நான் எப்பொழுது #தலைவர்
@rajinikanth -ன் ரசிகனானேன்
நான் குழந்தையாக
இருந்தபொழுதே...😊
பொதுவா தியேட்டருக்கு படம் பாக்க குழந்தைங்கள கூட்டிட்டுபோக மாட்டாங்க அப்படியே கூட்டிட்டு போனா அந்த குழந்தைங்க அழுது தொந்தரவு பண்ணும் இல்லன்னா தூங்கிடும்
இல்லன்னா தரையில ஒக்காந்து விளையாடும் ஆனா
நான் குழந்தையா இருக்கும்போது என்ன தியேட்டருக்கு கூட்டிட்டு போனா அமைதியா மடியில ஒக்காந்து படம் பாப்பன்னு வீட்டுல சொல்லுவாங்க
அதுக்கு காரணம் இருக்கு
நான் எங்க ஒக்காந்து இருக்கன்,
அது என்ன இடம்,
என் முன்னாடி என்ன ஓடிட்டு இருக்குன்னு எதுவும் தெரியாது
ஆனா என் முன்னாடி வெள்ளையான ஸ்கிரீன்ல ஒரு முகம் தெரியுது
அந்த முகத்த பிரம்மிப்பா பாத்துட்டு இருக்கன்
அந்த முகம் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு
அந்த முகத்துக்கு சொந்தகாரர் தான் #தலைவர்ரஜினி 😍
அதுக்கு அப்பறம் வீட்ல டீவியில அந்த முகத்த பாக்கும்போதெல்லாம் விளையாடிட்டு இருந்தா கூட
விளையாடுறத விட்டுட்டு அமைதியா ஒக்காந்து அந்த முகத்த பாப்பன் 😍
#அண்ணாமலை படம் வரும்போது
எனக்கு "5"வயசு
தலைவர அதிகமா ரசிக்க ஆரம்பிச்சது அப்போதிருந்து தான்
#அண்ணாமலை படத்த பாத்துட்டு அதே மாதிரி துண்ட இடுப்புல கட்டிட்டு அவர மாதிரியே ஸ்டைலா நடக்கிறதாகட்டும்
அவருக்கு இயற்கையாவே அவரோட தலையில ரெண்டு பக்கம் சின்னதா வழுக்கையா இருக்கும் அவரோட ஹேர் ஸ்டையிலே அப்படி
அது மாதிரியே என்னோட ஹேர் ஸ்டையில் இருக்கணும்ன்னு ஷேவிங் மிஷின எடுத்து ரெண்டு பக்கம் லைட்டா ஷேவிங் பண்ணி அவர மாதிரி ஹேர் ஸ்டையில் வெச்சுகிட்டதாகட்டும்
#அருணாச்சலம் படத்த பாத்துட்டு வேட்டி கட்ட ஆரம்பிச்சாதகட்டும்
இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்
உனக்கு யார பிடிக்கும்ன்னு யாராவது கேட்டா " #ரஜினி "ய புடிக்கும்ன்னு மழழை மொழியில சொல்ல ஆரம்பிச்சு
வளர வளர " #சூப்பர்ஸ்டார் " பிடிக்கும்ன்னு சொல்ல ஆரம்பிச்சு
அதுக்கு அப்புறம்
" #தலைவர் "ன்னு கூப்பிட ஆரம்பிச்சது வரைக்கும்
அவரை ரசிக்கிற அந்த ரசிப்பு தன்மை வளந்துகிட்டே தான் இருக்குது இன்னமும் இனிமேலும்...
இப்ப கூட சில பதிவுகள் போடுறதுக்கு தான் ரஜினின்னு பேர சொல்றேனே தவிர மத்தபடி 'தலைவர்'ன்ற பேர தவிர மறுவார்த்தை என் வாயில இருந்து வராது
இவருக்கு ரசிகரா இல்லாம வேற யாருக்காவது நான் ரசிகரா இருந்துருந்தா எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் யோசிச்சு பாக்கலாம்ன்னு பாத்தா யோசிச்சு கூட பாக்க முடியல
இவர ஏன் புடிக்கும்ன்னு கேட்டா எதாவது காரணத்த சொல்றதுக்காக பல காரணங்கள சொல்லலாம்
ஆனா உண்மையிலயே சத்தியமா தலைவர ஏன் பிடிக்கும்ன்னு தெரியாது
இந்த மனுஷன் உயிர்லயே கலந்துட்ட விவரிக்க முடியாத ஓர் அற்புதமான உணர்வு ❤️
இவரோட ரசிகரா என்ன
படைச்சதுக்காக அந்த ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லனும் 🙏🏻🙏🏻🙏🏻
#தலைவர்
#ரஜினி_ஒரு_சகாப்தம்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
