Journalist, Chennai. Views are my own. #Identitypolitics #Indianpolitics #SriLankapolitics #water #energy #environment #culture
Sep 22, 2020 • 15 tweets • 2 min read
இன்றைக்கு அப்பாவின் 89வது பிறந்த நாள்.
அப்பாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், இரண்டு காரணங்களுக்குகாக எனக்கு குற்ற உணர்வு உண்டு.
இந்த குற்ற உணர்வு எனக்கு மட்டுமே பொருந்தும். என்னுடைய சகோதரர்களுக்கு அல்ல!
ஒன்று, அவர் ஆசைப்பட்டபடி அவருடைய இறுதிச்சடங்குகள் நடக்கவில்லை. 1/14
பாரம்பரியமுறைப்படி தனக்கு சடங்குகள் செய்யவேண்டாம் என குறைந்தபட்சம் இரண்டு முறையாவது - அவருடைய 60வது மற்றும் 80வது பிறந்த நாட்கள் சமயத்தில் - என்னிடம் கூறியிருந்தார். க.நா.சுவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தினர் நடந்துகொண்டவிதம் அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.2/14
Sep 16, 2020 • 22 tweets • 5 min read
Recently, I came across observations of two individuals, both of whom hail from Sri Lanka, on the much-criticised Indo-Lankan Accord of 1987. The observations came from Mr Palitha T. B. Kohona, a veteran diplomat who has been appointed Ambassador to China, 1/22
and Mr Kuna Kaviyalahan, a Tamil writer, who, I understand, lives in Netherlands. Mr Kohona, responding to a question during a TV interview whether the 1987 Accord was still binding on SL, referred to India's “failure” to ensure surrender of arms by the LTTE 2/22
Sep 14, 2020 • 9 tweets • 1 min read
மூன்று இள உயிர்கள் "நீட்" தேர்வின் அழுத்தம் காரணமாக பறி போனது மிகவும் வேதனையாக உள்ளது. ஒரு தேர்வின் முடிவு ஒருவரின் வாழ்க்கை நிர்ணயிக்கின்ற அளவுகோல் அல்ல என்பதை பெற்றோர்களூம் இளைஞர்களும் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு முறை முடியாவிட்டால் மறுமுறை. இல்லையெனில், ...1/ 8
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, ஆக்கபூர்வமான வழிகள் எவ்வளவோ உள்ளன. ஆகவே அதைப் பற்றியெல்ல்லாம் சிந்தித்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சரியாக வழி நடத்தவேண்டும். தற்போதைய நிகழ்வுகளை பார்க்கும்போது, எனக்கு 1990-களின் இறுதிகளில் - 20 வருடங்களுக்கு மேலாக - கிடைத்த அனுபவம்தான் 2/8
Sep 4, 2020 • 7 tweets • 1 min read
துரைமுருகன் அவர்கள் தி.மு.க. வின் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்-பட்டுள்ளார். அரை நூற்றாண்டுக்கு மேலாக அக்கட்சியில் பணி புரிந்தவர்க்கு கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக 1996-2001-ல் இருந்தபொழுதுதான் 1/7
எனக்கு அவரை தெரிய வந்தது. நீர் பற்றாக்குறைப் பற்றியும் நதிநீர் பிரச்சினைகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளை தவறாமல் அவர் கவனித்து வந்துள்ளார். வரைவு தேசிய நீர் கொள்கை தமிழகத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி 2/7
Sep 1, 2020 • 8 tweets • 1 min read
தனக்கு ஹிந்தி அதிகம் தெரியாததினால், பிரதமாராக முடியவில்லை என நேற்று இறந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருதியதாக இன்றைய செய்திதாள்களில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமே தகுதியல்ல என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஜெயலலிதா பல மொழிகளில் நன்கு பேசக்கூடியவர். 1/8
தமிழைத்தவிர, ஆங்கிலமும் ஹிந்தியும் மிக சரளமாக பேசக்கூடியவர். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜீ பிப்ரவரி 2012- ல் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு என்னுடன் பேசிய பொழுது ஜெயலலிதாவின் ஹிந்தி மொழி மீதான புலமையை கண்டு வியந்தேன் என கூறினார். 2/8
Aug 28, 2020 • 15 tweets • 2 min read
கடந்த சில வாரங்களாக சென்று கொண்டிருக்கிற சர்ச்சை “நீட்” மற்றும் “ஜேஇஇ” பரீட்சைகள் செப்டமபர் மாதத்தில் நடத்தப்படலாமா அல்லது தள்ளிப்போட வேண்டுமா என்பதே.
மத்திய அரசு பரீட்சைகளை நடத்தவேண்டும் என்பதிலும் பல மாநில அரசுகள் - தமிழகம் உட்பட - வேண்டாம் என்பதிலும் தீவிரமாக உள்ளனர். 1/13
காங்கிரஸ் மற்றும் அதனுடைய தோழமைக் கட்சிகளும் கொரானோ நோயின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பரீட்சைகள் நடத்தப்படக் கூடாது என வாதிடுகின்றனர். உச்ச நீதிமன்றம் பரீட்சைகளை தள்ளிப்போடவேண்டும் என்ற மனுவை நிராகரித்து விட்டது.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி, பரீட்சைக்கான அனுமதி சீட்டுகளை 2/13
Aug 28, 2020 • 5 tweets • 1 min read
நேற்று ஐந்து உச்சநீதி மன்ற நீதிபதிகளைக் கொண்ட ஓர் அரசியல் சாசன அமர்வு மிக முக்கியமான - குறிப்பாக தமிழக அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானோரின் நிலைப்பாடிற்கு எதிராக - தீர்ப்பை கொடுத்திருக்கிறது. ஆனால் அதுனடைய முழூ தகவலைப் பற்றி கவலைப்பட்டாமல், பெரும்பாலோனோர் அத்தீர்ப்பை 1/5
ஆதரித்து அறிக்கைகளை விட்டிருக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பில், இடஓதுக்கீட்டின் மூலம் பலன் பெற்று முன்னேறியவர்களை - "கீரிமி லேயரை” - விலக்க வேண்டும் என கூறியுள்ளது. . இடஓதுக்கீட்டின் பலன்களை ஒரு சில ஜாதிக்கள் மட்டுமே "அபகரித்து" செல்வதை அனுமதித்தோம் என்றால், 2/5
Aug 23, 2020 • 4 tweets • 1 min read
@MKumaramangalam: உங்களுடைய தந்தையுடன், 1990-லிருந்து 2000-வரை, பலமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். எம்.பி.யாக இருந்த போதும் சரி, மத்திய அமைச்சராக இருந்த போதும் சரி, அவர் வீட்டில் "ஜே ஜே" என மக்கள் கூட்டத்தை கவனித்துள்ளேன். அவர் மத்திய எரிசக்தி மந்திரியாக இருந்தபோது, அவர் 1/ 3
கொண்டு வந்த மின்சார ஆணையங்களைப்பற்றியான அவசர சட்டத்திலிருந்த சில ஷரத்துகளைப் பற்றி - குறிப்பாக இலவச விவசாய மின்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருவது - நான் @the_hindu -ல் மே 1998-ல் நான் எழுதிய செய்திக்கட்டுரை அகில இந்திய அளவில் அரசியல் பிரச்சினையாக மாற, அப்போது என்னை 2/3
Aug 22, 2020 • 4 tweets • 1 min read
In the light of this paper's report on the Kalaivanar Arangam being considered to hold the Assembly session, due for next month, following is the list of places where the Assembly or legislature met since 1921: @THChennai 1/4
Fort St. George (1921-1937); Senate House, Chepauk (14-7-1937 to 21-12-1937):Banqueting Hall (Rajaji Hall), Govt. Estate (27-1-1938 to 26-7-1939); Fort St George (24-5-1946 to 27-3-1952); Children's Theatre (Kalaivanar Arangam), Govt. Estate (3-5-1952 to 27-12-1956); 2/4
Aug 21, 2020 • 6 tweets • 2 min read
நேற்றைக்கு இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெற்றது. ஆகஸ்ட 5-ம் தேதி அன்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் ஏற்படுத்திய தாக்கஅலைகள், குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில், ஒய்ந்து விட்டன என நான் நினைக்கிறேன். இந்தப் பதிவின் கீழ் 2 அட்டவணைகளை கொடுத்துள்ளேன். 1/6
அதை மேலோட்டமாகப் பார்த்தாலே, இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறு பலவீனமாகியுள்ளது என்பது நன்கு தெரியும்.மேலும், இந்த முறை யாழ்ப்பாண வருவாய் மாவட்டத்தில், யாழ்ப்பாண தொகுதியைத் தவிர மற்ற இடங்களில், 30 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை அக்கட்சி. அதிர்ஷ்டவசமாக,கஜேந்திரன் & விக்னேஸ்வரன் 2/6
Aug 14, 2020 • 6 tweets • 1 min read
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து 5 பேர் அமைச்சர்களாகியிருப்பதைப்பற்றி பலர் கேலியாக பார்க்கின்றனர். “அரசியல் கண்ணியம்” அல்லது “அரசியல் தார்மீக நெறி” என்ற பார்வையில் காணும்போது அது வித்தியாசமாக தெரியலாம். ஆனால், அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் தேர்தலில் நின்று 1/6
வெற்றி பெற்றவர்கள். மக்களால், ஜனநாயகமுறையில், தேர்ந்தெடுக்க்ப்பட்டவர்கள். யார் அமைச்சராக இருக்கவேண்டும் என்பது அதிபர் மற்றும் பிரதமர் அவர்களின் பிரத்யேக உரிமை. ஒர் ஒப்பீடிற்காக, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தைப் பற்றி கூறுகிறேன். 2/6
Aug 9, 2020 • 8 tweets • 2 min read
ஜீலை 31-அன்று மறைந்த எழுத்தாளர் சா கந்தசாமி அவர்களின் குடும்பத்தினரை கடந்த வியாழனன்று சந்தித்தேன். பிப்ரவரி-மார்ச்சில் சாகித்திய அகாதெமியின் ஆண்டு விழாவிற்காக தில்லிக்கு சென்று வந்திருக்கிறார். அதற்குப்பிறகு உடல்நிலை சரியில்லை.வயதான ஆண்களுக்கு வரக்கூடிய உடல்உபாதைப் போல 1/8
சில அறிகுறிகள் இருந்திருக்கின்றன. நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 11 நாளில் இறந்துவிட்டார்.கொரோனா டெஸ்ட் பலமுறை செய்யப்பட்டு அனைத்திலும் ரிசல்ட் "நெகடிவ்." டிசம்பர் 2000-வரை-குறிப்பாக அக்டோபர் 1992க்குப் பிறகு-தி.நகரில் நானும் தந்தையும் 2/8
Aug 5, 2020 • 5 tweets • 3 min read
Provisional figures of voter turnout of the Sri Lanka's parliamentary election are out. The overall turnout is 71%, going by media reports. This means that about 1.1 crore people or 11 million turned up at polling booths, despite #COVID19#COVID19SL#SriLankaElections2020 1/5
The figure may be less than the 2015 parliamentary election or 2019 presidential poll but it is understandable, under the given circumstances. I am really amazed at the level of faith of voters of #SriLanka in democracy. Hats off to them! #SriLankaElections2020#COVID19SL 2/5
Jul 31, 2020 • 4 tweets • 2 min read
Sa Kandasamy (81), a multi-faceted literary personality of Tamil Nadu - writer, art critic & documentary film maker, passed away this morning. He got @sahityaakademi award in 1998. His docu film, "Kaval Deivangal," got 1st prize @ Angino Film Festival, Nicosia, Cyprus in 1989.
He is survived by his wife, a daughter & two sons. Funeral is scheduled to be held in Chennai this evening. He was a great friend of my father @ashoka_mitran and I met him last three years ago when he delivered a talk on Dad at a condolence meeting held by @sahityaakademi.
Jul 27, 2020 • 8 tweets • 1 min read
ஏ ஆர் ரகுமானுக்கும் சச்சின் தெண்டுல்கருக்கும் ஒர் ஒற்றுமை இருந்தது. இருவரும் சர்ச்சைகளில் ஈடுபடாமல் இருந்து ஒதுங்கியே இருப்பது. ஆனால், ரகுமான் இப்போது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். 1/8
இந்தி சினிமா உலகத்தை கவனித்து வருபவர்களுக்கு இந்த சர்ச்சையைப் பற்றி புரிந்து கொள்ளமுடியும்.தெற்கிலிருந்து சென்ற பலருக்கும் இம்மாதிரியான அனுபவம் கிடைத்திருக்கிறது. தமிழ் மற்றும் 2/8
Jul 23, 2020 • 4 tweets • 1 min read
A senior management consultant, responding to my piece, has observed that the rate of increase in testing in Chennai has been coming down. But, what he has overlooked is the fact that the base number of persons getting tested is on the rise. 1/4
The total number of persons tested in Chennai has exceeded 5.5 lakhs. After relaxation of intense lockdown on July 6, the no of persons tested went up too. The weekly average went up from 9,024 (July 7-13) to 12,049 (July 14-20). 2/4
Jul 19, 2020 • 4 tweets • 2 min read
#Lockdown seems to have halted the rising trend of active cases in Chennai and Chengalpattu. Even at the all-TN level, the growth rate of active cases has gone down sharply. #COVID19India 1/3
I have taken every 15-day-period as unit and given below a comparative table of the trend of active cases in TN, four districts including Chennai and neighbouring districts. #coronavirus 3/3
Jul 16, 2020 • 4 tweets • 1 min read
மேல்நிலை இரண்டாமாண்டுக்கான (பிளஸ் 2) பொதுத்தேர்வின் முடிவுகளை தமிழ்நாட்டு அரசின் தேர்வுகள் இயக்ககம் இன்றைக்கு வெளியிட்டது. அவ்வறிக்கையில் கடந்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு மாணாக்கர்கள் பொதுத்தேர்வுகளை எழுதியிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. 1/4
இவ்வருடத்தில், தேர்வுகளை எழுதிய மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 7,79,931. மூன்று வருடங்களுக்கு முன், அதாவது 2017-ல், இந்த எண்ணிக்கை 8,93,262. கிட்டத்தட்ட ஒரு லட்சம் குறைவு. ஒவ்வொரு வருடமும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதாவது, நீட் பரீட்சை வருவதற்கு 2/4
Jul 15, 2020 • 6 tweets • 1 min read
ராஜஸ்தானின் முன்னாளய துணை முதல்வர் சசின் பைலட் இன்றைக்கு தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றியான திட்டத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானின் அரசியல் நிலவரத்தை கூரந்து கவனித்தால், பாஜக மற்றும் காங்கிரஸைத் தவிர மாநிலம் முழுவதும் தழுவிய அளவில் மூன்றாவது அரசியல் ..1/6
சக்திக்கு இடமில்லை. தமிழகத்தைப் போல. இவ்விரு கட்சிகள் ஏறத்தாழ, 70 சதவீத வாக்குகளை தங்களிடம் வைத்துள்ளனர். இவர்களில் பாஜகவிற்கு பலம் கூடுதலாக உள்ளதாகத்தான் கடந்த 15 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவர்களை குறுகிய காலத்திற்குள் தோற்கடிப்பது 2/6
Jul 6, 2020 • 5 tweets • 1 min read
சில நாட்களுக்கு முன் அமைச்சர் @mafoikprajan பாண்டியராஜன் என்னுடன் பேசி கொண்டிருக்கும்போது ஒரு கருத்தை கூறினார். கரோனா வைரஸினால் பாதிப்படைந்தவர்களின் கணக்கை எவ்வாறு எடுத்து கூறுவது என்பதைப் பற்றியான தனது நிலைப்பாட்டை கூறினார். 1/5
ஜனவரி 29-லிருந்து இந்தியாவில் இவ்வியாதி உள்ளது. நாம் ஏன் இன்று வரை எவ்வளவு நபர்கள் பாதிப்புக்குள்ளானார்கள் என்பதை பிரதானமாக கூறவேண்டும்? இன்றைக்கு எவ்வளவு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எடுத்து கூறினால் அது பொருத்தமாக இருக்காதா? இந்த ஐந்து மாதங்களில் 2/ 5
Jun 28, 2020 • 4 tweets • 1 min read
மிக முக்கியமான கலந்துரையாடல், வரதராஜ பெருமாள் கூறும் அனைத்து கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் கூட! இக் கலந்துரையாடலில் வரதராஜ பெருமாள் இலங்கையில் ஒருபோதும் இராணுவ ஆட்சி வராது என்ற கருத்தை கூறியிருக்கிறார். எனக்கும் அக்கருத்து உண்டு. 1/4 bit.ly/3g5ZSdU
ஆனால், அவர் கூறுகின்ற காரணங்களில் எனக்கு முழுமையானஉடன்பாடு இல்லை!
அதில் ஒன்று - ஒரு ஜனநாயக நாட்டிற்கு அருகாமையில் இருப்பதினால், சிறிய நாடும் ஜனநாயக நாடாக உள்ளது. இந்த விதி ஏன் வங்காளதேசத்திற்கு 1975-யிலிருந்து -1991 வரை பொருந்தவில்லை ? 2/4