்திற்கு தெரியாதா என்பது தான் தெரியவில்லை.
#RajiniMakkalMandram #RajinikanthPolitics
ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசாமியையும் இன்றைக்கு தமிழகத்தின் பிரதான தலைவர்களாக மக்கள் கவனிக்க துவங்கிவிட்டார்கள். ஆகவே தலைமையில் வெற்றிடம் என்ற பேச்சு வலுவிழந்துள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியும் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் #Rajinikanth
அவரவர் இடங்களில் இருந்த இரண்டு மிகப்பெரிய கட்சிகளை எதிர்த்துதான் ஆட்சியை பிடித்தார்கள். ஆனால், அவர்கள் தங்களை முதல்வர் வேட்பாளர்கள் எனத் தெரிவுபடுத்திவிட்டுதான் களத்தில் இறங்கினார்கள். தியாகசெம்மல்களாக தங்களை முன்னுறுத்திக்கொள்ளவில்லை. #RajiniPoliticalDebut
அதை மக்களும் எதிர்பார்ப்பதுமில்லை. விரும்பவுதுமில்லை.
இன்னமும் காலம் உள்ளது. அதை ரஜினிகாந்த் பயன்படுத்திக்கொண்டு அதிகமான தெளிவுடன் அரசியலில் பயணிப்பார் என நம்புகிறேன். #RajiniPoliticalRevolution
@Ahmedshabbir20 you may never get the answer from him. Pl read my take on @rajinikanth
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
