Balaraman Profile picture
Tamil Blogger. Short-film maker in @Kalaipori. Editor in @cookploration. Newbie e-Book writer. Movie aficionado Download my Tamil e-Book here - https://t.co/mF

Mar 21, 2020, 47 tweets

Netflix மாதிரி Amazon Prime'க்கும் ஒரு thread போட்டுருவோம்! #ArivomPrime #அறிவோம்திரை 😛

#PrimeVideo - Contagion (2011) - #ArivomPrime #அறிவோம்திரை - Medical/Suspense/Thriller. இப்ப Corona Virus'ன்னால நடக்குற பல உண்மை நிகழ்வுகள் 9 ஆண்டுகளுக்கு முன்னாடி வெளிவந்த இந்தப் படத்துல அங்கங்க அப்படியே ஒத்துப்போகுது! ஆன்னா, அப்பப்ப documentary feel'உம் வருது!

#PrimeVideo - Searching - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Thriller. இந்தப் படத்தை சந்துல ஏற்கனவே நிறைய அலசிட்டாங்க. இந்தப் படத்தோட திரைக்கதை ரொம்ப அருமை. Digital screens மட்டுமே பயன்படுத்தி கதை சொல்வது செம்ம creativity!!! 👍👌

#PrimeVideo - Tumbbad (Hindi) - #ArivomPrime #அறிவோம்திரை - Horror. இது ஒரு வித்தியாசமான horror படம். ஒளிப்பதிவு அருமையா இருக்கும். ரொம்ப ரொம்ப சாதாரண கதை தான். பெரிய திருப்பங்களும் கிடையாது திகிலும் நிறைய இல்ல. ஆனாலும் கொஞ்சம் கூட சலிக்காது!

#PrimeVideo - Vellai Pookkal - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense/Thriller. படம் முடியிற வரைக்கும் தொடர்ந்து யூகிக்க வச்சுட்டே இருந்துச்சு. படம் முடியும் போது யாரும் எதிர்பார்க்காத மாதிரி ஒரு பெரிய திருப்பமும் இருந்துச்சு. Good thriller!

#PrimeVideo - Jiivi (Tamil) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Mystery/Thriller. இந்தப் படம் பத்தியும் நிறைய பேர் ஏற்கனவே பேசிட்டாங்க. திரைக்கதையும் வசனமும் தான் இந்தப் படத்தோட பலமே. படம் முடியுற வரைக்கும் சின்ன சின்ன திருப்பங்கள் இருந்துட்டே இருக்கும்.👍

#PrimeVideo - Jallikkattu (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Eccentric genre. இது இந்த மாதிரி படம்னு வகைப்படுத்த முடியல. ஒளிப்பதிவும் இசையும் கலக்கல். Cult classic. புடிச்சவங்களுக்கு ரொம்ப புடிக்கும் புடிக்காதவங்களுக்கு புடிக்கவே புடிக்காது!

#PrimeVideo - The Prestige - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense. என் பார்வைல Nolan'ஓட best படம் இது தான். திரைக்கதை ரொம்ப அருமையா இருக்கும். படம் கொஞ்சம் கூட தொய்வேயில்லாம நகரும். 👌

#PrimeVideo - A beautiful mind - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Drama. Game theory'ல வர்ற Nash equilibrium கண்டுபிடிச்ச Nobel prize வாங்குன அறிவியலாளர் John Nash அவரோட உண்மைக்கதை. அவருக்கு ஒரு mental disorder இருந்துச்சு!

#PrimeVideo - Fight Club - #ArivomPrime #அறிவோம்திரை - Psychological/Thriller. நிறைய பேருக்கு இந்தப் படம் பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். ஓரளவுக்கு ஊகிக்கிற மாதிரி தான் திருப்பம் இருக்கும். ஆனாலும் திரைக்கதை சுவாரசியமா இருக்கும்!

#PrimeVideo - The Italian Job - #ArivomPrime #அறிவோம்திரை - Heist/Action/Thriller. நல்ல பொழுதுபோக்கான ஒரு action படம்!

#PrimeVideo - Parasite (Korean) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Drama. முதல் பாதி படத்துல நிறையவே கருப்பு நகைச்சுவைகள் நிறைஞ்சிருக்கு. சில காட்சிகள் ரொம்பவே சுவாரசியமா இருக்கு. நேரம் போனதே தெரியல. படம் முடிவு கிட்ட நடக்குற சில விஷயங்கள் எல்லாருக்குமே பிடிக்குமான்னு தெரியல!

#PrimeVideo - Chef - #ArivomPrime #அறிவோம்திரை - Dramedy. சமையல் சாப்பாடு புடிச்சவங்களுக்கு படம் பிடிக்கும். தோத்து போயி அவமானப்பட்டு பின்னாடி ஜெயிக்கிற template கதைகள் பிடிச்சவங்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். குடும்பத்தோட பார்க்கலாம்!

#PrimeVideo - Room (2015) - #ArivomPrime #அறிவோம்திரை - Psychological/Drama. ஓர் அறைக்குள்ள அடைப்பட்ட வாழ்க்கை கொடுமையானது. அதுல இருந்து ஒரு நாள் விடுதலை கிடைச்சாலும் உளவியல் பாதிப்புகள் மீள நிறைய நாட்கள் ஆகும். அருமையான உளவியல் படம்! 👌😇

#PrimeVideo - Prisoners - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Mystery/Drama/Thriller. படம் ஆரம்பிச்சதுல இருந்து முடிவு வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வேயில்லாம போகுது. காட்சிகள் மெதுவா நகர்ந்தாலும் திரைக்கதைல விறுவிறுப்பு குறையல. பதட்டம் நிறைந்த காட்சிகள் நிறைய இருக்கு! 👌👌👌

#PrimeVideo - The Man From Earth - #ArivomPrime #அறிவோம்திரை - Sci-fi/Drama. படம் முழுக்க ஒரு அறைக்குள்ள தான் நடக்கும். ஆனா, மிகவும் சுவாரசியமான உரையாடல்களால நேரம் போறதே தெரியாது. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்! Must watch 👍

#PrimeVideo - Minority Report - #ArivomPrime #அறிவோம்திரை - Sci-fi/Action/Mystery/Suspense/Thriller. கதையும் திரைக்கதையும் செம்ம சுவாரசியமா இருக்கும். Futuristic world'ல நடக்குற கதை இது. நல்ல பொழுதுபோக்கான படம்! Tom Cruise movie! 👌👌👌

#PrimeVideo - Edge of tomorrow (2014) - #ArivomPrime #அறிவோம்திரை - Sci-fi/Adventure/Fantasy/Action/Thriller. தனிதனியா ஒரு war movie, ஒரு alien movie, ஒரு time-loop movie பாக்குறதுக்கு பதிலா இந்த ஒரு படத்த பார்க்கலாம்! Good timepass! 👌👌👌

#PrimeVideo - Moonlight - #ArivomPrime #அறிவோம்திரை - Drama/LGBT. 'கருப்பர்கள்' மட்டுமே நிறைந்த கதை. ஓரினச்சேர்க்கை மாதிரி ஒடுக்கப்பட்ட நிலைல இருக்கவங்களோட அவ்வளவா சொல்லப்படாத கதை. ரொம்ப மெதுவா நகரும். பொறுமை தேவை!

#PrimeVideo - Mad Max Fury Road - #ArivomPrime #அறிவோம்திரை - Action/Thriller. படம் முழுக்க chasing scenes தான். வித விதமான சண்டைக்கருவிகள் பார்க்கலாம். அதே நேரத்துல கொஞ்சம் சுவாரசியமான திரைக்கதையும் இருக்கு. High octane action fans will love it! 👌

#PrimeVideo - City of God (Spanish) - #ArivomPrime #அறிவோம்திரை - Gangwar/Action/Suspense/Thriller. எப்படி gang உருவாகுது, அவங்களுக்குள்ள எப்படி gangwar ஆரம்பிக்கிது, எதுமே புரியாம உள்ள நுழைஞ்சு சாகுறவங்க யாரு, இதெல்லாத்துலையும் லாபம் யாருக்குன்னு செம்மையா காட்டிருக்காங்க! 👌

#PrimeVideo - Crawl - #ArivomPrime #அறிவோம்திரை - Creature/Horror/Drama. அங்கங்க சின்ன சின்ன jumpscares இருக்கு. Weekend பொழுதுபோக்கா பார்த்து enjoy பண்ணலாம்! 👍

#PrimeVideo - Shakuntala Devi (Hindi) - #ArivomPrime #அறிவோம்திரை - Biography/Dramedy. கணித மேதை சகுந்தலா தேவியோட கதை இது. திரைக்கதை சுவாரசியமா இருக்கு. நிறைய காட்சிகள் family drama தான். Eccentric character!

#PrimeVideo - The wailing (Korean) - #ArivomPrime #அறிவோம்திரை - Horror/Mystery. திகில் காட்சில இருக்க கூடாது; கதைல இருக்கணும். அப்படி பார்த்தா இந்தப் படம் ஒரு நல்ல திகில் படம்னு சொல்லலாம். முடிவுக்கு சரியான விளக்கம் இல்லாததால இதுக்கு நிறைய interpretations வரும்! 👍

#PrimeVideo - Loving Vincent - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Drama. படத்துல ஒவ்வொரு frame'மும் painting மாதிரி இருந்துச்சுன்னு இந்தப் படத்துக்கு சொல்லலாம். ஏன்னா ஒவ்வொரு frame'மும் உண்மையிலேயே oil painting'ஆல பண்ணிருக்காங்க. சுவாரசியமான திரைக்கதை. நல்ல experience! 👌👌👌

#PrimeVideo - HIT The First Case (Telugu) - #ArivomPrime #அறிவோம்திரை - Crime/Mystery/Thriller/Suspense. நிறைய சுவாரசியமான காட்சிகள் இருக்கு. முதல் பாதி படம் ரொம்ப மெதுவா நகர்ந்தாலும் என்ன நடக்கப் போகுதுன்னு ஒரு ஆர்வம் இருந்துட்டே தான் இருந்துச்சு. ஆனா, Climax கொஞ்சம் சொதப்பல்!

#PrimeVideo - Doctor Sleep - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Horror. இது ஒரு மாதிரி dark themed படம். காட்சிகளை விட திரைக்கதைல திகில் இருக்கு. படம் முடிஞ்ச பிறகும் அதோட பாதிப்பு கொஞ்ச நேரம் இருக்கும். கதை மெதுவா நகரும். எல்லாருக்கும் இந்த மாதிரி படம் பிடிக்காது!

#PrimeVideo - Baaram - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Drama. இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்புல வந்த படம். இந்தப் படத்துல காட்டப்பட்டிருக்க நிகழ்வு நிறைய சிற்றூர்கள்ல உண்மையிலேயே நடக்குறது தான். ஆனா நிறைய பேருக்கு தெரியாது. எந்தப் படத்துலயும் காட்டினதாவும்எனக்கு ஞாபகம் இல்ல!👍

#PrimeVideo - Kung fu Panda - #ArivomPrime #அறிவோம்திரை - Animation/Dramedy. சின்ன பசங்க விரும்பி பாக்குற மாதிரி விசயங்களும் இருக்கு... பெரியவங்களுக்கு ஏத்த வசனங்களும் தத்துவமும் இருக்கு... 90 நிமிசத்துக்கு கொஞ்சம் கூட bore அடிக்காம நல்ல timepass! 👌

#PrimeVideo - Kalidas (Tamil) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Thriller. தமிழ்ப் படங்கள்ல வெளிவந்ததிலேயே ரொம்ப வித்தியாசமான cop thriller movie இது தான். Hero ஒரு police. ஆனா, அவருக்கு ஒரு fight scene கூட இல்ல! 👍

#PrimeVideo - Lights Out - #ArivomPrime #அறிவோம்திரை - Horror/Thriller/Drama. மொத்தமே 80 நிமிசம் தான் படம். அதனால கதையை படபடன்னு சொல்லுறாங்க. உள்ள இருக்க drama portions எடுபடல. அங்கங்க jumpscares நல்லா இருந்துச்சு. ஓரளவுக்கு திகிலான படம் தான்! Above average!

#PrimeVideo - Android Kunjappan Ver 5.25 (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Comedy/Drama. ரொம்ப இயல்பான அழகான படம். மனித உணர்வுகள் பத்தி நிறைய பேசிருக்காங்க ஒரு ரோபோட் மூலமா. தந்தை மகன் உறவை படத்துல நல்லா காட்டிருக்காங்க! 👍

#PrimeVideo - Burning (Korean) - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense/Thriller. இது ஒரு open interpretation movie. அதாவது இந்தக் கதைய பலவிதமா புரிஞ்சுக்கலாம். கதை ரொம்ப மெதுவா நகர்ந்தாலும் திரைக்கதை சுவாரசியமா இருக்கு. Good one! 👌

#PrimeVideo - Kavaludaari (Kannada) - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense/Crime/Thriller. திரைக்கதை மெதுவா நகர்ந்தாலும் அடுத்து என்ன நடக்கும்ன்னு நம்மள தொடர்ந்து யோசிக்க வைக்குது. படம் முடிவு கிட்ட நிறைய திருப்பங்கள் இருக்கு. நல்ல thriller! 👍

#PrimeVideo - Donnie Darko - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Thriller/Scifi/Fantasy. ரொம்ப குழப்பமான கதை. இந்தக் கதைக்கு நிறைய interprettations இருக்கு. கதை பல கோணங்கள்ல நகர்றதால மெதுவா போனாலும் சுவாரசியமா இருக்கு!

#PrimeVideo - Blue Ruin - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Revenge/Thriller. ரொம்ப நேரான கதை தான். மெதுவா நகர்ற திரைக்கதை தான் இந்தப் படத்துக்கு பலமே. அது தான் ஒவ்வொரு காட்சிலயும் பதட்டடத்த கூட்டுது!

#PrimeVideo - Drishyam 2 (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Drama. ஒரு வெற்றியடைஞ்ச படத்துக்கு 2nd part வந்தா பெரும்பாலும் முதல் பாகத்தோட எதிர்பார்ப்பை தரமுடியாததால தோல்வியடையும். ஆனா, இங்க கிட்டத்தட்ட முதல் பாகம் அளவுக்கு செம்ம சுவாரசியமான திரைக்கதை. 👌👌👌

#PrimeVideo - Godzilla, King of monsters - #ArivomPrime #அறிவோம்திரை - Creature/Fantasy. இந்த மாதிரி படங்கள்ல எல்லாமே ரொம்ப மிகையா இருக்கும். ஏகப்பட்ட mass scenes இருக்கும். உணர்ச்சிய ஏத்துற மாதிரி music இருக்கும். அந்த மாதிரி entertainment'க்கு ஏத்த படம் இது! 👍🐉

#PrimeVideo - Unhinged - #ArivomPrime #அறிவோம்திரை - Thriller. இவ்ளோ extreme ஆன character உள்ள ஆள் இருப்பாங்களாங்கறது சந்தேகம் தான். ஆனா, அந்தக் கேள்வியே வரவிடாமச் செய்றது வில்லனோட நடிப்பு! செம்ம engaging thriller! 👍

#PrimeVideo - Andha Naal (1954) - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense/Thriller. இது வெளிவந்த காலத்துல கண்டிப்பா ரொம்ப புதுமையான படம் தான். கதை சொல்லும் விதம் ரொம்ப புதுமையா இருக்கும். வசனங்கள் நிறைய பேசுவது மாதிரி இருந்தாலும் காலத்தை தாண்டி நிக்கிற படம் தான் இது! 👍

#PrimeVideo - The Babadook - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Psychological/Horror/Drama. இந்தப் படத்துல jumpscares இல்ல. ஆனாலும், ஒரு சில scenes பதட்டமா இருந்துச்சு. ஆனா, ரொம்ப மெதுவா நகரும் கதை. குறியீடுகள் நிறைய இருக்கு.

#PrimeVideo - Tenet - #ArivomPrime #அறிவோம்திரை - Scifi/Adventure/Action. கதைய முழுசா புரிஞ்சுதா அப்படின்னு எனக்கே சந்தேகமா இருக்கு. பார்த்து முடிச்ச பிறகும் யோசிக்க வைக்குது படம். Reverse entropy'ல என்னோட version'அ பார்த்தா இந்த கதைய கேட்டு புரிஞ்சுக்கணும்! Entertaining!

#PrimeVideo - Drag Me to Hell - #ArivomPrime #அறிவோம்திரை - Horror/Mystery. பயமுறுத்துற காட்சிகள் இருக்கு, பதட்டமான காட்சிகள் இருக்கு. ஆனா, நிறைய காட்சிகள் disgusting'ஆவும் ஒரு வினோதமான humour ஓடவும் இருக்கு! எதிர்பார்க்காத climax!

primevideo.com/detail/0KZX2YZ…

#PrimeVideo - Karnan (Tamil) - #ArivomPrime #அறிவோம்திரை - Drama/Social Issue. ஒரு படத்துல வர்ற நாயகன் வலி உணரும் போது நம்மளும் உணர்ந்தா, கோபம் பீறிட்டு வரும் போது அது நமக்கும் வந்தா அது தான் அந்தப் படத்துக்கு வெற்றி. அந்த மாதிரி ஒரு படம் தான் இது! 👍

#PrimeVideo - Joji (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Crime/Thriller/Drama. திரைக்கதையும், இசையும் அருமை. நடிப்பு... சொல்லவே வேணாம். கதை மெதுவா தொடங்கி போக போக பதட்டத்த கூட்டிக்கிட்டே போகுது! Worth watching 👌

#PrimeVideo - Ek Mini Katha (Telugu) - #ArivomPrime #அறிவோம்திரை - Adult Comedy/Drama. உண்மைலயே enjoy பண்ற மாதிரி நிறைய நல்ல நகைச்சுவை காட்சிகள் இருக்கு. நகைச்சுவைன்னு மட்டுமில்லாம கதைல வர்ற meloodramatic காட்சிகளும் நல்லா எழுதப்பட்டுருக்கு. Worth watching! 👌

#PrimeVideo - Nizhal (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Psychological/Thriller/Mystery. கதை ஒரு அருமையான line'ல தொடங்குது. ரெண்டு வெவ்வேற கதையை எப்படி இணைக்கப் போறாங்கன்னு ஆவலா பார்த்தா முடிவுல எல்லாத்தையும் சொதப்பிட்டாங்க. Average movie!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling